ஏப்ரல் 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஊடாடும் வகுப்பறை கருவிகள் (INTERACTIVE CLASSROOM TOOLS)

முனைவர் ச.சந்திரகலா, தமிழ்த்துறைத்தலைவர், பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் 08 Feb 2024 Read Full PDF

Abstract

In teaching language using interactive classroom tools, the classroom environment can be changed in such a way that students are excited. Among the interactive classroom tools, Canva, Nearpod, Kahoot , Word wall  etc. are worth mentioning. Students' understanding ability and creativity can be known immediately.Students can learn Tamil language through computer according to the evolving environment, and what they have learned can be made useful for the society and spread all over the world through computer.

ஆய்வுச்சுருக்கம்

 ஊடாடும் வகுப்பறைக்கருவிகளைப் பயன்படுத்தி  மொழிப்பாடம் கற்பித்தலிலும், வகுப்பறை சூழலை மாணவர்களுக்கு  உற்சாகத்தை ஏற்படுத்தும்   வகையில் மாற்றலாம்..ஊடாடும் வகுப்பறை கருவிகளில் குறிப்பிடத்தகுந்தவைகள் கேன்வா (Canva),நியர்பாட் (Nearpod),ககூட் (Kahoot),வேர்டு வால் (Word wall) போன்றவையாகும்.இக்கருவிகளைக்கொண்டு கற்பிக்கும்போது வகுபபறையில்  மாணவர்கள் கவனம் சிதறாமல் உற்சாகத்தோடு கற்றலையும்,மாணவர்களின் புரிதல் திறனையும்,படைப்பாற்றல் திறனையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளமுடியும். மாணவர்களை வளர்ந்து வரும் காலச்சூழலுக்கு ஏற்ப  தமிழ் மொழியினை கணினி வழி கற்கவும்,கற்றதை கணினி வழி சமூகத்திற்கு பயனுள்ள வகையில் உருவாக்கி உலகெங்கும் பரவச் செய்யலாம்.

Keywords: நியர்பாட் (Nearpod),ககூட் (Kahoot),வேர்டு வால் (Word wall),கேன்வா (Canva).

முன்னுரை

 கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடிகளால் பேசப்பட்ட தமிழ்மொழி, இன்று விஞ்ஞான வளர்ச்சி காரணமாக,கணினி மூலம் உலகெங்கிலும் அதிவேகமாக பரவி வருகிறது.கணினியில்,இணைய தளத்தின் வாயிலாக உலகத்தில் உள்ள அனைவரும் கற்க,படிக்க,நாட்டு நடப்புகள்,தமிழ் இலக்கியங்கள்,இலக்கணம்,தமிழர் பண்பாடு,வரலாற்று உண்மைகள் என்று அனைத்து தரப்பையும் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்மொழி வளர்ச்சி பெற்றிருக்கிறது.அதற்கு மூலகாரணம் கணினியில் தமிழ் புகுத்தப்பட்டதே ஆகும்.

கணினியில் தமிழ்

முதலில் கணினிகளில் ஆங்கில மொழியை பயன்படுத்தும் அளவிலேயே சாப்ட்வேர்கள் அமைந்திருந்தன.1983-84 காலகட்டத்தில் தான் தமிழ் பயின்ற கணினி வல்லுநர்கள் தமிழ்மொழியையும் கணினியில் புகுத்த திட்டமிட்டுஅதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.அதேபோல் ஆவணங்கள்,வரைதல்கள்,கணக்குகள் என்று பலதரப்பட்ட சிறப்பு இயக்கத்திற்கும் ஆங்கில மென்பொருள்கள் உருவாக்கப்பட்டு இருந்தன.அவற்றை அப்படியே தமிழிலும் கொண்டு வருவதற்காக தமிழ் கணினி வல்லுநர்கள் ‘ஆதமி’ என்ற ‘சாப்ட்வேரை’ முதல் முதலாக உருவாக்கினார்கள்.இது 1984 ஆம் ஆண்டு கனடாவில் வாழும் ஸ்ரீனிவாசன் என்பவரால் உருவாக்கப்பட்டது

கொரோனா வைரசால் மாறிய கல்வி

      கொரோனா வைரசால் தொற்று பரவத் தொடங்கிய  பிறகு கல்வி கற்றல் கற்பித்தலில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.இந்த சூழல் இணைய வசதி இல்லாத ஊர்களையும்,இணையத்தை பயனபடுத்த வசதி இல்லாத மாணவர்களையும் பாதித்திருந்தன,இருந்தபோதிலும் உலகில் இருக்கும் அனைத்து கல்வியாளர்களையும் இணைக்கும் ஒரு பாலமாக இணையம் செயல்பட்டது.அனைத்து கல்லூரிகளிலும் இணைய வழி கற்றல் முறைகள் பின்பற்றப்பட்டன.உலகில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும்,மாணவர்களையும் இணைக்கும் விதமாக இணைய வழி கருத்தரங்குகள் நடைபெற்றன.

இணையவழி கற்றல்

இணையவழி கற்றலுக்கு அனைத்து மாணவரகளுக்கும்,ஆசிரியர்களுக்கும் கூகுள் (Google) இணைய தளம் முக்கிய பங்கு வகித்தது.இதில் உள்ள கூகுள் வகுப்பறை(Google Classroom) மாணவர்களையும்,ஆசிரியர்களையும் இணைக்கும் பாலமாகவும் செயல்பட்டது.மாணவர்களின் வருகைப்பதிவு,மாணவர்களுக்குத் தேவையான பாடப்பகுதிகளை பதிவு செய்தல்,பாடத்திற்கு ஏற்ற பொருள் விளக்கத்தினை பதிவு செய்தல்,பாடத்தோடு தொடர்புடைய ஒளிப்படங்களை (Videos) பகிர்தல்,மாணவர்கள் கற்றல் திறனை அறிய செயல்பாடுகள் (Assignment) வழங்கல்,அதற்கு மதிப்பீடு செய்து ஆசிரியர் மதிப்பெண் வழங்கல் என பல்வேறு வசதிகளை வழங்கும் விதமாக கூகுள் வகுப்பறை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

 

 

இணைய வழி கற்றல் கற்பித்தலுக்கான கருவிகள்

 

 

 

இணைய வழி கற்பித்தலுக்கு ஏற்ற வகையில் இலவசமான பல்வேறு கருவிகள் உள்ளன.அவற்றில் குறிப்பிடத்தகுந்தவைகள் கேன்வா (Canva),நியர்பாட் (Nearpod),ககூட் (Kahoot),வேர்டு வால் (Word wall) போன்றவையாகும்.

 

நியர்பாட் (Nearpod)

Nearpod என்பது வாக்கெடுப்புகள், ஒத்துழைப்புப் பலகைகள் மற்றும் விளையாட்டு அடிப்படையிலான வினாடி வினாக்கள் போன்ற உங்கள் பாடங்களில் ஊடாடும் செயல்பாடுகளைச் சேர்ப்பதன் மூலம் மாணவர்களை ஈடுபடுத்தும் ஒரு ஊடாடும் வகுப்பறைக் கருவியாகும்.  எந்தவொரு மொபைல் சாதனம் அல்லது மடிக்கணினி மூலமாகவும் மாணவர்கள் தொடர்புகொண்டு பதில்களைச் சமர்ப்பிக்கலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

கூகுள் தேடு தளத்தில் Near Pod  என்று தட்டச்சு செய்தால்,நியர்பாட் தளத்திற்குள் நுழையலாம். அதில்  நமது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுசொல்லை உள்ளிட்டு நமக்கான கணக்கை பதிவு செய்து கொள்ளலாம். இத்தளத் தின் முகப்பு பக்கத்தில் உள்ள  Create  பகுதிக்குள் நுழைந்தால் Lesson,Vedeo,Activity, இவற்றில் ஏதேனும்  ஒன்றை தேர்வு செய்து நமது  பாடத்தை உள்ளீடு செய்து கொள்ளலாம்.

பின்னர் Drag to folder க்குள் சென்று வகுப்பறையில் Projector  மூலம் Live Participation கொடுக்கலா்ம்.இதற்கான இணைப்பை நகலெடுத்து மாணவர்களின் புலனக்குழு அல்லது கூகுள் வகுப்பறையில் பதிவு செய்து வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் அறியும் வகையில் உள்ளீடு செ்ய்யலாம்.

மாணவர்கள் தஙகள் கைப்பேசியின் வாயிலாக இணைப்பில் நுழைந்து தங்கள் பதில்களை சமர்ப்பிக்கலாம்.விரைவாக பதி்ல் அளிக்கும் மாணவர் அடிப்படையில் தர வரிசைப் பட்டியலானது Projector ல் ஒளிபரப்பாகும்.

 

 

 

 

                           வகுப்பறைக்காட்சி

 

கஹூட்! Khoot

இது ஒரு இலவச விளையாட்டு (கேம்) அடிப்படையிலான கற்றல் தளமாகும். ஆசிரியர் மாணவர்களின் கற்றல் திறனை,வினாடி வினா மூலம் நன்கு அறியலாம்.ஒலி,ஒளி அமைப்புடன் மாணவர்களை உற்சாகத்துடன் விளையாட்டாக கற்றலில் ஈடுபடுத்த ஏற்ற  தளமாகும்.

தற்சமயம் ககூட்   கட்டண சேவை திட்டங்களுக்கு ஏற்ப  செயல்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

வேர்டு வால் ( word wall )

வகுப்பு மற்றும் கற்பித்தல் பாணிக்கு ஏற்ற புதிய கற்பித்தல் ஆதாரம் கொண்டு, ஒரு நிமிடத்தில் ஊடாடும் மற்றும் அச்சிடக்கூடிய செயல்பாடுகளின் தனிப்பயனாக்கப்பட்ட தொகுப்பை உருவாக்கலாம்.

 

 

 

நாளிதழ் இணைப்பு இதழ்களில் வெளிவரும் வார்த்தை விளையாட்டுகள் போன்று உருவாக்குவதற்கு இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் .மாணவர் தமது கைபேசியின் வாயிலாக மிகவும் உற்சாகத்தோடு பங்கேற்று தமிழ் சொற்களை அறிந்து கொள்வதற்கு ஏற்ற தளமாகும்.

 

தமிழ் 99 விசைப்பலகை (Tamil 99 keyboard)

தமிழ் 99 என்பது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட விசைப்பலகை தளவமைப்பு ஆகும்.  தமிழ் மொழியுடன் பயன்படுத்துவதற்கான பல ஒருமொழி மற்றும் இருமொழி எழுத்துருக்களுடன் கூடிய தளவமைப்பு, 13 ஜூன் 1999 அன்று அரசாங்க உத்தரவின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. சாதாரண QWERTY விசைப்பலகையுடன் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, தட்டச்சு ஒரு மெய்-உயிரெழுத்து முறையைப் பின்பற்றுகிறது.

 

 

 கேன்வா (CANVA - Graphic Design Platform)

கேன்வா என்பது வரைவியல் வரைகலை (வடிவமைப்பு) தளம்.இத்தளம் 2012 ஆம் ஆண்டு முதல் சிட்னியை (ஆஸ்திரேலியாவை) தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

கேன்வா பயன்பாடு

சமூக ஊடகங்களுக்கு வரைவியல் விளக்கக்காட்சி,சுவரொட்டி,ஆவணப்படம் முதலியவை தயாரிப்பதற்கு கேன்வா ஒரு சிறந்த களமாகும்..இதில் ஏராளமான மாதிரி தகடுகள் (Templates) வடிவமைக்கப்பட்டுள்ளன.நாம் உருவாக்கப்போகும் அழைப்பிதழ்,சான்றிதழ்,சுவரொட்டிகள்,விளக்கக் காட்சிகள் முதலியவைகளுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டுதலாக அமையும்.

 

 

 

ஒரு நிகழ்வை மாணவர்களுக்கு அழைப்பிதழ் வழி அறிவிக்கவும்,மாணவர் திறமை வெளிப்படும் போது சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்துவதற்கும் ஏற்ற களமாக கேன்வா  உதவுகிறது.

முடிவுரை

மாணவர்களை வளர்ந்து வரும் காலச்சூழலுக்கு ஏற்ப  தமிழ் மொழியினை கணினி வழி கற்கவும்,கற்றதை கணினி வழி சமூகத்திற்கு பயனுள்ள வகையில் உருவாக்கி உலகெங்கும் பரவச் செய்யலாம்.

தொழில் நுட்பத்தை பயன்படுத்தி,உலகம்  முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழை விரும்பி கற்பது போன்று,நமது மாணவர்களும் தமிழை விரும்பி கற்கும் வகையில்  வகுப்பறையை ஆய்வுக்கூடமாக மாற்றி கற்பித்தல் மட்டுமல்லாது,மாணவர்களின் படைப்புத்திறனையும் பதிவேற்றம் செய்து ஒரு புதுமையை புகுத்தலாம்.

துணை செய்த நூல் மற்றும் தளம்

https://nearpod.com/login/

https://wordwall.net/create/editcontent?guid=d08fe6e78e454e4c9aeac4ff5a9719a3

https://www.canva.com/

https://www.google.com/inputtools/

https://www.google.com

https://www.wikipedia.org/

செய்யுள் திரட்டு( தமிழ் தாள் -I) - பாரதியார் பல்கலைக்கழகம்,கோயம்புத்தூர்

-நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை - வெளியீடு.