ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

உழவு சார்ந்த பழமொழிகளும் அதன் உட்கருத்துக்களும்

​​​​​​​செ.முருகசரஸ்வதி (முனைவர் பட்ட ஆய்வாளர்) பதிவு எண் : 19132014022007 மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக்கழகம் – திருநெல்வேலி தமிழ் ஆய்வு மையம் – ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி தூத்துக்குடி. 09 Sep 2022 Read Full PDF

உழவு சார்ந்த பழமொழிகளும் அதன் உட்கருத்துக்களும்:

முதன்மைஆதாரங்கள் :       கோவில்பட்டி வட்டார நாட்டுப்புறப் பழமொழிகள்.

துணைமைஆதாரங்கள் :      ஆய்வு தொடர்பான பிறநுல்கள் துணைமை ஆதாரங்கள் ஆகும்.

கருதுகோள்:

               காலவளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் நாகரிக வளர்ச்சிக்குத் தகுந்தாற் போல் மாறிக்கொண்டு தான் இருக்கின்றனர். ஆனாலும் சில மரபுகள் மனித வாழ்வில் மறைந்து விடுவதில்லை. இவ்வகையில் மனித இனம் தோன்றியதில் இருந்து முதுமொழிகள் மாறாத இடத்தில் இருக்கின்றது. இடத்திற்குத் தகுந்தாற்போல் வளர்ச்சி பெற்றுவருகின்றது. முன்னோர் உருவாக்கிய முறையில் பயன்படுத்தியும் உருவாக்கமும் பெற்று வருவதை கருதுகோளாகக் கொண்டுள்ளது. 

ஆய்வின் அணுகுமுறைகள் :

      கோவில்பட்டி வட்டார பழமொழிகள் தொகுத்து ஆய்வதால் இது புறநிலை ஆய்வாகக் கருதப்படுகிறது. பழமொழிகளை தொகுப்பதால் தொகுப்பாய்வாகவும், பழமொழிகளை பகுத்து ஆய்வதால் பகுப்பாய்வாகவும், விளக்கி ஆய்வதால் விளக்கவியல் ஆய்வாகவும் விளங்குகிறது. கோவில்பட்டி வட்டார ஊர்களுக்கு சென்று கள ஆய்வு செய்து பழமொழிகளைத் தொகுத்ததால் கள ஆய்வாகவும் விளங்குகிறது.

தமிழ்ப் பழமொழிகள் குறித்து முன்னோர்களின் ஆய்வு:

முனைவர் சு.சக்திவேல் வெளியீட்டு எண் - 277,2004 ISSN :81-7090-337-8 (தமிழ்ப் பழமொழிகள் ஓர் ஆய்வு) - 1955

பார்த்தசாரதி பிள்ளை - பழமொழித்திரட்டு - 1902

கஸ்தூரி திலகம் அபூர்வ பழமொழிகள் - 1946

ப.ராமசாமி - உலகப் பழமொழிகள் - 1964

கெ.லட்சுமணன் - வாழ்வியல் பழமொழிகள் - 1967

வ.பெருமாள் - பழமொழிகள் சொல்லாராய்சி - 1973

சாலை இளந்திரையன் - சமுதாய நோக்கில் பழமொழிகள் - 1975

ந.வீ. செயராமன் - சமுதாய நோக்கில் பழமொழிகள் - 1980

தே.லூர்து - தமிழ்ப் பழமொழிகள் அமைப்பு (தமிழினி பதிப்பகம்) - 1982

மீனாட்சி சுந்தரம் - இராமநாதபுர மாவட்ட பழமொழிகள் ஓர் ஆய்வு - 1988

இரா.கோமளா - ஊற்றங்கரை பழமொழிகள் ஓர் ஆய்வு - 2006

ஜி.கமலா - விளவங்கோடு வட்டார பழமொழிகளில் வாழ்வியல் சிந்தனை -- 2007

ஆய்வுச்சுருக்கம்:

         மக்கள் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான மூல தொழில் விவசாயம். உழவுத் தொழல் சிறப்பாக அமைந்தால் தான் மக்களின் வாழ்வு வளமையாக அமையும். உழவின் பின்னே உலகம் சுழல்கிறது என்பது போல் உழவே உலகின் தலையாயத் தொழில். உழவா;களின் சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை பல்வேறு பழமொழிகள் எடுத்துக் கூறுகின்றன. வேளாண்மை செய்யும் முறைகளை இன்றைய தலைமுறைகள் அறிந்து கொள்ள வேண்டும். உழவில் முன்னோர;கள் கண்ட அனுபவங்களை பழமொழிகள் வழி அறிந்து கொள்ள முடிகின்றது. வேளாண்மை சாh;ந்த நுணுக்கங்களை அறிந்து கொள்ள பல்வேறு பழமொழிகள் துணை புரிகின்றன. உழவுத் தொழில் சாh;ந்த அத்தனை வழிமுறைகளையும் பல்வேறு பழமொழிகள் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.

முக்கிய சொற்கள்: சாகுபடி, உழவியல், மெஹர;கட்டில், ஆநிரை, வந்தனம், தொடிப்புழுதி, உழக்கு, வறட்டு நிலம், முன்னத்தி ஏர் (கலப்பை), பின்னத்தி ஏர் (கலப்பை), கலப்பை போர்களம, ஏர்களம்.

RESEARCH SYNOPSIS

Agriculture is the primary source of livelihood for people.It is the backbone of our Indian economy. Life of people will be prosperous only if the farming industry is good. Ploughingis one of the main industry of the world as the world revolves around ploughing.Various proverb says that everyone should know the excellence of farmers. Today’s generation must know the importance and methods of agriculture. The experience of ancestors in ploughing can be learnt through proverbs. These proverbs help us to know the intricacies ofagriculture. All themethods related to ploughing can also be learnt from them!

 

Key Words:

            Cultivation,ploughing,Dryland,Agronomy,Cattle,Welcome,The Plough,

 

முன்னுரை:

 உழவுத் தொழில் மிகப் பழமையானது. கால மாற்றத்திற்குத் தகுந்தாற்போல், உழவும் மேன்மையடைந்து வருகின்றது. நவீன தொழில் நுட்பத்துடன் இன்று உழவுத் தொழில் நடைபெறுவதை காண முடிகின்றது. உழவியல் என்பது கிரேக்க சொல்லாகும். 'அக்ரோஸ்” என்பது நிலம், 'நாமோஸ்” என்பது பராமரிப்பது, நிலத்தை பராமரிப்பது என்று பொருள்.(தமிழ் நாடு அரசு பதினொன்றாம் வகுப்பு வேளாண் அறிவியல் 2021-2022)(ப - 9) சமவெளியில் தங்கிய மனிதன் கண்டுபிடித்த முதல் தொழில் உழவு.

       எகிப்து மத்திய பகுதி, மற்றும் இந்தியா போன்ற பல இடங்களில் உள்ள காட்டிலிருந்து பெறப்பட்ட தாவரங்களை திட்டமிட்டு விதைத்தனர். நிலத்திற்கு தகுந்த தாவரங்களை பயிரிட்டு சாகுபடி செய்தனர்;. இந்திய துணைக் கண்டத்தில் கோதுமை, பாh;லி பயிhpட்டனர்;. பலுசிஸ்தானத்தில் உள்ள மெஹர்கட்டில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சி இதை உறுதி செய்துள்ளது. இவ்வாறு பல்வேறு இடங்களில் உழவுத் தொழில் பல்கிப் பெருகியது.

       தமிழகத்தில் வேளாண்மை செய்பவர்கள் நிலத்திற்கு தகுந்தாற்போல், விதைகளை விதைத்;து பயிர்ட்டனர். ஐவகை நிலங்களில் வயலும் வயல் சாh;ந்த மருத நிலத்திலே உழவுத் தொழில் செய்தனர். நன்செய், புன்செய் என நிலத்திற்கு தகுந்த வேளாண்மை செய்தனர்;. உழவுத் தொழிலுடன் சார்ந்த பல்வேறு தொழில்கள் பெருகின.

           'குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்

            நறும்பூங் கண்ணி குறவர் சூடக்

            கானவர் மருதம் பாட வதுவர்

            நின்ற முல்லை பஃறிணை நவலக்” - (பொருணராற்றுப்படை ப - 54) (218 - 221)

என்ற பொருணராற்றுப் பாடல், ஐவகை நிலத்தில் செய்த தொழிலை எடுத்துரைக்கின்றது. முல்லை நிலத்தில் உழவுத்தொழிலும், ஆநிரை மேய்த்தலும் தொழிலாகக் கொண்டுள்ளது என்று கூறுகின்றது.

உலக மக்களுக்கு உணவளித்து வாழ்வு கொடுப்பது உழவுத்தொழில். உழவு இன்றி உலகம் இல்லை எனலாம். உழவும் உலகமும் இணைந்தே இருக்கின்றது. உழுவின் மேன்மையை உலகப் பொதுமறையாம் திருக்குறள், தனி அதிகாரமாக வகுத்துள்ளது. இதை வள்ளுவர்        

     'சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்

      உழன்றும் உழவே தலை” - (திருக்குறள் ப - 103)

என்ற குறள்வழி உலகம் ஏhpன் பின்னே சுழன்று கொண்டிருக்கிறது என்கிறார் பாரதியார் 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் சொல்வோம் (பாரதியார் கவிதைகள் ப - 58)  என்கிறார்'உழவுப் பணிதான் சிறந்த பணி, மற்ற பணிகள் எல்லாம் பழுது உடையவை”( நீதி நுhல்கள்(நல்வழி) ப - 142)  என்கிறது நல்வழி”.

      தொடக்கத்தில் வேட்டை சமூகம் நாகாPக சமூகமாக மாறியதற்குக் காரணம் உழவுத்தொழில். மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு உழவு. மனிதனை விலங்கிலிருந்து மேம்பட்டதாக மாற்றியது. 'உழவே அறிவியலுக்கு எல்லாம் உயர்வான அறிவியல்” என்கிறார் ச. ஜான்சன். பழந்தமிழ் நூலான பழமொழி நானூறு,

'உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” - (நீதி நூல்கள்(பழமொழி நானூறு) ப - 124)

என்கிறது. உண்ண உணவு கொடுத்தவர்கள் உயிர் கொடுத்தவர்களுக்கு இணையாகக் கருதி உள்ளனர். இதை வள்ளுவரும்,

      'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்; மற்றவரெல்லாம்

          தொழுதுண்டு பின்செல்பவர்;” - (திருக்குறள் ப - 104)

உழவுத் தொழில் செய்து வாழ்பவர்கள், நிலையான வாழ்வு வாழ்பவர்கள். மற்றவர்கள் எல்லாம் அவர்களின் பின்னே செல்பவர்கள் என்கிறார். இதனைப் போன்று நல்வழிப் பாடலும்,

      'செங்கோல் நடத்துவது உழவனின்

       ஏரடிக்கும் சிறுகோல்” ( நீதி நூல்கள்  (நல்வழி) ப - 138)

அரசன் நடத்தும் செங்கோல் ஆட்சி, உழவர்களின் ஏர் அடிக்கும் சிறுகோல் போன்றது என்கின்றது. மகிமை வாய்ந்த உழவின் சிறப்பை இப்பாடல் வழி அறிய முடிகின்றது.

      உழவின் சிறப்புக்களை இலக்கியங்கள் மட்டும் அல்லது வாய்மொழி இலக்கியங்களும் சிறப்பித்து கூறுகின்றன. வாய்மொழி இலக்கியங்களில் பழமொழி குறிப்பிடத்தக்கதாகும். உழவுத் தொழிலின் சிறப்புகள் நுணுக்கங்கள், முன்னோர் வழிமுறைகள் இவற்றை பல்வேறு பழமொழிகள் பகிர்கின்றன. உழவின் அனுபவத்தை பழமொழிகள் மூலமாக அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்றுள்ளனர்.

உழவு சார்ந்த பழமொழிகள்:

      மனித நாகரீக வளர்ச்சிக்கு தகுந்தாற்போல உழவும் மாற்றம் பெறுகிறது. அறிவியல் வளர்ச்சியை உழவுத்தொழிலும் காண முடிகின்றது. நவீன இயந்திரங்களுடன் வேளாண்மை செய்வதை அறிய முடிகின்றது. வயலில் ஏர்பூட்டி விவசாயம் செய்யும் உழவர்கள் தங்களின் ஒப்பற்ற அனுபவங்களை பழமொழிகள் வாயிலாக உணர்த்தியுள்ளனர். உழவின் பெருமையை பல்வேறு இலக்கியங்கள் சிறப்பாக கூறியுள்ளன. எனினும் பழமொழிகள் உழவின் சிறப்பை பெருமைபடக் கூறியுள்ளன.

'அகல உழுவதை விட ஆழ உழு

உழவில் நிலத்தை பக்குவப்படுத்தும் தன்மையை மையக் கருத்தாகக் கொண்டுள்ளது.

      பயிர் செய்வதற்கு முன் நிலத்தை பக்குவப்படுத்த வேண்டும். முதலில் உழவு செய்தல் வேண்டும். உழவு செய்யும் பொழுது, அகலமாக உழவு செய்யக்கூடாது. ஆழமாக உழவு செய்தல் வேண்டும். மேல் நிலையில் இருக்கும் மண் வளமை இன்றிக் காணப்படும். ஆழ உழுதால் அடிமண் மேலாக வருகின்றது. இம்முறையில் வேளாண் பயிர்கள் செழித்து வளரும். அகல உழுவதை விட ஆழ உழுதல் வேண்டும். வேளாண்மை சிறப்படையும் - என்பதை விளக்கமாகக் கொண்டுள்ளது.

      உழவு செய்வதற்குப் புதிதாக வந்தவர்களுக்கு அறிவுரை கூறுவார்கள். அப்பொழுது இப்பழமொழியைக் கூறும் சூழல் உள்ளது என்கின்றனர் நாட்டுப்புற பெரியவர்கள்

      உழவின் நுணுக்கத்தை அனைவரும் அறிந்து கொள்ள இப்பழமொழிகள் பயன்படுகின்றன. ஆழ உழுவதால் ஒருபடி எரு கூட போடத்தேவை இல்லை என்பதனை வள்ளுவர்,

      'தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

        வேண்டற் சாலப்பற் றன்று( திருக்குறள் ப - 369)

அழ மண்ணைக் கிளறி, புழுதி மறையும் வரை உழவு செய்தால், எரு போன்ற உரங்கள் போடாமலே பயிர்கள் நன்கு செழித்து வளரும். ஆழ உழுவதின் நன்மையை எடுத்துரைக்கிறார்    ;. இதனை சிறுபஞ்சமூலம்,

        'எரு விடுவான் கலப்பையில்

      நிலத்தை உழுது பண்படுத்துவான் (நீதி நூல்கள்))(சிறுபஞ்சமூலம்) ப - 114)

எரு உரம் இட்டு, நிலத்தை ஆழ உழுது வேளாண்மை செய்பவன் உழவன் என்கிறது.

அன்று உழுதவன் ஆண்டான், மலை உழுதவன் மாண்டான்

உழவிற்கு தகுந்த நிலம் பார்த்து உழுதல் வேண்டும் என்ற உட்கருத்துடன் அமைந்துள்ளது இப்பழமொழி.

      உழுகின்ற பருவம் பார்த்து, உழுதல் வேண்டும். உழுகின்ற போது, தகுந்த நிலம் பார்த்து உழுதல் வேண்டும். கல், மணல் உள்ள நிலங்களில் பயிர்கள் நன்கு வளராது. எனவே அவை பார்த்து, உழுது விதைத்திட வேண்டும். பயிர்கள் வளர, ஏதுவாக இல்லாத நிலத்தில் உழுது விதைப்பதால், தக்க பலனைப் பெற முடியாது என்ற விளக்கத்துடன் அமைந்துள்ளது இப்பழமொழி.

      நல்ல நிலத்தை தேர்ந்தெடுத்து, உரிய காலத்தில் உழுதல் வேண்டும் என்று விழிப்புணர்வு தருவதாக இப்பழமொழியை உருவாக்கியுள்ளனர்.

'உழுகின்ற மாடு உள்ளுரிலே விலை போகும்

நன்கு உழைப்பவர்க்கு எப்போதும் மதிப்பு இருக்கும் என்பதை உட்கருத்தாகக் கொண்டுள்ளது இப்பழமொழி.

      நன்றாக உழவு செய்யும் மாட்டை அனைவரும் விரும்புவார்கள். விற்கும் நிலை வந்தால் போட்டி போட்டு வாங்கிக் கொள்வார்கள். இப்பழமொழியை திருமணத்திற்கும் பயன்படுத்ததுவார்கள். திருமண வயது வந்த ஆண், பெண் இருவரும் நல்ல பண்புடையவார்களாக, திறமைமிக்கவர்களாக இருந்தால் உள்ளுர் மக்கள் விரும்பி திருமணம் செய்து கொள்வ்வார்கள். என்று இரண்டு விதமான கருத்துக்களைக் கொண்டுள்ளது என்பதை விளக்கமாக தருகின்றது இப்பழமொழி.

      மாடுகளை வாங்கி விற்பவர்கள் கிராமங்களில் உண்டு. அவர்கள் நன்கு உழும் மாட்டைப் பார்த்தால் விலை பேசுவர். அவ்வாறான இடங்களில் இப்பழமொழியைப் பயன்படுத்தும் சூழல் உள்ளது என்கின்றனர்.

      நல்ல பெயர் எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் உறவுகள் திருமணம் செய்ய முன் வருவார்கள் என்று பெரியவர்கள் இளைஞர்களுக்கு அறிவுரை கூறுவார்கள். அவ்வாறு அறிவுரை கூறுமிடத்தில் இப்பழமொழியைப் பயன்படுத்தும் சூழல் உள்ளது என்கின்றனர்.

      நன்கு உழைக்கும் மாட்டை, இளைஞர்களுக்கு ஒப்பீடாகக் கூறி இப்பழமொழியை உருவாக்கியுள்ளனர். மாட்டை குறியீடாகக் கொண்டு இப்பழமொழி பேசப்படுகின்றது. ஒன்றைக் கூறுவதற்கு பிறிதொன்றின் வழி உணர வைக்கும் பிறிதுமொழிதல் அணி பின்பற்றப்பட்டுள்ளது.

'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது

உழவுத் தொழிலால் பயன் கிடைப்பது மிக அரிது - என்ற உட்கருத்தை உள்ளடக்கியது இப்பழமொழி.

      உழவர்கள் நிலத்தைப் பண்படுத்துவார்கள். விதை வாங்கி விதைப்பார்ரகள்.  தேவையான உரம் பூச்சிக் கொல்லி தெளிப்பார்கள். களை எடுத்து பயிரைக் காக்கின்றனர். படிப்படியான வேலையில் உழவா;கள் அதிக செலவுகள் செய்கின்றனர்.  செலவு செய்த பலன் அறுவடையின் போது முழுமையாகக் கிடைப்பது இல்லை.  செலவை விட குறைந்த வருவாய் கிடைக்கும் நிலைதான் உள்ளது என்பதைத்தான் விளக்கமாகக் கொண்டுள்ளது.

      வேளாண்மை செய்த பொருட்களை விற்பனை செய்யும் போது, செலவிற்கு கூட வரவில்லை என்று ஆதங்கம் கொள்வர். அப்பொழுது ஆற்றுப்படுத்துவதற்காக இப்பழமொழியைக் கூறும் சூழல் உள்ளது என்கின்றன.

      இன்றைய வேளாண்மைத் தொழிலின் நிலையை எடுத்துக் கொண்டால், மிகவும் வருத்தத்திற்குரியது ஆகின்றது. பரம்பரைத் தொழில் விட முடியாதே என்று பெரியவர்கள் கடனே செய்யும் நிலைதான் உள்ளது. செலவு செய்யும் அளவிற்குக் கூட வருமானம் வருவதில்லை என்று புலம்பும் விவசாயிகள் அதிகம். வேளாண்மை செய்பவர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இப்பழமொழியைப் பேசி வருவதை அறிய முடிகின்றது. இதைத்தான் கம்பர் தனது ஏரெழுபது என்ற நூலில்,

'உழுகுலத்தில் பிறந்தவரே உலகுய்யப் பிறந்தவரே - என்று உழவாரின் பெருமையைப் பாடலாகப் பாடியுள்ளார். இதே போல் ஏராக வர்ணிக்கப்பட்டு

       'போர்வீரன் சால் பிடித்து

      மேலும் கணையாவும் கொண்டு வந்து

      எரிந்து போர்களமும் ஏர்களமும் ஒன்றே( சங்க இலக்கியம் (புறநானூ ப - 369)

போh; நடக்கும் இடமானது உழவா;கள் வாpசை பார்த்து ஏர் கொண்டு செல்வது போல், கணைகளைக் கொண்டு வீரர்கள் பகைவர்களை வீழ்த்துகின்றனர். போர்க்களம் இரத்த வெள்ளமாக காட்சி தருகின்றது. அது உழுதுவிட்ட நிலம் போல இருக்கின்றது என்று புறநானூறு வழி அறிய முடிகின்றது.

'உரம் ஏற்றி உழவு செய்

உழவு செய்கின்ற போது, பின்பற்ற வேண்டிய நுணுக்கத்தை உட்கருத்தாகக் கொண்டு இப்பழமொழி அமைந்துள்ளது.

      வேளாண்மை செய்யும் பொழுது முதலில் மண்ணைப் பக்குவப்படுத்துகின்றனர். பக்குவப்படுத்துவதற்கு முதலில் உழவு செய்கின்றனர். முதல் உழவிற்குப் பின், விதை, உரம் கலந்து உழவு செய்கின்றனர். விதைக்கும் பொழுது, விதையுடன் உரம் கலந்து உழுதல் வேண்டும். அடி உரம் என்பார்கள். இதனால் பயிர்கள் நன்கு செழித்து வளரும்.

     மண்ணிற்குத் தேவையான அடி உரம் இட்டு, உழவு செய்கின்றனர். உழவின் நுணுக்கத்தை இதில் கூறியுள்ளனர். உரம் கலந்து உழவு செய்தால் பயிர்கள் நன்கு வளரும் என்பதை விளக்கமாகக் கொண்டுள்ளது இப்பழமொழி.

      அனுபவம் இல்லாமல் வேளாண்மை செய்ய விருப்பம் கொள்பவர்கள் உண்டு.  அவர்களுக்கு விதைக்கும் உத்திகள் தெரியாது. அனுபவம் மிக்கவர்கள் அறிவுரை கூறுவார்கள். அத்தகைய சூழலில் இப்பழமொழியைக் கூறம் சூழல் என்கின்றது.

உழுதவன் பயிரிலே கை வைக்காதே

பயிர்களுக்கு கெடுதல் செய்யக் கூடாது என்ற உட்கருத்துடன் அமைந்துள்ளது இப்பழமொழி.

      நிலத்தை தோ;ந்தெடுத்து, உழுது விதைத்து பயிரிடுகின்றனர். அந்தப் பயிர்களுக்க உரமிட்டு, களை எடுத்து பாதுகாக்கின்றனர். அவ்வாறு நல்ல விளைச்சலைப் பெறுவதற்கு பயிர்களை வளமையாக வளர்க்கின்றனர். அவ்வாறு வளர்கின்ற பயிர்களுக்கு அழிந்து போகும்படி கெடுதல் செய்யக் கூடாது - என்பதை விளக்கமாகக் கொண்டுள்ளது.

'உழவு அற உழுதவன் ஊரில் பெரியவன்

அறவழியைப் பின்பற்றிய உழவா;கள் புகழுக்கு உரியவர்கள் - என்ற உட்கருத்தை மையமாகக் கொண்டுள்ளது.

      உழவுத் தொழில் உலகில் முதன்மைத் தொழில். பிற உயிர்கள் வாழ செய்கின்ற தொழில். அத்தகைய உழவுத் தொழிலை வருமான நோக்கத்தில் செய்தல் கூடாது. அடுத்தவர் உயிர்காக்கம் புண்ணிய வழியியல் செய்திட வேண்டும். உழவுத் தொழிலை அற வழியில் செய்பவரை உலகம் போற்றும். நேர்மையாக செய்யும் உழவர்கள் ஊரில் பெரியவர் என்று மதிக்கப்படுகின்றனர் என்பதை விளக்கமாகக் கொண்டுள்ளது இப்பழமொழி.

      உழுகின்றவர் சொந்த நிலம், அடுத்தவர் நிலம் என்பதைப் பாராமல் நடுநிலைமையாக இருந்து உழுதல் வேண்டும். அறவழியில் உழுபவர்களை ஊர் மதிக்கின்றது. ஊரில் பெரியவர்களாகவும் ஏற்றுக் கொள்கிறது என்பதையும் விளக்கமாகக் கொண்டுள்ளது இப்பழமொழி.

      நிலத்தில் உழுகின்ற போது,  பெரியவர்கள் இப்பழமொழியைக் கூறுவர். நடுநிலைமையோடு உழுதல் வேண்டும் என்று அறிவுரை கூறும் போது இப்பழமொழியைப் பயன்படுத்தும் சூழல் உள்ளது என்கின்றனர்.

      நல்ல வழியில் உழுகின்றவர்களுக்கு எப்போதும் சிறப்பு உண்டு என்பதை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்று பயன்படுத்தப்படுகிறது.

'உத்திராட்டத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வெளியில் ஒரு உழுநிலமும்

சிறப்பானவைகள் அமையப் பெற்றால் வாழ்க்கை செழிக்கும் - என்ற உட்கருத்தை மையமாகக் கொண்டுள்ளது இப்பழமொழி.

      உத்திராட்டம் என்பது நட்சத்திரம். இதில் பிறக்கும் பிள்ளைகள் சிறப்பிடம் பெறுவார்கள். அதேபோல் ஊரின்; அருகில் வேளாண்மை செய்வதற்க நிலம் இருக்க வேண்டும். அருகில் இருக்கும் நிலத்தை அடிக்கடி நன்கு கவனித்து வேளாண்மை செய்து செழிப்படையலாம். உத்திராட்ட நட்சத்திரத்தில் ஒரு பிள்ளையும், ஊரின் அருகில் ஒரு நிலமும் இருந்தால் வாழ்க்கை துன்பமின்றி செழிப்படையும் - என்பதை விளக்கமாகக் கொண்டுள்ளது இப்பழமொழி.

உழவர்களின் வீட்டினை, பெரும்பாணாற்றுபடை

'-------- கறையடிக் குன்றுறழ் யானை மருங்கு லேய்க்கும்             உண்போட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த                        மஞ்சள் முன்றில் மணநூறு படப்பைத்                               தண்டலை யுழவர் தனிமனைச் சேப்பின் (சங்க இலக்கியம்(பெரும்பணாற்றுப்படை)ப - 121)     யானை உடல் போன்று சொரசொரப்பான தென்னை மடலால் வேயப்பபட்;ட மஞ்சள் நிற வீடுகள், மணம் வீசும் தோப்புக்களுக்கு நடுவே தனிவீடாக உழவர்களின் வீடு உள்ளது. இயற்கை சூழ உழவர்களின் வீடு அமைந்துள்ளது என்கிறது.

'உழுகிற போது ஊருக்குப் போயிட்டு

        அறுக்கிற போது அருவாளோட வந்தானாம்

வேளாண்மை பருவம் அறிந்து செய்தால் தான் பலனைப்  பெறமுடியும் - என்ற உட்கருத்துடன் அமைந்துள்ளது இப்பழமொழி.

      வேளாண்மை செய்;ய வேண்டும் என்றால், பல வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சரியான பருவம், காலம் அறிந்து விதைக்க வேண்டும். விதைத்த பின், உரமிடல். களை எடுத்தல், இடைவெளியில் களைக்கொல்லி, என சரியான கால இடைவெளியில் செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் அதற்கான பயனைப் பெற முடியும். விவசாயத்தை சரியாக கவனிக்காமல், அறுவடை நேரத்தில் மட்டும் வந்தால் பலன் ஏதும் கிடைக்காது. என்ற விளக்கத்துடன் அமைந்துள்ளது இப்பழமொழி.

      வேளாண்மை செய்ய நினைப்பவா;களுக்கு மூத்தவா;கள் அறிவுரை கூறும் சூழலிலும் இப்பழமொழி பயன்படுத்தப்படுகிறது.

   உழவர்கள் நேரத்தையும், காலத்தையும் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை திரிகடுகம்,

‘உழவர் குடிக்கு வேண்டாதது சூது

வேண்டுவன பார்பனகண்டு எச்சரிக்கையாக இருத்தல்

உழவை விரும்பிப் போற்றல் (நீதி நுhல்கள்(திரிகடுகம்) ப - 42)

விதைக்கும் காலமறிந்து விதைக்க வேண்டும். சூதிற்கு அடிமையானால் உழவர் குடியே அழிந்துவிடும். பார்பனர்கள்; கண்டு எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும் என்று உழவர்களுக்கு அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது இப்பாடல்,

'எள்ளுக்கு ஏழு உழவு

 கொள்ளுக்கு ஓர் உழவு

உழவு செய்தல் என்பது பயிர்களைப் பொருத்து அமைகின்றது - என்பதை மையக் கருத்தாகக் கொண்டுள்ளது.

      பயிர்களுக்கு ஒவ்வொரு விதமான உழவு செய்தல் வேண்டும். எள்ளுச் செடி அதிக வளிமண்டல சத்தை உறிஞ்சக் கூடியது. அதனால் ஆழமாக உழ வேண்டும். அதிகமுறை உழுதல் வேண்டும். அதனால்தான் எள்ளுக்கு ஏழு உழவு என்கின்றனர்.

      கொள்ளுச் செடியானது குறைந்தளவு வளிமண்டல சத்து கிடைத்தால் நன்கு வளரக் கூடியது. அதனால் கொள்ளுக்கு ஓர் உழவு என்கின்றனர். பயிர்களின் தன்மை அறிந்து உழுதிடல் வேண்டும் என்பதை விளக்கமாகக் கொண்டுள்ளது.   

      உழவர்கள் எள்ளு விதைத்து உழுவதற்கு அதிக கூலி கேட்பார்கள். காரணம் கேட்டால் எள்ளுக்கு கூடுதலாக உழவிட வேண்டும் என்று இப்பழமொழியைக் கூறுவார்கள். காரணம் கூறும் போது இப்பழமொழியைக் கூறும் சூழல் உள்ளது என்கின்றனார்.

'ஏர் ஓடினால்தான் தேர் ஓடும்

ஊர் செழிப்பாக இருப்பதற்கு உழவுத்தொழில் நன்றாக இருத்தல் வேண்டும் - என்ற உட்கருத்தை மையமாகக் கொண்டது இப்பழமொழி.

      நாட்டுப்புறங்களில் கோவில் திருவிழாக்களில் தேர்த்திருவிழா  நடைபெறும். அது பண்பாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வேளாண்மையை மையமாகக் கொண்டது கிராமங்கள். மழை பெய்து நல்ல விளைச்சல் இருந்தால் விழாக்களையும் செழிப்பாக கொண்டாடுவார்கள். உழவுத் தொழில் நல்ல வருவாய் கிடைத்தால், நன்கு செலவு செய்து ஆடம்பரமாக விழாக்களைக் கொண்டாடுவார்கள். உழவுத்தொழில் நல்ல வருவாய் இல்லையென்றால், விழா செழிப்பாக நடைபெறுவது குறைந்துவிடும் என்பதை விளக்கமாகக் கொண்டுள்ளது இப்பழமொழி.

      வீட்டில் பெரியவர்கள் உழைத்து வர, இளையவா;கள் உழைக்காமல் உண்பார்கள். எல்லோரும் உழைத்தால் நன்கு வாழ முடியும் என்று அறிவுரை கூறுமிடத்தில் இப்பழமொழியைப் பயன்படுத்தும் சூழல் உள்ளது என்கின்றனர்.

      வேளாண்மை நன்கு நடந்தால்தான் ஊh; மக்கள் செழிப்பாக இருப்பார்கள். வேளாண்மை குறையக்குறைய அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை இன்றைய தலைமுறையினர் உணா;ந்துகொள்ள இவ்வாறான பழமொழிகளை உருவாக்கியுள்ளனர். உழவர்களின் பெருமையைக் கூறும் பாடலானது,

      'உழவனோர் தாமரை

      சேற்றில் மலரும் அவன் வாழ்வு

      உழவனோர் வீரர் போர்; இருக்கும் அவன் களத்தில்

      உழவன் ஓர் தெய்வம் உயிர்களைக் காப்பதால் -(கலைஞர் கலை இலக்கியத்தடம் ப - 248) என்ற பாடலில் உழவர்களைத் தெய்வமாகப் போற்றுவதனைக் காண முடிகின்றது. உழவர்கள் ஏர் பூட்டிய வீரர்கள். சேற்றில் தான் அவர்களின் களம் அமையும். அவர்கள் வாழ்க்கை போர்க்களமாக இருக்கும் என்கின்றது.

'’கழுதை உழவுக்கு வந்தா காடு ஏன் தரிசா கிடக்கு

உழவுக்க உகந்தவை இருந்தால்தான் நிலத்தில் நல்ல வேளாண்மை செய்ய முடியும் என்ற உட்கருத்துடன் அமைந்துள்ளது இப்பழமொழி.

    வேளாண்மை செய்யாதவர;களை கழுதைக்கு ஒப்பிட்டு கூறியுள்ளனர். நிலம் இருந்தும் வேளாண்மை செய்ய மாட்டார்கள்.இதனால் நிலம் தரிசாகக் கிடக்கும். தரிசு நிலத்தில் தகுந்த பயனை எதிர்பார்க்க முடியாது. என்பதற்காக இப்பழமொழியை பயன்படுத்துகின்றனர்.

'காலைப் பார்த்து மேழிய வெட்டு

     தோலைப் பார்த்து கலப்பைய வெட்டு

உழவுக் கருவிகளை உழவர்களுக்கு தகுந்தவாறு செய்திடல் வேண்டும் என்ற மையக் கருத்துடன் அமைந்துள்ளது இப்பழமொழி.

      உழவர்கள் உழுவதற்கு கலப்பை எனும் பொருளைப் பயன்படுத்துவர். கலப்பையானது மரத்தால் செய்யப்படுகின்றது. கலப்பையின் கைபிடியை மேழி என்று கூறுவர். மேழியை வெட்டும் பொழுது, உழவரின் கால்முட்டி அளவிற்கு வெட்ட வேண்டும். காலை நன்கு ஊன்றி, மேழியை அழுத்திப் பிடித்து உழ முடியும். அதேபோல் கலப்பையைச் செதுக்கும் பொழுது, உழவரின் உடல் வலிமைக்குத் தகுந்தவாறு உயரம் எடை ஆகியவற்றை கணித்துச் செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் உழவு நன்றாக அமைந்து விளைச்சலைப் பெறமுடியும் என்பதனை விளக்கமாகக் கொண்டுள்ளது இப்பழமொழி.

      உழவுக் கருவிகள் செய்யும் பொழுது, பெரியவர்கள் இப்பழமொழியைக் கூறும் சூழல் உள்ளதாக கூறுகின்றனர்.

      அறிவியல் வளர்ச்சியால், உழவுத் தொழிலில் பல மாற்றங்கள் வந்துள்ளது. இயந்திரங்கள் மூலம் வேளாண்மை எளிதாக நடைபெறுகிறது. மனிதர்களின் உடல் உழைப்பு பாதியாக குறைந்துவிட்டது. முன்னோர்கள் அதிக உடல் உழைப்பில் வேளாண்மை செய்தனர் என்பதனை இவ்வாறான பழமொழிகள் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.

உழவர்களின் சிறப்பைக் கூறுகின்ற கொன்றை வேந்தன், 'உழவு வழி வரும் செல்வம் குன்றாது( நீதி நூல்கள்(கொன்றை வேந்தன் ப - 51)

உழுதுண்டு வாழ்பவன் வீட்டில் செல்வத்திற்கு குறைவு இருக்காது. நிலத்துடன் கால்நடைகளையும் பராமரிப்பவர்கள் உழவர்கள். “பசுமாடு இருந்தாலே பசியாற உண்ணலாம்” என்கின்ற அளவிற்கு செல்வம் காணப்படுகிறது என்கிறது, கொன்றை வேந்தன் பாடல்.

'கோடை உழவு கோடி நன்மை

கோடையில் உழவு செய்தலினால் வரும் நன்மையை உட்கருத்தாகக் கொண்டுள்ளது இப்பழமொழி.

      விவசாயம் செய்யும் நிலத்தை உழுதல் என்பது இயல்பு. விதைக்கும் பொழுது உழுது விதையை விதைக்கின்றனர். அறுவடைக்குப் பின்னும் உழவு செய்கின்றனர். அறுவடைக்குப்பின் விதைக்கும் காலம் வரை நிலம் பயனப்படுத்தப்படாமல் இருக்கின்றது. இடைப்பட்ட காலத்தில் சூரிய ஒளியால் மண்ணின் மேல் சத்து குறைக்கப்படுகிறது. இதனால் மேல் மண் சத்து வளம் குறைவாக இருக்கும். அதற்காக கோடையில் உழவு செய்கின்றனர். மேல்மண் அடியிலும், அடி மண் மேலேயும் வந்து மண்ணின் வளம் காக்கப்படுகின்றது. மீண்டும் விதைக்கும் பருவம் வந்ததும் உழவ செய்கின்றனர். இதனால் மண் வளம் குறையாது இருக்கின்றது. இதில் பயிரிடப்படும் பொழுது பயிர்கள் செழித்து வளர்ந்து இரட்டிப்பு நன்மையை தருகின்றது என்பதை விளக்கமாகக் கொண்டுள்ளது.

      கோடையில் உழவிடுபவர்களைப் பார்த்து, ஊக்கம் தரும் வகையில் பொpயவா;கள் இப்பழமொழியைக் கூறும் சூழல் உள்ளது என்கின்றனர்.

      முன்னோர்கள் பயன்படுத்திய உழவுக் கருவிகள் தான் மாறியுள்ளது. உழவு செய்யும் முறைகள் மாறவில்லை. உழவு செய்வதில், முன்னோர்களின் அனுபவங்களை  பழமொழியாகக் கூறியுள்ளனர். நாகரீக, அறிவியல் வளர்ச்சியால் முன்னேற்றம் கண்ட இன்றைய இளைஞர்கள் இதைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறான பழமொழிகளைக் கண்டறிந்து உள்ளனர்.

'கலப்பையைப் பிடித்தவன் கடவுளுக்குச் சமம்

கடவுளுக்கு சமமானவர்கள் உழவர்கள் என்ற உட்கருத்துடன் இப்பழமொழி அமைந்துள்ளது.

      கலப்பையைப் பிடித்து வேலை செய்பவர்கள் உழவர்கள். உழுது பயிரிட்டு, வேளாண்மை செய்தால் தான் உணவைத் தயாரிக்க முடியும். உணவு உண்ணாமல் உயிர் வாழ்வது கடினம். உணவு தந்து உயிh; காப்பவர்கள் உழவர்கள். உயிர் கொடுத்து காப்பவர் கடவுள். உணவு கொடுத்து காப்பவர் உழவர்கள். எனவே கடவுளும் உழவர்களும் சமமானவர்கள் என்ற விளக்கத்தைத் தருகின்றது இப்பழமொழி.

வேளாண் தொழில் நலிந்து வரும் கலம் இது விவசாயத்தைக் காக்க வேண்டி, பல இடங்களில் இன்று போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்போராட்டங்களில் பேசுவோர் இப்பழமொழியைக் கூறுகின்றனர். இவ்வாறான போராட்ட களங்களில் இப்பழமொழியைப் பயன்படுத்தும் சூழல் உள்ளது என்கின்றனர்.

      உழவுத் தொழிலையும் அதனால் வரும் உணவுகளையும் முறைப்படி மக்களைச் சென்றடைய மன்னனின் கடமையாக புறநானூறு,

      நீரின்றமையா யாக்கைக் கெல்லாம்

      உண்டு கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

      உண்டி முதற்றே யுணவின் பிண்டம்

      உணவெனப்படுவது நிலத்தோடு நீரே

      நீரு நிலனும் புணர்யோரின்

      குடம்புழுயிரும் படைத்தசினாரே  (புறநானுhறு) (புறம் 18 : 18-23)

நீர்நிலை கண்டு உழவுத் தொழிலைப் பேண், வளர்ச்சியைச் செய்வதோடு, வேந்தன் கடமை முடிந்துவிடுவதில்லை. விளைந்தவற்றுள் நாட்டிற்கு சேர வேண்டியதை முறை அறிந்து, அறவழியில்  வாங்க வேண்டும் என்கிறார் புலவர் பிசிராந்தையார்.

'கைபடாத குழந்தையும், கால்படாத பூமியும் வளார்ச்சி பெறாது

உயர்திணையோ, அஃறிணையோ நன்றாக வளர்ச்சி பெற உந்துதல் வேண்டும் - என்பதை உட்கருத்தாகக் கொண்டுள்ளது.

      கைபடாத குழந்தை என்பது, தாயின் அன்பு, உறவுகளின் பாசம். இவை இல்லாமல் வளரும் குழந்தை எதிர்காலத்தில் சிறந்து வளர முடியாது. அதுபோல் உழவர்களின் கால்படாமல் விவசாயம் செய்தால் செழிக்காது. விளை நிலத்தில் உழவ செய்யாமல் இருந்தால் பாழ் நிலமாக (தரரிசு நிலம்) மாறிவிடும். அதில் பயிரிட்டு விவசாயம் செய்வது கடினம். குழந்தையின் வளர்ச்சி, நிலத்தின் விளைச்சல் இரண்டிற்கும் மற்றொன்றின் அரவணைப்பு தேவையாகின்றது என்பதை விளக்கமாகக் கொண்டுள்ளது இப்பழமொழி.

      தரிசு நிலங்களைப் பார்க்கும் பெரியவர்கள் இப்பழமொழியைக் கூறும் சூழல் உள்ளது என்கின்றனர்.

     குழந்தையின் வளர்ச்சியையும், விளை நிலத்தின் வளர்ச்சியையும் ஒப்பிட்டு இப்பழமொழியை உருவாக்கியுள்ளர். குழந்தை வளர்ச்சிக்கு கையால் ஆதரவும், நிலத்தின் வளர்ச்சிக்கு காலால் ஆதரவும் இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இப்பழமொழியை பேசி வருகின்றனார். ஒப்பிட்டுக் கூறி நாட்டாரின் பாங்கு வியப்பிற்குரியது.

'புல்லற உழுதால் நெல்லற விளையும்

உழுகின்ற தன்மையைப் பொறுத்து நல்ல விளைச்சலைப் பெற முடியும்-என்ற உட்கருத்து  இப்பழமொழி அமைந்துள்ளது.

      வேளாண்மை செய்யும் நிலமாசை விதைப்பதற்கு முன் புல், களை நிரம்பியதாக இருக்கும் குறிப்பாக நெல் பயிரிட்ட இடத்தில் அறுவடைக்கு பின் புல் தழைகள் இருக்கும். அவ்றறை அப்புறப்படுதத புல், களைகள் மடிய உழவு செய்வார்கள். மண்ணின் அழயில் போகும் அளவிற்கு உழவு செய்கின்றனார். மண்ணோடு மட்கி உரமாக மாறிவிடுகின்றது. புல் களை மண்ணிற்கு உரமாகும் பொழுது, பயிர்கள் நன்கு, செழித்து வளர்கின்றது. இதனால் நல்ல அறுவடை கிடைக்கினறது என்பதை விளக்கமாகக் கொண்டுள்ளது இப்பழமொழி.

      நெல் பயிரிடும் பொழுது, உழவு நன்கு இட வேண்டும். களைகள் நீங்க உழுதல் வேண்டும் என்ற அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு உணர்த்த இவ்வாறான பழமொழிகளை உருவாக்கியுள்ளனார்.

'முன்னத்தி ஏருக்குப் பின்தான் பின்னத்தி ஏரும் போகும்

உழுவதற்கு ஏர் போகும் முறையை உட்கருத்தாகக் கொண்டுள்ளது.

      ஏர்கள் வைத்து நிலத்தை உழும்போது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஏர்கள் வைத்து உழுவாh;கள். ஒன்றுக்கு மேற்பட்ட ஏர்கள் உழுகின்ற போது, முதலில் செல்லும் ஏருக்குப் பின்தான், அடுத்தடுத்த ஏர்கள் செல்லும். அப்பொழுதுதான் உழவு வரிசையாக ஒன்று போல் அமையும். முன்னால் செல்லும் ஏருக்குப் பின்தான் அடுத்தடுத்த ஏர்கள் செல்லும் என்பதை விளக்கமாகக் கொண்டுள்ளது இப்பழமொழி.

      நிலத்தை உழும்போது, புதிதாக உழ வந்தவர்களுக்கு அறிவுரை கூறும் பொழுது, நாட்டுப்புறப்பெரியவர்கள் கூறுமிடத்தில் இப்பழமொழியைப் பயன்படுத்தும் சூழல் உள்ளது என்கின்றனர்.

 

'வறட்டு உழவு குருட்டு உழவு

நிலத்தில் உழவு செய்யும் பொழுது பின்பற்றும் நுணுக்கத்தை உட்கருத்தாகக் கொண்டுள்ளது இப்பழமொழி.

      உழவு செய்வதற்கு என்று நிலம் நன்கு அமையப் பெற வேண்டும். விதைக்கும் நிலம் ஈரமாக, நெகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உழவு நன்றாக இடமுடியும். உழவு நன்றாக உழுதால்தான் பயிர்கள் நன்கு வளரும். எனவே நெகிழ்வான நிலத்தை உழுது விதைக்க வேண்டும். கடினமான நிலம் உழுவதற்கு ஏதுவாக இருக்காது. உழுதாலும் பயிh;கள் நன்கு செழித்து வளராது - என்பதை விளக்கமாகக் கொண்டுள்ளது இப்பழமொழி.

      குத்தகைக்கு விவசாய நிலத்தை வாங்குபவர்கள் உண்டு. குறைந்த பணத்திற்கு கிடைக்கும் நிலம் வறண்ட தன்மையுடன் விவசாயம் செய்ய முடியாததாக இருக்கும். இதைப் பார்க்கும் பெரியவர்கள் இப்பழமொழியைக் கூறும் சூழல் உள்ளது என்கின்றனர். விவசாயம் செய்யும் போது நல்ல நிலத்தை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும். நிலத்தின் தன்மையைப் பொறுத்து உழுது பயிரிட வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக இப்பழமொழியை உருவாக்கியுள்ளனர்.                              

 முடிவுரை: உழவுத் தொழல் சிறப்பாக அமைந்தால் தான் மக்களின் வாழ்வு வளமையாக அமையும். உழவின் பின்னே உலகம் சுழல்கிறது என்பது போல் உழவே உலகின் தலையாயத் தொழில். மக்கள் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான மூல தொழில் விவசாயம்.  'உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் மனிதன் சோற்றில் கை வைக்க முடியும்என்பது இன்றைய தலைமுறைக்கு சொல்லப்படுகின்ற புதுமொழி. அத்தகைய உன்னத உழைப்பு உழவர்களுடையது. உழவா;களின் சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை பல்வேறு பழமொழிகள் எடுத்துக் கூறுகின்றன.

      வேளாண்மை செய்யும் முறைகளை இன்றைய தலைமுறைகள் அறிந்து கொள்ள வேண்டும். வேளாண்மை சார்ந்த நுணுக்கங்களை அறிந்து கொள்ள பல்வேறு பழமொழிகள் துணை புரிகின்றன. உழவுத் தொழில் சார்ந்த அத்தனை வழிமுறைகளையும் பல்வேறு பழமொழிகள் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.

துணைநூற்பட்டியல் :

வேளாண் அறிவியல் பதினொன்றாம் வகுப்பு (2021-2022) தமிழ்நாடு பாடநூல் மற்றும், கல்வியியல் பணிகள்கழகம் சென்னை –18

புறநானூறு(மூலமும் உரையும்) (ஆசிரியர; - துரைச்சாமி பிள்ளை ஔவை) சு.(உ.ஆ) திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பகம் சென்னை – 18                                                         பாரதியார் கவிதைகள், (ஆசிரியர் - பத்மதேவன்) 4-2 சுந்தரம் தெரு தியாகராயர் நகர், சென்னை 600017

முதுமொழிக்காஞ்சி (மூலமும்உரையும்), (ஆசிரியர் - செல்வகேசவராய முதலியார்)  வேளச்சேரி ,சென்னை

பழமொழி நானூறு (மூலமும் உரையும்), (ஆசிரியர; - புலியூர் கேசியன் சாரதாபதிப்பகம், சென்னை-14

திருக்குறள், (ஆசிரியர் - சாமி சிதம்பரனார்) கண்ணப்பன் பதிப்பகம் 4-20 திருவாருர் தெரு, அம்மாள் நகர் சென்னை- 600032

கலைஞர் கலை இலக்கிய தடம் (ஆசிரியர் - னுச.சு.சண்முக சுந்தரம்) திருமகள் நிலையம் 55 வெங்கட் நாரயணா ரோடு சென்னை-600017,  முதல் பதிப்பு-1999