ஏப்ரல் 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

திருவெம்பாவை பாடல்களில் நவரசங்களின் வெளிப்பாடு ஓர் ஆய்வுப் பார்வை (Expression of Navarasas in Thiruvempavai Songs an Analysis)

கலாநிதி.(திருமதி) தாக்ஷாயினி பரமதேவன், சிரேஷ்ட விரிவுரையாளர், நடன நாடகத்துறை, சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள்  நிறுவகம், கிழக்குப்பல்கலைக்கழகம் | Dr. (Mrs.) Thakshayiniy Paramadevan, Senior Lecturer in Dance, Department of Dance & Drama, Swami Vipulananda Institute of Aesthetic Studies, Eastern University 08 Feb 2024 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

மாணிக்கவாவகர் திருவெண்ணாமலையில் இருபது பாடல்களைக் கொண்ட பனுவல் திருவெம்பாவையாகும். ஒரு சக்தியை எழுப்புதலே திருவெம்பாவையின் முக்கிய கருத்தாகும். திருவெம்பாவை மார்கழி மாதாத்திலே விடியற்காலையில் ஒழுங்கு சேர்த்து குளத்திற்குச் சென்று நீராடும் போது ஒருவரை ஒருவர் எழுப்புவதாக இலக்கிய நயம் தோன்ற எழுதப்பட்டதாகும். இப்பதிகம் இறையருள் தோய்ந்த இன்பத் தமிழ் ஊற்றாகப் பெருக்கெடுக்கின்றது. ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலத்திலிருந்து மீளாத்தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் கன்னிகள் ஆகிய ஆன்மாக்களை துயிலெழுப்பி அம்மை, அப்பனாய் சிவ சக்தியாய் விளங்கும் இறையருள் என்ற இன்பப் பொய்கையில் மூழ்கி தோற்றமும் ஒடுக்கமும் அந்த முதலும் முடிவுமற்ற ஆதியும் அந்தமும் அற்ற அரும் பெரும் சோதியாய் இரண்டறக்கலந்த திருவெம்பாவைப் பாடலாகும்.

திருவெம்பாவைப் பாடல்கள் சைவசித்தாந்த கருத்துக்களை உள்ளீடாகக் கொண்டு தலைவன், தலைவி வாயிலாக பாமரர் முதல் பண்டிதர் வரை அறிந்து கொள்ளக் கூடிய வகையில் தெளிவாக தருகிறது. தலைவன், தலைவி தொடர்பை ஜுவாத்மா, பரமாத்மா ஆகியவற்றின் பிணைப்புகளாக கருதி மாணிக்கவாசகர் தந்த திருவெம்பாவை பரந்தளவில் அபிநயரூபமாகவே சித்தரிக்கப்படுகின்றது. இசையும், நாட்டியத்தையும் வளர்ப்பதற்கு திருவெம்பாவை பனுவல்கள் பெரிதும் துணை செய்கின்றது. புதுப் புது ஆடல் ஆக்கங்களை செய்வதன் மூலம் ஆடல் பற்றிய அறிவையும், தமிழ் இலக்கியங்கள், சைவசித்தாந்த நூல்களின் தன்மையும் அவற்றில் பொதிந்து காணப்படும் ஆடல் செய்திகளை அறிவதற்கு திருவெம்பாவை ஒரு வரப்பிரசாதமாகும்.எனவே அந்த வகையில் இவ் ஆய்வானது திருவெம்பாவை பற்றியும், ரஸத்தின் தன்மைகளும், திருவெம்பாவை பாடலில் நவரஸம் வெளிப்படுத்தும் தன்மை பற்றியம் ஆராயப்படுகிறது.

கலைச்சொற்கள்: பரமாத்மா, ஜுவாத்மா, மும்மலம், துயில், பனுவல்கள்

Research Abstract

Twenty verses make up the text Manikkavavakar Tiruvennamalai. Awakening a force is Thiruvempavai's central theme. Thiruvempavai is written in the early morning hours of the month of Margazhi. The characters go to the tank and take a bath together, waking each other up. In Tamil, this poem is a spring of divine bliss. A song called Thiruvempavai awakens the virgins' sleepy souls from the trinity of conceit, kanmam, and maya and submerges them in the blissful delusion of divine grace the power of Shiva which combines with the appearance and condensation, that beginning and end, without beginning and end.

Through the leader and the leader, the Tiruvempavai poems make the concepts of Saiva Siddhanta easily understandable to both scholars and laypeople. Given that the relationship between the leader and the leader is viewed as the bond between the soul and the paramatma, the Tiruvempavai given by Manickavasagar is frequently portrayed as abhinaya roopam. Thiruvempavai texts are of great help in the development of music and dance. Thiruvempavai's creation of new dance pieces and her understanding of the nature of Saiva Siddhanta texts and Tamil literature are blessings. As a result, this study looks at Thiruvempavai, the qualities of rasa, and the essence of Navarasa in the song.

Key Words : Paramatma, Jivatma, Trimalam, Tuyil and Texts

முன்னுரை

இரஸத்தின் வெளிப்பாடு

இரஸம் என்பது சுவை, இரசனை என்பது சுவைத்தல் ஆகும். நாம்  கண்களால் பார்த்தும், காதால் கேட்டும்,மகிழ்ந்து பெறுகின்ற அந்த உணர்வு இரஸம் எனப்படும். உணர்வில் அறுசுவைகள் இருப்பது போல் நாட்டியம் நாடகம் ஆகிய கவின் கலைகளில் நவரசங்கள் காணப்படுகின்றன. மக்களின் அன்றாட வாழ்கையிலும் நவரசங்கள் தோன்றி மறைகின்றன. இந்த நவரசங்கள் பரதநாட்டிய ஆடலாக்கத்திற்கு உயிர் போன்றவை. அவையாவன ஸ்ருங்காரம்-இன்பச்சுவை, பயானகம்-பயம், பீபத்சம்-வெறுப்பு, அற்புதம்-ஆச்சரியம்,சாந்தம்-அமைதி இந்த நவரசங்களின் உணர்ச்சி;க்கு பிணைப்பே வாழக்;கையாகும். வாழ்க்;கையின் உணர்ச்சிப் பிரவாகத்தை இரஸங்களாக முகபாவங்களாக நமது அன்றாட வாழ்வி;ல் நாமே புலப்படுத்துகின்றோம். இந்த நவரசங்கள் கலையாக மாறும் போது சோபிக்கின்றன. புரதம் ஓர் பக்தி சுவையாதலால்  ஒன்பது சுவைகளையும் திருவெம்பாவை புலப்படுத்த இடம்  தரக்கூடிய வகையில் மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல் ஆக்கிய காரணத்தால் நவரசங்களும் திருவெம்பாவை ஆடலாக்கத்தினுள் புகழ்ந்து ஆடலாக்கத்திற்கான கலாரசனையைத் தருகின்றது. இந்த நவரசங்கள் ஆடலாக்கத்திற்கு உயிரோட்டத்தை கொடுக்கிறது.

இரஸங்களில் முதலாவதாக விளங்குவது சிருங்காரம், காதல், அன்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த இரஸத்தின் ஸ்தாபி பாவம் ரதியாகும்.பீபத்ஸ இரஸத்தை எதிர் ரஸமாகவும் கருநீலத்தை அதன் நிறமாகவும் மகாவிஷ்ணுவை தேவதையாகவும் கொண்டது. ஸ்ருங்கார இரஸமானது காமத்தை புருஷார்த்தமாகக் கொண்டது.

இதன் இலட்சணம் என்னவெனில் ஒருவர் தான் விரும்பிய ஒன்றை அடைந்து அனுபவித்து மகிழ்வதாகும்.இந்த ஸ்ருங்கார இரஸத்தில் தலைவனுடைய பிரிவால் வேதனை இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தலைவி ஜோதி சொரூபமான தலைவனைப் பற்றி தாம் இரவு பகல் பேசிக்கொண்டிருந்த பொழுதெல்லாம் அவர்களுடைய பற்றுதல் எல்லாம் தலைவனுக்குரியது எனச் சொல்லிக்கொண்டிருந்ததாகவும் நல்ல நகை அணிந்தவளாகவும் மலர் தூவிய மஞ்சத்திலே படுத்து இருந்து கொண்டு அவனை எண்ணிய விரகத்தினால் வேதனை இன்பமும் அவள் கொண்டதாகவும் தோழி குறிப்பிடுகிறாள். 

      “பாசம் பரஞ்சோதிக் கென்பா யிராங்கனாம்

      பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்பேக

      நேசமும் வைத்தனையோ….”

இங்கு தோழியின் கேள்வியில் திருவெம்பாவை பாடலில் ஸ்ருங்கார ரஸம் கொட்டுகிறது.

ஹாஸ்ய இரஸம்

இரண்டாவதாக வருவது ஹாஸ்யம் இரஸம். இது ஸ்ருங்கார இரஸத்தில் இருந்து உற்பத்தியாகின்றது. இதன் ஸ்தாயி பாவம் ஹாஸ்யம் அதாவது சிரிப்பு, கருணை, இரஸத்தில் எதிர் இரஸமாகவும் காமத்தை புருஷார்த்தமாகவும், ப்ரமத கணங்களை தேவதையாகவும் கொண்டுள்ள ஹாஸ்ய இரஸத்தின் நிறம் வெள்ளை. இயற்கையிலிருந்து வேறுபட்டவற்றை  கண்ணுறவதால்  உண்டாகின்றது என்பதே திருவெம்பாவையில் ஆங்காங்கே காணப்படுகின்றது. அதாவது முத்துப்போன்ற வெள்ளைப் பற்களை உடையவளே. எல்லோர்க்கும் முன்னே வந்து எதிரில் எழுந்து நின்று என் தந்தை, ஆனந்தன், அமுதசொரூபி என்று வாயால் சொல்லி வாயூற இனிய பேச்சு பேசுவாய் அத்தகைய நீ இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறாய். இது சிரிப்பதற்கு இடமன்றோ என்று தோழிப்பெண்கள் பரிகசிக்கின்றார்கள்.

    “முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தன்

      ரத்த னானந்த னமுதனென் றள்ளுறித்

      தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்

      புத்துடையீ ரிகன் பழவடியார் பாங்குடையீர்

      புந்தடியோம் புன்மைநீர்த் நாட்கொண்டாங் கொண்டால் பொல்லாதோ

      வெத்தோநின் என்புடைமை…..”

என்ற பாடலடி மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

கருணா ரஸம்

அடுத்ததாக வருவது கருணா ரஸம். இது ஹாஸ்ய இரஸத்தின் எதிர் இரஸமாகத் திகழ்கிறது. தாமஸத்தை தனது குணமாகவும் யமனை தேவதையாகவும் சாதாரண காந்தாரத்தையும் கைசிகி நிஷாதத்தையும் ஸ்வரங்களாகவும் கொண்ட இந்த இரஸம் புருஷார்த்தமாகவும் சோகத்தை ஸ்தாயி பாவமகாவும் கொண்டு விளங்குகிறது. இதன் நிறம் சாம்பல் ஆகும். சோக இரஸத்தின் உற்பத்திக்குக் காரணமாக அதாவது ஆலம்பன விபாவங்களாய் விளங்குபவை சாபம், கவலை, வீழ்ச்சி பிரியமானவர்களிடமிருந்து பிரிதல், செல்வத்தை இழத்தல், கொலை, சிறைவாசம், பயங்கரமான விபத்துக்கள், துரதிஷ்டம் முதலியனவாகும்.

இத்தகைய கருணை ரஸமானது திருவெம்பாவை பாடல்களில் ஆங்காங்கே காணப்படுகின்றது. பக்தியினால் தலைவி தலைவனை எண்ணி உருக வேண்டும் என்ற பேராவல் கொண்ட தோழியர் உனக்கு இன்னும் விடியவில்லையோ? எனக் கேட்கிறாள். இதுமட்டுமா விண்ணுலகத்திற்கு ஒப்பற்ற அமிர்தமாய் இருப்பவளை வேதங்கள் போற்றுகின்ற மேலான பொருளை ஞானக் கண்ணுக்கு விருந்தாயிருப்பவனைப் புகழ்ந்து பாடி மனம் குழைந்து மனம் தெளிந்து உருகுவாயாக என்ற கருணை ரஸம் ததும்ப கூறுகின்றார்.

      “விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்

      கண்ணுக்கினியானைப் பாடிக் கசிந்துள்ள

      முன்னெக்கு நின்றுருக யாமாட்டோ நீயே வந்

      தெண்ணிக் குறையிற் றுயிலேலோ ரெம்பாவாய்”

பாடலின் அடிகள் மூலம் கருணாரஸம் புலப்படுத்தப்படுகின்றது.

ரௌத்திர ரஸம்

ரௌத்திர ரஸம், அற்புத ரஸத்தை எதிர் இரஸமாகவும் ருத்ரனை தேவதையாகவும் கொண்ட இந்த ரஸத்தின்; நிறம் சிவப்பு. இதன் இலட்சணம் என்னவெனில் எதிரி இழைத்த தீங்கினால் உண்டாக்கப்பட்ட கோபமுமாகும். இதன் ஆலம்பன விவாவங்களாக விளங்குவன எதிரி, பொய்,  கோபம், கோள், வஞ்சனை, அவமரியாதை, கற்பழிப்பு,பொறாமை ஆகியன இத்தகைய ரௌத்திர இரஸமானது திருவெம்பாவைப் பாடல்களில் ஆங்காங்கே செறிந்து காணப்படுகின்றது.

“நாளைக்கு நானே வந்து உங்களை எழுப்புவேன்” என்று பெண்ணே நீ நேற்று சொன்ன சொல்லை வெட்கமின்றி போக விட்டாய் இன்னமும் விடியவில்லையா? விண்ணுலத்தவரும், மண்ணுலகத்தவரும், மற்ற உலகத்தவரும் அறிந்து கொள்ள முடியாத மகாதேவன் வலிய வந்து எங்களை காப்பாற்றி அடிமை கொண்டுள்ளனர். அவனுடைய மேலான் திருவடியை நாங்கள் பாடிக்கொண்டு வருகிறோம். எங்களுக்கு உன் வாய் திறந்து ஒரு வார்த்தை பேச மாட்டாயா? உன் உடல் அன்பால் குழைந்து உருகாதோ? இத்தகைய புல்லிய தன்மை அலாதியாக உன்னுடையது போலிருக்கிறது எனச் சினக்கிறார்கள், கோபிக்கிறவர்கள் தோழிகள் இங்கு ரௌத்திர இரஸம் தாண்டவமாடுகிறது.

      “மானேநீ நென்னலை நாளைவந்துங்களை

      நானே யெழுப்புவ னென்றது நாணமே

      போன திசைபகரா யின்னம் புலர்ந்தின்றோ

      வானே நிலென பிறவை யரிவரியான்

      தானே வந்தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்

      வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்

      யூனே யுருகாய் யுனக்கே……”

என்ற பாடலடிகள் மூலம் விளக்கப்படுகின்றது.

வீர இரஸம்

அடுத்து வருவது வீர இரஸம், சத்வகுணம் பிரதானமான இந்த இரஸம் பயானக இரஸத்தின் எதிர் இரஸமாகும்.இதன் நிறம் மஞ்சள் அல்லது வெண்மை கலந்த சிவப்பு மகேந்திரனை தேவதையாகவும், ஸட்யத்தையும், சதுஸ்ருதி ரிஷபத்தையும்  ஸ்வரங்களாகக் கொண்ட இந்த இரஸத்தின் புருஷத்தம் தர்மமாகும்.

சிவனுடைய வீரத்தை புகழ்ந்த மணிவாசகர் ஒப்பு உயர்வு அற்றவனும் பெருஞ்சிறப்பு உடைய வீரனும் என்று பின்வரும் செய்யுட்களில் குறிப்பிடுகி;றார். இதனால் சகல வளங்களும் பொருந்திய சிவன் சிறந்த வீரனாவார்.

      “அன்னே யிலையுஞ் சிலவோ பலவரை

      ருன்னற் கரியா னொருவ னிருஞ்சீ ரான்…..”

என்னும் வரிகளில் சகல சீர் சிறப்பு கொண்ட வீரன் என்று புலப்படுத்தப்படுகின்றான்.

பயானக ரஸம்

பயானக ரஸத்திற்கு வருவோம். பயானக இரஸமானது அஹங்கார குணமாகவும், வீரரஸத்தை எதிர் இரஸமாகவும் கொண்டது. காலணை தேவதையாகக் கொண்டுள்ள இவ் ரஸம் எடுத்துக் கொள்ளும் ஸ்வரம் தைவதம் ஆகும். நிறம் கருமை புருஷார்த்தம் அர்த்தம், பயத்தை ஸ்தாயி பாவமாக கொண்ட பயனாக இரசத்தின் இலட்சணம் என்னவென்றால் ஒருவருக்கு விருப்பமில்லலாதவற்றின் நிகழ்வுகளினால்; ஏற்படும் வெறுப்பினால் ஒருவரது உள்ளத்திலே உண்டாகும் மன வேதனைகளி;ன் வெளிப்பாடாகும்.

இத்தகைய பயானக இரஸமானது திருவெம்பாவை பாடல்களில் காணப்படுமாற்றினை நோக்குவோமாயி;ன் பொருந்திய அணிகலைப் பூண்டிருக்கும் பெண்டிர்கள் வேண்டாம். இப்படிச்சில்லறைப் பேச்சுக்கள் பேசி பரிகசித்து விளையாடுவதற்கு இதுவன்று நேரம் இதுவன்று இடம் அறிவில் சிறந்த விண்ணோர்களே பரமனைப் போன்ற தாங்கள் தகுதியானவர் என்று பயந்து பின்வாங்குகின்றார்.

      “ஏசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்கு

      கூசு மலாப்பதந் தந்தருள வந்தருளும் சிவனேசன்”

பீபட்ச ரஸம்

ஏழாவது இரஸமாக அமைவது பீபட்சம்.அக்ங்கார, தாமஸ குணங்களை கொண்டதாக விளங்கும் இந்த இரஸத்தின் ஸ்தாயிபாவம் ஜிகுஸ்வா ஆகும். ஹ்ருங்கார ரஸம் இதனது எதிர் ரஸமானதாகவும் தேவதை மகாகாளானாகவும் அமைகின்றன. பீபட்ச ரஸத்தின் லட்ஷணம் என்னவென்றால் பொருட்களின் குறைபாடுகளைக் கண்டு கொள்வதனால் ஏற்படுவதாகும். துர்நாற்றம், சதை, எலும்பு, விருப்பமில்லாதவை முதலியன இதன் ஆலம்பன விபாவமபாய் விளங்குகின்றன. திருவெம்பாவை பாடல்களில் பீபட்ச ரஸமானது காணப்படுமாற்றினை நோக்கும்போது வந்தவர்களுள் ஒருத்தி ஒளியுள்ள முகத்தை பல்வரிசை உடையாளே உனக்கு இன்னும் விடியவில்லையோ

உறங்கிக் கொண்டிருந்தவள் :- அழகிய கிளி மொழி போன்ற மொழியை உடையவரெல்லாரும் வந்திருக்கிறார்களா?

வந்தவள் :- எண்ணிக்கை எடுத்துப் பார்த்து உள்ளபடி சொல்கிறோம். அதற்கிடையில் நீ கண்ணுறங்கி காலத்தை வீணே போக்காதே விண்ணுலகத்தவற்கு ஒப்பற்ற அமிர்தமாக இருப்பவனை வேதங்கள்  போற்றுகின்றன மேலான பொருளை ஞானக் கண்ணுக்கு விருந்தளிப்பவனை புகழ்ந்து பாடி மனம் குழைந்து மனம் நெகிழ்ந்து நின்று உதவுவாயாக

இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து உறங்கியவள் இன்னும் கொஞ்சம் உறங்கிப் போனாள். அதை கவனித்தாள் வந்தவள் அவள் கூறுகிறாள். நாங்கள் வந்திருப்பவர்களையெல்லாம் கணக்கெடுத்து காலத்தை விரயம் செய்யோம். நீயே வந்து கணக்கிட்டுப் பார்த்துக்கொள் கூடியிருப்பவள் எண்ணிக்கை குறையுமாயின் நீயும் சென்று சயனிக்கலாம் என்று தோழி மீது வெறுப்புறுகிறாள். வுந்தவர் இதனைப் பின்வரும் பாடல் மூலம் அறியலாம்.

      “ஒண்ணித் திலநகையா யின்னம் புலர்ந்தின்றோ?

      வண்ணக் கிளிமொழியோ வெல்லாரும் வந்தாரோ

      வெண்ணிக் கொடுள்ளவா சொல்லுக்கொ மல்வளவுங்

      கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

      விண்ணுக் கொருபுருத்தை வேத விழுப்பொருளைக்

      கண்ணுக் கிளியானைப் பாடிக் கசிந்துள்ள

      முண்ணெக்கு நின்றுரக் யாமாட்டோ நீயேவந்

      தெண்ணிக் குறையிற் துயிலேலோ ரெம்பாவாய்”

அற்புத ரஸம்

எட்டாவது ரஸமாக விளங்குவது அற்புத ரஸம். ரௌத்திர இரஸத்தின் எதிர் ரஸமாகவும் சத்வகுணம் பிரதானமாகவும் அமைந்துள்ள இந்த ரஸம் மஞ்சளை தனது நிறமாகவும் பிரம்மாவை தேவதையாகவும் கொண்டுள்ளது. ஆச்சரியத்தை ஸ்தாயி பாவமாக அற்புத ரஸத்தின் லடசணம் என்னவென்றால் சாதாரணமானவற்றில் இருந்து வேறுபட்ட மேற்பட்டவற்றை மனதில் உண்டாகும் விரிவு என்பனவாய் கிடைக்க ஏற்பட்ட வாய்ப்பு கிடைக்க முடியாது கிடைத்தால் மனிதரால் செய்ய முடியாததை செய்தல், மாயை, இந்திர ஐhல வித்தை ஆகியன உற்பத்திக்கு காரணமாகும்.

ஆலம்பல விபாவங்களாக அமைகின்ற திருவெம்பாவை பாடல்களில் அற்புத ரஸம் வெளிப்படுமாற்றினை நோக்கின்,

சொற்கொண்டு விளக்கமுடியாத படி அவனுடைய திருவடிகள் பாதாளங்கள் அனைத்துமாயிருக்கின்றன. பூவால் நிரம்ப அலங்கரிக்கப்படடிருக்கின்ற திருமுடியோ எல்லாப் பொருட்களுக்கும் முடிவானதே உமாதேவியாரின் சமேதனாதலால் அவனுக்கு மேனி ஒன்று அன்று அவனை முற்றும் விளங்க வேதங்களுக்கும் மக்களுக்கும் இயலாது இதனை பின்வரும் பாடல் வரிகள் விளக்குகின்றன.

“பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்

      பேதை திருமேனி யொன்றல்லான்…..”

கடைசியாக வருவது சாந்த ரஸமானது எல்லா உயிர்களுக்கும் இயற்கையானது பொதுவானதாயும் இருக்கின்றது. மற்றைய இரஸங்கள் இதிலிருந்தே தோன்றுகின்றன.மாற்றங்களில் ஏற்படுபவை இம்மாற்றங்கள் ஏற்படுவதற்கு காரணமாய் அமைகின்றவற்றால் இம்மாற்றங்கள்  நிகழ்கின்றன. மேலும் இம்மாற்றத்தை ஏற்படுத்துகின்ற  காரணிகள் எழுகின்ற போது இக்காரணிகள் மறையும் போதும் அவை சார்ந்த இரஸத்தினுள்ளே அமிழ்ந்துவிடுகின்றன. சார்ந்த இரஸம் கவலை, சந்தோசம், குரோதம், பொறாமை போன்ற குணங்கள் இல்லாவிடத்து எல்லா ஜீவராசிகளும் சமம் என நினைத்து மூலம் புலப்படுத்தப்படுகின்றது.

      “எங்கள் பெருமானுக்கொன்றுரைப்போங்கே ளெங்கொங்கை-நின்னன்

      பரல்லார் தோள் கோற்க வேங்கை யுனக்கல்லா தெப்பணியஞ் செய்யற்க”

ஆடலாக்கத்திற்கு சோபிதம் தருவது நவரசம் ரஸபாவங்கள் நிறைந்த உணர்ச்சி பேதங்கள் ஆடலை ரஞ்சகமாக்குவது மட்டுமல்லாமல் மிகுந்த கலை இன்பத்தையும் அள்ளித்தருகின்றது. திருவெம்பாவையில் தலைவி, தோழி ஆகியவர்களின் சம்பா~ணைகள் நவரசங்களை பிரதிபலிக்கும்  வகையில் மாணிக்கவாசக சுவாமிகள் அழகாக தந்துள்ளார். இவற்றினை பரத சம்பிரதாயாப்படி அபிநயரூபமாக்கி ரஸபாவங்களிற்கு ஏற்ப ராகங்களையும் தாளங்களையும் அமைத்து தேவையான இடங்களில் சிட்டைஸ்வரங்களோ ஜதிகளோ அமைத்து அதற்கேற்ற வகையில் அடைவுக் கோர்வைகள் தீரமானங்களைக் கொண்டு ஆடலாக்கத்தை மேற்கொள்வதற்கு திருவெம்பாவை பாடல் அனுகூலமாகின்றது.

முடிவுரை

தென்னிந்தியாவிலே தோன்றி மலர்ச்சி பெற்ற திருவாசக பனுவல்களில் ஒன்றான இத் திருவெம்பாவை பனுவலில் இசை, ரஸம், லயம் இம் மூன்றும் சமமாக அமைத்து காணப்படுகின்றது. அத்துடன் இப்பனுவலில் நடனச் செய்திகள் ஆற்காங்கே காணப்படுகின்றது. திருவெம்பாவை பனுவலில் வரும் ரஸங்கள், பாவங்கள், கருத்துக்கள் என்பன சிறந்த ஆடலாக்கத்திற்கு வழிகோலியது.

அதுமட்டுமல்லாமல் பரத நாட்டியத்தின் ஆடல் முதல்வனாக தலைவனாக நடராஜப்பெருமானே விளங்குகிறார். அவ்வாறே திருவெம்பாவைப் பாடல்களிலும் நடராஜப்பெருமானை தலைவனாகவும் தன்னை தலைவியாகவும் பாவித்து லௌவீகமாக்குகின்றார்.

இவ் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் இத்திருவெம்பாவை பனுவலில் நடனச் செய்தி காணப்படுவதோடு ஆடலாக்கத்தினையும் மேற்கொள்வதற்கு ஆடலாக்க அம்சங்கள் ஒன்றித்து காணப்படுகின்றன என்பது இவ் ஆய்வின் முடிவாக முன்வைக்கப்படுகிறது.

உசாத்துணைகள்

1.     அப்புத்துறை,சி.(2003) திருவாசகஅமுதம், பவளவிழா வெளியீடு

2.     அருளம்பலவானர்,சு.(1973) திருவாசக ஆராய்ச்சி உரை இரண்டாம் பாகம், யாழ்ப்பாணம்

3.     சந்தனராமன், கே.(2007) நால்வர் வரிசையில் மாணிக்கவாசகர்

4.     சிவசங்கரன், வ.(2006) திருவாசகம் தெளிவரை, மாணிக்கவாசகர் பதிப்பகம்

5.     திருவாசகத்தேன், தவத்திரு குன்றத்தடிகள்

6.     குமரகுருபரன்பிள்ளை, ரி.எம்.(1962) திருவாசகம்

7.     சரவணமுதலியார், அ.மு.ஞானசம்பந்தன், அ.ச,(1992) மாணிக்கவாசகர்