ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஜெயமோகன் புதினங்களில் விலங்கினங்கள் (Fauna of Jayamohan's Novelties)

கட்டுரையாளர்: மா. வள்ளி, முனைவர்பட்ட ஆய்வாளர், (முழு நேரம்) தமிழ்த்துறை, அரசு ஆடவர் கலைக்கல்லூரி, கிருஷ்ணகிரி- 635002 | ​​​​​​​நெறியாளர்: தி. முத்து, உதவிப் பேரராசிரியர், அரசு ஆடவர் கலைக்கல்லூரி, கிருஷ்ணகிரி- 635002 01 Aug 2023 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்:

          ஜெயமோகன் புதினங்களில் விலங்கினங்கள் குறித்த செய்திகள் சங்க காலத்திலேயே விவரிக்கபட்டுள்ளன. யானை, குதிரை, நாய், காளை, மாடு போன்ற விலங்குகளைப் பற்றியும் அவைகள் எழுப்பும் ஒலி அவ்விலங்கினங்களின் இயல்பு நிலைகள் பற்றியும் சங்ககாலப் பாடல்களில் கூறியுள்ளனர். ஒவ்வொரு விலங்குகளும், ஒவ்வொரு திறன்களைப் பெற்று இருக்கின்றது. ஒரு சிலர் விலங்கினங்களோடு அன்பாக பழகுவர். ஒரு சிலர் அச்சம் கொண்டு அவ்விலங்கினங்களை தொட கூட பயப்படுவார்கள். அவ்வாறு ஜெயமோகன் அவர்கள் தமது புதினங்களில் விலங்குகள் குறித்து செய்திகளை மேற்கோள் காட்டியும் அவ்விலங்கினங்களின் இயல்பு நிலைகளை குறித்தும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.

STUDY SUMMARY:

             In the Jayamohan Novelties, the stories about fauna are described as early as the Sangam period. Sangam songs have told about animals like elephant, horse, dog, bull, cow and the sounds they make about the nature of these animals. Each animal has acquired different abilities. A few are fond of animals. Some people are afraid to even touch these animals out of fear. In this way, Jayamohan quoted news about animals in his novel and explained the nature of those animals in this article.

திறவுச் சொற்கள்         -     Key words

கழாரின், கொங்கர்கள், மென் மினி வன்றொடர், பனிப்படலம்,  டாபர் மான் நாய், வெண்ணிற ரோமம், Menbini series, Ice sheet, Doberman dog, White fur

முன்னுரை

     குறிஞ்சி> முல்லை> மருதம்> நெய்தல் என்னும் நானிலத்தில் வாழும் விலங்கினங்கள் குறித்து சங்கப் புலவகள் பாடியுள்ளனர்;. விலங்குகளின் இயல்புகள் அவற்றின் வாழ்வியல் முறைகள் ஆகியவற்றை சங்கப் பாடல்களில் காணலாம். தமது பாடல்களில் தாம் கூறவந்த உரிப் பொருட்கருத்திற்கேற்பப் படைத்து மொழிந்துள்ளனர். சங்க காலப் புலவர்கள். இது போன்றே ஜெயமோகன் அவர்;களும் தமது புதினங்களில் விலங்குகள் குறித்து பதிவு செய்துள்ளார். இதனைப் பற்றியே இக்கட்டுரை ஆராய்கிறது..

யானை

     கழாரின் நீர்த்துறையில் நீராட்டுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட யானைகளை மருத மரத்தில் பிணித்துக் கட்டியிருந்ததை,

           “கல்லா யானை கடிபுனல் கற்றென

           மலிபுனல் பொருத கழாஅர் முன்றுறை” 1

எனும் பாடல் புலப்படுத்தும்.

     கொங்கர்கள் பசுக்களை மேய்ப்பதற்குத் திரள் திரளாகக் கொண்டு செல்வது போல, பொறையன் படையில் எண்ணற்ற பல யானைகள் பரந்து செல்வதை>

           “. . . . . . .  கொங்கா;

           ஆ பரந்தன்ன செலவின், பல்

           யானை காண்டல், அவன் தானையானே” 2

எனவரும் பதிற்றுப்பத்துக் கூறும்.

     மேற்கண்ட சங்கப் பாடல்கள் குறிப்பிடுவதைப் போன்றே ஜெயமோகன் அவர்;களும் யானையைப் பற்றிக் கூறுகின்றார் ஒரு அழகான பெண்ணின் நடை போன்றது யானையின் நடை என காளிதாசன் சொன்னதை ஜெயமோகன் அவா;கள் எடுத்தாண்டுள்ளார். இதனை,

           “இரவு ஒரு யானை சாமரக் காதுகள் அசைய, கொம்-

           -புகள் ஊசலாட, பொதிகள் போல் காலெடுத்து வைத்து

           மெல்ல நடந்து வரும் யானை,. கஜராஜவிராஜிதம்

           என்று காளிதாசன் சொன்னான். பேரழகியின் நடை

           யானையின் நடை போன்றது. ராத்ரி தேவியின்

           நடையல்லவா அது?” 3

எனும் பகுதி சுட்டும்.

           “காட்டு யானைக் கூட்டத்துக்கு நடுவிலே எந்த பயமும்

           இல்லாம போயி நின்னிருக்கேன்” 4

என நீலிமா பாத்திரம் வழி, காட்டு யானையைக் குறிப்பிடுகின்றார், ஜெயமோகன் அவர்கள்.

     யானை பழக்கப்படுத்தப்பட்ட விலங்காக இருந்தாலும் கூட அதனுள் ஒரு காடு இருக்கிறது. அறிய முடியாத உக்கிரம் கொண்டது யானை. ஆனால் இந்த யானை மீது அமர்ந்து செல்லும்போது தன்னை ஒரு மகாராஜாவாக எண்ணிக் கொள்ளும் மனிதன் கொடூர எண்ணம் கொண்ட யானையைப் பற்றி அறிவதில்லை என விவரிக்கின்றார் ஆசிரியர். இதனை,

           “யானைமேல் இருக்கும் மனிதன் உணரும் அகங்கா-

           -ரம் ஒன்றுண்டு. அவன் தன்னை ஒரு மகாராஜாவாக,

           சிம்மாசனம் மேல் அமா;ந்தவனாக உணா;கிறான். அவ-     

           னறிவதில்லை அவன் மகத்தான அறியாமை ஒன்றின்

           மீது அமர்ந்திருக்கிறான் என்று நம்முன்னோர் அதை

           உணா;ந்திருந்தார்கள் . . . .  ஏறியமர்;ந்தால் இந்த உல-

           -கையே வென்றவர்;களாவோம். ஆனாலும் அது யானை

           அறியப்பட முடியாதது. ஏனென்றால் அது காடு, ஊருக்-

           -குள் இறங்கி வந்த காடல்லவா யானை” 5

எனும் கூற்றில் காணலாம். மேலும் சுவாமிஜி பாத்திரம் வழியாக,

           “இரவை ஒரு யானை என்றார் நூற்றுக்கு தொண்-

           ணூறு பாகன்கள் யானையால்தான் கொல்லப்படுகிறார்

           -கள். யானைக்குள் ஒரு காடு இருந்து கொண்டே இருக்-

           -கிறது. யானையை எவருமே முற்றிலும் கட்டுப்படுத்த

           முடியாது” 6

என்று யானையின் குணத்தைப் பதிவு செய்கிறார். ஜெயமோகன் அவர்கள்.

     யானைகளைப் பழக்கப்படுத்தி கட்டுப்படுத்தும் பாகர்களுக்கு அடங்காமல் மதம் பிடித்து ஓடும்போது சங்கினை முழங்கி ஒலி எழுப்புவராம். மதம் பிடித்த யானை திடீரென்று திருப்பி எதிர் திசையில் செல்லக் கூடும் என்பதால் யானையின் முன்னும் பின்னும் இருவா; சங்கினை ஊதிச் சென்றமையை>

           “இருதலைப் பணில மாh;ப்பச் சினஞ்சிறந்து

           கோலோர்;க் கொன்று மேலோh; வீடு

           மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக்

           கந்துநீத் துழிதரும் கடாஅ யானையும்” 7

எனும் பாடல் உணர்த்தும். மேற்கண்ட மதுரைக் காஞ்சி அடிகளுக்கு ஏற்றார் போல் யானையைக் கட்டுப்படுத்தும் பாகன்கள் பெரும்பாலும் யானையால் கொல்லப்படுவதையும்;; யானையை முழுமையாகப் பழக்கிவிட முடியாது என்பது போன்ற தகவல்களையும் கூறுகின்றார் ஜெயமோகன் அவர்கள்.

     ஒரு சிறு குச்சியால் யானைக்கு பயிற்சி அளிக்கும் பாகன் குறித்தும்;; உடல் உறுப்புகள் எல்லாம் கட்டுப்பட்டுவிட கண்கள் மட்டும் பாகனின் கட்டுப்பாட்டிற்கு அடங்காதது போல இருப்பதை ஏய்டன் பாத்திரம் மூலம் குறிப்பிடுகின்றாh; ஜெயமோகன். இதனை>

           “யானையின் மின்னும் சிறிய கண்களை ஏய்டன்

           அரைக்கணம் சந்தித்தான். ஆழமான பாறையிடுக்குக்-

           -குள் தேங்கிய துளிநீh; போல. கரும் பாறையின் ஆன்-

           -மாவில் என்ன உறைகிறது? யானையைச் சிறிய

           குச்சியால் பழக்கி ஆட்டி வைக்கிறான் இந்தச் சிறிய

           மனிதன். அதன் கால்கள்> அதன் தந்தங்கள்> அதன்

           துதிக்கை> அதன் செவிகள் எல்லாமே அவனுக்குக்

           கட்டுப்பட்டு விட்டன. ஆனால் இன்னும் அந்தக் கண்கள்

           அவனை ஏற்கவில்லை. யானையின் கண்களை

           மனிதர்கள் புரிந்து கொள்ளவே முடியாது. இருளுக்குள்

           உறையும் நெருப்பு போல ஏதோ ஒன்று அங்கே இருக்-

           -கிறது” 8

எனும் பகுதியில் விரிவாக விளக்கக் காணலாம்..

     மேலும் யானை உயிரினகளிலேயே சிறந்த ஒரு மிருகம் என்பதையும் குழந்தையைப் போல என்னும்> ஆனால் யானைக்குள் மத வெறி குடி கொண்டிருக்கும் என்பதையும்>

“யானை எத்தனை அற்புதமான மிருகம். மிருகங்களில்

அதற்கு இணையாக ஏதுமில்லை. கன்னங்காpய பேருடல்

அதன் எல்லா அசைவுகளும் அழகே. அது ஒரு மாபெரும்

குழந்தை. ஆனால் அந்த மகத்துவத்திற்குள் மதம் ஒளிந்-

-திருக்கிறது.  மிருகங்களிலேயே யானையைப் பழக்கு-

-வதுதான் மிக மிக எளிதானது.

ஆனால் ஒரு போதும் முழுமையாகப் பழக்கிவிட முடியாத

மிருகமும் யானைதான்” 9

என்ற வரிகளில் கூறுகின்றார் ஆசிரியர்

     யானையை துன்புறுத்தினாலும் கூட அவற்றை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருக்கும் குணம் கொண்டது. யானைக்கு நினைவாற்றல் அதிகம் உள்ளது என்பது போன்ற தகவல்களை>

           “யானையை அடிக்கலாம்>> வசைபாடலாம்> துரத்த-

           -லாம். அது எந்த எல்லை வரை என்பதை எப்போதும்

           யானை தான் தீh;மானிக்கிறது” 10

           “யானை வஞ்சகங்களை மறப்பதே இல்லை. . .” 11

           “யானை மறப்பதேயில்லை என்று சாஸ்திரம் சொல்கி-

           -றது. யானை மன்னிப்பதேயில்லை என்கிறது. யானைப்

           பகை என்று அது குறிக்கப்பட்டிருக்கிறது” 12

என்பது போன்ற கூற்றுகளில் உணா;த்துகின்றார் ஜெயமோகன் அவர்;கள்.

     யானையின் குண இயல்பினை>

           “புதர்களின் இருளும் மலைப் பாறைகளின் கம்பீரமும்

           காட்டருவிகளின் ஓசையும் மலைச் சுனைகளின்

           குளிரும் கலிந்தது யானை” 13

எனக் குறிப்பிடுகின்றார் ஆசிரியர்.

குதிரை

     அரசனின் தானையில் குதிரைப்படை முக்கிய இடம் வகித்தன. இதனை>

           “பெரும்;படைக் குதிரை நற்போர் வானவன்” 14

என வரும் அகநானூற்றடியில் காணலாம்.

     ‘பரலையுடைய சலங்கைகள் ஒலிக்க> ஓட்டத்தில் சிறந்து> ஆதி என்னும் ஓட்டத்தில் தேர்;ச்சிப் பெற்ற> பாய்ந்து ஓடும் நல்ல குதிரை’ என்ற பொருளமைந்த பாடலினை

           “அரி பெய் புட்டி லார்ப்பப் பரி சிறந்து

           ஆதிபோகிய பாய்பரி நன்மா” 15

என்ற அகநானூற்றடிகளில் காணலாம்.

     மேற்கண்ட அகநானூறு குறிப்பிடுவது போன்றே ஜெயமோகன் அவர்களும் குதிரையின் இயல்புகளையும் அவற்றின் தோற்றத்தையும் எடுத்தியம்புகின்றார். இதனை>

           “வீட்டுக்கு முன்னால் குதிரை நின்று கொண்டிருந்தது.

           மாந்தளிர் நிறக் குதிரை. அப்போதுதான் உருவி விடப்-   

           பட்டது போல அது பளபளத்தது. வாலைச் சுழட்டி

           விசிறிய படியும், கால் மாற்றியும்> தலையைச் சற்று குனிந்து

           தன் பிடரி மயிரைச் சிலுப்பியும்> நிமிர்ந்து கடிவாளத்தை

           மென்றும்> அது நின்றது. அதன் வார் தரையில் பாதி>

           முதுகில் பாதியாகக் கிடந்தது. அடிக்கடி அது வீட்டுக்குள்

           எட்டிப் பார்;த்தது. ஆனால்> ஒலி ஏதும் எழுப்பவில்லை” 16

எனும் பகுதியில் காணலாம்.

நாய்

     சங்க காலத்தில் வடுகர்;கள் நாயை வளர்;த்தனர் என்பதை>

           “கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்;  

           வில் சினம் தணிந்த வெரு வரு கவலை” 17

எனவரும் பாடல் சுட்டும். அதாவது> இங்கே வாழும் வடுகர் கன்றுகளின் தோலை உடுத்திக் கொண்டு வேட்டை நாயுடன் சென்று வேட்டையாடினர் என்பதாம்.

     “மனிதனின் முதல் நண்பனான நாயைத்தான் மனிதன் வீட்டில் செல்லமாக வளர்;க்க ஆரம்பித்தான். அதற்குப் பிறகுதான் பூனை போன்றவற்றை வளா;க்க ஆரம்பித்தான். கி.மு. 7700-ல் இங்கிலாந்தில் உள்ள யார்;க் ஷையா; மக்கள்தான் முதன் முதலாக நாயை வீPட்டில் வளர்க்க ஆரம்பித்த மனிதர்கள் என்று வரலாறு பதிவு செய்துள்ளது”. இது போன்று வளா;க்கப்பட்ட டாபர் இன நாய் பற்றி ஜெயமோகன் அவர்கள் குறிப்பிடுகின்றார். இதனை

      “ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மூன்று டாபர்;மான் நாய்களை

     பனிப்படலத்துக்கு அப்பால் பார்த்தேன். வால் வெட்டப்பட்ட>

     குதிரை உடல் கொண்ட> கரிய மற்றும் தவிட்டு நிற நாய்கள்

     முகா;ந்தபடியும் ஆங்காங்கே நின்று ஏறிட்டுப் பார்;த்த படியும்

     வீட்டைச் சுற்றி வந்தன. . . வெள்ளிக் கண்கள் கொண்ட

     மாந்தளிர் நிறமான டாபர்;மான் நாய் என்னுடைய கட்டடத்

     -தருகேதான் சுற்றிச் சுற்றி வந்து என் ஜன்னலை நோக்கியே

     குரைத்தது. புதிதாக நான் வந்திருப்பதுதான் அதற்குப்

     பிரச்சனை என்று தோன்றியது” 19

என்ற பகுதியில் காணலாம்.

     ‘வேலைக் கையில் வைத்திருக்கும் காவல் இளையர் தூங்கினாலும் வலப்புறமாக மயிர்முடி சுருண்டிருக்கும் ஞாளி நாய் மகிழ்வுடன் குரைத்துக் கொண்டிருக்கும்’ என்பதை>

      “துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்

     இலங்குவேல் இளையா; துஞ்சின் வை எயிற்று

     வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்” 20

என வரும் அகநானூற்றடிகள் மகிழ்ந்து குரைக்கும் நாயைப் பற்றிக் கூற ஜெயமோகன் அவர்களோ கோபத்துடன் குரைக்கும் டாபர்;மான் நாய் பற்றியும்> ஊளையிடும் நாய் பற்றியும் கூறுகின்றார். இதனை முறையே>

      “பின்பக்கம் டாபர்மன் நாய்கள் அடைக்கப்பட்டிருந்த

     கம்பிக் கூண்டு அறைகளைப் பார்த்தேன். என்னைப்

     பார்;த்ததும் அந்தப் பிராந்தியமே குரைப்புகளால் அதிர்;ந்-

     -தது” 21

     பண்டாரம்> “கம்பையும் டார்ச் விளக்கையும் எடுத்துக்

     கொண்டு தெருவிலிறங்கினார். எதிர்வீட்டு நாய் எழுந்து

     ஊளைக் குரலில் ஒலியெழுப்பி பிறகு மணம் பிடித்து உறுமி          அடங்கியது” 22

     தொலைவில் ஒரு நாயின் ஊளை எழுந்தது” 23

என்ற கூற்றுகளில் காணலாம்.

     நாயின் பார்வையையும்> அதன் நுண்ணறிவையும்>குறிப்பிடுகின்றார். ஜெயமோகன் அவர்கள். இதனை>

      “ஒரு சண்டை நிகழ வாய்ப்புள்ள இடத்தில் நாய் மிகப்

     பெரிய ஆபத்து. அது ஒளிந்திருப்பவனை நோக்கி வாலாட்டி>

     காட்டிக் கொடுக்கக் கூடியது. அதன் பார்வையே போதுமா-

     -னது” 24

என்ற வரிகளில் காணலாம்..

     நாய் மனிதர்;களுக்கு நண்பன் மட்டுமல்ல. அது மனிதர்களோடு சேர்;ந்து வேட்டையாடும் திறமை பெற்றது என்பதையும்; இவ்வாறு வேட்டையாடும் மிருகங்கள் நன்றாகத் தூங்கும் இயல்பினைக் கொண்டதையும் குறிப்பிடுகின்றார். ஜெயமோகன் அவர்கள். இதனை>

      “டாபர்மான் நாய் குரைத்துக் கொண்டிருந்தது. சாதாரணமான

     குரைப்பு அது எப்போதுமே வேட்டை மனநிலையில் இருக்கிறது.

     வேட்டைக்கார மிருகங்களுக்கு நல்ல தூக்கம் இல்லை

     ஏனென்றால் அவை தனித்தவை. பலவீனமானவையென்-

     -றாலும் வேட்டையாடப்படும் மிருகங்களே நன்றாகத் தூங்கு-

     -கின்றன. காரணம் அவை மந்தையாக இருக்கின்றன.

     இயற்கையின் குரூரமான விதியென்றால் அவை வேட்-

     -டைக்கார மிருகங்களையும் குறைவான அறிவுள்ள-

     -வையாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன” 25

எனும் பகுதியில் புலப்படுத்துகின்றார்

மேலும்>

      “கள் ஒளிர ஒரு நாய் தடுமாறி பக்கவாட்டில்

     பாய்ந்தது”26

      “ஒரு நாய் வந்து சேர்;ந்தது.. ராமப்பன் கம்பால்

     அதை அடித்தார் வள்ளென்று விழுந்து ஓடியது” 27

என்பனவற்றில் நாயின் இயல்புகளைக் கூறுகின்றார் ஆசிரியர்

காளை

     பசுக்களுக்குப் பொலிவைத் தரும் கன்றுகளை உண்டாக்கும் காளைகள் பொலிகளைகள் எனப்படும். இதனை

      “மனைக்கு விளக்கம் மடவார் . .  மடவார்

     தமக்குத் தகைசால் புதல்வர்;” 28

எனும் பாடல் சுட்டும். இந்த பொலி காளைகள் அன்றி வண்டி இழுக்கவும் காளைகள் பயன்படுத்தப்பட்டன. உழவுக்கும்> கபிலை ஏற்றத்திற்கும் கூட காளைகள் உதவின.

     காளை குறித்து திருநாவுக்கரசர்; தேவாரத்தில் ஏறு> எருது> விடை> பெற்றம்> ஆன் என்றெல்லாம் சுட்டப்படுவதைக் காணமுடிகிறது. ஜெயமோகன் அவர்;களும் வண்டியில் பூட்டப்பட்டிருந்த>

      “காளைகள் மிக உயரமான ராட்சசப் பிறவிகள் போலத்

     தோன்றின. அவற்றைப் பார்;க்கவே ஒருவித கிளர்;ச்சியும்

     அச்சமும்தான் ஏற்பட்டது. கொய்யா மரக் கிளைகள் போன்ற

     அவற்றின் கொம்புகளைப் பார்;க்கையில் மூத்திரம் கூசியது” 29

என்றுரைக்கின்றார். அவர்; மேலும்>

      “வெண்ணிற ரோமம் பரவிய காளைகளின் உடல் ஆங்-

     -காங்கே சிலிர்த்தது. அடிக்கடி குளம்புகளை மாற்றி

     மிதித்துக் கொண்டன. புஸ்ஸ் என்று மூச்சுவிட்டபடி>

     குனிய முயன்றன. நுகம் தடுக்க> கழுத்;தைக் குலுக்-

     -கிக் கொண்டன. கொம்புகள் நுகத்தில் மோதி

     கடகடவென்ற ஒலி கேட்டது. அவற்றின் மீது ஈக்கள்

     மொய்த்தன. வாலைச் சுழற்றியபடி அவற்றை அவை

     துரத்தின. திருப்பி நாவால் கழுத்தை நக்கிக் கொண்-

     -டன. அவற்றின் உருட்டி விழித்த கண்கள் தம்மீது

     படிவதாக” 30 பொன்னுமணிக்குப் பட்டது எனக்

குறிப்பிடுவதிலிருந்து காளையின் உருவ அமைப்பு அவற்றின் இயல்புகள் ஆகியவற்றைக் கூறுகின்றார் ஜெயமோகன் அவர்;கள்.

மாடு

     பெற்றம், ஆ என்னும் இரு சொற்களும் பசுவைக் குறிக்கவே திருவள்ளுவரால் பயன்படுத்தப்படுகின்றது. இளநிரை (அகம். 321:7)> பல்லா நெடுநிரை (அகம் 399:8)> ஆகெழு சிறுகுடி (அகம். 103:7) என்ற தொடர்கள் பசுக்களைப் பற்றிக் குறிப்பிடுவனவாகும்.

     பசுக்களைக் கன்றுகளோடு மேய்ச்சலுக்காகக் காட்டுப் பகுதிகளுக்கு ஓட்டிச் சென்று மேயவிடும் கோவலர்; பற்றி,

           “. . . . கன்றொடு

           கறவைப் பல்லினம் புறவுதொ றுகளக்

           குழல்வாய் வைத்தனா; கோவலர்31

எனும் பாடல் புலப்படுத்தும்.

     மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லப்பெறும் பசுக்கள் மாலையில் ஊர் திரும்பும். கோவலர்கள் கையில் குச்சியோடு பின்னால் வர அப் பசுக்கள் தத்தம் இல்லங்களுக்குத் தானாகவே செல்லும் என்பதை,

           “. . . .  மதவுநடைத்

           தாம்பசை குழவி வீங்குசுரை மடியக்

           . . . .  . . . .  . . . . .  .

           கொன்றையங் குழலர் பின்றைத் தூங்க

           மனைமனைப் படரும் நனைநகு மாலை” 32

எனவரும் அகநானூற்றடிகள் கூறும். பழகிய பசுக்கள் வளர்ப்போரிடம் அன்பு மொழிவதையும், அவை எழுப்பும் ‘ம்ரங்’ என்ற சத்தம் வளர்ப்பவரிடம் காட்டும் நல விசாரணை என்பது போன்ற தகவல்களை ஜெயமோகன் அவர்கள் குறிப்பிடுகின்றார். இதனை>

     பெருவட்டா; பாத்திரம் வழியாக> சுட்டுவதை>

           “நேராகத் தொழுவத்திற்குச் செல்வார் . . அவரை அறியும்

           பசுக்கள் கழுத்து வலிக்கக் கயிற்றை இழுத்துத் திரும்பிக்

           கண்கள் மினுங்க ‘ம்ரங்’ என்று விசாரிக்கும். அவைகளில்

           வால்கள் வரிசையாகச் சுழல்வது ரிப்பன் நடனம் போலிருக்-

           -கும்” 33

என்ற பகுதியில் காணலாம். பசுக்களின் வால்கள் சுழல்வதை ரிப்பன் நடனத்திற்கு உவமிக்கிறார் ஆசிரியர்

மேலும்> தொழுவத்தில்>         

           “ஒதுக்கி வைத்திருக்கும் சாணியிலிருந்து சிவப்பு

           விளக்கொளியில் புகை கமழும்> மூத்திர வாடையும்

           சாணி மணமும் நாசியைத் துளைக்கும். பசுக்கள்

           கால் மாற்றி அசையும்போது> பண்ணையாட்கள்

           சர்; சர்; என்று கறந்த படியே> ‘அய்.... அய்’ என்று

           அதட்டுவார்கள்.......தொழுவின் கூரைக்குப் பின்னால்

           காலைவானம் கன்னமாக வெளிரத் தொடங்கும்

           வரை பசுக்களைத் தட்டியும் தடவியும் நிற்பார்;” 34

என்று பசுத் தொழுவத்தி;ல் காணப்படும் சூழலையும் பெருவட்டர் பசுக்களின் மீது வைத்துள்ள பிரியத்தையும் குறிப்பிடுகின்றர் ஆசிரியர்.

     பசுக்கள் பூமி அதிரச் செல்லும் என்பதையும்>  காட்டு பசு யாரையும் முட்டி தூக்கி வீசும் என்பதையும் முறையே>

           “யாரோ வரும் ஒலி. ஒரு பெரிய பசு குளம்பு அதிரச்

           சென்றது” 35

           “நல்லா ஞாபகம் இருக்கு. ஒருவாட்டி ஒரு காட்டு மாடு

           என்னைத் தூக்கி வீசிட்டுது. ஒண்ணும் பெரிய அடி

     கிடையாது” 36 என நீலிமா கூறுவதிலிருந்து இதனை அறியலாம்.

முடிவுரை:

     ஜெயமோகன் புதினங்களில் விலங்கினங்கள் பற்றிய செய்திகள் சங்ககாலப் பாடல்களின் மூலம் மேற்கண்டவாறு கட்டுரையின் வாயிலாக விளக்கப்பட்டுள்ளது. அவற்றின் மேற்கோள் பாடல்களின் விலங்கனங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்ற செய்திகளும் இடம் பெற்றுள்ளன.

அடி குறிப்பு நூல்கள்;:

1.    அகநானூறு 376: 2-4

2.    பதிற்றுப்பத்து 77:10-12

3.    ஜெயமோகன்> இரவு> பக். 66

4.    மேலது. பக். 103-104

5.    மேலது. பக். 66

6.    மேலது. பக். 239

7.    மதுரைக்காஞ்சி. 380-383

8.    ஜெயமோகன்> வௌ;ளையானை> பக். 55

9.    ஜெயமோகன்> இரவு> பக். 65-66

10.   ஜெயமோகன், வௌ;ளையானை, பக். 78

11.   மேலது. பக். 77

12.   ஜெயமோகன்> இரவு> பக். 66

13.   மேலது

14.   அகநானூறு. 309:10

15.   மேலது. 122: 19-20

16.   ஜெயமோகன்> ரப்பா;. 85

17.   அகநானூறு. 381: 7-8

18.   கே. எஸ் சுப்ரமணி> என்ன? யாh;? எங்கே? எப்போது?> தாமரை      பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்> சென்னை. முதற்பதிப்பு. ஆகஸ்ட் 2009> பக். 42.

19.   ஜெயமோகன்> உலோகம். புக். 92