ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

இணையவழியில் கல்வி கற்கும் சென்னையிலுள்ள ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின், கல்வி அடைவு மற்றும் சோதனைப் பதட்டம் - ஓர் ஆய்வு

ரா. ராதிகா எம்.எட், என்.கே,தி, தேசிய பெண்கள் கல்வியியல் கல்லூரி,  திருவல்லிக்கேணி, சென்னை 11 May 2022 Read Full PDF

கட்டுரையாளர்:  ரா. ராதிகா, எம்.எட் , என்.கே,தி, தேசிய பெண்கள் கல்வியியல் கல்லூரி, திருவல்லிக்கேணி, சென்னை- 5,


நெறியாளர்: முனைவர் V, சுமங்களா வைத்தரனை, உதவிப் பேராசிரியர், என்.கே,தி, தேசிய பெண்கள் கல்வியியல் கல்லூரி, திருவல்லிக்கேணி, சென்னை- 5  

*

Abstract

Anxiety is a combination of body and brain activity that causes one to be reluctant, unwilling, fearful, or unable to predict what will happen in the future. Research shows that age and circumstantial changes may be the cause of anxiety. This tendency, which is more prevalent among the current younger generation, can lead to mental illness, including depression, if it persists for more than six months.

A study about the relationship between students' academic achievement and test Anxiety, Data’s collected from 9th standard students who are studying through online classes in Chennai City. Information’s are gathered from 300 students for this study. Some of the factors of test anxiety have a significant impact on the student's Academic achievement.

It is important to consider the psychological factors that lead to severe experimental tension among students. Students can control it with appropriate training and awareness in dealing with the factors that cause test anxiety. Students can easily get rid of the tension about the exam by giving them the advice when they need.

 

Key Words : Anxiety,Test Anxiety ,Online Class, Academic Achievement,9th Standard Students

ஆய்வுச்சுருக்கம்     

ஒருவருக்கு விருப்பமில்லாத, ஒவ்வாத, பயம் கலந்த அல்லது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அறிய முடியாத ஒரு செயலுக்கு உடல் மற்றும் மனதின் ஒருங்கிணைந்த ஒருவித எதிர்வினைபாடுதான் மனப்பதற்றம். வயது மற்றும் சூழ்நிலை சார்ந்து ஏற்படும் மாற்றங்களே பதற்றம் உருவாக காரணமாக அமைகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தற்போதைய இளம் தலைமுறையினரிடையே அதிகம் காணப்படும் இவ்வுணர்வு தொடர்ந்து ஆறு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் எனில் அதுவே மன அழுத்தம் உள்ளிட்ட மன நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.

இணையவழியில் கல்வி கற்கும் சென்னையிலுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கல்வி அடைவிற்கும் சோதனைப் பதற்றத்திற்கும் தொடர்பினை அறிய 300 மாணவர்களை மாதிரிகளாக தேர்ந்தெடுத்து ஆய்வு நடத்தியதில் சோதனை பதற்றத்தின் சில காரணிகள் மாணவர்களின் கல்வி அடைவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்துவது தெளிவாகியுள்ளது

 மாணவர்களிடையே கடுமையான சோதனைப் பதற்றத்திற்கு வழிவகுக்கும் உளவியல் காரணிகளைக் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம்.சோதனை பதற்றத்தினை ஏற்படுத்தும் காரணிகளைக் கையாள்வதில் மாணவர்களுக்கு பொருத்தமான பயிற்சி மற்றும் விழிப்புணர்வின் மூலம் அதை கட்டுப்படுத்த முடியும். மாணவர்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளை அளிப்பதின் மூலம் தேர்வு குறித்த பதற்றத்திலிருந்து அவர்கள் எளிதில் விடுபட முடியும்.

 

*திறவுச் சொற்கள் : பதற்றம், அடைவுத்தேர்வு, தேர்வு பதற்றம்,இணையவழி கற்றல்,

முன்னுரை

தேர்வுகளில் வெற்றியை அடைய மாணவர்களிடையே ஒருவித பதற்றம் அவசியம் என்றாலும், அதில் அதிகமானவை அவர்களின் செயல்திறனில் பாதகமான விளைவை ஏற்படுத்தும். முக்கியமாக, மாணவர்களின், அதிக அளவு தேர்வு குறித்த பதற்றம், சிந்திக்கும் திறன், பகுத்தறிவு திறன்கள், சுயமரியாதை, கல்வி செயல்திறன் மற்றும் சாதனை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உலகிலேயே அதிக தற்கொலை செய்துகொள்பவர்களில் இந்தியாவும் ஒன்று, தேர்வு பயம் மற்றும் அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலைக்கு முயல்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு (தேசிய குற்ற பதிவு பணியகம், 2013 -ன் படி) தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொள்வதில் முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில்  இணையவழியில் கல்வி கற்கும் மாணவர்களின் தேர்வு குறித்த பதற்றம் மற்றும் மன அழுத்தத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மாநிலத்திற்கு பங்களிக்கும் பல்வேறு மக்கள்தொகை காரணிகளை முறையாகப் புரிந்துகொள்வது மற்றும் மாணவர்களிடையே தேர்வு குறித்த பதற்றத்தின் வடிவத்தைக் கற்றுக்கொள்வது அவசியம். அதனூடாக, பயனுள்ள கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்த முடியும்.

எனவே, இந்த ஆய்வு சென்னை மாநகரிலுள்ள பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே தேர்வு குறித்த பதற்றம்  மற்றும் கல்வி அடைவு என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியின் தேவை மற்றும் முக்கியத்துவம்.

இன்றைய காலத்தில் தொழில் நுட்ப முன்னேற்றம் இருந்தபோதிலும் இணையம் மூலம் கற்றல் குறித்த பயம் பலதரப்பட்ட சூழ்நிலைகளில் நீடிக்கிறது.(பூனுஸ்,வாஹித்,உமர்&ஆப்ரஹீத்.2016) மாணவர்களின் பெற்றோர்கள் கல்வியைக் குறித்து அதிக எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர், இத்தகைய எதிர்பார்ப்புகள் இன்றைய கொரோனா தொற்று காலத்தில் இணைய வழியில் கல்வி கற்பது மாணவர்களிடம் ஒருவிதமான பதற்றத்தை உருவாக்குகிறது .இந்த பதற்றம் மாணவர்களின் கல்வி அடைவு தேர்வினை அதிகம் பாதிக்கிறது. அதேநேரம் மாணவர்களின் அதிகப்படியான பதற்றம் அவர்களின் கற்றல் மற்றும் செயல்திறன்களின் முன்னேற்றத்தை தடுக்கிறது

ஒரு மாணவரின் குறிக்கோளானது அவனது தேர்வின் மூலம் மட்டுமே நிறைவேறும். பத்தாம் வகுப்பில் நுழைவதற்கான அடித்தளமானது ஒன்பதாம் வகுப்பில் அவர்கள் பெறும் கல்வியறிவு ஆகும். எனவே கல்வி கற்பதில் செயல்திறன் குறைந்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதன் மூலம் அவர்களின் தேர்வு பதற்றத்தை குறைக்க இயலும். இதன் அடிப்படையில் இணைய வழியில் கல்வி கற்கும் சென்னையிலுள்ள ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் கல்வி அடைவு மற்றும் சோதனை பதற்றம் என்ற தலைப்பில் மாணவர்களின் பின்புல மாறிகளின்  அடிப்படையில் உள்ள வேறுபாடுகளைக்  கண்டறிய இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் நோக்கம்

சென்னையில் இணையவழியில் கற்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் பதற்றமானது அடைவுத்தேர்வுடன் எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதனைக் கண்டறிதல்.பள்ளி நிர்வாகத்தின் அடிப்படையில் மாணவர்களின் சோதனைப் பதற்றம் மற்றும் அடைவுத்தேர்வின் வேறுபாட்டினைக் கண்டறிதல்.பயிற்று மொழி அடிப்படையில்  மாணவர்களின் சோதனைப் பதற்றம் மற்றும் அடைவுத்தேர்வின் வேறுபாட்டினைக் கண்டறிதல்.  மாணவர்களின் பாலின அடிப்படையில்  மாணவர்களின் சோதனைப் பதற்றம் மற்றும் அடைவுத்தேர்வின் வேறுபாட்டினைக் கண்டறிதல்.

ஆய்வின் கருதுகோள்கள்

1.சென்னையில் இணையவழியில் கல்வி கற்கும் மாணவர்களின் சோதனை பதற்றத்திலும் அடைவுத்தேர்விலும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை.

2.பயிற்று மொழி அடிப்படையில்  மாணவர்களின் சோதனைப் பதற்றம் மற்றும் அடைவுத்தேர்விலும் வேறுபாடு இல்லை.

3.மாணவர்களின் பாலின அடிப்படையில்  மாணவர்களின் சோதனைப் பதற்றம் மற்றும் அடைவுத்தேர்விலும் வேறுபாடு இல்லை.

4.பள்ளி நிர்வாகத்தின் அடிப்படையில் மாணவர்களின் சோதனைப் பதற்றம் மற்றும் அடைவுத்தேர்விலும் வேறுபாடு இல்லை.

ஆய்வு மாதிரி

 சென்னையில் உள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  ஒன்பதாம் வகுப்பு பயிலும் 300 மாணவ/மாண்விகளை எளிய சீரற்ற  மாதிரிக்கூறெடுத்தல் முறையில் தெரிவு செய்யப்பட்டு ஆய்வு மாதிரிகளாக உட்படுத்தப்பட்டனர்.

 

ஆய்வுக் கருவி

Richard Driscoll, Ph.D. என்பவரால் 2004 ல் பயன்படுத்தப்பட்ட (Westside Test Anxiety Scale Validation) மற்றும் Nist and Diehl (1991) ஒரு மாணவர் தேர்வு குறித்த பதற்றத்தை அனுபவிக்கிறாரா என்பதை தீர்மானிக்க உருவாக்கிய வினாத்தாள் முறைகளை ஆய்விக்கேற்ப சிறு மாற்றங்களை செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது.தேவையான இடங்களில் மொழி மற்றும் உள்ளடக்கத்தின் அடிப்படையில் இந்தக் கருவி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சோதனை பதற்றத்திற்கான பொதுவான அணுகுமுறையையும், தெளிவான குறிப்பையும், மதிப்பிடுவதற்கான அளவை இந்தக் கருவி வழங்குகிறது.

இந்த ஆய்விற்கான தரவுகளை நேரடியாக அளவிட லிகேர்ட் ஐந்து புள்ளி அளவுகோல்  முறையினை பயன்படுத்தி தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முறைபடுத்தப்பட்ட கருவி (Standardized Tool) ஆகும்.

 

புள்ளியியல் பகுப்பாய்வு

சென்னயில் கல்வி பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடம் பெறப்பட்ட தரவுகளை மதிப்பு புள்ளிகளாக மாற்றி பின்வரும் புள்ளியியல் பகுப்பாய்வுகளான

1.சராசரி மற்றும் திட்டவிலக்கம்

2.வேறுபட்ட பகுப்பாய்வு (“t” மதிப்பு மற்றும் “F” விகிதம்)

3.ஒட்டுறவு கெழு “r” போன்றவற்றின் மதிப்புகளைக் கண்டறிந்து கருதுகோள்கள் சோதித்து அறியப்பட்டன

 

ஆய்வின் வரம்பு

இந்த ஆராய்ச்சிக்கு சென்னையில் உள்ள ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர்.ஆய்வாளர்கள் பயன்படுத்திய முறைப்படுத்தப்பட்ட கருவியை தனது ஆய்விற்கேற்ப சில மாற்றங்கள் செய்து சோதனை பதற்ற அளவுகோல் வடிவமைக்கப்பட்டு தரப்படுத்தப்பட்டது.

 

கருதுகோள் சோதனை

கருதுகோள் – 1

சென்னையில் இணையவழியில் கல்வி கற்கும் மாணவர்களின் சோதனை பதற்றத்திலும் அடைவுத்தேர்விலும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை.

அட்டவணை-1

மாணவர்களின் சோதனை பதற்றம் மற்றும் அடைவுத்தேர்விற்கிடையேயான ஒட்டுறவு அட்டவணை

 

 

ஓட்டுறவின் மதிப்பு r

முக்கியத்துவ நிலை

அடைவுத்தேர்வு

0.086

முக்கியத்துவம் இல்லை

சோதனை பதற்றம்

 

பியர்சன் ஒட்டுறவுக் கெழு(Pearson Co-Efficient of Correlation) தொடர்பைப் பயன்படுத்தி சோதிக்கப்பட்டது. “r” யின் மதிப்பானது 0.05 சிறப்பு வரம்பில் 0.113 யை விட குறைவாக உள்ளதால் இன்மைக் கருதுகோள் எற்றுக்கொள்ளப்பட்டது. எனவே  இணையவழியில் கல்வி கற்கும் மாணவர்களின் சோதனை பதற்றத்திற்கும் அடைவு தேர்விற்கும் ஒட்டுறவு தொடர்பில் வேறுபாடு இல்லை.

 

கருதுகோள்- 2

. சென்னையில் இணையவழியில் கல்வி கற்கும் மாணவர்களின் சோதனை பதற்றத்திலும் அடைவுத்தேர்விலும் பாலின அடிப்படையில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை.

அட்டவணை-2

பாலின அடிப்படையிலான அட்டவணை

 

மாறிகள்

துணை மாறிகள்

எண்ணிக்கை

சராசரி

திட்ட விலக்கம்

t யின் மதிப்பு

முடிவு

அடைவுத்தேர்வு

பாலினம்

ஆண்

150

356.3200

38.91762

0.622

வே.இ

பெண்

150

353.4067

42.10009

 

மாறிகள்

துணை மாறிகள்

எண்ணிக்கை

சராசரி

திட்ட விலக்கம்

t யின் மதிப்பு

முடிவு

பதற்றம்

பாலினம்

ஆண்

150

130.4333

21.58903

0.922

வே.இ

பெண்

150

128.2800

18.78459

வே.இ : வேறுபாடு இல்லை

இணையவழியில் கல்வி கற்கும் மாணவர்களின் பாலின அடிப்படையில் அவர்களின் சோதனை பதற்றம் மற்றும் அடைவுத்தேர்வைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை.

 

கருதுகோள்- 3

சென்னையில் இணையவழியில் கல்வி கற்கும் மாணவர்களின் சோதனை பதற்றத்திலும் அடைவுத்தேர்விலும் பயிற்று மொழியின் அடிப்படையில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை.

அட்டவணை-3

பயிற்று மொழியின் அடிப்படையிலான அட்டவணை

 

மாறிகள்

துணை மாறிகள்

எண்ணிக்கை

சராசரி

திட்ட விலக்கம்

t யின் மதிப்பு

முடிவு

அடைவுத்தேர்வு

பயிற்று மொழி

தமிழ்

100

369.7000

39.70892

4.638

வே.உ

ஆங்கிலம்

200

347.4450

38.9096

 

மாறிகள்

துணை மாறிகள்

எண்ணிக்கை

சராசரி

திட்ட விலக்கம்

t யின் மதிப்பு

முடிவு

பதற்றம்

பயிற்று மொழி

தமிழ்

100

134.3700

24.72869

3.078

வே.உ

ஆங்கிலம்

200

126.8500

17.08117

வே.உ : வேறுபாடு உள்ளது

சென்னையில் இணையவழியில் கல்வி கற்கும் மாணவர்களின் சோதனை பதற்றத்திலும் அடைவுத்தேர்விலும் பயிற்று மொழியின் அடிப்படையில் “t” யின் மதிப்பானது 0.01 சிறப்பு வரம்பில் 2.58 யை விட அதிகமாக உள்ளதால் இன்மைக் கருதுகோள் எற்றுக்கொள்ளப்படவில்லை

இணைவழியில் கல்வி கற்கும் 9-ஆம் வகுப்பில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களைவிட அடைவுத்தேர்வில் சிறப்பாகவும் ஆனால் ஒப்பீட்டளவில் பதற்றமாகவும் உள்ளனர்.

 

கருதுகோள்-4

அரசு , அரசு உதவி பெறும்  மற்றும் தனியார் பள்ளிகளில் இணையவழியில் கல்வி கற்கும் 9 – ஆம் வகுப்பு மாணவர்களிக்கிடையே சோதனை பதற்றம் மற்றும் அடைவுத்தேர்வின் அடிப்படையில் எந்த ஒரு வேறுபாடும் இல்லை.

அட்டவனை-4

பள்ளி நிருவாகத்தின் அடிப்படையிலன அட்டவணை

 

சார்பு மாறிகள்

பள்ளி வகை

பள்ளி வகை

Mean Diff

முடிவு

அடைவுத்தேர்வு

அரசு பள்ளி

அரசு உதவி பெறும் பள்ளி

23.91 *

வே.உ

தனியார் பள்ளி

20.6 *

வே.உ

அரசு உதவி பெறும் பள்ளி

அரசு பள்ளி

-23.91 *

வே.உ

தனியார் பள்ளி

      -3.31 

வே.இ

தனியார் பள்ளி

அரசு பள்ளி

-20.6 *

வே.உ

அரசு உதவி பெறும் பள்ளி

       3.31

வே.இ

சோதனை பதற்றம்

அரசு பள்ளி

அரசு உதவி பெறும் பள்ளி

       3.73

வே.இ

தனியார் பள்ளி

11.31 *

வே.உ

அரசு உதவி பெறும் பள்ளி

அரசு பள்ளி

    -3.73

வே.இ

தனியார் பள்ளி

7.58 *

வே.உ

தனியார் பள்ளி

அரசு பள்ளி

-11.31 *

வே.உ

அரசு உதவி பெறும் பள்ளி

-7.58 *

வே.உ

சராசரி வேறுபாடு அளவு : 0.05 வே.இ : வேறுபாடு இல்லை வே.உ : வேறுபாடு உள்ளது

 

அரசு , அரசு உதவி பெறும்  மற்றும் தனியார் பள்ளிகளிக்கிடையேயான சராசரி வேறுபாடுகள் 0.05 சிறப்பு வரம்பைவிட அதிகமான மற்றும் குறைவான மதிப்புகளுடன்  உள்ளது. எனவே பதற்றம் மற்றும் அடைவுத்தேர்வில்  குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளமையால் இன்மைக் கருதுகோள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் ஒப்பீடும் போது அடைவுத்தேர்வில் சிறப்பாகவும் மற்றும் குறைவான பதற்றத்தினையே கொண்டுள்ளனர்.

 

ஆய்வின் முடிவுகள்

இணையவழியில் கல்வி கற்கும் 9-ஆம் வகுப்பு மாணவர்களின பாலின அடிப்படையில் அவர்களின் அடைவுத்தேர்வு மற்றும் சோதனை பதற்றத்தினை பொறுத்தவரை குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை.

இணைவழியில் கல்வி கற்கும் 9-ஆம் வகுப்பில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களைவிட அடைவுத்தேர்வில் சிறப்பாகவும் ஆனால் ஒப்பீட்டளவில் பதற்றமாகவும் உள்ளனர்.

அரசு , அரசு உதவி பெறும்  மற்றும் தனியார் பள்ளிகளில் இணையவழியில் கல்வி கற்கும் 9 – ஆம் வகுப்பு மாணவர்களிக்கிடையே சோதனை பதற்றம் மற்றும் அடைவுத்தேர்வு ஒப்பீட்டளவில்  குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.

இணையவழியில் கல்வி கற்கும் மாணவர்களின் சோதனை பதற்றத்திற்கும் அடைவு தேர்விற்கும் ஒட்டுறவு தொடர்பில் வேறுபாடு இல்லை.

 

கலந்துரையாடல்

இணையவழியில் கல்வி  பயிலும் மாணவர்கள் கூர்ந்து கவனித்தல், புரிந்து கொள்ளுதல், சந்தேகங்களை நிவர்த்தி செய்தல் போன்ற  கற்றலில் சில சிக்கல்களை ஆங்கில வழியில்பயிலும் மாணவர்கள்தான் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களை விட அதிகம் எதிர்கொள்கின்றனர். இணையவழி கற்பித்தலுக்கு ஏற்ற பாத்திட்டத்தை வடிவமைத்திட வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களை எளிதில் அணுகும் முறையில் இருக்க வேண்டும்.மாணவர்களின் பதற்றத்தினை குறைக்க சிறப்பு வகுப்புகளை எளிய முறயில் நடத்திட வேண்டும்.

அரசு உதவி பெறும்  மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அரசு பள்ளி  மாணவர்களுடன் ஒப்பீடும்போது  அடைவுத்தேர்வில் பின்தங்கியும் பதற்றமாகவும் உள்ளனர். பதிவுக் காட்சி வாயிலாக ஆசிரியர் பாடம் நடத்தும்போது மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்படும்போது அவற்றை திரும்ப பார்த்து சந்தேகங்களை எளிய முறையில் தீர்த்து கொள்ளமுடியும்.

பரிந்துரைகள்

இணையவழி கற்பித்தலுக்கு ஏற்ற பாத்திட்டத்தை வடிவமைத்திட வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களை எளிதில் அணுகும் முறையில் இருக்க வேண்டும்.மாணவர்களின் பதற்றத்தினை குறைக்க சிறப்பு வகுப்புகளை எளிய முறயில் நடத்திட வேண்டும்.

மெய்நிகர் வழி கற்றலில் ஆசிரியர் ஒருமுறை மட்டுமே பாடத்தினை கற்பிப்பதால் சந்தேகங்களுக்கு தீர்வினை பெறுவது மாணவர்களுக்கு கடினமாக உள்ளது எனவே மெய்நிகர் வழியுடன் பதிவுக்காட்சி வழியிலும் கற்பிக்கும்போது மாணவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

 

முடிவுரை

9 ஆம் வகுப்பு மாணவர்களின் பாலினம்,பயிற்று மொழி, பள்ளி நிர்வாகத்தின் வகை போன்ற மாறுபாடுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவர்களின் சோதனை பதற்றம் மற்றும் அடைவுத்தேர்வின் அளவை ஆராய்ந்து அடையாளம் காண்பதே ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.தமிழ் வழியில் பயிலும் மாணவர்களைவிட ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் அடைவுத்தேர்வில் பின்தங்கியும், பதற்றமாகவும் உள்ளனர்.பள்ளி நிர்வாகமானது ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் தரத்தினை மேம்படுத்த வேண்டும்.

  தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் இருந்து இதுபோன்ற உணர்வுகளை அகற்ற, யோகா வகுப்புகள், தியானங்கள் நடத்துதல், உடற்கல்வி வகுப்புகளுக்கு மணிநேரத்தை அதிகரிப்பது போன்ற சரியான தீர்வுகளை வழங்குவதன் மூலம் வாழ்க்கை சூழ்நிலைகளின் யதார்த்தத்தை கற்பிக்க சில பரிந்துரைகளை இந்த ஆய்வு வழங்குகிறது.

 

References:

A. S. Rao(2008), “Academic stress and adolescent distress: the experiences of 12th standard students in Chennai, India,” ProQuest Dissertations & Theses ProQuest , 2008.

Aggarwal, Y. P., (2002), Statistical Method: Concepts, Application and Computation, Sterling Publishers Private Limited.

Aggarwal, J. C. (1975), Education Research – An Introduction, Arya Book Depo, New Delhi.

Driscoll, R. (2006). STARS–PAC Accelerated Anxiety Reduction: Rationale and Initial Findings. ERIC, 18

Driscoll, R., B. Holt, & L. Hunter (2005). Accelerated Desensitization and Adaptive Attitudes Interventions and Test Gains with Academic Probation Students. ERIC, 13 pp

Nist, P., & Diehl, M. (1990). PHCC test anxiety questionnaire. Retrieved Aug, 20, 2010 from http://phcc.edu/ods/questionnaire.html

Matthews, G. (2000). Human performance: Cognition, stress,and individual differences. Psychology Press.

ChamorroPremuzic, T., & Furnham, A. (2003). Personalitytraits and academic examination performance. European Jour-nal of Personality, 17(3), 237-250.

 

Saadé, R. G., & Kira, D. (2009). Computer anxiety in elearning:The effect of computer self-efficacy. Journal of Infor-mation Technology Education, 8(1), 177-191. Retrieved from https://www.informingscience.org/Publications/166

 

Bolliger, D. U., & Halupa, C. (2012). Student perceptions of satisfaction and anxiety in an online doctoral program. Distance Education, 33(1), 81-98.

 

Macher, D., Paechter, M., Papousek, I., & Ruggeri, K. (2012). Statistics anxiety, trait anxiety, learning behavior, and aca-demic performance. European Journal of Psychology of Education, 27(4), 483-498.

 

Saadé, R. G., Nebebe, F., & Kira, D. (2015). Characterising computer experience and anxieties differences between Middle Eastern and Western Students in eLearning. Proceedings of Informing Science & IT Education Conference (InSITE) 2015, 353-365.

 

Yunus, K., Wahid, W., Omar, S. S., & Ab Rashid, R. (2016). Computer phobia among adult university students. International Journal of Applied Linguistics and English Literature, 5(6), 209-213.

 

Jennet Shukla’s Shuklas Examination Anxiety Scale used to find the Anxiety level of 9th standard students

 

Nist, P., & Diehl, M. (1990). PHCC test anxiety questionnaire. Retrieved Aug, 20, 2010 from http://phcc.edu/ods/questionnaire.html