ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கலித்தொகை காட்டும் மாந்தர் | People in Kalithogai

முனைவர் வே.ஆ.தீபா, உதவிப் பேராசிரியர், தமழ்த்துறை, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணகிரி 07 May 2024 Read Full PDF

Abstarct: Sangam literature reflects the beliefs, customs, and environments of the five types of lands in the study of humans and life. The aim of this review paper is to highlight the biographies of the people who register their life style.

Key words: Kalithogai, Sangam era, Tamil culture, sangam era people

ஆய்வுச்சுருக்கம்: சங்க இலக்கியமான கலித்தொகையில் மாந்தர்கள் மற்றும் வாழ்வியல் சார்ந்த நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், ஐவகை நிலங்கள் சார்ந்த சூழல் ஆகியவற்றை பிரதிப்பலிக்கின்றது. கலித்தொகை பதிவு செய்யும் மாந்தர்களின் வாழ்வியலை எடுத்துக்கூறுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

திறவுச் சொற்கள்: கலித்தொகை, சங்ககாலம், தமிழர் நாகரீகம், சங்க கால மக்கள்

கலித்தொகை காட்டும் மாந்தர்

கலித்தொகை பழந்தமிழகத்தின் ஐந்நில மக்களையும் பல்வேறு தொழிநிலை மாந்தர்களையும் ஏவலர்களையும் காட்டுகிறது. அவ்வகையில் மறவர், வேடர், குறவர், கொடிச்சியர், கோவலர் புல்லினத்தாயர், கோவினத்தார், குடஞ்சுட்டவர், ஆய்த்தியர், பரதவர், ஆன்றோர், சான்றோர், புலவர், அந்தணர், ஐயர். கண. ஊர்க்காவலர், கதிரைப் பாகன், யானைப்பாகன், சேவகன் ஆடை வெளுக்கும் புலத்தி, புட்டில் புனையும் பிலைத்தி பித்தேறினார், கடனி, குறளன், கள்வர், புலையர், வலையர், விறலி, தொடிமகள், தர்ப்பாகன், தலைமகன் புகழ் பாடும் பாணன், காமக்கிழத்தி, பரத்தையர் என பல்வேறு சில மக்களும் பாத்திரங்களும் கலித்தொகையில் இடம்பெறுகின்றனர்.

பாடுபொருள்கள்

கலித்தொகைப் பாடல்கள் அனைத்தும் அகவாழ்வை அடிப்டையாக கொண்டவையாகும். களவு. கற்பு எனற இரண்டு நிலைகளிலும் பாடல்கள் பாட்பபட்டுள்ளன. எனினும் குளவுக்கால வாழ்வு அதிகமாகப் பாடப்பட்டுள்ளது. நெறிமுறைகளுக்கு உட்பட்ட வாழ்வு, நெறிமுறைகளுக்கு உட்படாத வாழ்வு என சமூக நிகழ்வுகளைக் கலித்தொகை பாடல்கள் தம்முள் அடக்கியுள்ளன. இதனடிப்படையில் சூழல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பழந்தமிழ் மரபின் அடிப்படையில் முதல், கரு, உரி பொருள்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க அகத்திணை நூல்கள் பாடாத கைக்கிளை, பெருந்திணை மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் பாடுபொருள்களாகின்றன.

கைக்கிளை

காமஞ்சாலா இளமையோள்வயின்

ஏமஞ்சாலா இடும்பை எய்தி

புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே.

என்று கைக்கிளைப் பற்றி தொல்காப்பிய நூற்பா கூறுகிறது.

நீயுந் தவிறில்லை நின்னைப்

புறங்கடைப் போதர விட்ட நுமரும் தவறிலா

நிறையழ கொல்யானை நீர்க்கு விட்டாங்கு

பறையறைந்தலல்து சொல்லற்க வென்னா

இறையே தவறுடையான்

என்று முல்லைக்கலியின் பாடல் அமைவதைக் காண முடிகிறது.

பெருந்திணை

ஏறிய மடல் துறம்

இளமை தீர்திறம்

தேறுதங் ஒழிந்த காமத்து மிகுதிறம்

மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்

செப்பிய நான்கும் பெருந்தணை குறிப்பே

என்பதுபெருந்திணை குறித்த தொல்காப்பியர் கூற்று ஆகும். அவரின் கூற்றுக்கிணங்க,

மறுத்து இவ்வூர் மன்றத்து மடலேறி

நிறுக்குவென் போல்பக்யான் நீ படு பழியே

என்கிறது கலித்தொகை. மடலேறும் ஆண் ஊரின் சான்றோர்களை அழைத்து நீதி கேட்கிறான். தனது உயர்ந்த குடியின் சிறப்பையும் மடலூர்ந்து நிற்கக் காரணமான நிலையையும் தன்னைச் சுற்றி நிற்போரிடம் கூறி தான் விரும்பியவனை அவர்களுக்குத் தெளிவுபடச் சுட்டிக்காட்டி தன் துயரை தீர்க்க வேண்டுகிறான். மடலேறுவேன் என்று தலைவியின் பெயரைச் சொல்லலி ஆடவன் மிரட்டியதால் பெண் வீட்டார் மானத்திற்குப் பயந்து திருமணம் செய்து வைக்கின்றனர்.

மோர் விற்கச் செல்பவளை மறுத்து காதல் மொழி பேசுதல், பந்து விளையாடும் விவரமறியாச் சிறுமியிடம் காதல் வார்த்தைகள் பேசி நிற்கும் ஆண்களைக் குறிஞ்சிக்கலி காட்டுகிறது. மேலும் முல்லை நிலைத்து ஆயர் புனத்தில் ழுகாவுய்த்துக் கொடுப்பதற்கும் கலத்தொடு செல்வதற்கும், திணைக்காலுள்கன்று மேய்ப்பதற்கும் ஏவலாட்களை அமர்த்திக்கொள்வர். அவர்களை தலைமக்களாகக் கொண்டு வரும் முல்லைக்கலிப்பாடல்கள் பெருந்திணை காதலைக் கூறுவதாக அமைகின்றன. நெய்தற்கலியில் தலைமகன் மடலேறுதலைப் பற்றிய பாடல்கள் காணப்படுகின்றன. தலைமகள் பெருங்காமத்தை ஊரறிய உரைத்தலைப் பற்றிய பாடல்களும் இடம்பேற்றுள்ளன.

ஏறுதழுவுதல்

திருமணத்திற்காக ஏறுதழுவும் விழாவில் ஆண்கள் விரும்புப் பங்கேற்றனர். தான் விரும்பிய பெண்ணை மணந்து கொள்ளவும், தன் வீரத்தை வெளிப்படுத்திக் காட்டவும், புகழ்பெறவும், தனக்கு கிட்டிய ஓர் அரிய வாய்ப்பாக கருதினர். எனவே உயிர் இழப்பது குறித்தும் அவர்கள் கவலை கொள்ளவில்லை..பெண்கள் ஏறு தழுவாதவனை மணக்க மாட்டார்கள் என்பதை.

கெல்லேற்று கோடஞ்சுவானை மறுமையும்

புல்லாளே ஆயமகள்

கலித்தொகை கூறுகிறது. ஆயர்கள் ஏறுதழுவுதலில் கட்டாயமாக ஈடுபட வேண்டிய நிலை இருந்தது. எனவே தன் மனதிற்கு உகந்தவளைப் பார்த்வுடன் ஏறுதழுவ தனக்கு சம்மதம் என்பதை அவளின் உறவினரிடம் கூறுமாறு தனது தமிரிடம் கூறுகிறான் ஆயமகன் தேர்ந்தெடுத்த பெண்ணை அவன் மணப்பதற்குச் சான்றோர்களும் பெண் கேட்டு சென்ற செய்தியும் கலித்தொகையில் காணப்படுகிறது.

மரபும் பழக்க வழக்கங்களும்

பழந்தமிழரின் பலவித பழக்க வழக்கல்களைக் கலித்தொகை காட்டுகிறது. தந்தைப் பெயரை மகனுக்க சூட்டும் வழக்கம். ஏனாதி பட்டம் வழங்குதல். தோற்றரால் கொட்டையால் கலங்கிய நீரை தெளிவித்த, காவடி எடுத்தல், கடன் வாங்கதலும் கொடுத்தலும், கடன் கொடுத்தவர், கடன் வாங்கியவருடைய பொருள்களை உசாவுதல்,நோய் தீர்க்கும் மருந்து மருந்தை ஊட்டும் மருத்துவனும் இருந்தது, பாலைத் தயிராகத் தோய்த்தல் முதலியன இன்றியே மருந்துட்டு அதிலிருந்து நெய் கடைந்தெடுத்தல். தோள் மருந்துவம் போன்ற பழந்தமிழரின் பலவித பழக்க வழக்கங்களை கலித்தொகை காட்டுகிறது.

மேலும் கள்ளையும் நரவையும் ஆண்கள் உண்டதுவறையறைந்து யானை நீர்க்குவிடப்பட்டது. யானை வெகுள மருந்திட்டு புகைத்த்து, பகைவியிற் பிரிந்து சென்றவர் செய்வினை முடித்து அவர் மண்ணைக் கொண்ட வருவது அறங்கூறும் நல்லவை அமைந்திருந்த்து அவையத்தார் ஒலைகு முத்தியிட்டு வைப்பது நீருண்ணப் பனங்குடையும், பொற்சிரகமும் பயன்படுத்தியது. விக்கல் எடுத்தால் புறம்பழித்து நீவிவிடுவது தாம்பூவைத்து கொடுக்காமல் எடுத்துக்கொள்க என்று பாக்கு பையையே நீட்டுதல் என சமக பதிவு செய்யப்பட்டுள்ளன. வில்லையும் கவன் கல்லையும் ஏந்தி இரவில் தீனைப்புனை காவல் காத்தல் விலங்குகள் வரும்போது அவற்றின் ஓசை வழயே பரணில் ஓறி கவண்கள் எறிதல், பரனில் அகிற்கட்டை எரித்தல். கண் ஏணியை அமைத்து ஏறித் தேன் எடுத்தல், இரும்புலியை வலைகட்டி பிடித்தல், கதிரை பூட்டிய தேரில் செல்லுதல் முத்து வடத்தோடு பூமாலை அணிதல். கோதை புணைந்து மகளிர்க்குத் தருதல், பகைப் புரத்தில் இருந்து செருமேம் பட்ட வெற்றிச் செய்தியை தூது மூலம் தெரிவித்தல் போன்ற ஆடவரின் செயல்கள் கலித்தொகையில் காட்டப்பட்டுள்ளது.

அதேபோல, பெண்களுக்கு இருந்த உரிமை வாழ்வை கலித்தொகை காட்டுகிறது. ஆண்களைப் போலவே பெண்களும் கடற்கரைச் சோலைகளுக்கும் ஆற்றின் எக்கருக்கும் சென்று விளையா உரிமை பெற்றிருந்தனர். பிநித்திருந்த கணவரை நோக்கி,

'எமக்கு நீ யாரை? அடியரோ நாங்கள் ' என்று கேட்கும் தன்னுணர்ச்சி சுட்டத்தக்குது, முன்னோர் ஈட்டிய செல்வப் பெருக்கால் முயன்று பொருளீட்ட முனையாதவரை அவர்கள் விரும்பவில்லை. முல்லை நில பெண்கள் கொல்லேற்றின் கோடஞ்சாது, அதனை அழுவி அடக்கம் வீரமுள்ள ஆடவனையே மணக்க விரும்பி ஏறுதழுவுதலை பரண்மீது இருந்து காண்பர்.

விரும்பிய காதலனை தம்மை ஈன்றவரின் இசைவோடு மணப்பர் இருமணங் கூடார் என்பன போன்ற செய்திகள் இல்லற வாழ்வை தீர்மானிக்க பெண்களுக்கிருந்த உரிமையையும் தெளிவையும் காட்டுகின்றன.

மேலும் திருமணமான மகளிர் கணவனை தொழுது எழுதல், குறமகளிர் பாறை உரலிலும் சந்தன உரலிலும் யானை மருப்பினாலான உலக்கையால்தினை மூங்கில் நெல் ஐவன வெண்ணெல் ஆகியவற்றை குற்றும் போது வள்ளைப்பாட்டு பாடுதல். சந்தன மரத்தலான உலக்கை பயன்படுத்துதல். திருமணம் கூடின வரையறை தெய்வத்திற்கு பலியிடுதல் தாம் மணக்க விரும்பிய காதலன் தந்த மாலையை கூந்தலுக்கும் மறைவாக சூடுதல் கூந்தலில் வெண்ணெய் தேய்த்து கொள்வது. மாலை நேரத்தில் விளக்கேற்றுதல் போன்ற பழக்கங்களை அறிய முடிகிறது.

பெண்களின் தொழில் செயல்பாடுகளாக தயிர் கடைதல், ஆயமகளிர் புனத்தில் கன்றுகளை மேய்த்துக் கட்டுதல். புனத்தில் ஆடுமேய்க்கும் தந்தைக்கும் தமர்க்கும் உணவும் கவமும் கொண்டு செல்லுதல். சிற்றூரிலும் பேரூரிலும் மோர் வெண்ணெய் விற்றல். வயலில் பறித்த மலரை கூறாகப் பகுத்து விலை கூறுதல் போன்றவற்றையும் காண முடிகிறது.

முடிவுரை:

கலித்தொகை மாந்தர்களின் வாழ்வியலில் அவர்களின் அன்றாடத் தேவைகள் அவற்றிற்கான உழைப்பு, வணிகம், அனைவரும் பகிர்ந்து உண்ணல் போன்ற பலவகையான நல்ல பண்புகளையும் அன்றைய மக்களின் மனநிலையையும் அறிய முடிகின்றது.

துணை நூற் பட்டியல்:

1. கலித்தொகை, கி.ஆ.பெ.விசுவநாதன், நியூ செஞ்சுரி புக் அவுஸ், சென்னை

2. தொல்காப்பியம், இளம்பூரணார் (பொருளதிகாரம்), சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

3. அகப்பொருள் விளக்கம், கோவிந்தராச முதலியார், சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை.