ஏப்ரல் 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சதக இலக்கியங்களில் நீதி சிந்தனைகள் (Thoughts of justice in Sathak literature)

ஆய்வாளர்: மோ.பூமிகா, முதுகலை தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு. சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் | நெறியாளர்: முனைவர்.சொ.கோகில மீனா M.A, M.Phil,Ph.D,, உதவி பேராசிரியர், சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் 08 Feb 2024 Read Full PDF

ஆய்வு சுருக்கம்
        சிற்றிலக்கியங்கள் நீண்ட ஆய்வுப் பரப்பைக் கொண்டன. ஆயினும் சிற்றிலக்கியங்களில் பெரும்பான்மையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக சதக இலக்கியங்களைப் பற்றிய ஆய்வுகள் எண்ணிக்கையில் குறைவே. இந்நிலையில் சதக இலக்கியங்களில் அறக் கருத்துக்களை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 
திறவுச் சொற்கள்
    சதகம் அறப்பளீசுவரர் சதகம் நீதி சதகங்கள் சன்றோரின் இயல்புகள்
முன்னுரை
    ஒரு மொழியை வளப்படுத்துவன அம்மொழியில் உள்ள இலக்கியங்களே ஆகும். அவ்விலக்கியங்களில் அக்காலச் சமூகச் சூழ்நிலையை அறிந்து கொள்ள பேருதவி புரிகின்றன. தமிழ் இலக்கியங்கள் காலந்தோறும் புதிய புதிய இலக்கிய வகைகள் மூலம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே வந்துள்ளன. தொல்காப்பியத்தைக் அடித்தளமாகக்கொண்டு மெல்ல மெல்ல வளர்ந்து அந்தாதி உலா கலம்பகம் தூது பரணி சதகம் என தனித்த இலக்கிய வகையாக வளர்ச்சியடைந்து தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கென தனியிடத்தைப் பெற்றுத் திகழ்வன சிற்றிலக்கியங்கள் ஆகும்.
    மன்னனைப் பாடுதல் அல்லது இறைவனைப் பாடுதல் என்னும் நிலையிலிருந்து மாறி தனிமனித போற்றலாக செய்யுட்கள் இயற்றுவதற்கு புலவர்களுக்கு ஏற்ற களமாக சிற்றிலக்கியம் விளங்கிற்று. இக்காலகட்டத்தில் மிகுதியான சி;ற்றிலக்கிய நூல்கள் தோன்றின. சிற்றிலக்கியங்களுள் குறிப்பிடத்தக்க இலக்கிய வகையாக சதக இலக்கியம் விளங்கிற்று. கி.பி.17,18,19-ஆம் நூற்றாண்டு காலத்தில் சதக இலக்கியம் பெரு வளர்ச்சியடைந்த நிலையைக் காண முடிக்கின்றது.
சதகம்
    சதகம் என்பது அகம் புறம் என்னும் இரண்டு பொருள்களுள் யாதாயினும் ஒன்று பற்றிப் பாடப்படும் நூறு செய்யுட்களை உடைய நூலாகும்.
இதனை
    “விளையும் ஒரு பொருள் மேல் ஒரு நூறு
     தழைய உரைத்தல் சதகம் என்ப”

    என்னும் இலக்கண சவிளக்க சூத்திரத்தால் உணரலாம். எவையேனும் ஒரு பொருள் பற்றிய நூறு பாடல்களில் பாடப்படும் இலக்கிய வகை “சதகம்” என்றழைக்கப்பட்டது.
    சதம் என்ற சொல்லிற்கு “நூறு” என்று பொருள். இவ்விலக்கிய வகை வடமொழி மரபைப் பின்பற்றி தமிழில் தோன்றியது. கி.பி. 5-ம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் இயற்றிய “திருச்சதகம்” தமிழில் தோன்றிய முதல் சதகம் ஆகும். திருச்சதகம் சதக இலக்கியத்திற்குரிய விதிப்படி இயற்றப்பட்டது.
    கி.பி. 11-ம் நூற்றாண்டில் அவிநாசி ஆறைகிழார் பாடிய “கார் மண்டல சதகமே” முதல் சதக இலக்கிய நூலாகும். அதைத் தொடர்ந்து பல மண்டல சதகங்கள் இயற்றப்பட்டன. அதன் பின்னர் நீதி சதகங்கள் பக்தி சதகங்கள் பழமொழி சதகங்கள் காப்பிய சதங்கள் என சதக இலக்கியங்கள் பெருவளர்ச்சியடைந்நது.
    நூறு பாடல்களில் பாடப்படுவது “சதகம்” எனினும் சில நூல்கள் அவ்வரையறையைக் கடந்த நிலையைக் காணமுடிகிறது. தண்டலையார் சதகம் சோழமண்டல சதகம் காசி விசுவநாத சதகம் போன்ற நூல்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்டு விளங்குகின்றன. கார் மண்டல சதகம் தொண்டை மண்டல சதகம் சோழ மண்டல சதகம்கொங்கு மண்டல சதகம் பாண்டி மண்டல சதகம் குமரேச சதகம் அறப்பளீசுவரர் சதகம் கயிலாச நாதர் சதகம் தண்டலையார் சதகம் போன்றவை குறிப்பிடத்தக்க சதக இலக்கியங்களாக விளங்குகின்றன.
சதக இலக்கணம்
    தொண்ணூற்றாறு வகையான சிற்றிலக்கியங்களுள் ஒன்றாக “சதகம்” விளங்குகிறது. இவ்விலக்கிய வகை வடமொழி மரபைப் பின்பற்றி தமிழில் தோன்றியது. ஐங்குறு நூறு அகநானூறு பதிற்றுப்பத்து புறநானூறு என எண்ணிக்கை அடிப்படையில் பெயரிடுவது தமிழ் மரபு. நூறு பாடல்களைக் கொண்ட சதக இலக்கியத்திற்கு தமிழ் மரபுப்படி பெயரிடாது வடமொழி பெயராலே வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் மொழியில் சதக இலக்கியம் தோன்றுவதற்கு முன்னரே வடமொழியில் செல்வாக்குப் பெற்ற இலக்கிய வகையாக வளர்ச்சி பெற்றிருந்தது. 
சதகம் - வறையறை
    சதகம் என்னும் இலக்கிய வகைக்கான வறையறை பலவாறாகக் கூறப்பட்டுள்ளது.
    “மக்களின் நல்வாழ்விற்கு தோவையான அறநூற்
     கருத்துக்களையும் நீதிகளையும் ஒழுக்கக் கூறுகளையும்
     வழங்கி அவர்களை வாழ்வாங்கு வாழச் செய்யும்
     இயல்பினது சதக இலக்கியம்”
    என்று சதக இலக்கியம் பற்றி வாழ்வியல் களஞ்சியம் குறிப்பிடுகின்றது.
    “நூறு செய்யுள்கள் கொண்ட பிரபந்தம்”
    என்று தமிழ்மொழி அகராதி விளக்கம் தருவதை அறிய முடிகிறது.
சதக இலக்கணம்
    சிற்றிலக்கியங்களுக்குரிய இலக்கணத்தை வரையறை செய்த பாட்டியல் நூல்கள் மற்றும் தமிழ் இலக்கண நூல்கள் சதக இலக்கியத்திற்கான இலக்கணத்தை வரையறை செய்துள்ளன. அவை
    “விளையும் ஒருபொருள் மேலொரு நூறு
     தழைய வுரைத்தல் சதக மென்ப”
என்று இலக்கண விளக்கமும்
    “நூறான வெண்பாக் கலிந்துறையின்
     ஆதல் சதகம்”
    என்று பிரபந்த மரபியலும் சதகம் பற்றிய செய்தியை விளக்குகிறது. இவைபோன்ற விளக்கங்களிலிருந்து சதக இலக்கியம் என்பது ஏதேனும் ஒரு பொருள் பற்றி நூறு பாடல்களில் பாடப்படுவது ஆகும்.

    “விருந்தே தானும்
     புதுவது கிளந்த யாப்பின் மேற்றே”

    என்னும் தொல்காப்பிய விதிக்குள் சதக இலக்கியமும் அடங்கும்.
சதக இலக்கிய வகைப்பாடு
    சதக இலக்கியங்கள் காலச்சூழ்நிலைக்கு ஏற்பவும் புலவர்கள் கருத்தினை வெளிப்படுத்தும் நோக்கத்திலும் மாறுபட்டு நின்றமையால் பல வகைப்பட்டனவாய் காணப்படுகின்றன. இவ்விலக்கிய வகைகளை குறிப்பிடுவதில் ஆராய்ச்சியாளர்கள் மாறுபடுகின்றன.
    சதக இலக்கியங்கள் எல்லாம் பல்வேறு சூழ்நிலைகளிலும் நோக்கங்களின் அடிப்படையிலும் வரலாற்று நூல்கள் துதி நூல்கள் நீதி நூல்கள் என்றும் முப்பெரும் பிரிவினவாக வகைப்படுத்தலாம் என்கிறார் ந.வீ.செயராமன். மேலும்; அவர்கள் “தமிழில் சதக இலக்கியங்கள்” என்னும் நூலில் ப.பழனியம்மாள்
சதகங்கள்
1.    மண்டல சதகங்கள்
2.    நீதிச் சதகங்கள் 
3.    துதி சதகங்கள்
4.    காப்பியச் சதகங்கள்
     என நான்கு வகையாகப் பிரிக்கலாம். 
    “தமிழ்ச் சதக இலக்கிய வகையும் வடிவும்”  என்ற நூலில் ச.சிவகாமி இவ்விலக்கியத்தை
1.    இறைவனைப் போற்றி புகழ்வன பக்திச் சதகங்கள்
2.    வாழ்க்கையைப் கூறுவன வாழ்வியல் சதகங்கள்
3.    வரலாற்றை விளங்குவன வரலாற்று சதகங்கள்
4.    உடல்நலம் பற்றிச் சொல்வன மருத்துவ சதகங்கள்
5.    வள்ளல்களின் பெருமை பேசுவன பாடாண் சதகங்கள்
    என வகைபடுத்துகின்றார். 
    இவ்வாறு பலவிதமான வகைபாடுகளை சதக இலக்கிங்கள் பெற்றிருப்பினும்
1.    வரலாற்றுச் சதகங்கள்
2.    நீதி சதகங்கள்
3.    துதி சதகங்கள்
    என்னும் வகைபாட்டினுள் மற்ற வகைகளையும் உள்ளடக்கிக் கூறபபட்டிருப்பதைக் காணமுடிகிறது. 
நீதி சதகங்கள்
    ஒரு தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை முன்னிலைப்படுத்தி மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்கான அறநெறிகளை எடுத்துக்கூறும் நோக்கில் நீதி சதகங்கள் தோன்றின. இந்நூலில் உவமைகள் பழமொழிகள் மற்றும் புராண இதிகாசக் கதைகள் வாயிலாகவும் நீதிகள் விளக்கப்பட்டுள்ளன. குமரேச சதகம் அறப்பளீசுவரர் சதகம் செயங்கொண்டார் சதகம் போன்றவை நீதி சதகங்களாக அமைகிறது.
பாடல் எண்ணிக்கை
    சதக நூல்களில் 100 பாடல்கள் பாடப்பட வேண்டும் என்று வரையறை செய்யப்பட்டிருப்பினும் காலப்போக்கில் புலவர்களின் மனநிலைக்கேற்பவும் கருத்து வெளிப்பாட்டு தேவைக்கேற்பவும் “நூறு” என்ற எண்ணிக்கையில் சற்று விரித்த நிலை காணப்படுகிறது. சில சதகங்கள் காப்புச் செய்யுள் அல்லது இறுதியில் அமைந்த வாழ்த்துச் செய்யுளுடன் நூறு பாடல்களைக் கொண்டுள்ளன. இவ்வகையில் கார் மண்டல சதகம் கொங்கு மண்டல சதகம் பாண்டி மண்டல சதகம் குமரே சதகம் செயங்கொண்டார் சதகம் முதலியவை அமைந்துள்ளன.
    கார் மண்டல சதகம் சோழ மண்டல சதகம் குமரேச சதகம் அண்ணாமலை சதகம் தண்டலையார் சதகம் போன்ற நூல்களில் அவையடக்கமாக ஒவ்வொரு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
    “நூறு பாடல்கள்” என்பது அனைத்தையும் உள்ளடக்கிய நூலின் மொத்த பாடல்களையும் காப்பு அவையடக்கம் வாழத்து போன்றவற்றை நீக்கியுள்ள மொத்தப் பாடல்களையும் குறித்ததாகப் பல்வேறு காலச் சூழலுக்கு ஏற்ப விளங்கிய தன்மை இங்கு குறிப்பிடப்பெறுகின்றது.
    தமிழ் மொழியில் இயற்றப்பட்ட மாணிக்கவாசகரின் திருச்சதகம் கார் மண்டல சதகம் கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் பாண்டி மண்டல சதகம் அறப்பளீசுவரர் சதகம் போன்ற நூல்களில் சதக இலக்கணப்படி நூறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான சதக நூல்களின் பட்டியலானது
    தொண்டை மண்டல சதகம்    -    101 பாடல்கள்
    வடிவேல் சதகம்            -    101 பாடல்கள்
    எம்பிரான் சதகம்            -    101 பாடல்கள்        
    அருணாசல சதகம்            -    101 பாடல்கள்
    நடராச சதகம்            -    103 பாடல்கள்
    அண்ணாமலைச் சதகம்        -    103 பாடல்கள்
    திருத்தொண்டர் சதகம்        -    103 பாடல்கள்
    சோழ மண்டல சதகம்        -    104 பாடல்கள்
    காசி விசுவநாத சதகம்        -    108 பாடல்கள்
    தண்டலையார் சதகம்        -    109 பாடல்கள்
    என பாடல்கள் இவ்வாறு அமைந்துள்ளது. 
தமிழ்ச் சதக இலக்கியத்தில் நீதி சதகங்கள்
    மக்களை நன்னெறிப்படுத்தும் நோக்கில் பாடப்பட்ட சதகங்கள் “நீதி சதகங்கள்” எனலாம். இறைவனை முன்னிலைப்படுத்தி உலகில் நீதிகளைக் கூறுவன. பழமொழி வாயிலாக நீதி கூறுவன பழமொழியுடன் உதாரணக் கதைகள் இணைந்து நீதி உரைப்பன என்ற நிலையில் நீதி சதகங்கள் காணப்படுகின்றன.
1. குமரேச சதங்கள்
    குமரேச சதகம் முருகன் மீது பாடப்பட்ட நூல் இது சோழ நாட்டில் புதுக்கோட்டையை அடுத்துள்ள திருப்புல்வயலில் எழுந்தருளியுள்ள குமரக்கடவுளைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப்பட்டது. இத்தல முருகனை அருணகிரிநாதர் பல இடங்களில் பாடியுள்ளார்.
ஆசிரியர்
    இந்நூலாசிரியர் “குருபாததாசன்” என்பவர் ஆவார். இவரது இயற்பெயர் முத்துமீனாட்சிக் கவிராயர் இவர் வேளாளர் குலத்தைச் சார்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
பாடு பொருள்:
    உழவுத் தொழில் புரியும் வேளாளர்களை சிறப்பிக்கும் நோக்கில் ஆலயங்களில் வழிபாடுகள் நடைபெறுவதற்கும் மாதம் மும்மாரி மழை பொழிவதற்கும் வேளாளர்களின் உழவுத் தொழிலே காரணம் என்பது வலியுறுத்தப்படுகின்றது.
2.அறப்பளீசுவரர் சதகம்
    அறப்பளீசுவரர் சதகம் அறப்பள்ளி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது பாடப்பட்டது. சதுரகிரி என்று வழங்கப்படும் அறப்பள்ளி கொல்லிமலையில் உள்ள சிற்றூர். இவ்வூர் சேலம் மாவட்டம் நாமக்கல் நகரிலிருந்து ஆறு கல் தொலைவில் உள்ளது.
ஆசிரியர்
    அறப்பளீசுவரர் சதகம் பாடியவர் அம்பலவானக் கவிராயர் ஆவார். இவர் இராம நாடகக் கீர்த்தனைப் பாடிய சீர்காழி அருணாசலக் கவிராயரின் மூத்த புதல்வன் ஆவார்.
பாடுபொருள்
    அறப்பளீசுவரர் சதகம் அறப்பள்ளியில் எழுந்தருளியுள்ள ஈசனை முன்னிலைப்படுத்தி நன்னெறிகளைப் போதிக்கின்றன. உயிர் பிறப்பு ஏழு வகையுள் மனிதப் பிறவியே உயர்ந்தது மக்கட்பேற்றின் மகத்துவம் பற்றி அறியமுடிகிறது. 
தமிழ்ச் சதக இலக்கியங்கள்
    தமிழ்ச்சதக இலக்கியங்கள் வரலாறு நீதி துதி என்னும் மூன்று பொருண்மையில் அமைந்துள்ளன.
நீதி சதகங்கள் 
    குமரேச சதகம் அறப்பளீசுவரர் சதகம் கயிலாசநாதர் வடிவேல் சதகம் அண்ணாமலை சதகம் தண்டலையார்  தண்டையார் சதகம் செயங்கொண்டார் சதகம் போன்ற நூல்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நீதிகளைக் கூறுகின்றன.
கல்வியின் சிறப்பு
    இவ்வுலகில் நிலையானது கல்வி ஒன்றேயாகும். வெள்ளத்தில் அழியாதது. வேந்தராலும் கொள்ளந்தான் முடியாது. கல்வி போல் மருந்து வேறெதுவும் கிடையாது. அறப்பளீசுவரர் சதகம் கல்வியறிவில்லாதவர்களை 
முழுமூடர் என்கிறது. இதனை
    “பெண் புத்தி கேட்கின்ற மூடரும் தந்தை தாய்
     பிழைபுறம் சொல்லும் மூடவரும் 
     கற்றறி விலாமுழு மூடருக் கிவரெலாம்
     கால்மூடர் அரைமூடர்கள்”
    என்று அறப்பளீசுவரர் பாடல் எடுத்துரைக்கிறது.
2. நற்பண்புகள்
    தமிழில் உள்ள பெரும்பான்மையான நீதி சதகங்கள் சான்றோரின் இயல்புகளை எடுத்துரைக்கின்றது.
    “அன்னதானஞ்செய்தல் பெரியோர்சொல் வழிநிற்றல்
        ஆபத்தில் வந்த பேர்க்
    கபயம் கொடுத்திடுதல் நல்லினம் சேர்ந்திடுதல்
        ஆசிரியன் வழிநின்றவன்
    சொன்னமொழி தவறாது செய்திடுதல் தாய்தந்தை
        துணையடி அருச்சனை செயல்”
3. விதியின் செயல்பாடுகள்
    விதியின் செயல்பாடுகள் பற்றி தண்டலையார் சதகம் கூறுகிறது.
    “போய்காழி சூழலகில் உள்ளங்கால்ட
     வள்லெறும் பாய்ப் போக ஓடி
     ஐங்காதம் போனாலும் தன்பாவம் 
     தன்னுடனே ஆடும் தானே”
    ஒருவன் வானத்தில் பறந்தாலும் பாதாளம் சென்றாலும் எவ்வளவு தொலைவு சென்றாலும் விதியிலிருந்து தப்ப இயலாது என்பதை எடுத்துரைக்கிறது.
4.நிலையாமை
    செல்வம் இளமை உடல் ஆகியவை இவ்வுலகில் நிலையற்ற தன்மை கொண்டவை.
    “நேற்றுள்ளார் இன்றிருக்கை நிச்சயமோ?
     ஆதலினால் நினைத்த போதே
     ஊற்றுள்ள பொருளுதவி அறந்தேடி
     வைப்பதறி வுடமை அன்றே?”
    என்னும் தண்டலையார் சதகப்பாடல் நிலையாமைக் கூறி வாய்ப்புள்ளபோதே நல்லறங்களைச் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. 
முடிவுரை
    ஒரு நாட்டின் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை விளக்கும் சான்றாக இலக்கியங்கள் விளங்குகின்றன. அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருட்களை கூறுவன பேரிலக்கியங்கள். அவற்றுள் குறைந்து வருவன சிற்றிலக்கியங்கள் ஆகும். நூறு பாடல்களில் பாடக்கூடிய சிற்றிலக்கிய வகை சதகம் எனப்படுகிறது. கி.பி 11- நூற்றாண்டு முதலே சதக இலக்கியத்தை தோன்றம் நிகழ்ந்துள்ளது. முதல் சதகம் கார்மண்டல சதகம் கி.பி. 17,18,19-ம் நூற்றாண்டுகளில் செல்வாக்கு பெற்ற இலக்கிய வகையான சதகம் வளர்ச்சியடைந்தது. நீதி சதகங்கள் இறைவனை முன்னிலைப்படுத்தி நேரடியாக நீதியுரைப்பன பழமொழி வாயிலாக நீதியுறைப்பன உதாரணக்கதைகள் மூலம் நீதி உரைப்பன என மூன்று நிலைகளில் அமைந்துள்ளது. நீதி சதகங்கள் வாழ்வின் நிலையற்ற தன்மையை எடுத்துக் கூறி அறம் செய்ய வலியுறுத்துகின்றன

           

துணைநூற்பட்டியல்

1.    இராமசுப்பிரமணியம்    .        -    அறப்பளீபர சதகமும் மூலவும்
                        தெளிவுரையும்
                        நல்லறப் பதிப்பகம்
                        சென்னை

2.    இராசு.செ.                -    சோழமண்டல சதகம்
                        தமிழ்ப் பல்கலைக்கழகம்
                        தஞ்சாவூர்.

3.    இராசேசுவரி.த.            -    காசி விசுவநாத சதகம்
                        உலகத் தமிழாராய்ச்சி நிறுவளம் 
                        சென்னை