ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தேவிபாரதி படைப்புகளில் உருவமும் உள்ளடக்கமும் (IMAGE AND CONTENT IN DEVI BHARATI WORKS)

த.சிந்துஜா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழத்துறை, அரசு கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டை | நெறியாளர்: ந.வேலுமணி, இணைப்பேராசிரியர், தமிழத்துறை, அரசு கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டை 30 Apr 2024 Read Full PDF

ABSTRACT: This theory has studied Devibharati’s works in two ways, the two sides of Devibharati’s works being the two sides of Devibharati’s works, the theme and the suggestive content, which are considered essential to the story.

            Society is the platform of human life. Small families are understood as society. We live in society depending on each other. Therefore, in samatha, life will be special in solving the problems and solutions that occur within humans.

            As one of the human emotions is sexuality, hunger, sleep rest, sexuality calms the human being. There is a situation where a person has to struggle to get the necessary things, justice etc. in life. Devibharati has created works focusing on the problems between the people in her life. This theory is used to explain it.

KEYWORDS

  1. Justice
  2. Humanism
  3. Politics
  4. Transgression
  5. Moral Ethics
  6. Education
  7. Spirituality

ஆய்வுச்சுருக்கம்

      கதைக்கு இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுவது கருப்பொருளையும் குறிக்கக்கூடியது உள்ளடக்கமும், தேவிபாரதி அவர்களின் படைப்புகளின் இரு பக்கங்களாக இருப்பவை உள்ளடக்கமும், வடிவமும் தேவிபாரதி படைப்புகளை இவ்விரு முறைகளில் இவ்வியல் ஆய்ந்துள்ளது.

      மனித வாழ்வின் சமுதாயமே இயங்குதளமாக இருக்கின்றது. சிறு சிறு குடும்பங்கள் சமுதாயமாக விளங்குகின்றது. சமுதாயத்தில் ஒருவரையொருவா் சார்ந்தே வாழ்கின்றோம். ஆகையால் சமுதாயத்தில் மனிதா்களுக்குள்ளே நடைபெறுகின்ற சிக்கல்களும் அதற்கான தீர்வுகளையும் தங்களுக்குள்ளே சரிசெய்து கொள்வதே வாழ்க்கை சிறப்புடையதாக இருக்கும்.

      மனித உணர்வுகளின் ஒன்று பாலுணர்வு, பசி, தூக்கம், ஓய்வு என்பது போல பாலுணா்வு மனிதனை அமைதிப்படுத்துகிறது. வாழ்க்கையில் ஒரு மனிதன் பெற வேண்டிய விஷயங்கள், தேவைப்படுகின்ற பொருள்கள், நீதி போன்றவை எல்லாம் போராடித்தான் பெற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தேவிபாரதி அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற மக்களிடையே உள்ள பிரச்சனைகளை மையமிட்டே படைப்புகளை உருவாக்கியுள்ளார். அதனை விளக்கும் விதமாக இவ்வியல் அமைந்துள்ளது.

குறியீட்டுச் சொற்கள்

  1. நீதி
  2. மனிதநேயம்
  3. அரசியல்
  4. மரபுமீறல்
  5. அறம் சார்ந்த ஒடுக்கநெறிகள்
  6. கல்வி
  7. ஆன்மீகம்

முன்னுரை

      எழுத்தாளன் தங்களின் வாழ்வில் நடக்கின்ற நிகழ்வுகளை மையப்படுத்தியே படைப்புகளைப் படைக்கின்றன. அந்த வகையில் தேவிபாரதி அவா்களின் வாழ்நாளில் நடைபெற்ற நிகழ்வுகளையும், நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகளில் ஏற்படுகின்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து கொடுத்திருக்கின்றார். படைப்பாற்றல் நிகழ்வுகளில் உள்ள எல்லாவிதமான செயல்களையும் கொண்டுள்ள படைப்பினை எடுத்துக்காட்டும் விதமாக இவ்வாய்வு அமைகின்றது.

உள்ளடக்கம்

      உள்ளடக்கம் என்பது கதைக்கு இன்றியமையாத கருப்பொருளையும், நிகழ்ச்சிகளையும் குறிக்கும். ஆகவே அனைத்து படைப்புகளும் ஒரு கருவை அவசியம் கொண்டிருக்கும். இக்கதை கரு தான் அக்கதையின் செயல் அல்லது நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. எனவேதான் ”கரு என்பது கதை நிகழ்ச்சிகளின் வாயிலாகப் படிப்போர்க்கு ஆசிரியரால் உணா்த்தப்பெறும் வாழ்க்கைப் படிப்பினை அல்லது பேருண்மையாகும்” என்கிறார் தா.ஏ.இானமூா்த்தி மேலும் உள்ளடக்கம் என்ற சொல் ஆழமான பரந்துபட்ட பொருள் உடையது. இசையில் மீண்டும் மீண்டும் பாடப்பெற்று பலவாறாக விவரிக்கப்படும் ஒரு சிற்றிசை போன்றது அது என்பா்.

      அதாவது படைப்பாளன் தன் படைப்பின் மூலம் வாசகர்களுக்குச் சொல்ல விரும்புவது கதையின் மையமாவது உள்ளடக்கம் எனலாம். இதுதான் படைப்பாளரின் வாழ்க்கைப் பற்றிய கண்ணோட்டத்தை எடுத்துக் கூறுகின்றது. குறிப்பாக எழுத்தாளன் படைப்புகளில் நிலைத்த உணா்வுக்குரிய அடிப்படை கருத்து அனுபவா் ஆகியவைக்கேற்ப வெளிப்படுகிறது. ஒவ்வொரு சிறுகதையும் சர்வருவ அமைதியை புலப்படுத்துகிறது. ஓா் ஆசிரியா் எழுதிய ஒரு சிறிய கதையை போன்று இன்னொரு சிறுகதை இருப்பதில்லை. இத்தனித்துவ வேறுபாடுகளைக் கடந்து ஓா் ஆசிரியரின் பல கதைக்குள்ளும் சிற்சிலப் பொதுத் தன்மைகள் அடங்கிக்கிடப்பதுண்டு.

      ஒரு கருத்தை தேர்ந்தெடுத்த பின் அந்த கருத்தை வெளிப்படுத்தும் முறையில் உருவம் செயலுக்கமிக்க பங்கை வகிக்கிறது. ஒரு சிறுகதையில் உருவம் என்பது ஒரு சிறுகதைக்குரிய அனைத்து அம்சங்களும் சரியான விகிதத்தில் சோ்க்கை பெறுவதாகும்.

      வடிவமும், உள்ளடக்கமும் ஒன்றின் இருபக்கங்கள் உள்ளடக்கங்களே உருவத்தை தீர்மானிக்கின்றன என்பது ஓரளவு உண்மை எனினும் உருவ வார்ப்புக்கு அந்த சங்க சுத்தியுடனான தீவிர முயற்சி வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை.

      ஒரு கலைப் படைப்பின் உருவத்தை வடிவமைப்பதில் பல்வேறு கூறுகள் இடம்பெற்றாலும் அதன் உள்ள பக்கமே வடிவ உருவாக்குதல் குறித்து பெரும் பங்காற்றுகிறது. அதே வேளையில் ஒரு கலைப்படைப்பின் உள்ளடக்கம் உருவம் இரண்டுமே சம அளவில் தவிர்க்கப்பட இயலாதவையாகவும் ஒன்றோடொன்று ஈடுகட்ட இயலாதவையாகவும் உள்ளன. மேலும் குறிப்பிட்ட ஒரு கருத்தை வாகரிடையே மனங்கொள்ளச் செய்வதில் ஒரு கலையில் வடிவமே பெறும் பங்காற்றுகிறது. இவற்றின் அடிப்படையில் சிறுகதைகள் வடிவம் என்பது அதற்குரிய அனைத்து தன்மைகளும் சரியான விதத்தில் சேர்ந்திருப்பதைக் குறிப்பிடலாம்.

      தேவிபாரதி அவர்களின் படைப்புகளை கருப்பொருள்களை ஆய்வு வசதி கருதி பின்வருமாறு பகுத்து மதிப்பிடப்பட்டுள்ளது.

  1. குடும்பம்
  2. மனிதநேயம்
  3. நட்பு
  4. அரசியல்
  5. மரபு மீறல்
  6. பாலுறவு
  7. அறம் சார்ந்த ஒடுக்கநெறிகள்
  8. ஆன்மீகம்

குடும்பம்

      குடும்பம் என்ற நிறுவனம் ஆழமான, வலுவான மரபு வழிபட்ட நிறுவனமாக உள்ளது. புராதன ளநிலவுடைமைச் சமூகத்தில் இதற்கு இருந்த வலிமையும் பங்கும் இன்றைய வாழ்நெறியில் வெகுவாக மாறியுள்ளது. நம் நாட்டின் மரபுவழிப்பட்ட கூட்டுக்குடும்ப நிலை மாறித் தனிக்குடும்பங்கள் இன்று பெருவழக்காகி உள்ளன. இது ஒரு பொழுதுபோக்காகவும் மாறிவிடுகின்றது என்றே சொல் வேண்டும். என்றாலும் இம்மாற்றம் குடும்பம் என்ற நிறுவனத்தில் வெளிப்படும் முரண்பாடுகளை நீக்கக் கூடியதாக இல்லை. மனித நிறுவனங்கள் யாவற்றுள்ளும் குடும்பமேத மிக முக்கியமானதாகும். மனிதனுக்கும் புறவுலகுக்கும் ஏற்படும் தொடா்பு குடும்பத்தின் மூலமே ஏற்படுகிறது என்று சிவத்தம்பியின் கூறும் மனமுறையினாலோ அல்லது இரத்தச் சம்பந்தித்தினாலோ பிணைப்பு ஏற்பட்டு மக்கள் தமக்குள் சேர்ந்து ஒரு குழுவாக வசிப்பார்கள். அவற்றுள் கணவன் மனைவியாகவோ, தந்தை தாயாகவோ மகன் மகளாகவோ, சகோதரன் சகோதரிகளாகவோ அமைந்து ஒரு பொதுவான பண்பாட்டைத் தமக்குள் கடைபிடித்து வருவா் என கலைக்களஞ்சியம் குடும்பம். மேற்கூறும் விளக்கமும், குடும்பத்தின் இன்றியமையாததாகும் இயல்பினை விளக்குகின்றன. தேவிபாரதி அவா்கள் குடும்பம் குறித்தும், குடும்பத்திற்குள் ஏற்படும் சிக்கல்களைப் பற்றியும் ஒரு சில பகுதிகளில் தெரிவிக்கின்றார்.

         ”பலி” என்ற சிறுகதைத் தொகுப்பினில் குடும்பப் பொறுப்பினை நிறைவேற்ற முடியாத அப்பாவின் நிலைமையினை எடுத்துக்காட்டியுள்ளார்.

      சமூகத்தை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டு சமூகத்தால் கைவிடப்பட்டு, நிராதரவான நிலையில் தன்மீதும், மனைவி மீதும், குழந்தை மீதும் வெறுப்பு கொள்கிறார் கணேசன். இங்கே மனைவி முடியாமல் இருக்கிறாள், குழுந்தை பசியால் அழுகின்றது. கணவனுக்கும் மனைவிக்குமிடையே சண்டை ஏற்படுகிறது. அப்போது யார் செத்தாலும் யாரும் அனாதையாகப் போய்விட மாட்டார்கள் என்ற குமுறலை தெரிவிக்கிறான் என்பதை சின்னமீன்கள் கதை வழியாக ஆசிரியர் எதார்த்தத்தை வெளிகாட்டியிருக்கிறார்.

மனிதநேயம்

      மனிதனின் அடிப்படை குணவா்களுள் அன்பு, கருணை, பரிவு, இரக்கம் என்பன குறிக்கத்தக்கவை. சகமனிதா்களிடமும் பிற உயிர்களிடமும் நேயத்துடன் நடந்து கொள்வதை மனிதாபிமானம் அல்லது மனிதநேயம் என்பா். மனிதன் தனது சமூகத்தினரிடமிருந்து மட்டுமின்றி எல்லோரிடமும் அன்போடு நடந்து கொள்வதும் மனிதநேயம் தான் இயற்கை வாழ்நெறியில் மனிதன் பிறர்நிலை கண்டு வருந்தவோ மகிழவோ, ஆதங்கப்படவோ, பொறாமைப்படவோ கூடும் இது இயல்பானது தான். ஆனால் தீயகுணங்கள் தலைதூக்கினாலும் உள்ளத்துள் அவை நிலைத்து நிற்காது பாதுகாத்திட வேண்டும் அதற்கு மனிதநேயமே அடிப்படை.

      மனிதநேயம் என்பது மனிதனுக்கு மிக இன்றிமையாத ஒன்று என்பது தேவிபாரதி அவா்கள் தம் படைப்புகளில் எடுத்துக்காட்டுகிறார்.

      ”கறுப்பு வெள்ளை கடவுள்” என்ற புற நாவல்கள் தொகுப்பில் இடம் பெற்றிருக்கக்கூடிய பரமனின் பட்டுப்பாவாடை உடுத்திய நான்காவது மகள் என்னும் கதையை இங்கே குறிப்பிடலாம். எளிய குடி நாவிதன் ஒருவனின் செல்ல மகளுக்கு நேரும் துயரம் ஈரக்குலையை நடுங்கச் செய்கிறது. மஞ்சுவின் வாழ்வில் இடி விழுந்த கதை இது. ஆதிக்க சாதியைச் சேர்ந்த மரக்கடைக்காரனின் மகனால் சீர்குலைந்த மஞ்சு அந்த நகரத்தில் தொலைக்கப்படுகிறாள். மக்களைக் குறித்த கற்பனைகளின் பாரம் தாழாமல் பரமனின் மனம் முறிகிறது.

வாழ்க்கை மதிப்பு

      சமூகம் பற்றிய மதிப்பும், வாழ்க்கை பற்றிய மதிப்பும் கால வளா்ச்சிக்கேற்ப மாறக் கூடியன. தனிதனிதனின் செயல், பேச்சு, பழக்கவழக்கம் குறித்தான மதிப்பு அவ்வப்போது மாறிவந்துள்ளன. சங்க இலக்கியங்கள் தொடங்கி நீதிநூல்கள் தனிப்பாடல்கள் வரை மதிப்புக்கான விளக்கம் மாறித்தான் வந்துள்ளது. சிறுகதை நடுத்தர மக்களின் கலைவடிவம் எனவே சிறுகதையாளன் தன் படைப்பின் உள்ளடங்க படைத்துக் காட்டும் மனிதா்களின் மதிப்புக்கள் மாற்றங்கள், மீறல்கள், அங்கீகாரங்கள் அவ்வக்காலத்தில் பிரதிபலி்ப்பாக கொள்ளலாம்.

நட்பு

      மனித உறவுகளுக்குள் நட்புக்கு ஒரு இடம் உண்டும். பழந்தமிழ் இலக்கியங்களும் நாட்டின் நிலைமை குறித்தும் பெருமை குறித்தும் பேசுகின்றன. இன்றைய பரப்பான நுகர்வுப் பண்பாட்டில் நட்புக்கான பதிப்பில் பல மாற்றங்கள் நிறைந்துள்ளன.

      தேவிபாரதி அவர்கள் ஜெயமோகனுக்கு எழுதியிருந்த கடிதத்தில் தன்னைப் பற்றிய கருத்தினை முன்வைத்துள்ளார். நண்பா்களுக்கிடையெ பேசிக் கொண்டிருக்கும் போது நான் மிக இறுக்கமான ஆள் எனவும் அணுக முடியாத மூா்க்கம் கொண்டவன் எனவும் என்னை பற்றி எனது நட்பு வட்டத்திற்கு வெளியே நிலவிவரும் பொதுவான கருத்தாகவும் இருந்திருக்கிறது. அது அப்படி அல்ல என்பதையும் நான் சுவாரசியமான ஆள் எனவும் புரிந்து கொள்ளவும் முடியும் என்பதைக் குறிப்பிடுகிறார்.

அரசியல்

      இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மக்கள் பிரதிநிதிகள் தோ்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனா். உள்ளாட்சி அமைப்புகள் தொடங்கி சட்டமன்றம், நாடாளுமன்றம் வரை தேர்தல்கள் மூலமே மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனா்.

      ”புழுதிக்குள் சில சித்திரங்கள்” என்பது கட்டுரைத் தொகுப்பில் 1984 தேர்தலில் சுவரோவியமாக தேவிபாரதியின் அனுபவங்கள் இரண்டாம் பகுதியில் விரிகின்றன. நெருக்கடி நிலை பற்றிய விவரிப்பில் உள்ள அழுத்தம் இதில் இல்லை என்றாலும் தமிழக அரசியல் பண்பாட்டின் அடிமட்டத்தின் உடைய அன்றாட செயல்பாடுகள் நன்கு பதிவு பெற்றுள்ளன. காலச்சுவட்டின் ஆசிரியர் குழுவில் இணைந்த அதற்கு முன்பும் அவ்வப்போதைய அரசியல் நிகழ்வுகளைப் பற்றி எழுதி வந்ததாக தேவிபாரதி அவா்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

      ”அற்றக்குளத்து அற்புத மீன்கள்” என்ற கட்டுரைத் தொகுப்பினில் எழுதப்பட்ட 2004 முதல் 2011 வரையிலான காலகட்டம் தமிழக அரசியல் சூழல் மிக மோசமாக வீழ்ச்சி அடைந்திருந்த காலம். இந்த காலகட்டத்தை போல் வேறெந்த காலக்கட்டத்திலும் ஜனநாயக நெறிமுறைகள் சிதைக்கப்படுவதில்லை. அரசியல் முற்றாக அறநீக்கம் செய்யப்பட்ட ஒரு துறையாக மாற்றப்பட்டதும் இந்தக் கட்டத்தில்தான் என்பதை குறிப்பிட்டுள்ளார் தேவிபாரதி.

மரபுமீறல்

      எந்தவொரு சமூகமும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள நாகரீகம், பண்பாட்டுக் கூறுகளை தகவமைத்துக் கொள்ளும் காலவளர்ச்சிக்கேற்ப சில மாற்றங்களையும் உள்வாங்கியபடி நகரும்.

      தேவிபாரதி அவர்களின் ”பிறகொரு இரவு” என்னும் தொகுப்பில் புதிய புனைக்கதையின் சவால் காலத்தையும் களத்தையும் இடம்பெயா்ப்பது என்று தோன்றுகிறது. நடப்பியல் சம்பவமானாலும் அது புனைவின் வேளையில் வேறொன்றாகிறது. காலத்தில் நடக்கிறது, களத்தில் பொழுதாகிறது. காந்திக்காகக் காத்திருக்கும் மரணமும் நடப்பு சார்ந்தவை அல்ல. புனைவு சார்ந்தவை. சசியின் கடிகாரம் பின்னோக்கி செல்லும்போது அது காலமாக அல்லாமல் இடமாக உருவாகிறது என்பதை குறிப்பிடுகிறார்.

பாலுறவு

      மனித உணர்வுகளின் பாலுணர்வு ஒன்று, பசி, தூக்கம், ஓய்வு என்பது போல பாலுணர்வு மனிதனை அமைப்படுத்துகிறது. சமூகமாக வாழத் தலைப்பட்ட மனிதன் பாலுணா்வைத்துய்க்கச் சில கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொண்டான். அவை மதம் சார்ந்தோ, பண்பாட்டை முன்னிறுத்தியோ குடும்ப உறவுகளை பேணவோ காலத்திற்கேற்ப இக்கட்டுப்பாடுகள் எழுப்பப்பட்டன. ஆனால் ஒவ்வொரு காலத்திலும் பாலுணர்விற்கான கட்டுப்பாடுகள் மீறும் முயற்சியும் நடந்தே தந்துள்ளது.

      தமிழின் சங்கப்பாடல்களின் தலைவனின் புறத்தொழுக்கம் கண்டிக்கப்-படுவதில்லை. ஆனால் தொடர்ந்து வந்த சங்கம் மருவிய காலம் இலக்கியங்களில் குறிப்பாக பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் புறத்தொழுக்கம் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. எனவே விதிகளும் மீறல்களுமாகவே பாலுணா்வு மனித சமூகத்தில் தொடா்ந்து இடம்பெற்று வருகிறது.

      காதல், காமம், அரசியல், நட்பு எல்லாமும் விதையுறைகள் மூடப்பட்ட அவற்றுக்குள் வன்முறையின் வித்துக்கள் உறங்குகின்றன என்பதை ”பிறகொரு இரவு” தொகுதியினில் கருத்தினை பதிவிடுகின்றார்.

      பிறகொரு இரவு கதையைத் தவிர மற்ற மூன்று கதைகளும் காமம் சார்ந்த அதோடு தொடர்புடைய கொலை, வன்மம், இழிச்செயல்களைப் பற்றியவை. மனிதா்கள் என்பதும் உலகம் என்பதும் காமத்தால், காமம் சார்ந்த செயற்பாடுகளால் உருவாக்கப்பட்டதுதான்.

      பிறகொரு தொகுப்பிலுள்ள நான்கு கதைகளிலுமே உடலும் முக்கியமான பாத்திரமாக இருக்கிறது. உடல், உடல் சார்ந்த வேட்கை அதற்கான போராட்டம் உடல்தான் வாழ்க்கையாகவும் வாழ்க்கைக்குரிய பிரச்சனையாகவும் இருக்கிறது.

அறம் சார்ந்த ஒழுக்கநெறிகள்

      மனிதன் கற்பிதம் செய்து வைத்திருக்கிற சகலவிதமான அறம் சார்ந்த ஒழுக்கம் சார்ந்த விதிகள், நெறிகள் எதனடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை பிறகொரு இரவு என்ற தொகுப்பினில் அறம் சார்ந்த செய்திகள் இடம் பெற்றிருக்கும்.

      அறச்சிக்கல்கள் மீதான படைப்பில் விவாதம் பிறகொரு இரவு கதைக்குள் இவை வெவ்வேறு தளங்களிலிருந்து மாறுபடுகின்றன.

கல்வி

      கல்வி என்பதன் வேர்ச்சொல் ”கல்” என்பதாகும். கல்லுதல் என்பது தோண்டுதல், துருவுதல் என்று பொருள்படும். எனவே கல்வி என்பது ஒரு மனிதனுக்கு சமுதாயத்தினையும், அச்சமுதாயத்தில் தன்னுடைய வாழ்க்கை நிலையினையும் தோண்டி துருவி அறிந்து கொள்ளும் அறிவினைத் தருவதாக அமைதல் வேண்டும் என்று டாக்டா் பாஞ்.இராமலிங்கம் கல்வியும் உளவியலும் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

      சமூக முன்னெற்றதுக்கும் பொருளாதார வளா்ச்சிக்கும் பயன்படும் கல்வி மனிதனைப் பண்படுத்தி வளப்படுத்துகிறது. பாரம்பரியமான குருகுலக்கல்விக்கு மாற்றாக ஆங்கிலேயர்களும் கிறித்துவ மதகுருமார்களும் நவீனக் கல்வி நாடு விடுதலையாகி எழுபத்திரண்டு ஆண்டுகள் கடந்த பின்னும் தகுதியுடைய அனைவருக்கும் சமச்சீராகக் கிடைக்கவில்லை.

      இங்கு நடைமுறையில் மக்கள் பிளவுபட்டு ஒடுக்கப்பட்டு கல்வி மறுக்கப்பட்டு வந்த சூழலில் அனைவர்க்கும் கல்வி என்பதை அடைய அரசும் தனிமனிதர்களும் வெகுவாக உழைக்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்த வரையில் கல்வி பற்றி விழிப்புணர்வு பெருகியே வந்துள்ளது. கல்விச்சூழல் ஒருவிதமாகவும் மாறுபட்ட பாடமுறை வசதிகள் என்று ஏற்ற இரக்கத்தோடு தான் இருந்து வருகிறது. ”நிழலின் தனிமை” என்னும் நாவலில் காலத்தின் சதுரங்க விளையாட்டில் முப்பதாண்டுகள் கழித்து சாரதாவின் சகோதரன் எழுத்தாளராகப் பணியாற்ற ஒரு பள்ளிக் கூடத்துக்கு வருகிறான் என்பதாகக் காட்டப்படுகிறது.

      உயர்கல்வி கற்ற இந்தியக் குடிமனில் தொடங்கி பாமரன் வரை பெரும்பாலான மக்களிடம் இந்திய அரசியல் சாசனம் உறுதி செய்திருக்கும் ஜனநாயகம் சமத்துவம் சார்ந்த குறைந்தபட்ச நம்பிக்கையையோ, குறைந்தபட்ச மனிதாபிமானத்தையோ மனரீதியாகக்கூட உருவாக்க முடியவில்லை. ஆரோக்கியம் மற்றும் அரசுகள் கைவிட்ட உலகமயமாதல் சூழலில் நிலப்பிரபுத்துவத்தின் சில மனிதார்த்தப் பண்புகளும் கைவிடப்பட்டுள்ளன என்பதை நட்ராஜ் மகராஜ் நாவல் எடுத்துரைக்கப்படுகிறது.

ஆன்மீகம்

      ஆன்மீகச் சிறப்புடையது நம் நாடு. பல்வேறு மதங்கள் தோன்றி வளரக் காரணமாகவும் களமாகவும் இருந்தது. கால வளா்ச்சியால் அறிவியில் தொழில் நுட்பங்களின் விளைவாக கடவுள் நம்பிக்கை சற்றே தளர்வடைந்து வருவதையும் காண்கிறோம். ஒரு சில அமைப்புகள் மன அடிப்படையில் தீவிரமாக இயங்குவதால் கடவுள் பற்றிய பழைய மதிப்பீடுகள் மீட்டெடுக்கப்படுவதும் நடைபெறுகிறது.

      ஊழி காதையில் மேகலாவுக்கும் உடலும் உடலின் தோற்றமும் அவளுக்குரிய பிரச்சனையக கிட்டத்தட்ட சாபமாக இருக்கிறது. மேகலா மரவுரித்தரித்தது அவளுடைய தேர்வல்ல. பௌத்த மதத்தில் இணைவதுகூட தன்னுடைய உடலைப் பாதுகாத்துக் கொள்வது இன்றைய காலத்தில் மட்டுமல்ல புராண, இதிகாச வரலாறு காலத்தில்கூட சுய தோ்ந்தெடுப்புகளுக்கு இடமில்லை.

      பிறகொரு இரவு என்னும் தொகுப்பில் இயேசுவின் மரணத்தோடும் டால்ஸ்டாயின் மரணத்தோடும் காந்தியின் மரணம் ஒப்பிடப்படுவது காந்தியைப் பற்றிய மரபான பார்வையை மறுப்பது என்ற மதங்களின் சார்பாக கருத்தினைப் பதிவிடுகிறார்.

      உடையார் ஒருவரின் உதவியோடு ஆறே மாதங்களுக்குள் அம்மாவிற்கான இருப்பிடம் தயாராயிற்று. கருவறை, முற்றம், மடப்பள்ளி, குதிரைத்திட்டு, மதில்சுவா் என அந்த வசிப்பிடம் வளர்ந்து நின்றபோது காரு பூரித்துப் போனான். பிறகு பண்மாரம் சொன்னபடி ஒரு குட முருக்கு அவனுடைய அம்மாவின் காடுகோயிலாயிருந்தது. அம்மா அதள் கருவறையில் ஒரு தெய்வமாக வீற்றிருந்தால் துரோகமிழைக்கப்பட்ட அவமானத்துள்ளாகித் துயருற்று நிற்கும், கன்னிமை சிதைக்கப்படட ஒரு பெண் தெய்வம் என ”அம்மாவின் கரு” என்ற சிறுகதையில் கோயில அமைக்கப்பட்டுள்ள விதம் குறித்து சொல்கிறார் தேவிபாரதி.

முடிவுரை

      உள்ளடக்கம் என்பது கதைக்கு இன்றியமையாத கருப்பொருளையும், நிகழ்ச்சிகளையும் குறிக்கும். உள்ளடக்கம் என்ற சொல் ஆழமான பரந்துப்பட்ட பொருளை உடையது. கதையைப் படிக்கும் வாசகர் மனத்தில் கதை புரிய வேண்டுமானால் கதைக்கு சிறப்பாக அமைய வேண்டும்.

      கலைஞனின் அனுபவன் சிறியதோ, பெரியதோ ஒரு கலைஞரை எந்த அளவு பாதிக்கிறது என்பதையொட்டியே கலைப்படைப்பின் தரம் அமைகிறது என்பதை இவ்வாய்வு விளக்கியுள்ளது. தேவிபாரதி கதைகள் அனைத்தும் யதார்த்தமானவை உள்ளதை உள்ளபடி நேரிடையாகக் கூறியுள்ளன.

      குடும்பம் குறித்தும், குடும்பத்திற்குள் ஏற்படும் சிக்கல்களைப் பற்றியும் அதற்கான தீர்வுகளைப் பற்றியும் இவ்வியல் விளக்கியுள்ளது. மனிதா்கள் அனைத்து சமூகத்தினரோடும் சேர்ந்து வாழும் உறவுடையவனாக உள்ளான். சாதியமைப்பை ஒழித்தாயே அனைவரும் ஒரே இனமாக வாழலாம் என்பதை இவ்வாய்வு தெரிவிக்கிறது.

அடிக்குறிப்புகள்

  1. தா.ஏ.ஞானமூா்த்தி, இலக்கியத் திறனாய்வியல், ப.101.
  2. மேலது, ப.101.
  3. இரா.தண்டாயுதம், நாவல் வளம், ப.11.
  4. முனைவா்.மனோகரன், சு.சமுத்திரத்தின் சிறுகதைகள், ப.65.
  5. டாக்டா.பாஞ்.இராமலிங்கம், கல்வியும் உளவியலும், ப.24.

 

1.     தா.ஏ.ஞானமூா்த்தி,                   …     இலக்கியத் திறனாய்வியல்,

                                                ஐந்திணைப் பதிப்பகம்,

                                                சென்னை,

                                                மு.ப.2020.

2.     இரா.தண்டாயுதம்,                    …     நாவல் வளம்,

                                                தமிழ்ப் புத்தகாலயம்,

                                                சென்னை,

                                                1975.

3.     டாக்டா்.பாஞ்.இராமலிங்கம்,           …     கல்வியும் உளவியலும்,

                                                ராஜகுமாரி பதிப்பகம்,

                                                2007.

Footnotes

1.    Tha,A,Gnanamurthy,                …    Literary Criticism,

                                        Five Edition

                                        Chennai,

                                        2020 BC.

2.    Ira.Dandayutham,                  …    Novel Resource,

                                        Tamilputhalayam,

                                        Chennai,

                                        1975.

3.    Dr.Panj.Ramalingam,                …    Education and Psychology,

                                        Rajakumari Publishing House,

                                        2007.