ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கோபல்ல கிராமம் நாவலில் - ' சமூக விழிப்புணர்வு'  (Gopalla Village in the Novel - 'Social Awareness')

முனைவர் நா ஹேமமாலதி, தமிழ்த்துறைத் தலைவர்,& உதவி பேராசிரியர்,  சாரதா கங்காதரன் கல்லூரி, புதுச்சேரி.  27 Jul 2023 Read Full PDF


ஆய்வுச் சுருக்கம்:-
      கி.ராஜநாராயணன் நாவலில் பொதிந்து வைத்துள்ள சமூகம் சார்ந்தசிந்தனைகளைத்தொடர்ந்து ஆராய முற்படுக்கின்றது  இக்கட்டுரை. இதில் முன்னுரை,  பொதுவுடமை சமூகம்,  மக்களின் வறுமை,  ஜாதிய முரண்பாடு,  சமூக விழிப்புணர்வு என்ற தலைப்புகளில் இக்கட்டுரை நகர்கின்றது . இக்கால இலக்கியங்களில் பெரும் இடம்பிடிப்பது நாவல்.  படிப்போர் மனங்களை ஈர்க்கும் சக்தி படைத்தவையாக இருக்கும் இந்நாவல் படித்தவர் முதல் பாமரர் வரை அசைபோட வைக்கும் அளவிற்கான சமூக விழிப்புணர்வு சிந்தனையை ஆராய முற்படுகின்றது. பொதுவுடைமை சமூகம் என்பது மனித வாழ்க்கை உண்மையான சுதந்திரத்தோடு வாழ வேண்டும் என்ற,  வாழ்வியலுக்கான தேடல் தொடர்கின்றது.  மனிதன் உண்மையாக உழைப்பதனால் தனக்கு தேவையான வாழ்க்கைச் சாதனங்களை தானே படைத்துக் கொண்டனர். உதாரணமாக இந்நாவலில் கோட்டையார் வீட்டின் மங்கத்தாயாரு அம்பாளையும் கோவிந்தப்ப நாயக்கரையும் குறிப்பிடலாம். உற்பத்தி சாதனங்கள் இல்லாமல் உழைப்பையே மூலதனமாகக் கொண்டு உருவாக்கிய கிராமத்தைப் பற்றியும்,  சமூகத்தின் அடிப்படை வசதியற்ற ஏழ்மையான மக்கள் உண்ண உணவில்லாமல் வறுமைப் பிடியில் வாழ்ந்தாலும்,  கோவய்யா கொடுத்த நவதானியங்களை எடுக்கவில்லை உழைப்பாளர்கள் வறுமை காரணமாகப் பாட்டாளி வர்க்கம் வளரத்தொடங்கியது.  தமக்கென சொந்தமாக உற்பத்திச் சாதனங்களைப் பெற்றிராதவர்களும்,  வாழ்க்கையை நடத்துவதற்காகத் தமது உழைப்புச் சக்தியைக் கொண்டு உருவாக்கிடுவர். அதுபோல் அன்றும் உழைத்துவிட்டு அந்தியில் அவர்கள் இருப்பிடம் திரும்பும் போது குழந்தைகளின் கூக்குரல் கேட்டு பார்த்தால்,  தண்ணீர் பள்ளத்தில் நிறை சினம் கொண்ட பசுமாடு சகதிக்குள் புகுந்து வெளியே வரமுடியாமல் திணறிக் கொண்டு இருந்ததைக் கண்ட மக்கள் கரையேற்ற,  திமிறிய மாட்டிற்கு மூக்கணாங்கயிறு பூட்டியபின் காப்பாற்றினார்கள்.  மறுநாள் அந்த பசு மாட்டோட மகாலட்சுமியும் இந்த கிராமத்துக்கு அண்ணைக்கே வந்து விட்டதால் அது வந்து வேளை ஊர் நிறைய பசுமாடுகளாக   பெருகிட்டது.  " கோபல்ல என்ற பெயர் வந்ததே அந்த மாடு தான் காரணம்" என்று உழைப்பாளர்களின் சிந்தனையின் கண்டுபிடிப்பு களாக நடைமுறையில் கொண்டு வந்ததும். அடுத்து,  சாதிய முரண்பாடு என்பதில் இந்திய சமூகத்தின் இரட்டை அமைப்பு நிலைகளாகச் சாதியமும், வர்க்கமும் அமைகின்றன.  இன்று சமூக நீதி,  சமத்துவம் , பொதுவுடமை ஆகியவை இந்திய சமூகத்தின் இலட்சிய நிலைப்பாடுகளாக உள்ளன.  " "ஒவ்வொரு குடும்பத்தாரும், அவர்களுடைய பெயர் சொல்லும்படியாக ஒருமரம் நடவேண்டும் என்று ஊர் பொதுவில் இருந்து ஏற்பாடு .இதனால் கம்மாயைச் சுற்றிலும் மட்டுமல்ல,  ஊரின் பல முக்கியமான இடங்களிலும் மரங்கள் நட்டு வளர்க்க பட்டனர்.  என்று மற்றவர்களுக்கு உதவி செய்யும் உயர்ந்த பண்பு உள்ளவன் உயர் ஜாதிக்காரன் என்றும்,  உதவாதவன் தாழ்ந்த ஜாதி என மனிதப் பண்பினை எடுத்துக்காட்டும் நிலையைக் காணலாம்.  அடுத்து,  சமூக விழிப்புணர்வு சமூகத்தில் உள்ள கொடுமைகளை எதிர்த்துப் போராடவேண்டும்.  அடிமை வாழ்க்கையை உடைத்து தலைநிமிர்ந்து வாழ்வது தான் வாழ்க்கை என்பதால்,  உழைப்பாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில்,  இந்திய மக்களுக்கு சமாதானமும் , ஆறுதலும் ஏற்படும்படி ஒரு அறிக்கை விட்டிருந்தார் விக்டோரியா மகாராணி அவர்கள்.  அதில் மக்களுக்கும் ஒரு குறையும் ஏற்படாமலும்,  மத விஷயங்களில் சர்க்கார் தலையிடாது என்றும் உறுதி கூறியது. பெரும் ஆறுதல் கூறிய ஒரு விஷயம் எது எப்படியோ ஜனங்களுக்கு அது ஒரு நல்ல காரியமாக அமைந்துவிட்டது. என்  இவ்வாறாக  வரும் இக்கட்டுரை முடிவாக சமூக மக்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் விதத்தில் வாழ்வாதாரங்களுடன் வளமான வாழ்க்கை வாழவேண்டும் . அடிமை வாழ்க்கையை உடைத்தெறிந்து போராடுவதன் மூலம் நிரந்தரமான நிம்மதியைப் பெற முடியும் என்பதனை கி.ராஜநாராயணன் அவர்கள் தன் நாவலில் தெரியப்படுத்தியுள்ளார்.
Study Summary:-
       This article seeks to explore the social thoughts embodied in K. Rajanarayanan's novel. This article deals with the topics of introduction, communal society, people's poverty, caste conflict, social awareness. The novel occupies a great place in the literature of this time. This novel, which has the power to attract the minds of the readers, seeks to explore the thought of social awareness to the extent that it moves from the educated to the layman. commons society is the search for a way of life where human life should be lived in true freedom. Since man worked sincerely, he created the necessary means of life for himself. For example, in this novel we can mention Mangattayaru Ambala and Govindappa Nayak of Kotdayar house.About the village which was built with labor as capital without any means of production, even though the poor people without basic amenities of the society lived in the grip of poverty without food to eat, the laborers did not take the navadaniyam given by Govaiya and the proletariat started growing due to poverty. Even those who did not own their own means of production used their own labor power to make a living. In the same way, when they returned to their place after working that day and heard the cries of the children, they saw a cow in the water hole that was stuck in the mud and could not come out.The next day, Mahalakshmi with her cow also came to this village, and when she came, the village became full of cows. "The cow is the reason why the name Gopalla came" when it was brought into practice as the inventions of the workers' thinking.Next, the caste antagonism is caste and class as the dual structural levels of Indian society. Today social justice, equality and communalism are the ideals of Indian society. "Every family should plant a tree to bear their name. Therefore, trees were planted not only around Kamma, but also in many important places of the town.It can be seen that a person who has a high quality of helping others is a high caste, and a person who does not help is a low caste. Next, social awareness should fight against atrocities in the society. Queen Victoria had left a statement to give hope to the workers and bring peace and comfort to the people of India, as life is to break the slave life and live uprightly.It assured that the people will not suffer any disadvantage and the government will not interfere in religious matters. Something that gave great comfort somehow turned out to be a good thing for people.My conclusion of this article is to live a prosperous life with livelihoods in a way that unites all the people of the society. K. Rajanarayanan has made it known in his novel that by breaking the slave life and fighting, one can get permanent relief.
Keywords:- கோபல்ல கிராமம், ஜாதிய முரண்பாடு, சமூக விழிப்புணர்வு, நவீன இலக்கிய வடிவம், நாவல், பொதுவுடைமைச் சமூகம், வறுமை.
Keywords:-
Gopalla Village, Caste Conflict, Social Awareness, Modern Literary Form, Novel, Communal Society, Poverty.
முன்னுரை:-      
       மேலை நாட்டவரின் வருகைக்குப் பின்னர் தமிழ் இலக்கியப் படைப்புகளில் புதிய பல மாற்றங்கள் வரலாயின.  அதுவரை தொடர்ந்து செய்யுள்களாகவும், காப்பியங்களாகவும் சிற்றிலக்கியங்களாகவும் பன்முகத் தன்மையில் இருந்த இலக்கியம் புதினம் என்கின்ற நாவல் இலக்கிய வகை ஒன்றாக வடிவம் கொண்டது.          இலக்கியம் என்பது ஒரு தனிமனித அளவில் மட்டும் நின்று விடாது.  அது வரலாற்றுக்குள் செல்லும்போதோ அல்லது சமுதாயத்திற்குள் செல்லும் போதோ அவ்விலக்கியம் வளம் பெறும்.  அப்படி காலங் காலமாக வரும் இலக்கிய வடிவங்களில் நாவல் இலக்கியமும் விளைந்தது தான்.  செந்தமிழ் நிலையில் இருந்த இலக்கியங்கள் நடப்பியல் தன்மைக்கு ஏற்றார்போல் நாவல் இலக்கியம் உருவெடுத்தது.  நாவல் வரையறை:-        நாவல் என்னும் ஆங்கில மொழிச் சொல் புதினம் புதுவது புனைந்தல்,  நவீனகம்,  கற்பனைக்கதை போன்ற பொருளுடையது.  இத்தகையை இலக்கியம் மேலைநாட்டின் வடிவத்தில் ஒன்று எனலாம்.  அதனால் தான் இது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெருக்கம் கொண்டது.  நாவல் என்பது உண்மையைப் பற்றிய புனைவு என்று சொல்லலாம்.  நாவல் என்பது ஒருவரை முழுமையாக ஏற்றுக் கொள்கிறக் கலை எனலாம்.  அது எதார்த்த உலகில் நடைபெறுகிற கலைச் சாதனம் எனலாம்.  நாவல் என்பது அனுபவங்களோடு கூடிய ஒரு நீண்ட நெடு பயணமாகவும் பரந்து பட்டதாகவும் கொண்டு,  சமூக வாழ்வியலின் பல்வேறு வகைப்பட்ட கோணங்களையும் அதன் அடையாளங்களையும் தெளிவாக எழுத்துக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்டது.  அதனால் தான் அது மாறுபட்ட பல சாத்தியங்களை தன்னுள் வைத்துக் கொள்ள முடிகின்றது. நாவல் தமிழ் இலக்கிய உலகிற்குள் வந்ததை "சிறுகதைக்கு மிக மூத்தது நாவல் . காலனியச் சூழலில் இந்நவீன இலக்கிய வடிவங்களை இறக்குமதி செய்த தமிழ்ச் சமூகத்திலும் சிறுகதைக்கு இரண்டு தலைமுறைக்கு முன்பே நாவல் வந்துவிட்டது"  என்று ஆ. இரா.  வேங்கடசலபதி குறிப்பிடுவதாக கூறிய சிவகாமி சுந்தரியின் மேற்கோளை ஏற்க வேண்டியுள்ளது.        நாவல் காட்டும் கதையின் உள்ளாக கதைமாந்தர்கள் சொல்லிச் செல்லும் போது தான் வாழ்வியல் நிகழ்வுகள் புனையப் படுகின்றது.  எப்போதும் புதினங்கள் சமூக வாழ்வியலையும்,  சமூக நலத்தையும்,  சமூக அரசியலையும் விவரிக்கும்"  என்று ச. சிவகாமி சுந்தரி நாவலின் உண்மையை கூறியுள்ளார்.  கி.ராஜநாராயணன் அறிமுகம்:-        சாகித்திய அகாதமி விருது பெற்ற கி. ராஜநாராயணன் அவர்கள் இடைசெவல் என்ற கிராமத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன் தெலுங்கு தேசத்தில் இருந்து வந்து இங்கு குடியேறிய ஸ்ரீ கிருஷ்ண ராமானுஜம்-- லக்ஷ்மி அம்மாள் ஆகியோருக்கு, ஐந்தாவது குழந்தையாக பிறந்தவர்.  இவரது இயற்பெயர் ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயண பெருமாள் ராமானுஜம் நாயக்கர் ஆகும்.  இவரது எழுத்து நடை கிராமிய மணமும் கரிசல் மண்ணின் அழகும்,  பாமர மக்களின் பேச்சு வழக்கும்,  சொலவடைகளும் நிறம்பப் பெற்றவை.  கோபல்ல கிராமம், நாடோடி இலக்கியம், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என முப்பதுக்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார்.  இவரது வட்டார வழக்குச் சொல்லகராதி மிக முக்கியத் தொகுப்புகளில் ஒன்று எனலாம். இத்தகைய சிறப்பிற்குரிய கி.ராஜ நாராயணன் அவர்களின் முதல் நாவலான கோபல்ல கிராமம் முற்றிலும் ஒரு வித்தியாசமான நாவல் என கூறலாம்.
  கோபல்ல கிராமம்-- நாவல்:-                 இந்நாவல்  தனித்துவமான படைப்பு, " இதுவும் ஒரு நாவல் என்றுதான் சொல்லப்படுகிறது.  ஆனால் இதுவரை எழுதப்பட்ட நாவல்கள் எது போலவும் இது இல்லை" என்றும்,  நாவல்களிலேயே நிகழ்ச்சிகள் ஒரு ஒருங்கிணைப்பு பெற்றிருக்கும்.  ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளதாக ஒரு குறிப்பிட்ட திசை நோக்கியதாக இருக்கும்.  இதனால் பாத்திரங்களும் ஒரு உருவம் பெற்று முழுமை எய்தி இருக்கும்.  ஆனால் இத்தன்மையை இந்நாவலில் நாம் காண இயலாது அந்த வகையில் இது முற்றிலும் வித்தியாசமான நாவல் எனலாம்." என்று எம். ஏ. நுஃமான் (ராஜ நாராயணீயம்) கூறுவது முற்றிலும் பொருத்தப்பாடுடையது.  இது "தீவிர வாசகனுக்கான உள்ளோட்டமும்,  மேலோட்டமான வாசிப்புக்கும் உகந்த எளிமையும் உள்ள அபூர்வமான வசீகரம் கொண்ட படைப்பு" இவர் "வாசிப்பவனின் தோள் மீது கை போட்டுக் கொண்டு இயல்பான குரலில் பேசும் எழுத்து,  பேச்சு வழக்குக்கும் எழுத்து வழக்குக்கும் இடையே உள்ள இடைவெளியை மெல்லமெல்ல அழித்துச்செல்லும்.  எளிமையாகவும்,  நேரடியாகவும் கதையைச் சொல்லுவதால்,  மொழியின் அழகியலிலும்,  இலாவகத்திலும் சமரசம் செய்து கொள்ளவில்லை" என யுவன் சந்திரசேகர் கி. ராஜநாராயணனின் உள்ளத்தினை படம் பிடித்துக் காட்டுவது நெகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.  இத்தகைய ஒரு நாவலில் சமூக விழிப்புணர்வு எங்ஙனம் பதிவிடப்பட்டிருக்கின்றது என ஆராய்வதே இந்த ஆய்வின் நோக்கமாக உள்ளது.  பொதுவுடைமைச் சமூகம்:-        மனித வாழ்க்கை உண்மையான சுதந்திரத்தோடு வாழ வேண்டும் என்ற வாழ்வியலுக்கான தேடல் தொடர்கிறது.  சமூக ஏற்றத்தாழ்வு இல்லாத,  சுரண்டலற்ற சமுதாயமே பொதுவுடமை சமூகம் என்பர்.  பொது சொத்து,  பொதுப் பயன்பாடு,  உணர்வுப் பகிர்வு,  அதிகாரப்பகிர்வு,  எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்ற நல்லெண்ணமே பொதுவுடமையின் அடிப்படை.  அதற்கான அடிநாதமாகத் திகழ்கின்றது இந்நாவல்.          சமூகம் என்பது உறவு முறைகள் என்னும் வலைகளால் பின்னப்பட்ட அமைப்பாகும்.  அவ்விதத்தில்,  இந்நாவலின் நகர்விற்கு பெரும் பலம் பெறும் பூட்டியின் தோற்றமே நாவலின் நகர்விற்கான காலம் வரையறுக்கப்படும்.  " ஒரு தனி அறையில் பனைநார்க் கட்டிலில் ரொம்பவும் வயசான ஒரு பெரியம்மாள் இருப்பது தெரியும். எலும்பும் தோலுமாய் நீண்ட மூக்குடன் இருக்கும் அந்த உருவத்தைப் பார்க்கும்போது,  ரோமத்தை யெல்லாம் இழந்துவிட்ட ரொம்ப வயசான ஒரு கழுகின் ஞாபகம் வரும்.  அந்தப் பூட்டியின் பெயர் மங்கத் தாயாரு அம்மாள்.  அவளுக்கு இப்போது நூற்றிமுப்பத்தி ஏழு வயசாகிறது. " (கி.ராஜநாராயணன், கோபல்ல கிராமம், ப. 42)  என்பதில் வாழ்க்கைத் தேவைகள் இடத்திற்கு ஏற்பவும் காலத்திற்கு ஏற்பவும் மாறுபடும் என்பது போல் நாவலில் கதை நகர்விற்கு பெரும் பங்களிப்புக் குரியவர் தான் மங்கத்தாயாரு அம்மாளும்.  பொதுவாக உழைப்பு, பொருளுற்பத்தி,  செல்வ படைப்பு என்ற அடிப்படையில் சமூகம் அமைகின்றது.  இதன் அடிப்படையில் தான் வரலாறும் அமையும்.  உற்பத்தி சாதனங்கள் இல்லாமல் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழும் தொழிலாளர் சமூகம் உள்ளது.  அதில் பாகுபாடு இல்லாமல் பொதுவான ஒரு சமூகமாக அமைய ஆசிரியர் அழைப்பு விடுகின்றனர்.  " என் மக்களே எங்கேயோ ஒரு தேசத்தில் பிறந்து எங்கேயோ ஒரு தேசத்தில் வந்து வாழ வேண்டி யிருக்கிறதே என்று நீங்க நினைச்சி மனம் கலங்க வேண்டாம்.  எல்லாம் பூமித்தாயினுடைய  ஒரே இடம்தான்.  அவளுடைய கையிலுள்ள ஒரு விரலிலிருந்து நீங்க இன்னொரு விரலுக்கு வந்திருக்கிறீக.  அவ்வளவுதான் நீங்க ஒண்ணுக்கும் பயப்பட வேண்டியதில்லை.  உங்களோடேயே சதா நா  உங்களுக்குத் துணை இருப்பேன்" (கி. ராஜநாராயணன், கோபல்ல கிராமம், ப. 102)  என்பதில் ஏற்றத்தாழ்வுகள் மனிதன் உருவாக்கியவை தான் மனிதனுக்கு இயற்கை மகிழ்ச்சியை மட்டுமே அளித்து அவன் அதனை உணராமல் பிரித்து தாழ்ந்து போகும் உண்மை நிலையை எடுத்துக் காட்டுகின்றார்.  பொருள் இல்லாதவனுக்கு பொருளுள்ளவன் கொடுத்து உதவ வேண்டும்.  நம்மிடம் உள்ளதைப் பிறர்க்கு கொடுத்து உதவுவது நிறைவான வாழ்க்கைக்கு அடையாளம். அதற்கு அடித்தளம் ஈகை.  ஈகை உள்ளமே பொதுவுடைமை சமூகத்திற்கு வழிவகுக்கும். அவ்விதத்தில் பார்த்தால் இந்நாவலில் கோவய்யா  என்பவரை அறிமுகப்படுத்தி நிறைவான வாழ்க்கைக்கு அடையாளப்படுத்துகிறார் . "அந்த கோவய்யா எங்களுக்குப் பிரியா விடை கொடுத்தார்.  எங்களை தற்காத்துக் கொள்ள ஆயுதங்களும்,  வழியில் எங்களுக்கு சமைத்துண்ணப் பாத்திரங்களும்,  நாங்கள் சுமக்கிற மட்டும் நவ தானியங்களும்,  அதிகப்படியான மாற்று ஆடைகளும் கம்பளிப் போர்வைகளும் கொடுத்து உதவினார் அந்த பிரபு" (கி.  ராஜநாராயணன், கோபல்ல கிராமம், ப 77 ) என்பதில் வெளிப்படும் ஈகை உள்ளமே பொதுவுடமை சமூகத்திற்கு வழிவகுக்கும்.  வறுமை:-               
              வாழ்விற்கான அடிப்படை வசதிகளற்ற ஏழ்மையான மக்கள் உண்ண உணவில்லாமல் வறுமைப் பிடியில் வாழ்ந்தாலும் உணவு, உடை, உறைவிடம் போன்றவை ஏதும் கிடைக்காத சூழலிலும் உழைக்கும் வர்க்கத்தினருக்கு உழைப்பிற்கேற்ற வருவாய் இல்லாமையால் வாழ்வாதாரங்களைப் பெறமுடியாத ஏழைகளாக இருந்தாலும் வாழ்வதற்கான போராட்டத்தை விட்டதில்லை சமூகத்தின் அடிப்படை வசதிகளற்ற ஏழ்மையான மக்கள் உண்ண உணவில்லாமல் வறுமைப் பிடியில் அகப்பட்டு நகர்ந்தாலும் கோவய்யா கொடுத்த நவ தானியங்களை எடுக்கவில்லை "தங்களிடம் மீதமுள்ள நவதானியங்களை சமைத்து உண்டு விடாமல் பத்திரப் படுத்தி வைத்திருந்தார்கள்.  பல நாள் பயண வழி சுமந்து நம்பிக்கையோடு கொண்டுவந்த தானிய மணிகளை உண்ணாமல் மண்ணில் விதைப்பதற்குப் பத்திரப்படுத்திக் கொண்டு,  சோற்றுக் கத்தாழையை உரித்து தண்ணீரில் அலசி அதன் கசப்பை நீக்கி உண்டவர்கள் "இது திவ்யமான உணவு வயிற்றிலுள்ள சகல நோயுகளையும் போக்கக் கூடியது" ( கி. ராஜநாராயணன்,  கோபல்ல கிராமம்,  ப.107) என்று எடுத்துக்காட்டியுள்ளார்.  வறுமையின் காரணமாக வயிறு நிரம்பாத நிலையிலும்,  வயிற்றோடு சண்டையிட்டு வாழும் வறுமை மக்களின் துயரங்களைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.  "அனுபவித்திராத பட்டினி, காலம் தாழ்ந்து கிடைக்கும் அன்னம், உடம்பு அசதி, மனத்தின் சோர்வு,  கூட வருவோரிடம் காரணமான மனக்கசப்பு,  மௌனம், குறைகூறல் இப்படியெல்லாம் துன்பப்பட்டனர்". (கி ராஜநாராயணன்,   கோபல்ல கிராமம்,  பக். 82 - 83) என்று வறுமையின் பிடியில் அகப்பட்டுக் கொண்டதன் நிலையை படம்போல் காட்டியுள்ளார்.  உழைப்பாளர்கள்:-       உழைப்பாளர்கள் வறுமை காரணமாகப் பாட்டாளி வர்க்கம் வளரத் தொடங்கும்.  தமக்கென்று சொந்தமாக உற்பத்திச் சாதனங்களை பெறாத நிலையில் இருந்தாலும்,  வாழ்க்கையை நடத்துவதற்காகத்  தனது உழைப்புச் சக்தியை கொண்டு உருவாக்கியவர்.  அதுபோல் அன்றும் உழைத்துவிட்டு அந்தியில் அவர்கள் இருப்பிடம் திரும்பும் போது " "குழந்தைகளின் கூக்குரல் கேட்டு, அங்கு வந்து பார்த்தால், தண்ணீர் எடுக்கும் பள்ளத்தின் மறுபகுதியின் சகதிக்குள் ஒரு பசுமாடு ஆழத்தில் புகுந்து வெளியே வரமுடியாமல் திணறிக் கொண்டிருந்தது.  அதன் 'அறை' யைப் பார்த்ததுமே அது நிறை சினை என்று தெரிந்ததும் அவர்களுக்கு அன்றைய உழைப்பின் அலுப்பெல்லாம் ஓட்டுவதாக இருந்தது." ( கி.ராஜநாராயணன், கோபல்ல கிராமம்,  பக். 112-113) என்று உழைப்பாளர்களின் உழைப்பினைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாதியம் முரண்பாடு:-         
           இந்திய சமூகத்தின் இரட்டை அமைப்பு நிலைகளாக சாதியமும், வர்க்கமும் அமைகின்றன.  இன்று சமூக நீதி,  சமத்துவம்,  பொதுவுடமை ஆகியவை இந்திய சமூகத்தின் இலட்சிய நிலைப்பாடுகளாக உள்ளன.  விதைக்காக நமக்கும்,  கிராமத்துக்கும் போக பாக்கி எல்லாத்தையும் எல்லாரையும் கூப்பிட்டு அளந்து கொடுத்திடுங்க" ( கி ராஜநாராயணன்,  கோபல்ல கிராமம், ப. 191) ஒருவருக்கு உதவி செய்யும் உயர்ந்த பண்புள்ளவன் உயர்ஜாதி,  அப்படி உதவி செய்யாதவன் தாழ்ந்த ஜாதி என மனிதப் பண்பினை எடுத்துக்காட்டும் நிலையை அடுத்து,  சமூக விழிப்புணர்வுக்காக ஆங்காங்கே நடைபெறும் கொடுமைகளை எதிர்த்துப் போராடவேண்டும்.  அடிமை வாழ்க்கையை உடைத்து தலைநிமிர்ந்து வாழ்வது தான் வாழ்க்கை என்பதால் உழைப்பாளர்களுக்கு  நம்பிக்கை ஊட்டும் வகையில்,  விக்டோரியா மகாராணி இந்திய மக்களுக்கு சமாதானமும்,  ஆறுதலும் ஏற்படும்படி ஒரு அறிக்கை விட்டிருந்தாள்.  மக்களுக்கு ஒரு குறையும் ஏற்படாமலும்,  மத விஷயங்களில் சர்க்கார் தலையிடாது என்றும் உறுதி கூறியது."(கி. ராஜநாராயணன்,  கோபல்ல கிராமம், ப. 196) என்று கூறியதிலிருந்து "ஆமாம்....... இந்த வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்கு வந்து இத்தனை நாள் ஆகுதே,  எங்கேயாவது அவன் இந்து துலுக்க ராஜாக்களைப் போல நம்ம பெண்டுகளுக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்திருக்கினோ?" .....கும்பினியான்  எந்த இடத்திலும் நம்முடைய பெண்டுகளைத் தூக்கிக்கொண்டு போனதாகவோ,  பிடித்து பலாத்காரமாகக் கற்பழித்ததாகவோ அவர்களுக்குச் செய்திகள் இல்லை.  இந்த ஒரு காரணத்துக்காகவே அவர்களுக்குக் கும்பினியான் உயர்ந்து தோன்றினான்" (கி ராஜநாராயணன்,  கோபல்ல கிராமம், ப. 178)
சமூக விழிப்புணர்வு:-       
          சமூகத்தில் உள்ள கொடுமைகளை எதிர்த்துப் போராட வேண்டும்.  உழைக்கும் வர்க்கத்தினர் தங்கள் தேவைகளைப் பெறுவதற்கு ஒன்றிணைய வேண்டும்.  பிறர்க்கு உதவி செய்யும் உயர்ந்த பண்புள்ளவன் உயர்ஜாதிக்காரன் என்றும்,  அவ்வாறு உதவாதவன் தாழ்ந்த ஜாதி என்ற மனிதப் பண்பினை எடுத்துக்காட்ட சமூகத்தில் உள்ள கொடுமைகளை எதிர்த்துப் போராட வேண்டும். மனித வர்க்கத்தினர் தங்கள் தேவையை பெறுவதற்கு ஒன்றிணைய வேண்டும். என்ற கருத்தை உணர்த்த சமூக நீதி,  சமத்துவம், பொதுவுடமை ஆகியவை இந்திய சமூகத்தின் இலட்சிய நிலைப்பாடுகளாக  உள்ளன.  அதற்கு "ஏதோ ஒரு ராஜபோகம் வர்றமாதிரி ஒளியைக் காண்பித்து திடீரென்று இப்படி அகதி பரதேசிகளைப் போல் எங்களை ஆக்கி விட்டதே இந்த விதி.  இன்னும் எதுவெல்லாம் நடக்கணும்ணு இருக்கோ என்று பயந்தோம்". எனவரும் இவரது வரிகள் மனிதன் துணிவுடன் உரிமையை மீட்டு சுதந்திரமான வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாக கி. ராஜநாராயணன் அவர்களின் வரிகள் வெளிப்படுகின்றன.  முடிவுரை:-          
        சமூக மக்கள்  அனைவரையும் ஒன்று சேர்க்கும் விதத்தில் வாழ்வாதாரம்களுடன் வளமான வாழ்க்கை வாழவேண்டும்.  அடிமை வாழ்க்கையை உடைத்தெறிந்து போராடுவதன் மூலம் நிரந்தரமான நிம்மதியை பெற முடியும் என்பதனை கி.ராஜநாராயணன் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். நாவலில் வட்டார வழக்கின் உயிர் நாடியை,  அதன் பன்முகத் தன்மையை பண்பாட்டுப் பரப்பை புரிந்துகொண்டு எழுதுபவர்கள் பலர். அவர்களுள் கிராமப்புற வாழ்வையும்,  மொழியையும் அதன் தன்மை மாறாமல் பதிவு செய்தவர் கி. ராஜநாராயணன் அவர்கள்.  இவரது நாவல்கள் கிராமியம் சார்ந்த படைப்பாக இருப்பதால் மொழிநடையில் சொல்லிச் செல்வதை காணமுடிகின்றது. 
துணை நின்ற நூல்கள்:- 
1. கி.ராஜநாராயணன், கோபல்ல கிராமம், 
2. தமிழ்க் குழல், ஆர். அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம் பன்னிரெண்டாவது பன்னாட்டுக் கருத்தரங்கம்,  பூம்புகார்க் கல்லூரி (தன்னாட்சி) மேலையூர் -609 107. திசம்பர் 2016.  3.  ஜெ ஸ்ரீ சந்திரன், தமிழ் இலக்கிய வரலாறு, வர்த்தமானன் பதிப்பகம் 15,   சரோஜினி தெரு,  தியாகராய நகர், சென்னை - 600 017. ஒன்பதாம் பதிப்பு ஜூன் 2002.