ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

மகாகவி பாரதியாரின் பாஞ்சாலிசபதத்தில் நவரஸம் ஓர் வெளிப்பாடு ஆய்வுக்கண்ணோட்டம்

கலாநிதி தாக்ஷாயினி பரமதேவன், சிரேஷ்ட விரிவுரையாளர், நடனநாடகத்துறை, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை 16 Feb 2023 Read Full PDF

மகாகவி பாரதியாரின் பாஞ்சாலிசபதத்தில் நவரஸம் ஓர் வெளிப்பாடு ஆய்வுக்கண்ணோட்டம்

கலாநிதி தாக்ஷாயினி பரமதேவன், சிரேஷ் விரிவுரையாளர், நடனநாடகத்துறை, சுவாமி விபுலானந்தhஅழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

ஆய்வுச்சுருக்கம்

கலை என்பது மனித வாழ்க்கையினை மேம்படுத்தும் ஒரு சாதனமாகும். இச்சாதனம் மனித உணர்ச்சியினை வெளிக்கொணரும் ஒரு வடிவமாகும். இத்தகைய கலைகளில் உச்சக்கட்டத்தைத் தொட்ட ஒரு அறிஞரே நம் மகாகவி பாரதியார் ஆவார். hட்டின் அழகு, இயற்கைவளம், குழந்தைகளின் வருங்காலநிலை, பெண்மையின் தெய்வீகம் என பல தலைப்புக்களில் பாடல்கள் கூறியுள்ளார். பெண்ணை வலிமையுள்ள பிரஜையாக வெளிப்படுத்திய பெருமை இவரையே சாரும். ngண்ணடிமைத் தன்மையை வேரோடு சாய்ப்பதற்காகவே தன்னுடைய பாடல்களை ஆயுதமாக பயன்படுத்திய பெருமை இவரையே சாரும். இவUடைய பாஞ்சாலி சபதமானது மகாபாரதத்தை மையப்படுத்திக் காணப்பட்டாலும் பெண் எதிர்கொள்ளும் துயரங்களை ஒவ்வொரு காப்பியத்திலும் வெளிக்கொணர்ந்துள்ளார். ஏனவே இவ்வாய்வானது காப்பியத்தின் ஊடாக பெண்ணடிமைத்தன்மை, நவரஸங்களின் வெளிப்பாடு போன்றவற்றை வெளிப்படுத்துவதே இதன் தன்மையாகும்.

திறவுச்சொற்கள்: உணர்ச்சி, காப்பியம், நவரஸம், சாதனம்.

 

ABSTRACT

Art is a tool to improve human life. This form is a form of expression of human emotion. A scholar who attained the pinnacle of such arts was our Mahakavi Bharatiyar. He has written songs on many topics like the beauty of nature, the future of children, and the divinity of womanhood. He is credited with revealing the woman as a strong citizen. He is credited with using his songs as a weapon to eradicate slavery. Although her Panjali vow is centered on the Mahabharata, she has brought out the woes faced by women in every copy. Therefore, this style is meant to express femininity, expression of navarasams, through kappiyam etc.

Key words: Feelings, Novels, Navarasa, Device.

முன்னுரை

தெய்வ பக்தியோடு தேச பக்தியையும் தூண்டி நமது தாய்நாடு தெய்வத்திற்கு ஈடானது என்ற உணர்வினை உணர்த்தும் வகையில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்கள் நமது கலாசார வடிவத்தில் ஓர் அழிவில்லாத உன்னத இடம்பெற்றுள்ளன.

பாரதியாரின் பாஞ்சாலி சபதம் எனும் படைப்பானது வியாசரின் மகாபாரதத்தை அடிப்படையாக வைத்தே இக்காவியம் உருவாக்கப்பட்டது. எனவே இவ்வாய்வானது அப்பாடலில் நவரஸங்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது என்பதை மையமாக வைத்தே நோக்கப்படுகின்றது.

 

பாஞ்சாலிசபதம் அறிமுகம்

பாரதநாட்டின் தலைசிறந்த காவியத்தலைவன் வையகம் போற்றும் சுப்ரமணிய பாரதியார். வியாசரின் பாரதக் கருத்தைத் தழுவி இப்படைப்பை எமக்காக வழங்கியுள்ளார். பாரதி திருதராட்டினனை உயர்ந்த பண்புகளும், வீரமும் கொண்டவராகவும், தனது மாமனின் வசவார்த்தைகளுக்கு அடிபணிந்தவனாகவும், தீய பண்பின் உருவமாய் விளங்கும் துரியோதனனையும் பாஞ்சாலி ஆகிய திரௌபதியின் சூளுரையை அடிப்படையாக வைத்து “பாஞ்சாலி சபதம்” எனும் நல்ல தலைப்பில் காப்பியம் படைத்துள்ளார். இப்படைப்பை தமிழ் அன்னைக்கு அழகிய அணிகலனாக சூட்டியுள்ளார்.

பாரதியின் படைப்புகளில் “பாஞ்சாலி சபதம்” எனும் படைப்பு மிக உன்னதமானது. பிறரைப் போன்று தம் கருத்தினைக் கூறாது தமக்கே உரிய உண்மை உணர்ச்சி உந்தலுடன், காப்பியப் பாத்திரங்களாக வேதாம் மாறி புதுமையான பாணியில் இக்காப்பியத்தை படைத்து தம்முற்போக்கான கோட்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

“பாஞ்சாலி சபதம்” என்னும் படைப்பில் பெண்ணடிமையை தீவிரமாகக் கண்டித்தும் பாஞ்சாலியை காப்பிய தலைவியாகவும், தெய்வீகத் தன்மையும், உயர்வும் கொண்டவளாகவும், வீரமுள்ளவளாகவும் சித்தரித்துள்ளார்.

 

பாஞ்சாலி சபதம் முதல் இரண்டாம் பாகங்களின் உள்ளடக்கம்

பாரதியின் “பாஞ்சாலி சபதம்” எனும் படைப்பினை நோக்குவோமாயின் இது முதற்பாகம்> இரண்டாம் பாகம் என அமைந்திருக்கின்றது. எளிய பதங்கள்> எளிய நடை> எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம்>பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு என அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டு விளங்குகின்றது.

முதற்பாகம் பிரம்ம துதியுடன் ஆரம்பமாகின்றது. இதில் நொண்டிச்சிந்து வகையில் அமையப் பெற்றிருக்கின்றது. மேலும் முதல் பாகத்தில் சரஸ்வதி வணக்கம் மற்றும் அழைப்புச்சுருக்கத்தில் அஸ்தினாபுர துரியோதனன் சபை> துரியோதனன் பொறாமை>  துரியோதனன் சகுனியிடம் சொல்வது> சகுனியின் சதி >சகுனி திருதராட்டினரிடம் சொல்லுதல்> திரிதராட்டிரின் பதில் கூறுதல;> துரியோதனன் சினங் கொள்ளுதல் துரியோதனன் தீமொழி> திருதராட்டினன் பதில்> துரியோதனன் பதில்> சபா நிர்மாணம்> விதுரனை தூதுவிடல்> விதுரன் தூது செல்லுதல்> விதுரரை வரவேற்றல்> விதுரன் அழைத்தல்> தருமபுத்திரன் முடிவுரை> நால்வரும் சம்மதித்தல்> நால்வரும் சம்மதித்தல்>  பாண்டவர் பயணமாதல்> மாலை வர்ணனை (சூதாட்டச் சுருக்கம்)> வாணியை வேண்டுதல்> பாண்டவர் வரவேற்பு> பாண்டவர் சபைக்கு வருதல்>  சூதுக்கு அழைத்தல்> தருமன் மறுத்தல்> சகுனியின் ஏச்சு> தருமனின் பதில்> சகுனி வல்லுக்கு அழைத்தல்> தருமன் இணங்குதல்> சூதாடல்> நாட்டை வைத்தாடல் போன்ற தலைப்புகளுக்கான பாடல் அமையப் பெற்றிருக்கின்றது.

அடுத்த இரண்டாம் பாகத்தில் பராசக்தி வணக்கம;> சரஸ்வதி வணக்கம்> விதுரன் சொல்லியதற;கு துரியோதனன் மறுமொழி சொல்லுதல் (அடிமைச் சுருக்கம்) விதுரன் சொல்வது> சூது மீட்டுந் தொடங்குதல்> சகுனி சொல்வது> சகாதேவனை பந்தயம் வைத்தல்> நகுலனை இழத்தல்> வீமனை இழத்தல்> தருமன் தன்னைத்தானே பந்தயம் வைத்திழத்தல்> துரியோதனன் சொல்வது> சகுனி சொல்வது> திரௌபதியை சூதில் வசமானது பற்றி கௌரவர் கொண்ட மகிழ்ச்சி> துரியோதனன் சொல்வது> திரௌபதியை துரியோதனன் மன்றுக்கு அழைத்து வரச் சொல்லியது பற்றி ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம்> துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது> விதுரன் சொல்வது> துரியோதனன் சொல்வது> துச்சாதனன் திரௌபதியை சபைக்கு கொண்டுவருதல்> திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் சமவாதம்> சபையில் திரௌபதி நீதி கேட்டு அழுதல்> பீ~;மாச்சாரியார் சொல்வது> திரௌபதி சொல்வது> வீமன் சொல்வது> அர்ஜீனன் சொல்வது> விதர்ணன் சொல்வது> கர்ணன் பதில், திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை, வீமன் செய்த சபதம், அர்ஜுனன் சபதம்இ,பாஞ்சாலி சபதம் என்னும் தலைப்புகளுக்கான பாடல் அமையப் பெற்றிருக்கிறது.

பாரதியாரின் “பாஞ்சாலிசபத” பாடல்களில் நவரசங்கள் மிகதத்ரூபமாகவும் வியக்கும் வகையிலும் வெளிப்பட்டு நிற்கின்றது. பாரதியார் தனது “சங்கீதவிசயம்” எனும் நூலில் நவரசங்கள் பற்றி மிகத் தெளிவாகவும், அழகாகவும் கூறியுள்ளார். அந்த வகையில் நவரசங்கள் பற்றிய பாரதியாரின் கருத்து மிக உன்னதமானது. எனவே பாரதநாட்டின் புகழ்பெற்ற சுவைகொண்ட பாஞ்சாலி சபதம் பாடல்களிலும் நவரசங்களைக் காணமுடியும் என்பதில் ஐயமில்லை. மேலும் பாரதி “ரஸ உணர்ச்சி இல்லாவிடில் கலைகள் நசிந்து போகும்” என கூறுகின்றார்.

 

சிருங்கார ரஸம்

“படிமிசை இசையுறவே - நடை

பயின்றிடுந் தெய்வீக மலர் கொடியைக்

கடிகமழ்மின்னுரு வை - ஒரு

கமனியக் கனவினைக் காதலினை

வடிவுறுபேரடி கை - இன்ப

வளர்திகைச் சூதினில் பயணம் என்றே

கொடியவர் அவைக்களத்தில் - அறக

கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான்”

உலகின் புகழுடனும், நெறியுடனும் விளங்கும் தெய்வத்தன்மையுடைய பூங்கொடி மணம் வீசும் மின்னல் போன்ற வடிவத்தானை சொல்லும் கனவினை, காதலை பேரழகை வடிவமாக கொண்டவளை என்பதின் ஊடாக பாஞ்சாலி தலைவி திரௌபதியின் காதல் அன்பின் வெளிப்பாடாக சிருங்காரஸம் காணப்படுகின்றது.

 

 

ஹாஸ்ய ரஸம்

“போரினில் யானை விழக்கண்ட - பல

பூதங்கள் நாய்நரி காகங்கள் - புலை

ஓர் கழுகென் றிவையெல்லாம் - தம

துள்ளங் களிகொண்டு விம்மல்போல் - மிகச்

சீரிய வீமனை சூதினில் - அந்த

தீயர் விழுந்திடக் காணலும் - நின்று

மார்பிலுந் தோளிலுங் கொட்டினார் - கள்

மண்டிக் குதித்தெழுந் தாடுவார்”

போர்க்களத்தில் யானை விழுதலை கண்ட பல பூதங்கள் நாய், நரி, காகங்கள் புலால் விரும்பும் கழுகு என இவையனைத்தும் மனதில் மகிழ்ச்சி கொண்டு விம்முதல் போல் மிகச் சிறந்த வீமனைச் சூதினால் அந்த தீயவர்கள், தாயகமாக விழுந்திடக் கண்டதும், நின்று மார்பிலும,; தோளிலும் கொட்டிக்கொண்டு களிப்பு மிகுந்து குதித்து எழுந்து ஆடினர் என்பதின் வெளிப்பாடாக அவ்விடத்தில் ஹாஸ்ய ரஸம் காணப்படுகின்றது.

“என்று பலசொல்லு வான் - துரியோ தனன்

எண்ணி எண்ணிக் குதிப்பான்:

குன்று குதிப்பது போல் - துரியோ தனன்

கொட்டிக் குதித்தாடு வான்

மன்று குழப்பமுற் றே – அவர் யாவரும்

வகைதொகை யொன்று மின்றி

அன்று புரிந்ததெல்லாம் - என்றன் பாட்டிலே

ஆக்கல் எளிதாகு மோ?”

எனத் துரியோதனன் பலவற்றைக் கூறினான். நினைத்து நினைத்து குதிப்பானாயின் எனும் போது அங்கு ஹாஸ்ய ரஸமானது தோற்றம் பெற்றுக் காணப்படுகின்றது.

கருணா ரஸம்

“துச்சா தனனிதனைச் சொல்லினான். பாஞ்சாலி

அச்சா, கேள் மாதவிலக் காதலா லோராடை

தன்னி லிருக்கின்றேன். தார்வேந்தர்பொற்சபை முன்

என்னை யழைத்தல் இயல்பிலை அன்றியுமே”

துச்சாதனன் இதனைக் கூறினான். திரௌபதி “தந்தையே கேள்! மாதவிடாய் ஆனதினால் ஓராடையுடன் உள்ளேன். மாலை அணிந்த மன்னர்கள் வீற;றிருக்கும் அழகிய அவைக்கு முன்னர் என்னை அழைத்தல் முறையாகாது. என்று கூறுவதன் வெளிப்பாடாக திரௌபதியின் துன்ப நிலை கண்டு தந்தைக்கு ஏற்ற சோகத்தின் வெளிப்பாடாக கருணை ரஸம் தோன்றுகின்றது.

“விம்மி அழுதாள் விதியோ கணவரே

அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டியெனை

வேதச் சுடர்த்தீமுன் வேண்டி மணஞ் செய்து

பாதகர் முன் இந்நாள் பரிசழிதல் காண்பீரோ?

என்றாள், விஜயனுடன் ஏறுதிறல் வீமனுமே

குன்றா மணித்தோள் குறிப்புடனே நோக்கினார்

தருமனும்மற் றாங்கே தலைகுனிந்து நின்றிட்டான்”

திரௌபதி தேம்பியழுதனன் கணவரே இது ஊழ்வினையோ அம்p மிதித்து அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி, சுடும் வேள்ளித் தீ முன்னர் என்னை விரும்பி மணந்து கொண்டு பெரும் பாவமுடையவர்கள் முன்பு இந்நாளில் பெருமை அழிவதனைப் பார்ப்பீரோ? என்றனள். இவ்வாறு கூறுவதன் வெளிப்பாடாக திரௌபதியின் மனத் துக்கத்தின் வெளிப்பாடாக கருணை ரஸம் தோன்றுகிறது.

“ஆடை குலைவுற்று நிற்கிறாள் - அவள்

ஆவென றழுது துடிக்கிறாள் - வெறும்

மாடு நிகர்த்த துச்சாதனன் - அவன்

மைக்குழல் பற்றி யிழுக்கிறான் - இந்தப்

பீடையை நோக்கினன் வீமனும் - தரை

மீறி எழுந்தது வெஞ்சினம ; துயர்

கூடித் தருமனை நோக்கியே - அவன்

கூறிய வார்த்தைகள் கேட்பீரோ?”

 ஆடை அவிழ்ந்து நிற்கின்றாள் திரௌபதி ஆ என அலறித் துடிக்கிறாள். வெறும் மாட்டுக்கு ஒப்பான துச்சாதனன் அவளுடைய மைபோல் கரிய கூந்தலை பிடித்து இழுக்கிறான். வீமனும் இந்த இழிச் செயலைக் கண்டான். கொடிய சினம் கரைகடந்து தோன்றியது. துயர்மிகுந்த தருமனைக் கண்ணுற்று என்பதன் ஊடாக திரௌபதி நிலைகண்டு ஏற்பட்ட கவலை தர்மனின் மனதில் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடாக கருணை ரசம் வெளிப்படுகின்றது.

 

 

வீரரஸம்

“துரியோத னப்பெயரான் - நெஞ்சத்

துணிவுடையான், முடி பணி வறியான்,

‘கரியோ ராயிரத் தின் - வலி

காட்டிடுவான்’ என்றக் கவிஞர் பிரான்

பெரியோன் வேத முனி - அன்று

பேசிடும் படி திகழ் ஆதாள்வலியோன்

உரியோர் தாமெனினும் - பகைக்

குரியோர் வகைக்கு தமக்கு வெந் தீயனையான்”

துரியோதனன் என்னும் பெயரினை கொண்டவன; மனதில் உறுதி உடையவன், தலை வணங்குதல் அறியாதவன; ஆயிரம் யானைகளின் வலிமையை காட்ட வல்லவன் என்று கவிஞர் பிரானாகிய வேதவியாசர் என்னும் முனிவர் என்று புகழ்ந்து பேசிய விளங்குகின்ற தோள் வலிமை பெற்றவன். உரிமையுடைய அரசர்கள் எனினும் தன்னிடம் பகைமை கொண்டவர்களுக்கு கொடிய தீயைப் போன்றவன் என்பதின் ஊடாக அவனின் தைரியத்தின் வெளிப்பாடாக வீர ரஸம் வெளிப்படுகின்றது.

மாலைகள் புரண்டசை யும் பெரு

வரையெனத் திரண்டவன் தோளுடை யார்

வேலையும் வாளினையும் - நெடு

வில்லையுந் தண்டையும் விரும்பிடு வார்

காலையும் மாலையிலும் - வகை

காயந்தி;டு தொழில் பல பழகிவெம் போர்

நூலையும் தேர்ச்சி கொள்வோர் - கரி

நூறினைத் தனிநின்று நொறுக்கவல்வார்”

மலர்மாலைகள் புரண்டு அசைகின்ற பெரிய மலை என்று சொல்லுமாறு திரண்ட வலிமையான தோள்களையுடையவர்கள். வேல், வாள் நீண்டளவில் கதை ஆகிய போர்க் கருவிகளை விரும்புகின்றவர்கள். காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பகைவர்களை அழிக்கும் போர்த் தொழில்களில் பயிற்சி பெற்றுக் கொடிய போர் நூலையும் கற்றுத் தேர்ந்து நூறு யானைகளைத் தனித்து நின்று அழிக்க வல்லவர்களும் என்பதின் ஊடாக அஸ்தினாபுர அரசர்களின் தைரியம், மனவலிமை, உடல் பலம் என்பவற்றின் வெளிப்பாடாக வீரரஸம் வெளிப்படுகின்றது.

“தந்தைசொல் நெறிப்படி யே - இந்தத்

தடந்தோள் மன்னவன் அரசிருந்தான்

மந்திர முணர் பெரி யோர் - பலர்

வாய்த்திருந்தார் அவன் சபைதனிலே

அந்தமில் புகழுடை யான் அந்த

ஆரிய வீட்டுமன் அறம் அறிந்தோன்

வந்தனை பெறுங்குரவோர் - பழ

மறைக்குல மறவர்கள் இடுவரொடே

தன் தந்தை திருதராட்டினன் சொன்னவாறு இப்பெரிய தோள்களை உடைய அரசனாகிய துரியோதனன் அரசாட்சி புரிந்தான். என்பதின் ஊடாக துரியோதனனின் பலத்தின் வெளிப்பாடாக வீரரஸம் வெளிப்படுகின்றது.

ரௌத்திர ரஸம்

“எண்ணிலாத பொருளின் குவையும்

யாங்க ணுஞ்செலுஞ் சக்கர மாண்பும்

மண்ணிவார்க்கும் பெறலர் தாமோர்

வார்கடற ;பெருஞ் சேனையு மாங்கே

விண்ணி விந்திரன் துய்ப்பன போன்று

வேண்டு மின்பமும் பெற்றவ ளேனும்

கண்ணி லாத்திரித ராட்டினன் மைந்தன்

காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர்”

 எண்ணிலாத பொருள்களின் குவியல்களையும் எங்கும் செல்லத்தக்க ஆஞ்ஞா சக்கரத்தின் மாட்சியும், உலகில் எவருக்கும் கிடைத்தற்கரிய நீள் கடல் போன்ற பெரிய படையும், விண்ணுலகில் இந்திரன் அனுபவிப்பன போன்று வேண்டிய இன்பங்களை அடைந்தவன். எனினும், கண்களற்ற திருதராட்டினன் மகன் (துரியோதனன்) சினங் கொண்ட நெஞ்சத்துடன் என்பதின் ஊடாக துரியோதனன் பஞ்சபாண்டவர்கள் மீது கொண்ட பொறாமையின் வெளிப்பாடாக ரௌத்திர ரசம் வெளிப்படுகின்றது.

ஆயிரம் முடிவேந் தர – பதி

னாயிர மாயிரங் குறநிலத் தார்

மாயிருந் நிறைகொணர்ந்தே - அங்கு

வைத்தோர் வரிசையை மறந்திட வோ?

தூயிழை யாடைகளுடன் - மணித்

தொடையலும் பொன்னுமொர் தொகைப்படுமோ?

சேயிழை மடவாரும் - பரித்

தேர்களும் கொடுத்தவர் சிறுதொகை யோ”

பாரத நாட்டின் கண்ணுள்ள பயனுள்ள முடி மன்னர்கள் அனைவருக்கும் பேரரசன் என்று நாரதர் முதலிய முனிவர்கள் வருகை புரிந்து அமைத்திட அத் தருமன் செல்வனாகிய அந்த யாகத்தை செய்தான். கள்வனாகிய அந்த யாதவர் குலத்தவன் (கண்ணன்) சொல்லுகின்ற ஆய்வுரையும் தம்பியர்களின் தோள் வலிமையும் வீரமற்ற தருமனை வேந்தர்கள் அனைவருக்கும் முதல்வன் என நியமித்தன என்று துரியோதனன் கூறுவதன் ஊடாக பாண்டவர்கள் மீது அவன் கொண்ட பொறாமையின் வெளிப்பாடாக ரௌத்திர ரஸம் வெளிப்படுகின்றது.

“நெஞ்சத்துள்ளோர் பொறாமை எனுந் தீ

நீள்வதால் உள்ளம் நெக்குருகிப்போம்

மஞ்சள் ஆண்மை மறந்திண்மை மானம்

வன்மை யாவும் மறந்தன னாகிப்

பஞங்சை யாமொரு பெண்மகள் போலும்

பாலர் போலும் பரிதவிப் பானாய்

கொஞ்ச - நேரத்திற் பாதகத் தோடு

கூடி யேஉற வெய்திநின் றானால்”

மனத்துள் ஒரு பொறாமையென்னும் தீ மிகுவதால் மனம் நெகிழ்ந்து உருகி, மைது என்னும் ஆண்மை, வீரம், வலிமையான உணர்ச்சி, மனவலிமை யாவும் மறந்தனனாக வறுமையுற்ற பெண்ணொருத்தியைப் போல், சிறுவர் போன்று வருந்துவானாகிச் சிறிது போதில் பெரும்பாவ (மனத்துடன்)த்தோடு கூடி அதனோடு உறவு கொண்டவனாயினன். என்பதின் ஊடாக துரியோதனனின் உச்சக்கட்ட கோபத்தின் வெளிப்பாடாக ரௌத்திர ரஸம் வெளிப்படுகின்றது.

“தேவி திரௌபதி சொல்வாள் ஓம்

தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்

பாவி துச்சாதனன் செந்நீர் அந்தப்

பாழ் துரியோதனன் ஆக்கை இரத்தம்,

மெவி இரண்டும் கலந்து – குழல்

மீதினிற் பூசி நறுநெய் குளித்தே

சீவிக் குழல் முடிப்பேன் யான் - இது

செய்யும் முனனே; முடியே னென்றுரைத்தாள்”

 திரௌபதி சொல்வாளாயின் ஓம் தேவியாகிய பராசக்தியின் மீது ஆணையிட்டேன். பாவியாகிய துச்சாதனனுடைய சிவந்த குருதிநீர் அப்பாழ்பட்ட துரியோதனன் உடலில் உள்ள குருதி ஆகிய இரண்டினையும் பொருந்தச் செய்து கலந்து கூந்தலுக்குப் பூசி நறுமண நெய்யில் குளித்து கூந்தலை முடியேன் என்பதன் ஊடாக திரௌபதியின் கோபத்தின் வெளிப்பாடாக ரௌத்திர ரஸம் வெளிப்படுகின்றது.

 

பயானக ரஸம்

“கள்ளச் சகுனியும் இங்கனே - பல

கற்பனை சொல்லித்தன் உள்ளத்தின் - பொருள்

பொருள் பகட்டுதல் கேட்ட பின் - பெருங்

கோபத்தோடு திருதராட்டினன், அட

பிள்ளையை நாசம் புரியலே - ஒரு

பேயென நீ வந்து தோன்றினாய்! பெரு

வெள்ளத்தை புல்லொன் றெதிர்க்கு மோ? இன

வேந்தரை நாம் வெல்லலாகுமோ?”

இவ்வாறு திருட்டு சகுனியும் கற்பனையாகப் பலவற்றை தன் மனப் பொருளை ஏற்றுக் கொள்ளப் புற வேடமாகக் கூறியதனைக் கேட்ட பிறகு, பெருஞ்சினத்துடன் திருதராட்டினன் அட பிள்ளையை அழித்ததற்காகவே நீ ஒரு பேயாக வந்து சேர்ந்தாய்.நாம் வெல்ல முடியுமோ?; என்பதன் மூலம் திருதராட்டினனின் மனதில் ஏற்படும் அச்சத்தின் வெளிப்பாடாக பயானக ரஸம் வெளிப்படுத்தப்படுகின்றது.

‘ஆரியர் செய்வாரோ? இந்த

ஆண்மை யிலாச் செயல் எண்ணுவாரோ?

பாரினில் பிறருடைமை – வெஃகும்

பதரினைப் போலொரு பதருண்டோ

பேரியற் செல்வங்களும் - இசைப்

பெருமையும் எய்திட விரும்புதியேல்

காரியம் இதுவாமோ? என்றன.

காளை யன்றோ? இது கருதலடா?

உயர்ந்தோர் செய்வார்களோ? இந்த வீரமற்ற செயலைக் கருதுவார்களோ? உலகின் பிறர் சொத்துக்குப் பேராசைப்படும் பதரைப்போல் ஒரு பதர் உண்டோ? பெரிய செல்வங்களும் புகழாகிய பெருமையும் அடைய விரும்புவோமாயானால் செய்யத்தக்க செயல் இது (சூது) ஆகுமோ? எனக் கூறுவதன் ஊடாக அவன் மனதில் எழுந்த பெரும் அச்சத்தின் வெளிப்பாடாக பயானக இரஸம் தோன்றுகிறது.

 

 

 

 

பீபத்ஸரஸம்

“நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் - என்னை நல்கும்

உரிமை அவர்க்கில்லை – புலைத்

தாயத்தி வேலிலைப் பட்ட பின் என்ன

சாத்திரத் தாலெனைத் தோற்பார்? அவர்

தயாத்தி லேவிலைப் பட்டவர் புவி

தாங்குந் துருபதன் கன்னி நான் நிலை

சாயப் புலைத் தொண்டு சார்ந்திட்டால் பின்பு

தார முடைமை அவர்க்குண்டோ?

கணவர் தம்மை தோற்ற பிறகு என்னை அடிமையாக அளிக்கும் உரிமை அவருக்கு இல்லை. புன்மையான தாயத்தில் விலைக்கு விற்றுக் கொண்ட பிறகு எந்த சாத்திரத்தின் முடிவைக் கொண்டு என்னை தோற்றார்? அவர் தாயத்தால் விலைக்கு போனவர் நாட்டைத் தாங்கும் துரபத மன்னனுக்கு மகள் நான் நிலைமை மாற இழிந்த அடிமைப் பணி பொருந்திய பிறகு மனைவியாகிய சொத்துரிமை அவர்களுக்கு உள்ளதோ? என்பதன் ஊடாக திரௌபதி பாண்டவர் மீது கொண்ட அருவறுப்பின் வெளிப்பாடாக பீபத்ஸ ரசம் வெளிப்படுகின்றது.

“பாண்டவர் தேவி யிருந்ததோர் - மணி

பைங்கதிர் மாளிகை சார்ந்த னன் - அங்கு

நீண்ட துயரில் குறைந்து போய் - நின்ற

நேரிழை மாதினைக் கண்டனன் - அவள்

தீண்டலை பெண்ணி ஒதுங்கினாள் - இவன்

ஆண்டகை யற்ற புலைய னென்று - அவள்

அச்சமிலா தெதிர் நோக்கியே”

பாண்டவர்களின் பத்தினி இருந்த அழகிய பசிய ஒளிபொருந்திய மாளிகையை அடைந்தான். அங்கு பெருந்துயரத்தில் மனம் சோர்ந்திருந்த நேரிழையாகிய திரௌபதியை கண்டான். அவன் தன்னை தொடுவதெனக் கருதி அவள் ஒதுங்கினாள். இதன் மூலம் துச்சாதனன் மீது திரௌபதி கொண்ட வெறுப்பின் வெளிப்பாடாக பீபத்ஸரஸம் வெளிப்படுகின்றது

 

 

 

 

 

அற்புத ரஸம்

“மஞ்சளும் மாமனும் போயின பின்னர்

மன்னன் வினைஞர் பலரை அழைத்தே

பஞ்சவர் வேள்வியில் கண ;டது போலப்

பாங்கினுயர்ந்ததோர் மண்டபஞ் செய்வீர்

மிஞ்சு பொருளாதாற் காற்றுவான் என்றான்

மிக்க உவகையோ டாங்கவர் சென்றே

கஞ்ச மலரிற் கடவுள் வியப்பக்

கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றே”

மகனாகிய துரியோதனனும், மாமனாகிய சகுனியும் சென்றபிறகு திருதராட்டிரன் கட்டடக் கலைஞர் பலரை அழைத்து பாண்டவர்களுடைய வேள்வியில் பார்த்தது போல் உயர்ந்த தன்மையில் அமைந்த மண்டபம் அமைப்பீராக! அதற்கு மிக்க பொரளைச் செலவிடுவேன் என்றான். செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகன் வியப்படையும் படியான அழகியதோர் அவை மண்டபம் அமைத்தனர். என்பதன் ஊடாக வியப்பின் வெளிப்பாடான அற்புதரஸம் வெளிப்படுகின்றது.

“நீல முடி தடித்த பல மலைசேர் நாடு

நீரமுதமென பாய்ந்த நிரம்பும் நாடு

கோலமுறு பயன் மரங்கள் செறிந்து வாழும்

குளிர்காவுஞ் சோலைகளுங் குலவு நாடு

ஞாலமெல்லாம் பசியின்றி காத்தல் வல்ல

நன் செய்யும் புன் செய்யம் நலமிக்கோங்கப்

பாலாடையும், நறுநெய்யும், தேனுமுன்ன

பண்ணவர் போல மக்களெல்லாம் பயிலும் நாடு”

 நீலவண்ண மேகங்களை முடிகளாக அணிந்துள்ள பல அவைகளைக் கொண்ட நாடு. அமுதம் போல் நீர் பாய்ந்து நீர்வளம் நிரம்பிய நாடு பல வடிவங்களிலான பயன்தரும் மரங்கள் செறிவுடன் வாழும் தண்ணிய பூஞ்சோலைகள் குலவுகின்ற நாடு உலகத்து உயிர்களெல்லாம் பசி நீக்கியிருக்க காக்கும் திறன் உடைய நன்செய் நிலங்களும் புன்செய் நிலங்களும் நன்கு மிதந்து உயர்வும் பால் அடையும் நறுமணம் பொருந்திய நெய்யும் தேனும் உண்டு. இசைவார்கள் போல மக்கள் அனைவரும் இசைக் கலையை பயிலும் நாடு எனக் கூறுவதும் ஊடாக வியப்பின் வெளிப்பாடாக அற்புத ரசம் தோன்றுகின்றது.

 

 

 

சாந்த ரசம்

ஐயகோ இதை யாதெனச் சொல்வோம்?

அரசனானாவார் செய்குவ தொன்றோ?

மெய்ய தாகவொர் மண்டலத் தாட்சி

வென்று சூதின் வாளும் கருத்தோ?

வையம் இஃது பொறுத்திடுமோ? பழி மக்காள்

துய்ய சீர்த்தி மதிக்குல மோ நாம்?

தூ! வென் றெண்ணி விதுர்னும் சொல்வான்.”

ஐயோ! இதை என்னவென்று சொல்வோம்? மன்னர்கள் செய்யத்தக்க ஒன்றா? உண்மையாக ஒரு (நாட்டு பிரிவாகிய) மண்டலத்தின் ஆட்சியைச் சூதின் மூலம் வென்று ஆட்சி

செய்யும் எண்ணமோ? உலகத்திலுள்ள உயர்ந்தோர் இதனை பொறுத்துக் கொள்வார்களோ? மேலுலகம் பொறுத்துக்கொள்ளுமோ? பழி கொண்ட மக்கான் தூய்மையான சிறப்பினையுடைய சந்திர குலத்தவர்கள் நாம்? தூ! என்று விதுரர் ஏளனம் செய்து புகன்றனர் என்பதின் ஊடாக தருமனின் பொறாமையின் வெளிப்பாடான சாந்த ரஸம் வெளிப்படுகின்றது.

முடிவுரை

            ரஸம் என்பது ‘ரஸ’ என்ற வினை வடிவிலிருந்து பிறந்தது. இச்சொல் ஆழமான அனுபவம் ஒன்றினையே குறிக்கும். ஆழகின் துய்பின் பிரிக்க முடியாத ஓர் உணர்வாகும். உலர்ந்த விறகினுள் அக்கினி வியாபித்துள்ளது போல இப்பாடல்களில் ரஸமானது வியாபித்திருக்கும். இவ் ரஸ உணர்வினை பரதமுனிவரே முதன்முறையாக இவ் ரஸக் கொள்கையை விளக்கினார். ரஸங்கள் ஒன்பது வகை என தற்போது கூறப்படுகிறது. இந்த ரஸங்களின் தோற்றம் பற்றி பரத முனிவர் தனது நாட்டியசாஸ்திரத்தில் கூறுகிறார்.

            பாரதியாரின் பாஞ்சாலிசபத பாடல்களில் நவரஸங்கள் நிறைந்தே காணப்படுகின்றன. இவ் ரஸங்களின் வெளிப்பாடு ரஸக்கடலிலே மூழ்கி ஆராய்ந்த போது இவை உணர்வு பூர்வமாக வெளிப்படுகின்றதோடு ரஸங்களான ஸ்ருங்காரம், ஹாஸ்யம், கருணை, ரௌத்திரம், வீரம், பயானகம், பீபத்ஸம், அற்புதம், சாந்தம் என்பன இப்பாடல்களின் மூலம் உடலில் ஒரு சடுதியான மாற்றத்தினை ஏற்படுத்தி விடுகின்றமையை அறிய முடிகின்றது.

            மேலும் பாரதியாரின் பாஞ்சாலி சபத பாடல்கள் ஒரு மகத்துவமான பெண்ணின் அழகு, கருணை, கோபம், பஞ்சபாண்டவரின் நிலை, துரியோதனனின், சகுனியின் சூழ்ச்சி என்பனவற்றையும் மையப்படுத்தி பாடியதனால் வீரம், ரௌத்திரம் போன்ற ரஸங்கள் மிகையாக வெளிப்படுகின்றது. பாரதி தான் பாடிய பாடல்களில் தான் கதாபாத்திரமாக மாறி பாடியமையால் ரஸங்கள் மிகையாக வெளிப்பட்டு நிற்கின்றது. ஏனைய ரஸங்களின் உணர்வுகளையும் புலப்படுத்துவனவாக இப்பாடல்கள் அமைகின்றது. இதன் மூலம் பாரதியாரின் பாஞ்சாலி சபத பாடல்களில் அதிகமான ரஸ வெளிப்பாடு காணப்படுகின்றது என்பதை ஆழமாக அறியக் கூடியதாக உள்ளது.

உசாத்துணை நூல்கள்

1.         இராமசாமி.சு.தமிழ் நாட்டுக்கு கவிஞர்கள் ஐவர், திருநெல்வேலி (இந்தியா) 1978

2.         மனோன்மணி சு.பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப்பாட்டு, குமரன் அச்சகம் 2009

3.         உலகநாதன்.செ, பாஞ்சாலி சபதம், சந்ரா பிறின்டோ கிராபி, சென்னை 1993

4.         லீலாம்பிகை.செ, நடனசாரம், யுனி ஆட்ஸ் கொழும்பு, 2001

5.         சுகந்தி ரவீந்திரநாத், பரத நாட்டிய வழிகாட்டி, முருகன் ஆப்செட் சென்னை, 2011