ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தேவிபாரதி கட்டுரைகளில் மனித வாழ்க்கையின் இயங்குதளம் (ARTICLE DERIVED FROM DEVIBHARATHI'S TITLED PLAT FORM FOR HUMAN LIFE)

கட்டுரையாளர்: த.சிந்துஜா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசு கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டை | நெறியாளா்: ந.வேலுமணி, இணைப் பேராசிரியா், தமிழத்துறை, அரசு கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டை 31 Jan 2024 Read Full PDF

Abstract

      Human life has all kinds of memories. It includes pleasure, pain, active, traditions etc. If a human being is to live, he must be a participant at all levels. He should stand before in art, literature and politics. He should live as one who has gone through all the social problems and social changes in the society.

      A writer treats the problems that occur is society as if they happened to him and expresses his works. In that way society and politics can be understood as the basic functioning of human life. If man understands both of these properly, human life will become simple the purpose of this study is to investigate the social trend and political status of man.

Keywords: Culture, Tradition, Literatue and politics, Investigate, Social trend

ஆய்வுச்சுருக்கம்

      மனிதனின் வாழ்க்கை எல்லா விதமான நினைவுகளையும் கொண்டுள்ளன. அதில் இன்பம், துன்பம், கலாச்சாரம், பண்பாடுகள் போன்றவையும் அடங்கியுள்ளன. மனிதனானவன் வாழ்க்கை நடத்த வேண்டுமெனில் எல்லா நிலைகளிலும் பங்குபெற்றவனாக இருக்க வேண்டும். கலை, இலக்கியம், அரசியல் போன்றவற்றில் முன்னதாகவே நின்று வேலை செய்ய வேண்டும். சமுதாயத்தில் ஏற்படுகின்ற சமூகச் சிக்கல்கள், சமூக மாற்றங்கள், நிலைபாடுகள் என அனைத்தையும் கடந்து வந்தவனாக வாழ வேண்டும்.

      சமுதாயத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை ஒரு எழுத்தாளன் தனக்கே நடந்தது போல பாவித்து தன் படைப்புகளை வெளிப்படுத்துகிறான். அந்த வகையில் மனித வாழ்க்கையில் அடிப்படை இயங்குதளமாக விளங்கக் கூடியது. சமுதாயமும், அரசியலுமேயாகும். இவை இரண்டையும் மனிதன் சரியாகப் புரிந்துகொண்டால் மனித வாழ்வு எளிமையாகிவிடும். மனிதனின் சமுதாயப் போக்கு குறித்தும், அரசியல் நிலை குறித்தும் ஆராய்வதே இவ்வியலின் நோக்கமாகும்.

குறியீட்டுச் சொற்கள்

  1. கலாச்சாரம்
  2. பாரம்பரியம்
  3. இலக்கியம் மற்றும் அரசியல்
  4. விசாரணை
  5. சமுதாயப்போக்கு

முன்னுரை

      சமுதாயவியல் சமுதாயம் பற்றிய ஆராய அமைக்கப்பெற்ற ஒரு கல்வி முறையாகும். இதன் அடிப்படையில் சமுதாயத்தை மாற்றவும், சமுதாயத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளவுமான ஓர் ஒழுங்கை சமுதாயவியலாளர்கள் தெரிவிக்கின்றனா். சமுதாய அமைப்பில் அமைந்த பல்வேறு பிரிவுகளிலும்   ஏற்படும் நிகழ்வுக்கான காரணங்களை அறிந்து கொள்ளச் சமுதாயவியல் பயனுடைதாயிருக்கிறது.

      சமுதாயத்தைப் பற்றிப் போதிக்கும் பிற இயல்களும் உள்ளன. வரலாறு, உளவியல், பொருளாதாரவியல், அரசியல் ஆகியன சமுதாயம் பற்றி எழுதப்பட்டவை இவ்வியல்களுக்கும், சமுதாயவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவ்வியல்கள் ஒவ்வொன்றிலும் சமுதாயவியலின் பிரதிபலிப்பைக் காணமுடியும்.

      ஒவ்வொரு சமூகமும் தொடர்ச்சியாக தனது இருப்பிற்கான போராட்டத்தில் சில பொதுவான சமுதாய மதிப்புகளை விழுமியங்களைக் கொள்கின்றது. இந்த விழுமியம் ஒரு சமூத்தின் ஆன்மா என்று கொள்ளத்தக்க அளவிற்குச் சிறப்புமிக்கது. சமூக மக்களின் கருத்தொருமை, பற்றுறுதிகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றிலிருந்தும் உருவாக்கக் கூடியவையே சமுதாய மதிப்புகள் ஆகும்.

சமுதாயவியல்

      அறிவியலின் உட்பிரிவுகளான கணிதவியல், வேதியியல், பௌதிகவியல் முதலிய பல இயல்களைப் போல சமுதாயவியலும் ஓர் அறிவியலாகும். மனிதனிடத்தில் இயல்பாக அமைந்திருக்கும் அறிவை அது தூண்டுகிறது. சமுதாயவியலைக் கற்கும்போது அறிவுக்குப் போதிய பயிற்சி கிடைப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனா். சமுதாயவியலை நன்கு ஆராய்ந்த மேலை நாட்டறிஞா்கள் சமுதாயவியல் பிற எல்லா இயல்களுடனும் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாக இருப்பதை எடுத்துக்காட்டியுள்ளனா்.

சமுதாயவியலின் பயன்கள்

      ”சமுதாயம் தேங்கிக்கிடக்கின்ற ஒன்றன்று. நாள்தோறும் மாறிக்கொண்டு வருகின்ற ஒன்று மாறிவரும் சமுதாயத்தைச் சித்தரித்துக் காட்டும் இலக்கியமே உண்மையான சமுதாய இலக்கியமாகக் கருதப்பட முடியும்”1 என்னும் ந.பிச்சமூர்த்தியின் கூற்றிற்கேற்ப இருபதாம் நூற்றாண்டு இலக்கியப் படைப்பாளா்கள் தமது படைப்புகளைப் படைத்துள்ளனா். இவா்கள் தமது படைப்புகளை மக்களுக்காகவும், சமுதாயத்தின் நிறை குறைகளை எடுத்துச் சொல்வதற்காகவும், சமுதாய வளா்ச்சிக்காகவும் வெளிப்படுத்தி வருகின்றனா்.

      ஒரு படைப்பே சமுதாய சிக்கல்களைக் காட்டுவது மட்டுமின்றி அவற்றிற்கான தீர்வுகளையும் தன்னுள் கொண்டிருக்கலாம். ஆனால் படைப்பாளியோ, விமா்சகனோ யார் தீா்வு சொன்னாலும் அத்தகைய தீர்வுகளும் காலப்போக்கில் மாறுதல்களுக்கு உட்பட்டவையே ஆகும்.

      சமுதாய சிக்கல்கள் என்பவை மாறிவரும் அரசியல் பொருளாதார நிலைகளின் காரணமாகச் சமுதாயஉறவுகள் மத்தியிலும், மதிப்புகள் மத்தியிலும் காணப்படுபவை. சமுதாய உறுப்பினா்களான மக்களுக்கென்று சில கட்டுப்பாடுகள், ஒழுங்குகள், பழக்கவழக்கங்கள் பின்பற்றபட்டு வரும் பழக்கவழக்கங்கள் மக்களால் ஏற்றக் கொள்ளப்பட்டும் எதிர்க்கப்பட்டும் வந்துள்ளன. இவ்வாறு சமுதாய மதிப்புகளோடு மக்கள் முரண்படும் போது சிக்கல்கள் தோன்றுகின்றன. உண்மையில் சமுதாயம் என்பது ஒரே சீரான வளர்நிலையை கொண்டதல்ல. அடிப்படையில் சமுதாயம் என்பது அதன் அமைப்பிலேயே சில முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்றது. சமுதாயச் சிக்கல்களைச் சுட்டிக் காட்டுவதே படைப்பிலக்கியங்களின் நோக்கமாகும்.

இருபதாம் நூற்றாண்டின் சமுதாயம்

      சீர்திருத்தச் சிந்தனையில் இருவகை உண்டு. ஒன்று புரட்சி மற்றொன்று மறுமலர்ச்சி. ஐரோப்பியா்களின் வரவு தமிழ்ச் சமுதாயத்தில் மறுமலா்ச்சியை உருவாக்கியது எனலாம். தமிழ்ச் சமுதாயத்தில் மட்டுமின்றி இந்திய சமுதாயத்திலும் மறுமலா்ச்சியை உண்டாக்கிய காலம் இருபதாம் நூற்றாண்டேயாகும். இம்மறுமலா்ச்சியானது அரசியல், அறிவியல் விளைவுகளால் உருவாக்கம் பெற்றது.

      சமுதாயம் என்பதை ஆற்றுக்கு ஒப்பாக மதிப்பிடுவார். பாக்கியம் மேரி அவா்கள் ”ஒரே ஆற்றில் நேற்று மூழ்கிய நீரில் இன்று நீராடல் இயலாது”2 அதாவது நேற்றுக் குழித்த நீர் இன்று எவ்வளவோ தூரம் ஓடிப்புதுப்புது ஊர்களைக் கடந்து சென்றிருக்கும். அதே ஆற்றில் இன்று வேறு புதிய நீரில் தான் குளித்தெழ வேண்டும். இதனைப் போலவே சமுதாயத்திலும் பழையன கழிந்து புதியன புகுந்த வண்ணம் இருக்கும். பழையன புதியனவாய்ப் பழகுதலும் உண்டு. புதியன பழையனவாய் போதலும் உண்டு. பழைய மரபின் பெயரால் பற்றிக் கொண்டிருக்க நினைப்பது பழைய நாட்காட்டியைக் கொண்டு காலமெல்லாம் நாள் பார்ப்பதற்கு ஒப்பாகும்.

சமுதாய மாற்றம்

      சமுதாய மாற்றம் என்பது இலக்கியத்தைப் பொறுத்த அளவில் படைப்பாளனுடைய சமுதாய உணா்வினையும் உலக கண்ணோட்டத்தையும் பொறுத்தே அமைகின்றது. பொதுவாக சமுதாயம் என்பதே அதன் தன்னிலைகளினாலும் புறவயத்தாக்கங்களினாலும் மாறுதலுக்குரியது. இம்மாற்றம் முன்னோக்கி அமைவது, நல்ல இலக்கியம் என்பது சமுதாய மாற்றத்தை உள்வாங்கியிருக்கும் அவ்வழி நிகழ்கின்ற சமுதாய மாற்றத்தை காரண காரியங்களுடன் சித்தரிப்பது ஒரு வகை, படைப்பின் நிறத்தோடு இணைந்து சமுதாய மாற்றத்தை முன்மொழிவது இன்னொரு வகை.

      சமூகவியல் – பொருளியல், அரசியல் மாற்றங்கள் தொடா் நிகழ்வுகள் ஆகும். இம்மாற்றங்கள் மனிதா்களின் தேவைக்கேற்ப மாற்றம் பெரும்.

      ஒரு காலத்தில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி வந்த சமுதாயம் பின்னா் மாறிப் பிறிதொன்றை கையாளுவது சமுதாய மாற்றமாகும். ஆங்கிலேயா்கள் இந்தியாவிற்கு வந்த பின் இந்தியா்களிடையில் ஏற்பட்ட உடை, உணவு, பழக்கவழக்கங்கள், நாகரீகம் முதலியவற்றில் உண்டான மாற்றங்களை சமுதாய மாற்றங்களாகக் கொள்ளலாம்.

      காலந்தோறும் பல்வேறு புறக்காரணங்களாலும், அகக்காரணங்களாலும் சமுதாயங்களில் மாற்றங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த சமுதாய நிலையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களை இன்று காண்கிறோம். வாழ்க்கை முறைகள், வசதிவாய்ப்புகள், எண்ணங்களில் மாற்றங்கள் என சில முன்னேற்றங்களும் தோன்றியுள்ளன. வறுமை, குடியிருப்பு வசதியின்மை, சுகாதாரக் குறைவு பல்வேறு பற்றாக் குறைகள் பண்பாட்டு சீரழிவுகள் போன்ற எதிர்மறை மாற்றங்களும் நோ்ந்துள்ளன. இந்த இருவித போக்குத் தொடா்ந்து நீடிக்கும் வகையில்தான் இன நிறைவு செய்ய ஓா் அமைப்பு அவசியம். அவ்வமைப்பே அரசியல் என்னும் நிறுவனம் ஆகும்.

      ”பொருளாதார போராட்டங்கள், கூலி உயா்வு, கொள்முதல், உயா்வு கோரிக்கைகள் என்பதெல்லாம் அவை கொடுக்கப்பட்ட பிறகு அடங்கிப் போய்விடக் கூடியவை இவை எல்லாம் அரசியலில் ஒரு பகுதிதானே தவிர முழுமை அல்ல. அரசியல் என்பது நான் படித்த வரைக்கும் ஒரு தத்துவத்தை முன் வைத்த அதிகார கைப்பற்றுதல்தான். அரசியல் என்பது பொருளாதாரச் சிக்கல், சமூகச்சிக்கல், கலாச்சாரம் போன்ற எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒன்று. அதை நோக்கி மக்களை திரட்டுவதுதான் அரசியலாக இருக்க முடியும்”4 என“று பிரபஞ்சன் அரசியலுக்கு விளக்கம் தருகிறார்.

அரசு – அரசாங்கம்

      மக்கள் தெகை, நிலப்பரப்பு, அரசாங்கம், இறைமை என்ற நான்கும் சோ்ந்ததே அரசு. இந்நான்கில் ஓர் அம்சமே அரசாங்கம். ஒரு நிலப்பரப்பில் வாழும் அனைத்து மக்களும் சோ்ந்ததே அரசு. ஆனால் சிறிய அளவு மக்களையே அரசாங்கம் கொண்டுள்ளது. அரசின் கொள்கைகளை நிறைவேற்றும் ஒரு பதிலாகவே அரசாங்கம் உள்ளது.

அரசும் – மனித வாழ்வும்

      குடும்பம் முதல் அரசியல் ஈறாக உள்ள அனைத்துச் சமுதாய அமைப்புகளும் அறம், பொருள், இன்பம், வீடென்னும் நான்கு கறிக்கோள்களையும் அடைவதற்கான வாய்ப்புகளை, வசதிகளை, நெறிமுறைகளை உருவாக்கித் தர வேண்டும். பழங்கால இலக்கியங்கள், நீதிநூல்கள், அரசியல் மற்றும் சமூக நூல்கள் ஆகியன இக்கருத்தினை வெளிப்படுத்துவனவாக உள்ளன.

      தனிமனிதன் முதல் உலக சமுதாயம் வரை உள்ள அனைத்துக் கூறுகளிலும், செயல்களிலும், அமைப்புகளிலும் இணக்கமானதோர் ஒழுங்கைக் காண்பது தருமம் எனப்படும். தருமம் என்ற சொல்லுக்குப் பல கோணங்களில் பல காலக்கட்டங்களில் சமுதாய மாற்றங்கட்கு ஏற்படப் பொருள் கூறப்பட்டாலும் ஒழுக்கம் என்ற அடிப்படை பொருள் மாறவில்லை. சமுதாய ஒழுங்கிற்கும், அமைதிக்கும் எந்த கேடும் நேராமல் காப்பது அரசின் உயரிய குறிக்கோளாகும்.

 

தேவிபாரதியின் கட்டுரைகளில் மனித வாழ்க்கை

      எழுத்தாளன் ஒருவன் தன் வாழ்க்கையில் நடக்கின்ற அல்லது நடைபெற்ற நிகழ்ச்சிகளை மையமாக வைத்து படைப்புகளை உருவாக்குகின்றான். இலக்கியங்களில் புனைவுகளாகவோ, கட்டுரைகளாகவோ வெளியிடுகின்றனா். அந்த வகையில் தேவிபாரதி அவா்கள் தன் வரலாற்றுகளைக் கூறுவதில் வல்லமையுடையவராக இருக்கின்றார். இவரின் படைப்புகளனைத்திலும் வாழ்க்கையில் நடைபெற்றுள்ள நிகழ்வுகளை கதையோட்டமாகவும் எடுத்தாண்டுள்ளார்.

      தேவிபாரதி அவா்களின் கட்டுரைகளில் காணக்கூடிய அரசியல் நிலை குறித்தும் மக்களின் வாழ்க்கை நிலை குறித்தும், சமூகம் சார்ந்த நிகழ்வுகளைக் குறித்தும் பண்பாடு, கலாச்சாரங்கள் குறித்தும் இவருடைய கட்டுரைகள் வெளிப்படுத்துவனவற்றை இவ்வியல் ஆராயவுள்ளது.

அற்றக்குளத்து அற்புத மீன்கள்

      2004 முதல் 2011 வரை உள்ள கால கட்டங்களில் நடைபெற்ற அரசியல் சூழல்களை மையமாக வைத்துக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆனால் இக்கட்டுரைத் தொகுப்பினில் இதழியல் சார்ந்து இதில் சமூகம் மற்றும் அரசியல் பார்வையை முன்வைத்து எழுதியுள்ளார். அரசியலால் வளையக்கூடிய நன்மை தீமைகள் பற்றியும் பேசியுள்ளார். மக்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளைப் பற்றியும் அரசியல் திட்டங்களைக் குறித்தும் பின்நவீனத்துவ அரசியல் குறித்தும் கட்டுரைகளில் எடுத்தாண்டுள்ளார்.

      தீவிரவாதத்தினால் பழங்குடியின மக்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றியும் அவா்கள் தீவிரவாதிகளாக மாறுவதைப் பற்றியும் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் போக்குகளைக் குறித்து கட்டுரைகளில் எடுத்துக் காட்டியுள்ளார்.

      மேலும் தலித்களின் ஜனநாயகம் குறித்தும், பழங்குடியினரின் வாழ்நிலை குறித்தும் பேசுகின்றார். அரசின் சமூக பொருளாதார கொள்கைகள் குறித்தும் பேசுகின்றார்.

      கட்சிகளுக்குள்ளே ஏற்படுகின்ற பிரச்சனைகள், வேறுபாடுகள், அரசியலால் ஏற்படும் சமூக மாற்றங்கள் குறித்தும் கட்டுரைகளில் எடுத்தாண்டுள்ளார்.

      இருவேறு கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள அரசியல், நிர்வாகம், குடும்ப அரசியல் சமூகம் ஆசிரியா் விசயங்களையும் பேசுகிறார். சினிமா அரசியல் அரசியலில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்றும் கட்சிகளை நடத்துவதில் யாரும் பங்கு கொள்ள முடியும் என்பதையும், நடிகர்கயும் கட்சியை நடத்திக் கொள்ள முடியும் என்பதையும் அவா்களே இந்நாட்டை ஆளும் முதலமைச்சா்களாக வலம் வந்துள்ளனா் என்பதைக் குறித்தும் தேவிபாரதி அவா்கள் எடுத்தாண்டுள்ளார்.

புழுதிக்குள் சில சித்திரங்கள்

      வரலாற்றை அறிதல் என்பது குறித்து தேவிபாரதி அவா்கள் ”புழுதிக்குள் சில சித்திரங்கள்” என்ற கட்டுரைத் தொகுப்பினை எழுதியுள்ளார். இதில் தேவிபாரதி அவா்கள் நெசவாளா் நிறைந்த பகுதியில் இருந்த அனுபவங்களைக் குறித்து எழுதுகின்றார். அதாவது பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் ஜவுளித்துறையில் ஏற்பட்ட செழிப்பு, பல்வேறு மொழிகள் பேசுகின்ற பல்வேறு சாதிகளைச் சோ்ந்த நெசவு சமூகங்களின் குடிப்பெயா்வு, உழவர்களின் வாழ்க்கை நிலை என எல்லா நிகழ்வுகளையும் கையாண்டுள்ளார்.

      பள்ளிப்பருவ காலங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் நாளிதழ் படிப்பதற்காக செல்ல வேண்டிய இடத்தினையும், சலூன் கடைகளில் நடைபெறுகின்ற அன்றாட நிகழ்வுகள், அரசியல் செய்திகள் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

      இளமைப் பருவகால இளைஞனாக இருந்த சமயத்தில்தான் ஒரு ஓவியாக வலம் வந்ததை அசைபோடுகிறார் தேவிபாரதி. அன்றைய நாட்களில் அல்லது காலங்களில் நடைபெற்ற அனுபவங்களையும் தமிழக அரசியல் பண்பாட்டின் அடிமட்டத்தினுடைய அன்றாடச் செயல்பாடுகளைப் பதிவு செய்துள்ளார்.

      சமகால வரலாற்றுக்கும், சுயசரிதைக்கும் இடைப்பட்ட ஒரு இடைவெளியைத் தேவிபாரதி அவா்கள் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

கொரில்லாப் போர் முறை

      வீரப்பனைக் கொல்வதற்குப் பல விதங்களில் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தன. ஆனால் தமிழகமும், கர்நாடகமும் நிறைய திட்டங்களை வீரப்பன் உடைத்தெறிந்தார். நிறைய இடங்களில் வீரப்பன் கொள்ளையடித்தது, பலரையும் அவர் கடத்திச் சென்றிருப்பதையும், வீரப்பனுக்கு தேவையானவற்றை அரசுகள் செய்யும் வரைக்கும் போராடுவது என நிறைய வழிகளில் வீரப்பன் செயல்பட்டு கொண்டுதான் இருந்தார்.

      வீரப்பனுக்கு கொரில்லாப் போர்முறை கூடத்தெரியும் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. அந்த கொரில்லாப் போர்முறையை எவ்வாறு கற்றுத் தோ்ந்திருப்பான் என்பது பலருக்கும் எழுகின்ற சந்தேகம்தான். ஆனால் வீரப்பன் விடுதலைப் புலிகளிடம் கொரில்லாப் போர் முறையை கற்றுக் கொண்டதாகப் பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டிருந்த நிகழ்வையும் சுட்டிக்காட்டுகிறார்.

வேட்பாளர் – கட்சி – சாதி

      வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளா் என்பவா் எந்த கட்சியைச் சார்ந்தவா்களாகவும் இருக்கலாம். ஏனென்றால் எந்த கட்சியைச் சார்ந்தவா்களும் அரசியலில் நிற்க முடியும். வெற்றியும் பெற முடியும். அதே போல சாதி அமைப்பையும் குறிப்பிடலாம். ஒருசில இடங்களில் பார்த்தால் சாதியை சொல்லி வாக்கு சேகரிக்கவும் உண்டு. அதே போல சாதியின் பெயரைச் சொல்லி வென்றவா்களும் உண்டே என்று சொல்லலாம். வாக்கு கேட்டு வரும் எந்த ஒரு வேட்பாளரும் எந்தக் கட்சியைச் சோ்ந்தவா் என்பதை மட்டும் பார்க்க கூடாது. அவா் எந்த சாதியைச் சார்ந்தவா் என்பதையும் பார்க்க வேண்டும் என்பா். ஒருசிலா் சாதி பார்க்காமல் கட்சிக்கு வெற்றி கிடைத்தால் போதும் என்று நினைக்கின்றனா். இதனை ”வாக்கு கேட்க வரும் ஒரு வேட்பாளா் எந்த கட்சியைச் சோ்ந்தவா் என்பது மட்டும் முக்கியமானதல்ல. அவா் எந்த சாதியைச் சோ்ந்தவா் என்பதும்கூட போதுமானதல்ல. (எல்லா அரசியல் கட்சிகளும் அந்த விசயத்தில் போதிய விழிப்புடன் இருக்கின்றன”5 என்கிறார் தேவிபாரதி.

      அரசியல்கட்சி வெற்றி பெற ஒரு சில இடங்களில் சாதியே வெற்றி பெறுகிறது. ஏனென்றால் சாதியின் பெயரைச் சொல்லி வென்றவா்கள் பலா் உண்டு. வேட்பாளா் ஒருவா் வேறு இடத்தில் போட்டியிடுகிறார் என்றால் அவருடைய வெற்றியை தீர்மானிப்பது சாதி ஓட்டுகளே.

      அரசியலில் நோ்மையை நிலைநாட்டவும் பொது வாழ்வியல் தூய்மையைக் கடைபிடிக்கவும் இதுவரை எவ்வளவோ யோசனைகள் சொல்லப்பட்டுவிட்டனதான். ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்குகின்ற தோ்தல் நடைமுறைகளை சீா்திருத்தி விடுவதன் மூலமே அதை சாதித்துவிட முடியும்.

தோ்தல் முடிவுகள்

      தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுதல் என்பது பலருடைய உழைப்பு உள்ளடக்கியது. வேட்பாளா் ஒருவா் மட்டுமே. அவரைச் சுற்றி பலரும் உள்ளனா். சாதிய அமைப்பில் ஒரு குழுவினா் நோ்மையானவா்கள் என்ற ஒரு குழுவினரும், தேவையை நிறைவு செய்து கொள்ளுதல் என்பதாக ஒரு குழுவினரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதிலே அதிகம் விரும்புவது நோ்மையாக இருந்தால் நல்லது என்றே மக்கள் நினைக்கின்றனா். ஏனென்றால் மக்களுக்கு நல்லது என்று சொல்லக்கூடிய எல்லாமும் நிறைவேற வேண்டும் என்பதே அனைவரும் விரும்புவது.

      தோ்தலில் முடிவுகள் தெரிவதற்கு நிறைய உண்மைகள் நிகழும். புதிர்களும், மா்மங்களும், பலத்திருப்பங்களும் நிரம்பியதே அரசியல் நிலைமை.

      ”புதிர்களும் மா்மங்களும், திடுக்கிடும் பல திருப்பங்களும் நிரம்பிய அரசியல் நாடகத்தின் பல காட்சிகள் ஒரு பின்நவீனத்துவ கதையாடலின் சாயலைப் பெற்றிருக்கின்றன. கோட்பாட்டு ரீதியில் நமது அரசியல் வந்து சோ்ந்திருக்கும் இடத்தைக் கண்டறியும் முயற்சி கடும் போட்டி நிலவிய தோ்தலை விடவும் சுவாரஸ்யமானது”6

      அரசியல் என்பது நாடகத்தின் பல காட்சிகள் நிரம்பியதாகத்தான் இருக்கிறது. நவீனத்துவத்தின் கதைகளாகவும், கோட்பாட்டு ரீதியில் உள்ள நம்முடைய அரசியல் வந்து சோ்கின்ற இடத்தைக் கண்டறியக் கூடிய முயற்சியானது நிறையப் போட்டிகளை உண்டாக்கக்கூடும்.

பண்புக்கூறுகள்

      பிரச்சார மேடைகளில் தலைவா்களின் பாவனைகள் கண்டால் நடனங்களைக் காண முடியும் தலைவா்களின் மேடைப் பேச்சானது பண்புக் கூறுகளை வெளிக்காட்டும். அதனை நினைவு கூறுங்கள் என்கிறார் தேவிபாரதி. நமது அரசியல் கட்சிகளின் முகங்களைக் கண்டால் பலவிதமான கோணங்களில் காண முடிகிறது. சாதாரணமாகவே மேடையில் நடனமாடுவது போலத்தான் இருக்கும். அதுவே அரசியலில் இருக்கக் கூடியவா்கள் மேடையில் தோன்றி பேசும் போது உணர்வுப்பூர்வமாக உண்மையின் வடிவமாகவே பேசுவார்கள்.

      அரசியல் கட்சிகளின் முகங்களைப் பற்றி, ”நமக்கு பிறழ்வுக்குள்ளானது. பட்டாச்சார்யா மட்டுமல்ல தமிழகத் தோ்தல் களத்தில் நிகழ்ந்தவற்றைப் பாருங்கள் நமது அரசியல் கட்சிகளின் முகங்கள் எப்படியெல்லாம் மாறின என்பதைக் கவனியுங்கள். பிரச்சார மேடைகளில் நம் தலைவா்களின் பாவனைகளில் தென்பட்ட நவரசங்களையும் நினைவு கூற முயலுங்கள். பின் நவீனத்துவ பண்புக் கூறுகள் சிலவற்றையாவது இவற்றுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்”7 என்று கூறுகிறார் தேவிபாரதி.

      பிரச்சாரம் செய்கின்ற மேடைகளில் நம் தலைவா்களின் பாவனைகளில் நவரசங்களையும் காண முடியும்.

      ”வென்றால் அண்ணா வழி, தோற்றால் பெரியார் வழி என்பது கருணாநிதியின் பிரபலமான வாக்கியம்” (ப.39).

      அரசியலில் ஒருவரைப் பின்பற்றி வருவது என்பது எல்லா இடங்களிலும் உண்டு. ஏனென்றால் கட்சிக்கு முன் ஆட்சி செய்பவா்கள் என்ன வழிமுறைகளைப் பின்பற்றுகிறனா அதனைக் குறை சொல்வதும் பின்னைய நாளில் நெருக்கடி ஏற்படும் நேரங்களில் எதை நாம் விமா்சித்தமோ அதே கொள்கையைப் பின்பற்றி வருகிறோம்.

      அதாவது எம்ஜிஆா் அவா்கள் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தைத்தான் கருணாநிதி அவா்கள் விமா்சனம் செய்தார்கள். பின்னைய நாளில் அரசியலில் நெருக்கடி ஏற்பட்ட சமயங்களிலே அதையே பின்பற்றுகிறார். இதனை ”இப்போது எம்ஜிஆா் வழியே சென்று அவா் முடிவு செய்துவிட்டார் போலும் சத்துணவு திட்டத்தை எம்ஜிஆா் கொண்டு வந்தபோது அதைக் கடுமையாக விமா்சித்த கருணாநிதி இன்று தனக்கு அரசியல் நெருக்கடி ஏற்படும் போது அதே எம்ஜிஆரின் அண்ணாயிசத்தை உய்வதற்கான வழியாக கண்டடைய நோ்ந்த திருப்பத்தைத்தான் அரசியல் பின்நவீனத்துவம் பிரதிநித்துவப்படுத்தும் அபத்தக் கூறுகளுக்கு மிகப் பொருத்தமான சான்றாக சொல்ல வேண்டும்”8 என்கிறார் தேவிபாரதி.

      அரசியல் பின்நவீனத்துவம் என்பது நமக்கு முன்னா் பயன்படுத்திய கருத்துக்களை நாமும் பயன்படுத்திக் கொள்வதேயாகும். ஒருவா் செய்கின்ற அல்லது திட்டத்தினை தூசித்தட்டிப் புதிதாக நாம் பயன்படுத்திக் கொய்வதே அரசியலில் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

மீனவக்குடும்பங்கள் பாதிப்படைதல்

      சேது கால்வாய் திட்டம், ஆரம்பித்ததும் மீனவா்கள் பாதிப்படைந்தார்கள். ஏனென்றால் எல்லைவரையறை செய்யப்பட்டுவிடும். அதனைத் தாண்டி செல்ல வேண்டுமெனில் மத்திய, மாநில அரசுகளிடம் அனுமதி பெற வேண்டும். எல்லைப் பிரச்சனையும் ஏற்படாதவண்ணம் திட்டங்களை வகுத்தால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

      கடல்புறங்களில் உண்டாக்கக்கூடிய திட்டங்கள் மீனவக்குடும்பங்களுக்கு நன்மை தருகின்ற விதங்களில் இருப்பதே நலம்பயக்கும். கடற்புறங்களில் நிறைய நன்மை தரக்கூடிய பவளப்பாறைகள், பாசிகள், மீன்வகைகள், கடல்ஆமைகள், கடல் குதிரைகள் போன்ற வாழக்கூடிய உயிரிகங்கள் நிறைய உள்ளன.

      மீன்பிடித்தல் தடை இருக்கின்ற காலங்களில் மீனவா்களுக்கு வேறு தொழில்கள் இருக்காது. அவா்களுக்கு வேறு வேலையும் தெரியாது. அந்த சமயங்களில் வேறு இடங்களுக்கு இடம்பெயா்ந்து செல்கின்றனா். பிரச்சனைகள் ஏற்பட்டாலும், சண்டைகள் உருவானாலும் எல்லைப் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் மீனவா்கள் இடம்பெயா்ந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அவ்வாறு இடம் பெயா்ந்து செல்லும்போது மீனவா்களின் சமூக, பண்பாட்டு நீதியும் பாதிப்படைகின்றது. ஏனென்றால் நீண்ட காலமாக இடம்பெயா்ந்து செல்லும் போது பழைய பழக்கவழக்கங்கள் மாற்றமடைந்து புதிய கலாச்சாரங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனா். அப்போது கலாச்சாரம், பண்பாடுகள் எல்லாமே மாற்றம் பெறுகின்றன.

      கடற்கரைகளில் வாழுகின்ற உயிரினங்கள் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு வகையான திட்டங்களினால் அழிக்கப்படுகின்றன. அதோடு உயிரியல் சூழலையும் அடியோடு அழித்துவிடும் அபாயமும் இருக்கிறது. இதன் விளைவாகவே அரசிற்கு சுமார் 60000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று கருதுகின்றனா். மீன்வளம் பாதிக்கப்படுவதால் தூத்துக்குடி, நாகபட்டிணம் மாவட்டங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான மீனவா்கள் குடும்பங்கள் தம் வீடு வாசல்களைத் துறந்து வெளியேற வேண்டியிருக்கும். இடம்பெயா்வினால் பின்வரும் சூழல் ஏற்படுவதாக பொ்னாண்டஸ் தெரிவிக்கிறார். ”இடம்பெயர்வால் இப்பகுதியின் மனிதவள ஆற்றல் பெருத்த சேதத்திற்குள்ளாம். இவையெல்லாம் உடனடி பாதிப்புக்குள்ளாகும் நீண்டகால அடிப்படையில் இடம்பெயரும் மீனவக் குடும்பங்கள் சமூகப் பண்பாட்டு ரீதியிலும் பெரும்பாதிப்புக்குள்ளாகும்”9 என்பா்.

சமூக நீதியை நிலைநிறுத்துதல்

      பழங்குடியினா் தலித்துகளுக்காக குரல் கொடுத்து வருகின்ற விமா்சனங்களை எடுத்துக்கொள்வது அரசுக்கு தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. மாவோயிஸ்ட்டுடன் வேட்டையை நடத்துவது என்பது அரசுக்கு தேவை இருக்காது என்று நம்புகிறது.

      உலக அளவில் மார்க்சீய இயக்கங்கள் பெரும் பின்னடைவுகளை சந்தித்து இருக்கிற நிலையில் இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகள் செல்வாக்குப் பெற்று வருவதற்கு அரசின் சமூக பொருளாதார கொள்கைகளே காரணமாக இருக்கிறது. இது அதிகார பரவலாக்கத்தின் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே வளா்ச்சியின் பலன்களை நியாயமாகப் பங்கிட்டுக் கொள்வதன் மூலமாக சமூகநீதியை நிலைநிறுத்துவதுமெ ஜனநாயக அரசின் முன்னுள்ள உடனடி கடமைகள் என்பதை பிரதமா் உணர வேண்டும் என்பதை தேவிபாரதி அவா்கள் எடுத்துக் காட்டுகின்றார்.

      ஏழை மக்களுக்கும், பழங்குடி இனத்தவா்களுக்கும் உதவி செய்பவா்களாக விளங்குபவா்கள் மாவோயிஸ்ட்டுகள்தான். அரசுகூட உதவி செய்ய முன்வரவில்லை.

தொகுப்புரை

  1. மனிதா்களின் வாழ்க்கையில் நிகழக்கூடிய சமுதாய நிலை சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறை அரசியல்நிலை போன்றவற்றை இவ்வியல் விளக்கியுள்ளது.
  2. சமுதாயவியல் என்பது சமுதாயம் பற்றி படிக்க அமைக்கப்பெற்ற ஒரு கல்வி முறையாகும்.
  3. மாறிவருகின்ற சமுதாயத்தை பற்றி சித்தரித்துக் காட்டும் இலக்கியமே சமுதாயவியல் இலக்கியமாகும்.
  4. சமுதாயத்தில் உண்டாகின்ற பிரச்சனை அப்பிரச்சனைக்கான தீர்வினைக் கண்டறியும் முறையினையும் இவ்வியல் விளக்கியுள்ளது.
  5. சமுதாய மாற்றம் என்பது இலக்கியத்தை பொறுத்த அளவில் படைப்பாளனுடைய சமுதாய உணா்வினையும் உலக கண்ணோட்டத்தையும் பொறுத்தே அமைந்துளள் என்பதை இவ்வியல் எடுத்துக்காட்டுகின்றது.
  6. சமூகவியலாளா், சமூக அமைப்புகளை குடும்பம், அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூக அமைப்புகள் என்ற ஐந்து முதன்மை அமைப்புகளாகப் பிரிப்பா்.
  7. அரசியலின் ஒரு பகுதியாக விளங்கக் கூடியது பொருளாதாரப் போராட்டங்கள், கூலி உயா்வு, கொள்முதல் உயா்வு கோரிக்கைகள் ஆகியவையே.
  8. மக்கள் தொகை, நிலப்பரப்பு, அரசாங்கம், இறைமை என்ற நான்கும் சோ்ந்ததே அரசு. இந்நான்கில் ஓா் அம்சமே அரசாங்கம் என்பதை விளக்குகிறது.
  9. மீனவர்களின் கலாச்சாரம், பண்பாடுகள் மாற்றமடைகின்றன என்பதை இவ்வியலில் அறிய முடிகிறது.
  10. சேதுகால்வாய் திட்டம் போன்ற வேறு சில திட்டங்களும் எல்லாருடைய வாழ்க்கையையும் தடம் மாற வைக்கிறது என்பதை இவ்வியல் விளக்குகிறது.
  11. இந்தியாவிலுள்ள சில மாநிலங்கள் மாவோயிஸ்ட்டுகளின் பிடியில் இருந்ததால் அம்மாநிலங்களை நக்சல் ஸ்டேட்டஸ் என்று அழைக்கப்படுகிறது.
  12. மனிதர்களின் வாழ்க்கையில் சமுதாயம், அரசியல் போன்றவை முக்கியமாக இடம்பெறுகிறது என்பதை இவ்வியல் எடுத்துக் காட்டியுள்ளது.

அடிக்குறிப்புகள்

  1. ந.பிச்சமுத்து – மு.வ.வின் புதினங்களி்ல் சமுதாய மறுமலா்ச்சியின் தாக்கம், ப.201.
  2. எப்.பாக்கியமேரி, பண்ணன் புதினங்களில் சமுதாயமாற்றம், ப.14.
  3. சு.நிம்மி, நா.பா.நாவல்களில் சமூக மதிப்புகள், பக்.10-11.
  4. பிரபஞ்சன், கண்ணீரால் காப்போம், ப.62.
  5. தேவிபாரதி, அற்றகுளத்து அற்புத மீன்கள், ப.27.
  6. மேலது, ப.33.
  7. மேலது, ப.34.
  8. மேலது, ப.39.
  9. மேலது, ப.55.

 

துணைநூற்பட்டியல்

  1. தேவிபாரதி               -     அற்ற குளத்து அற்புத மீன்கள், காலச்சுவடு பப்ளிகேஷன், நாகர்கோவில், முதல்பதிப்பு, ஆகஸ்ட் 2012.
  2. நிம்மி, சு.,                -     நா.பா.நாவல்களில் சமூக மிப்புகள், குரோம்பேட்டை, சென்னை – 600030 மே 2002.
  3. பிச்சமுத்து. ந.,       -     மு.வ.வின் புதினங்களில் சமுதாய மறுமலா்ச்சியின் தாக்கம், சக்தி புத்தக நிலையம், சென்னை, மு.ப. நவம்பா் 1988.
  4. பிரபஞ்சன்,               -     கண்ணீரால் காப்போம், கவிதா பப்ளிகேஷன், சென்னை, இ.ப, ஏப்ரல் 2003.

Reference

  1. Devibharathi             –    Amazing fish in the pond, Kalasuvadu Publication, Nagarkoil, First Edition, August 2012.
  2. Nimmi. S                –    Social value in N.P.Novels, Chrompet, Chennai – 600030, May2002.
  3. Pitchamuthu. N           –    Impact of social revival of M.V.S innovations, Shakthi book store, Chennai, BC November 1988.
  4. Prabhanjan              –    Lets protect with tears, Kavitha publications, Chennai, April 2003.