ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

மதமும் மனித உரிமைகளும் - ஓர் ஆய்வு | Religion and Human Rights – A Research

பூபாலசிங்கம் தனேஸ், அபிவிருத்தி உத்தியோகத்தார், வலயக்கல்வி அலுவலகம், யாழ்ப்பாணம், இலங்கை | Poobalasingam Thanesh, Development officer, Zonal education office, Jaffna, Sri Lanka. 30 Apr 2024 Read Full PDF

ABSTRACT: Religions originated to cultivate human minds. But when we Look at today’s stage, religions create the idea that their religion is great, noble and high, religious people and politicians create religious competition and conflicts among the people and push the smooth environment in the society to a complicated environment. Historically, religious problems have arisen in that way. What kind of action have the world taken to protect human rights? How they have made life in the society smooth through it. My Research is structured to examine.

In this way, My research is structured as the theme of the study – religion and human rights – a Research in that way, information related to religion, human rights, related books, magazines, research articles and website information have been used in this research.

ஆய்வுச்சுருக்கம்: மதங்களானவை மனித மனங்களை பண்படுத்தவே தோற்றம் பெற்றன. ஆனால் இன்றைய கால கட்டத்தினை எடுத்து நோக்கும் போது மதங்களானது தம் மதமே பெரியது உன்னதமானது உயர்வானது என்ற எண்ணத்தினை மதவாதிகள் அரசியல்வாதிகள் மக்கள் மத்தியிலே மதம் சார் போட்டிகளையும் பூசல்களையும் ஏற்படுத்தி சமூகத்தின் சுமூகமான சுழலை சிக்கலான சுழலுக்கு தள்ளிவிடுகின்றது. அந்த வகையில் வரலாற்று ரீதியாக எவ்வாறான மதம் சார் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன அதற்காக மனித உரிமையை பேணும் நோக்குடன் உலக நாடுகள் எவ்வகையான செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளன? அதனூடாக சமூகத்தில் எவ்வாறு சுமூகமாக வாழ்வை ஏற்படுத்தியுள்ளனர் என்பதை ஆய்வு செய்வதாகவே எனது ஆய்வு அமைவு பெறுகின்றது.

இந்த ஆய்வின் மையப் பொருளாக மதமும் மனித உரிமைகளும் - ஓர் ஆய்வு என்றவாறாக எனது ஆய்வு அமைவு பெறுகின்றது. அந்த வகையின் மதம் மனித உரிமை தொடர்பான விடயங்களை அது தொடர்பான நூல்கள் சஞ்சிகைகள் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் இணையத்தளத் தகவல்கள் ஆகியன இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 

திறவுச் சொற்கள்: மதம், மனித உரிமை, ஐக்கிய நாடுகள் சபை

KEYWORDS: Religion, Human Rights, United Nations


மதமும் மனித உரிமைகளும் - ஓர் ஆய்வு
மேற்கத்திய வரலாற்றுத் தளத்தில் நோக்கும் போது இறைமை படைத்த ஆட்களால்  தனிக் குடிமக்களுக்கு ஏற்படவல்ல அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான மார்க்கமாக மனித உரிமைகள் உருவாகின. மனித உரிமைகள் பொதுவில் செயற்பாட்டு ரீதியானவையாக விளங்கும் போதிலும் இப் பண்பு குறிப்பாக வளர்முக நாடுகளுக்கு பொருத்தப்பாடாகிறது. உலகின் பெரும்பான்மையாக காணப்படும் அந்தஸ்து குறைந்தவர்கள் மனித உரிமைகளை விடுதலைக்கான கருவியாக கருதுகின்றனர்.

மனித உரிமைகள் என்ற நோக்கில் கலாசாரம் என்பது ஒரு வளமாகவும் அத்துடன் ஒரு தடையாகவும் கருதப்பட முடியும். ஒருபுறம் சர்வ மயமான கௌரவம் சம உரிமைகள் போன்றவை தொடர்பான நம்பிக்கையை அடையவல்ல சாதனமாக வளமாக கலாசாரம் மிளிர்கின்றது. மறுபுறம் அந் நம்பிக்கை தொடர்பான ஒரு தடையாகவும் அது இயங்குகிறது.

மதத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையிலான வேறுபாட்டினை நோக்குதல் வேண்டும் மதம் என்ற பதம் பிணைப்பு என்ற எண்ணக்கருவுடன் தொடர்புடையது. மதமானது கோட்பாடு விதிமுறைகள் படிமுறை அமைப்பு என்பவற்றுடன் சம்பந்தப்பட்டிருக்க நம்பிக்கையானது யதார்த்த நிலைப்பாடு புலன்களுக்கு உட்பட்ட நிலை ஆகியவற்றுடன் தொடர்புறுகின்றது.

1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் பிரகாரம் மனித உரிமைகளின் சர்வமயத் தன்மை சர்வதேசச் சட்டத்துடன் பிணைக்கப்பட்டிருந்தது. மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் சட்ட நூல்களில் போதிய அளவில் புகுத்தப்படவில்லை. UDHR நடைமுறைப்படுத்தியதைத் அதைத்தொடர்ந்து தனிநபர் அல்லது அரச முறைப்பாடுகள் தொடர்ச்சியில் நடைமுறைகளைப் பின்பற்றுவதில் மனித உரிமைச் சட்டவாக்கமானது ஒரு சவாலாகவே தென்பட்டது. சம்பந்தப்பட்ட நாடுகளில் கலாசாரம் அரசாங்கம் மனித நம்பிக்கைகள் வளம் என்பன தொடர்பில் உள்ளார்ந்த ரீதியாக நடுநிலையில் இருக்க வேண்டிய கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் எங்குமே கண்டிக்கப் படவேண்டியவை.

மனித கௌரவத்தை பேணுதல் என்பது உண்மையில் சட்ட வரம்பிற்கு உட்பட்ட விடயம் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படல் மனித உரிமை தொடர்பில் சர்வதேச நீதிமன்றங்கள் உருவாக்கம் போன்றன மட்டும் போதாது. உளம் சார்ந்த உறுதிப்பாடு இங்கு அவசியமாகின்றது பொறுப்பு வாய்ந்த தனிநபர் நிலைப்பாடே மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு சிறந்த வழியாகிறது.

தூய சுதந்திர சந்தை பொருளாதாரத்தில் வேலையின்மை நோய் உடல் இயலாமை முதுமை போன்ற அவஸ்தைகளுக்கு நலிந்த மக்கள் உட்படுகின்றனர். வலிமை பெற்றவர்களில் தங்கியிருத்தல் என்பது திருப்தியற்றது என்பது ஏற்கப்படுகிறது. அனேக கைத்தொழில் நாடுகளில் பொருளாதர சமூக உரிமைகளை பேணும் மூலமாக தொழிலாளர் பாதுகாப்பு கட்டாய கல்வி தொழிற்பயிற்சி சுகாதாரப் பாதுகாப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன இவ்வகையில் சோசலிசமும் நம்பிக்கை என்ற இலட்சியமாகவே நோக்கப்படுகிறது.

John Rawls என்கிற பிரபல்யம் மிக்க தத்துவஞானி எந்தவொரு சமூகத்திற்கும் பொருந்தவல்ல அரசியல் தத்துவ நீதி பற்றிய வரன்முறை யொன்றை வகுக்க முயற்சித்துள்ளார். அதுமட்டுமன்றி மக்கள் மத்தியில் காணப்படும் சமத்துவமின்மை தொடர்பிலும் அக்கரை கொண்டுள்ளார். மனித உரிமைகள் தொடர்பான இவரின் எண்ணக்கரு குடியியல் உரிமைகளுடன் மட்டும் தொடர்புடையது. அரசியல் சமூக பொருளாதார உரிமைகளை புறந்தள்;ளப்படுகின்றது.

பல்வேறு மதங்கள் மத்தியில் மனித உரிமைகள் தொடர்பான எண்ணக்கருவினை அலசுவதில் அறிஞர் ஆர்வம் காட்டினார். மற்றொரு நபரின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஒருவருக்கு ஏற்படும் திருப்தி பற்றிப் பல மதங்களிலும் கூறப்படுகின்றது. என Wronka என்பவர் குறிப்பிடுகிறார். மனித உரிமைகளை நிறைவேற்றுவதில் எதிர்கொள்ளப்படும் அரசியல் பொருளாதாரத் தடைகளுக்கு மேலாக நியமங்கள் பெறுமானங்கள் தொடர்பில் கலாசார தடை காணப்படுகிறது. இதன் உட்கிடை யாதெனில் மனிதர் பிறர் நலன் மீது அக்கறை கொண்டிருக்க வேண்டுமென்பதேயாகும்.

மேற்கத்தேய மதத்தின் மூன்று பிரிவுகளில் யூடிசம் கிறிஸ்துவம் இஸ்லாம் மதத்தில் நம்பிக்கை என்பதன் அர்த்தம் கடவுள் மீதான நம்பிக்கையே சொக்கத்தினதும் பூமியினதும் சிருஷ்டிகர்த்தா. நியாயம் மனச்சாட்சி என்பவற்றை மனிதனிடம் விதைத்தவர் கடவுளே. நீதி சமாதானம் என்பவற்றை நிலைநிறுத்துமாறு மனிதரிடம் பணிந்தவர் கடவுளே. மனித உரிமைகள் தொடர்பான நம்பிக்கை சார் அணுகுமுறைகள் கட்டாயமாக சர்வமயமானதாய் இருக்க வேண்டும்.

அனைத்து மனிதர்களின் சமத்துவம் கடவுள் உருவிற் சிருஷ்டிக்கப்பட்டிருப்பதுடன் கிறிஸ்துவில் அது உறுதிப்படுத்தப்பட்டதுடன் அது முழுமை படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நோக்கும் போது கிறிஸ்தவ நம்பிக்கையே மனித உரிமைகளின் அடித்தளம் மனித உரிமை மீறலானது கடவுளின் தீர்மானத்திற்கு முரணானதாகும் அத்துடன் பாவ செய்கையும் ஆகும். மனித சமத்துவம் தொடர்பான நம்பிக்கை அனைத்து மனித உயிர்களும் ஒரே மூலத்திலிருந்து உற்பத்தி ஆகின்றன என்ற நம்பிக்கை சார் எடுகோளிலிருந்து தோற்றம் பெறுகிறது.

கௌரவம் உரிமைகள் தொடர்பான சுதந்திரம் சமத்துவம் என்பன தனிமனித  சுயமரியாதையிலும் மனிதர்களுக்கிடையிலான மரியாதையிலும் தங்கியுள்ளது. 
பயங்கரவாதம் அடக்குமுறையும் தாக்குதல்களும் மட்டுமல்ல அதியுச்ச சமத்துவமின்மைக்கும் வழிவகுக்கும் அநீதியான பொருளாதாரக் கட்டமைப்புக்கள் அரசியல் சகிப்பின்மை வறுமை தொடர்பில் அலட்சியப்போக்கு என்பன தொடர்பில் நாம் மௌனமாக இருக்க முடியாது.

முழுமையான சர்வதேச மனித உரிமை முயற்சிகளின் சாரம் நியமங்களை பேணுவதில் தோன்றும்  நுணுக்கங்கள் புதிய உரிமைகளை பிரகடனப்படுத்தல் என்பனவே.

அதிகாரம் பிரயோகிக்கப்படும் அனைத்து மக்களின் பாதுகாப்பு தொடர்பில் மனித உரிமைகளை பேணுவதில் நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச முயற்சிகள் நம்பிக்கை சார் அணுகுமுறை தொடர்பானவை.

உளம் சார்ந்த அரசியல் நிலைப்பாட்டில் நாளாந்த இடர்பாட்டில் வாழும் மக்கள் சம்பந்தப்பட்ட பிரதான கேள்விகள் இந்த மக்கள் எவ்வகையான பிரச்சினைகளை உருவாக்குவர்? அல்லது இந்த வறிய மக்களுக்கு நாம் என்ன செய்ய முடியும்? அவர்களது உரிமைகள் எவ்வாறு  உணரவைக்கப்பட முடியும்? என்ன ஆராய வேண்டும். இத்தகைய கேள்விகள் கேட்கப்படும் முறையானது விடுதலை தொடர்பான சமூக அரசியல் எண்ணக்க்கருவுடன் சம்பந்தப்பட்டதாகும்.
மனித உரிமைகள் செயற்பாட்டில் மதமானது இரு வழிகளில் தன் பங்களிப்பை மேற்கொள்கிறது முதலாவது வணங்கும் உரிமை அல்லது வணங்காது இருக்க உரிமை அடிப்படை மனிதன் சுதந்திரங்களில் ஒன்று. இரண்டாவது நம்பிக்கைகள் நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மதம் UDHR இன் சர்வ மய மரபுகளுள் உள்ளடங்கும். மதக் காரணங்களுக்காக பாரபட்சம் காட்டப்படுகிறது அல்லது மனிதர்கள் கொல்லப்படுகிறனர் இதனூடாக மனித உரிமைகள் மீறப்படுகின்றது.

தற்கால மதமானது சமூக அரசியல் மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது உதாரணமாக ருவாண்டன் இனப்படுகொலைக்குப் பின்னர் Presbyterian தேவாலயத்தை சார்ந்த ஒரு முதியவர் தேவாலயத்திலும் அரசாங்கமும் மிக நெருங்கி வந்துள்ளதாய் குறிப்பிடுகின்றார்.

தேவாலயம் ஆனது Habyarimana ஆகியவற்றுடன் இணைந்து சென்றது. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி நாம் கண்டிக்கவில்லை. ஏனெனில் நாம் சீரழிந்து கொண்டிருக்கிறோம். எமது தேவாலயங்களில் எதுவுமே குறிப்பாக கத்தோலிக்கம் படுகொலைகளை கண்டிக்கவில்லை அதனால்தான் தேவாலய தலைவர்கள்  தப்பிவிட்டனர். ஏனெனில் அவர்களது சொந்த சகாக்கள் மூலமே அவர்களுக்கு இடர்பாடு இருந்தது.

மத நிறுவனங்கள் ஊழலுக்கு உட்பட்டவை படிப்படியாக இது நிகழ்ந்து வருகின்றதொன்று. இது மக்களை  உள்ளார்ந்தரீதியில் வெட்கமடைய செய்கிறது. வணக்கத்துக்குரிய Mugamera  இது பற்றி தெரிவிக்கிறார். ருவாண்டா இரத்தக் களரியில் மனைவியும் ஆறு பிள்ளைகளும் பலிகொடுத்தவர் இவர்.
ஞானஸ்தானம் பெற்றவர்களை கோஸ்பல் செய்தி சென்றடைய தவறியது ஏன்?  நாம் எதை இழந்தோம் நாம் எமது உயிர்களை இழந்தோம் எமது மதிப்பை இழந்தோம் நாம் வேட்கப்படுகிறோம் நாம் பலவீனமடைந்துள்ளோம் யாவற்றிற்கும் மேலாக நாம் தெய்வீக நோக்கிலிருந்து விலகி விட்டோம் ஜனாதிபதியிடம் சென்று உண்மையை தெரிவிக்க முடியாது ஏனெனில் நாம் அதிகாரத்திற்கு அடிமையாகி விட்டோம்.
1959 இலிருந்து இங்கே கொலைகள் நிகழ்ந்துள்ளன. முதலாவதாக குடியரசில் கொலைகள் மெதுவாக நிகழ்ந்தன. தேவாலயத்தை சார்ந்த எவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இறந்தவர் சார்பில் எவரும் பேசவில்லை இரண்டாவது குடியரசில் கொலைகள் மேலும் அதிகரித்தன சித்திரவதைகள் கற்பழிப்புகள் காணாமல் போனவை என குற்றங்கள் பெருகின.  ஏனெனில் நாம் பேசவில்லை வசதியுடன் வாழ்ந்தோம்.

இப்போது அங்கே ஒரு புதிய ஆரம்பம் ஒரு புதிய பாதை இஜேசுவின் வழிகாட்டலை நாம் ஏற்க வேண்டும் மந்தைகளை நாம் பாதுகாக்க வேண்டும் எமது சகோதர சகோதரிகளுக்காக நாம் இடர்பட நேரிடலாம்.

மதத்தின் பேரால் அரங்கேறும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களுக்கான  நியாயப்படுத்தலாக  வன்போக்கு மதத் தலைவர்களின் கூட்டு (வன்போக்கு மத  நிறுவனங்கள் காரணமாக யூதம் கிறிஸ்தவம் இந்து பௌத்தம் போன்றவை அல்லாத) எடுத்துக் கூறப்படுகிறது. மதமானது உண்மையிற் பலமான அரசியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது. மதத்திற்கும் மனித உரிமைக்கும் இடையிலான மோதல்களை எவ்வாறு தவிர்க்கலாம்? மதமானது கருத்தியல் நிலைக்கும் நிறுவனமயமாதல் நிலைக்கும் உட்படும் ஒன்று. மனித உரிமைகள் மனிதனை கருத்தியல் நிலைக்கு மேலாகவும் தனிமனிதனின் கௌரவத்தை நிறுவனத்திற்கு மேலாகவும் கணிக்க வேண்டும் என மதம் எதிர்பார்க்கிறது.

1994 ஏப்ரல் மாதம் ருவாண்டா இனப்படுகொலையை அடுத்து மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகாரியாலயம் ருவாண்டா நாட்டிற்கு உடனடியான முன்னுரிமை வழங்கியது. நாடு பூராக மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சித் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. தேவாலய போதனைகள் வழங்க தவறிய இனத்துவ வன்முறைக்கு எதிரான பாதுகாப்பு பாரபட்சத்திற்கு எதிரான பாதுகாப்பு என்பவற்றை இந் நிகழ்ச்சித்திட்டம் வழங்குமா? உலகளாவிய மனித உரிமைகள் திட்டம் இதற்கே உரிய ஸ்தாபனங்களை உள்ளடக்கியுள்ளது. அரசுகளுக்கு இடையிலான மையங்கள் அரசு சாராத மையங்கள் ஆணைக்குழுக்கள் விசாரணைக் குழுக்கள் சட்டமன்றங்கள் பயிற்சித் திட்டங்கள் கல்விசார் பயிற்சி நெறிகள் மனித உரிமைகள் ஒரு “பூகோளமதம்" என்றவாறு ஏற்கனவே நோக்கப்பட்டுள்ளன.

முடிவுரை
இறைமை படைத்த ஆட்சியாளர்களால் தனிக்குடிமகனுக்கு ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு இன்னல்களுக்கு எதிரான பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான வழிகளாக மனித உரிமைகள் பொதுவாக உருவாக்கப்பட்டன. மனித உரிமைகள் பொதுவில் இவ்வுரிமைகள் செயற்பாட்டு ரீதியானவையாக விளங்;குகிற போதிலும் இப் பண்பு குறிப்பாக வளர்முக நாடுகளுக்கு பெரிதும் பொருத்தப்பாடுடையதாகக் காணப்படுகிறது. உலகின் பெரும்பான்மையாக காணப்படும் உடையமை இழந்தவர்கள் அந்தஸ்து குறைந்தவர்கள் மனித உரிமைகளை விடுதலை பெறுவதற்கான கருவியாக கருதுகின்றனர். அந்த வகையில் மனித உரிமையை பேணும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் தோற்றம் பெற்று மனித உரிமையை இன்றளவும் பேண முயற்சிக்கும் வகையில் அமைவுறுவதனை காணக் கூடியதாகவுள்ளது. ஆனாலும் மதமும் மனித உரிமைகளும் பரஸ்பரம் பிரத்தியேக நிலையில் நிற்பனவா? அல்லது ஒன்றுக்கொன்று ஆதரவான நிலையில் நிற்பனவா?  என்ற வினா என்றும் நிலைக்கிறது.

உசாத்துணை நூல்கள்
1.    அமீர்தீன்வீ. (2003) “மனித உரிமைகள் ஓர் அறிமுகம்” தகவல் நலன்புரி அமைப்பு வெளியீடு.
2.    மார்ட்டின் இயன். (1999) “மனித உரிமைகள் அரசியல் மோதலும் இணக்கப்பாடும்” இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் வெளியீடு.
3.    திருச்செல்வம் நீலன் (1996) “சனநாயகமும் மனித உரிமைகளும்” இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் வெளியீடு.
4.    விக்தர் சாப்ரிகோவ்(2000)“சமாதான சகவாழ்வு” சோவியத் ஸ்தானிகராலயம் வெளியீடு.
5.    ………. (1997) “மனித உரிமை” சட்டக் கல்விக்கும் உதவிக்குமான செயற்றிட்டம் வெளியீடு.
6.    https://en.m.wikipedia.org/wiki/Rwandan_genocide