ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகளை குறித்து புலனுணர்வு மற்றும் உந்துதல் ஓர் ஆய்வு

T. Saraswathi, M.Ed. Researcher,  N.K.T National College of Education for Women, No.41, Dr. Besant Road, Triplicane, Chennai 11 May 2022 Read Full PDF

 

 

கட்டுரையாளர்: T. Saraswathi, M.Ed. Researcher,  N.K.T National College of Education for Women, No.41, Dr. Besant Road, Triplicane, Chennai-600 005.

நெறியாளர்: Dr.N.KalaiArasi, M.SC.,M.Ed.,M.Phil.,DCA.,Ph.D. Associate Professor of Computer Science – Education, N.K.T National College of Education for Women, No.41, Dr. Besant Road, Triplicane, Chennai-600 005.                 

Abstract:

The study was conducted on the basis of perception and motivation regarding online classes of high school students.The study samples were selected from 300 students studying in government, aided and private schools in Chennai by selecting the stratified random sampling component.Data were collected using both research tools as a measure of students perception and motivation regarding online classes.The data collected were tested by t- experimental and parallel analysis. There were no significant differences in perception and motivation for high school students online classes based on gender, language and type of school. It was calculated that there is a difference in correlations, relationship between perception and motivation.

Key Words: Perception, Motivation, High School Students, Online Class.

சுருக்கம்:

உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகளை குறித்து புலனுணர்வு மற்றும் உந்துதல் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.சென்னையில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில்பயலும் 300 மாணாக்கர்களை படுகை சமவாய்ப்பு மாதிரிக்கூறு தெரிவு செய்யும் முறையில்ஆய்வு மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டனர்.நிகழ்நிலை வகுப்புகளை குறித்து மாணவர்களது புலனுணர்வு மற்றும் உந்துதல் அளவுகோல் என இரு ஆய்வு கருவிகளைபயன்படுத்தி தரவுகள் சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட தரவுகளைt-சோதனை மற்றும் இணை மாறிலி பகுப்பாய்வு மூலம் சோதிக்கப்பட்டது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகளை குறித்து புலனுணர்வு மற்றும் உந்துதலில் பாலினம், பயிற்றுமொழி, பள்ளியின் வகை ஆகியவற்றின்அடிப்படையில்குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லை.புலனுணர்வு மற்றும் உந்துதலில் ஒட்டுறவு தொடர்பில் வேறுபாடு உள்ளது என கண்டறியப்பட்டது.

முக்கிய வார்த்தைகள்:

புலனுணர்வு, உந்துதல், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், நிகழ்நிலை வகுப்புகள்.

முன்னுரை:

உலகிலே அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நாடு இந்தியா.பொதுவாக இந்திய அரசாங்கத்தின் டிஜிட்டல் முன்முயற்சிகள் மூலமாகவும் குறிப்பாக கோவிட்-19 லாக் டவுன் காலத்திலும் நிகழ்நிலை கற்றலை நோக்கி மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய வகுப்பறை கற்றலுடன் ஒப்பிடுகையில் இந்த மாற்றப்பட்ட சூழ்நிலையில் நிகழ்நிலை கற்றல் குறித்த மாணவர்களின் உணர்வை மதிப்பிடுவதற்கு ஒரு நிகழ்நிலை சுய அறிக்கை கணக்கெடுப்பு (n=1,318)நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பள்ளி, ஆசிரியர், மாணவர் என்ற முக்கோணத்திற்குள் வழங்கப்பட்ட கல்வியும் பயிற்சியும் இப்போது உள்ள கல்வி அமைப்பில் தொழில்நுட்பங்களின் உதவியுடன் புதிய பன்முக வழிமுறைகளை பயன்படுத்துகின்றன. அவற்றில் ஒன்று “நிகழ்நிலை கற்றல்”.

பாரிஸ் மற்றும் டர்னர் (1994) ஊக்கத்தை இயந்திரம் என்று விவரிக்கின்றார். கற்பவர் சவாலான செயல்களை மேற்கொள்வதற்கும் சுறுசுறுப்பாக ஈடுபடுவதற்கும் மகிழ்வதற்கும் ஆழ்ந்த கற்றல் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்திறன் விடாமுயற்சி மற்றும் படைப்பாற்றல் இன்றியமையாததாகிறது. (Ryan&Deci,2000). ஊக்கம் மற்றும் கற்றல் இடையே முக்கியமான பரஸ்பர உறவு இருக்கிறது (பிராபி 2010) உந்துதல் என்பது ஒப்பீட்டளவில் நிலையான தனிப்பட்ட பண்பாகக் கருதப்படுகிறது மற்றும் வெற்றிகரமான கற்பவர்களின் பண்புகளின் பட்டியல்களை அடையாளம் காணுதல். (Yukselturk & Bulut, 2007)எனவே நிகழ்நிலை கற்றல் சூழல்களில் வெற்றிக்கான முக்கியகாரணியாகக் கருதப்படுகிறது. (ஆர்டினோ 2008)ஆகவே இந்த ஆராய்ச்சி உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே நிகழ்நிலை வகுப்புகளை குறித்து புலனுணர்வு மற்றும் உந்துதல் என்னும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்டது.

ஆராய்ச்சியின் தேவை மற்றும் முக்கியத்துவம் :

இன்றைய சூழலில் நிகழ்நிலை கற்றல் கல்வியின் இன்றியமையாத பகுதியாக கருதப்படுகிறது.தொழில்நுட்ப வளர்ச்சியால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் நிகழ்நிலை வகுப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் போதுஇணைய இணைப்பு இல்லாமல் போக அதிக வாய்ப்புகள் உள்ளது. நேருக்குநேர் கற்பது போல் நிகழ்நிலை வகுப்புகள் திறன் வாய்ந்தது அல்லஒரு மணி நேரம் தொடர்ந்து நிகழ்நிலை வகுப்பில் ஆசிரியர் பாடல்கள் எடுப்பதால் மாணவர்களுக்கு ஆர்வம் குறைகிறது.இதனால் மாணவர்கள் பிற வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். பாரம்பரிய முறையில் வகுப்பறைக் கற்றல் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ள தொடர்பு சிறப்பாக இருந்தது ஆனால் இந்தப் பெரும் தோற்று காலத்தில் நிகழ்நிலை வகுப்பு நடைபெறுவதால்மாணவர்களின் ஆர்வம் குறைந்துள்ளது. திறன்பேசி அதிகம் பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது.

புலனுணர்வு என்பது புலன் ஒன்று தூண்டப்படுவதால் உடனடிப் பயன் ஆகும்.வெளியுலகப் பொருள்களினின்றும்எழும் பொருத்தமான சிலசக்தியலைகளால் ஒரு புலன் தாக்கப்படுவதால் எழும் புலன் உணர்வாகும்.நம் புலன் உறுப்புகளின் வாயிலாக நாம் அறியும் தனிப்பட்ட பண்புகள் புலன் உணர்வுகள் எனப்படும்.நிறம், மணம், உருவம் போன்ற தனிப்பட்ட அனுபவக் பண்புகள் புலனுணர்வுகள் ஆகும்.(ஜோசப் ரிட்ஸ் கருத்துப்படி) ஒரு நபர் தனது சுற்றுச்சூழலை பற்றி தகவல்களை பெறும் அனைத்து செயல் முறைகளையும் புலனுணர்வு உள்ளடக்கியது பார்த்தல், கேட்டல், உணருதல், சுவைத்தல் மற்றும் வாசனை கற்றலை திறம்பட மற்றும் பயனுள்ளதாக்க நிகழ்நிலை படிப்புகளை வடிவமைக்கும்போது கற்பவர்களின் உணர்வையும் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம்.

 நிகழ்நிலை கற்றலின் செயல்திறனை வலுப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் பயனர்களின் உணர்வைப் புரிந்துகொள்ள வேண்டும். நிகழ்நிலை கற்றலில் மாணவர்களின் சாதகமான மற்றும் சாதகமற்ற உணர்வுகளை ஆய்வுகள் ஆவணப்படுத்தியுள்ளன. மாணவர்களுடனான பயிற்றுவிப்பாளரின் தொடர்பு, நிகழ்நிலை கற்றல் குறித்த மாணவர்களின் உணர்வுகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. நிகழ்நிலை வகுப்புகளில் மாணவர்கள் சமூக ரீதியாக தனிமைப்படுத்த பட்டதாக உணர்ந்தனர்.

உந்துதல் கற்றலின் இயந்திரம் என விவரிக்கப்படுகிறது வெற்றிகரமான கற்றலுக்கும் ஊக்கம் தேவை நிகழ்நிலை கற்றலில் உந்துதல் முக்கியமானது.நிகழ்நிலை கற்றல் தொடர்பான மாணவர்களின் உந்துதல் பண்புகளை சுட்டிக்காட்டுவது நோக்கமாக கொண்டுள்ளது.ஆகையால் ஆசிரியர் மாணவர்களை ஊக்கப்படுத்தி நிகழ்நிலை வகுப்புகளை கவனிக்க செய்கிறார்கள்.இதன் அடிப்படையில் நடப்பு ஆராய்ச்சியானது உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே நிகழ்நிலை வகுப்புகளை குறித்து புலனுணர்வு மற்றும் உந்துதல் என்ற தலைப்பில் ஆய்வாளர் ஆராய்ச்சியை மேற்கொண்டு மாணவர்களின் பின்புலமாறிகளின் அடிப்படையில் உள்ள வேறுபாடுகளை கண்டறிய இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது

ஆய்வின் நோக்கம்:

உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே நிகழ்நிலை வகுப்புகளை குறித்து புலனுணர்வு மற்றும் உந்துதலில் வேறுபாடு உள்ளதா என்பதைக் கண்டறிதல்.தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இடையே நிகழ்நிலை வகுப்புகளை குறித்து புலனுணர்வு மற்றும் உந்துதலில்வேறுபாடு உள்ளதா என்பதைக் கண்டறிதல்.அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இடையே நிகழ்நிலை வகுப்புகளை குறித்து புலனுணர்வு மற்றும் உந்துதலில் வேறுபாடு உள்ளதா என்பதைக் கண்டறிதல்.

ஆய்வின் கருதுகோள்:

உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே நிகழ்நிலை வகுப்புகளை குறித்து புலனுணர்வு மற்றும் உந்துதலில்பாலின அடிப்படையில்எந்தவிதமான குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை.

தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையேநிகழ்நிலை வகுப்புகளை குறித்து புலனுணர்வு மற்றும் உந்துதலில்எந்தவிதமான குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை.

அரசு பள்ளி மாணவர்கள் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இடையே நிகழ்நிலை வகுப்புகளை குறித்து புலனுணர்வு மற்றும் உந்துதலில்எந்தவிதமான குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை.

உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகளை குறித்துபுலனுணர்வு மற்றும் உந்துதலில் எந்தவிதமான குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை.

ஆய்வு மாதிரி:

சென்னையில் உள்ள 3அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் உயர்நிலைப் பள்ளிகளை தெரிவுசெய்துஒரு பள்ளிக்கு 100 மாணவர்கள் வீதம் 300 உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளை படுகை சமவாய்ப்பு மாதிரிகூறெத்தல்(Stratified Random Sampling)முறையில் தெரிவு செய்யப்பட்டு ஆய்வு மாதிரிகளாக உட்படுத்தப்பட்டனர்.

ஆய்வுக் கருவி:

இந்த ஆய்விற்கான தரவுகளை சேகரிக்க ஐந்து புள்ளி லிகேர்ட் அளவுகோல் (Lakert Scale) முறையினை பயன்படுத்தி சேகரிக்கப்பட்டுள்ளது. இது தரப்படுத்தப்பட்ட (Standardized Tool) ஆய்வுக் கருவி ஆகும்.

முகமது கான் பில்லியன் மற்றும் முகமது ஆசிப் என்பவர்களால்2021 ல்நிகழ்நிலை வகுப்புகளை குறித்த பள்ளி மாணவர்களின் கருத்து மற்றும் சவால்கள்மற்றும்டி முத்து பிரசாத் மற்றும் கிரிஷ் K.J.S.ஐஸ்வர்யாமற்றும் கே எஸ் ஆதிர்த்யாஎன்பவரால் 2020ல்நிகழ்நிலை கல்விக்கான மாணவர்களின் கருத்து மற்றும் விருப்பம் மற்றும் தபஹஃகபாரூஸ், தபஹனம், அல்மகதி, அலிஃதபக்ரி, தநடா என்பவர்களால் 2021ல் உணர்வுகள் மற்றும் நிகழ்நிலை கற்றலை நோக்கியே உந்துதல்குறித்து வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட வினாநிரல், இந்திய குழந்தைகளுக்கேற்ப சிறு சிறு மாற்றங்களை உள்ளடக்கி மாணாக்கரது  நிகழ்நிலை வகுப்புகளை குறித்த புலனுணர்வு மற்றும் உந்துதல் கண்டறிய பயன்படுத்தப்பட்டது.

புள்ளியியல் பகுப்பாய்வு:

உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் பெறப்பட்ட தரவுகளை மதிப்பு புள்ளிகளாக மாற்றிபுள்ளியியல் பகுப்பாய்வுகளான சராசரி, திட்ட விளக்கம் மற்றும் “t” சோதனை மற்றும் “F” விகிதம், ஒட்டுறவு கெழு “r” போன்றவற்றின் மதிப்புகளை கண்டறிந்து கருதுகோள்கள் சோதித்து அறியப்பட்டன.

ஆய்வின் வரம்பு:

இந்த ஆராய்ச்சிக்கு சென்னையில்உள்ள அரசு,அரசு உதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலைப் பள்ளி 300 மாணவ மாணவிகள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர். ஆய்வாளர்கள் பயன்படுத்திய முறைப்படுத்தப்பட்ட கருவியை தனது ஆய்விற்கேற்ப சிறு சிறு மாற்றங்கள் செய்து புலனுணர்வு மற்றும் உந்துதல் அளவுகோல்வடிவமைக்கப்பட்டு தரப்படுத்தப்பட்டது.

கருதுகோளைச் சோதித்து அறிதல்:

கருதுகோள்:1

உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகளை குறித்து புலனுணர்வு மற்றும் உந்துதலில் பாலின அடிப்படையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லை.

அட்டவணை-1

உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகள் குறித்த புலனுணர்வு மற்றும் உந்துதல் பற்றிய பாலின அடிப்படையிலான அட்டவணை

புலனுணர்வு

மாறிகள்

துணை மாறிகள்

எண்ணிக்கை

சராசரி

திட்ட விலக்கம்

"t"
மதிப்பு

முடிவு

பாலினம்

ஆண்

150

67.71

12.316

0.518

N.S

பெண்

150

63.38

10.089

உந்துதல்

பாலினம்

ஆண்

150

29.47

6.389

0.048

N.S

 

பெண்

150

29.43

7.994

 

உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகளை குறித்துபாலின அடிப்படையில் அவர்களின் புலனுணர்வு மற்றும் உந்துதல் பொருத்தவரை குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை.

கருதுகோள்:2

உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகளை குறித்துபுலனுணர்வு மற்றும்உந்துதலில் பயிற்று மொழி அடிப்படையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லை.

அட்டவணை-2

உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகளை குறித்து புலனுணர்வு மற்றும் உந்துதல் பற்றிய பயிற்று மொழி அடிப்படையிலான அட்டவணை

 

மாறிகள்

துணை மாறிகள்

எண்ணிக்கை

சராசரி

திட்ட விலக்கம்

"t" மதிப்பு

முடிவு

புலனுணர்வு

பயிற்றுமொழி

தமிழ்

81

68.85

11.615

0.757

N.S

ஆங்கிலம்

219

67.74

11.216

உந்துதல்

பயிற்றுமொழி

தமிழ்

81

29.84

8.200

0.572

N.S

ஆங்கிலம்

219

29.30

6.842

உயர்நிலை பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகளை குறித்து  பயிற்று மொழி அடிப்படையில் அவர்களின் புலனுணர்வு மற்றும் உந்துதல் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை.

கருதுகோள்:3

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிபயிலும் மாணவர்களிடையே நிகழ்நிலை வகுப்புகளை குறித்த புலனுணர்வு மற்றும் உந்துதலில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை.

அட்டவணை -3

உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகளை குறித்து புலனுணர்வு மற்றும் உந்துதல் பற்றிய பள்ளி வகையின் அடிப்படையிலான அட்டவணை

 

புலனுணர்வு

 

சதுரத்தின் கூட்டுத் தொகை

DF

சராசரி சதுர கூட்டுத் தொகை

F

முடிவு

 

குழுக்களுக்கு இடையே

300.287

2

150.143

1.189

N.S

 

குழுக்களுக்கு உள்ளே

37500.15

297

126.263

 

மொத்த மதிப்பெண்

37800.437

299

 

 

உந்துதல்

 

குழுக்களுக்கு இடையே

10.527

2

5.263

0.100

N.S

 

குழுக்களுக்கு உள்ளே

15591.62

297

52.497

 

மொத்த மதிப்பெண்

15602.147

299

 

 

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி பயிலும் மாணவர்களிடையே நிகழ்நிலை வகுப்புகளை குறித்த புலனுணர்வு மற்றும் உந்துதலில் ஒப்பீட்டளவில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை.

கருதுகோள்:4

உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகளை குறித்த புலனுணர்வு மற்றும் உந்துதலில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை.

அட்டவணை-4

உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகளை குறித்து புலனுணர்வு மற்றும் உந்துதல் பற்றிய ஒட்டுறவு அடிப்படையிலான அட்டவணை

ஒட்டுறவு மாறிகள்

ஒட்டுறவின் மதிப்புr

முடிவு

புலனுணர்வு

 

.520**

 

0.01

 

உந்துதல்

**Correlation is significant at the 0.01 level

பியர்சன் ஒட்டுறவுக்கெழு (Pearson Correlation) தொடர்பை பயன்படுத்தி சோதிக்கப்பட்டது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகளை குறித்த புலனுணர்வு மற்றும் உந்துதல் அடிப்படையில் ஒட்டுறவு தொடர்பில் வேறுபாடு உள்ளதால் இன்மை கருதுகோள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆய்வின் முடிவுகள்:

  • உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகளை குறித்து பாலின அடிப்படையில் அவர்களின் புலனுணர்வு மற்றும் உந்துதல் பொருத்தவரை குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை.
  • உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகளை குறித்து தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு இடையேபுலனுணர்வு மற்றும் உந்துதல் பொருத்தவரை குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை.
  • உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகளை குறித்துஅரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே புலனுணர்வு மற்றும் உந்துதல் பொருத்தவரை குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை.
  • உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகளை குறித்துபுலனுணர்வு மற்றும் உந்துதல்அடிப்படையில் ஒட்டுறவு தொடர்பியல் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.

முடிவுரை:

உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நிகழ்நிலை வகுப்புகளை குறித்து புலனுணர்வு மற்றும் உந்துதல் அடிப்படையில் பாலினம் பயிற்றுமொழியை, பள்ளியின் வகைமற்றும் ஒட்டுறவுபோன்ற மாறுபாடுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவர்களின் புலனுணர்வு மற்றும் உந்துதல் அளவை ஆராய்ந்து அடையாளம் காண்பது ஆய்வின் முக்கிய நோக்கமாகும். புலனுணர்வு மற்றும் உந்துதலில் ஒட்டுறவு தொடர்பில் வேறுபாடு உள்ளது. இதனை சரிசெய்ய நிகழ்நிலை வகுப்பில் கற்றல் அனுபவத்தை மேம்படுத்த ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் வினாடி வினாக்கள் மற்றும் பணிகளுடன் ஊடாடும் அமர்வுகளின் அவசியத்தையும் மாணவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். மேலும் மேலும் நிகழ்நிலை வகுப்புகளை எளிமையாக்க வேண்டும் இதனால் மாணவர்கள் நிகழ்நிலை வகுப்புகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் உடையவர்களாக விளங்க முடியும்.

REFERENCES

  • 1. Abushammala, M., Qazi, W., &Manchiryal, R. K. (2021). The impact of COVID-19
  • on the private higher education system and students in Oman. Journal of University Teaching & Learning Practice (JUTLP), 18(3), 013.
  • 2. Adams, D., Sumintono, B., Mohamed, A., & Mohamad Noor, N. (2018). E-Learning Readiness among Students of Diverse Backgrounds in a Leading Malaysian Higher Education Institution. Malaysian Journal of Learning and Instruction, 15 (2), 227-256.
  • https://doi.org/10.32890/mjli2018.15.2.9
  • 3. Adamus, T., Kerres, M., Getto, B., &Engelhardt, N. (March, 2009). Gender and ETutoring – A Concept for Gender Sensitive E-Tutor Training Programs. 5th European Symposium on Gender & ICT Digital Cultures: Participation - Empowerment – Diversity. University of Bremen. Available at: http://www.informatik.unibremen.de/soteg/gict2009/proceedings/GICT2009_Ada mus.pdf.
  • 4. Affouneh, S., Salha, S.N. and Khlaif, Z. (2020). Designing quality e-learning environments for emergency remote teaching in coronavirus crisis. Interdisciplinary Journal of Virtual Learning in Medical Sciences, 11 (2), pp. 1-
  • 5. Albelbisi, N., &Yusop, F. (2019). Factors influencing learners` self-regulated learning skills in a massive open online course (MOOC) environment. Turkish Online Journal of Distance Education, 20, 1-16.https://doi.org/10.17718/tojde.598191Ali, W. (2020). Online and remote learning in higher education institutes: A necessity in light of COVID-19 pandemic. Higher Education, 10 (3). https://doi.org/10.5539/hes.v10n3p16
  • 6. Henderson, D.; Woodcock, H.; Mehta, J.; Khan, N.; Shivji, V.; Richardson, C.; Aya, H.; Ziser, S.; Pollara, G.; Burns, A. Keep calm
  • 7. and carry on learning: Using Microsoft Teams to deliver a medical education programme during the COVID-19 pandemic. Future
  • 8. Health J. 2020, 7, e67–e70. [CrossRef] [PubMed]
  • 9. 6. Mahajan, M.V. A study of students’ perception about e-learning. Indian J. Clin. Anat. Physiol. 2020, 5, 501–507. [CrossRef]
  • 10. 7. Nassoura, A.B. Measuring Students’ Perceptions of Online Learning In Higher
  • Education. Int. J. Sci. Technol. Res. 2020, 9, Anat. Physiol. 2020, 5, 501–507. [CrossRef]
  • 10. 7. Nassoura, A.B. Measuring Students’ Perceptions of Online Learning In Higher
  • Education. Int. J. Sci. Technol. Res. 2020, 9,