ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

திருக்கோயிற் கட்டடக்கலைமரபில் கோபுரம் -  சிவாகமங்களையும் சிற்பசாஸ்திரங்களையும் அடிப்படையாகக்கொண்டது.

கலாநிதி (திருமதி) சுகந்தினி சிறிமுரளிதரன் பீடாதிபதி, இந்துக்கற்கைகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் 18 May 2021 Read Full PDF

கலாநிதி (திருமதி) சுகந்தினி சிறிமுரளிதரன்
பீடாதிபதி, இந்துக்கற்கைகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.


அறிமுகம்.
திருக்கோயில்கள் பண்பாட்டின் நிலைக்களனாக விளங்குபவை ஆகும். அவை ஒருநாட்டு மக்களின் பண்பாட்டை கலையுணர்வை சமூக ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கின்றன. திருக்கோயிற்;கட்டடக்கலை பன்னெடுங்காலமாக படிமுறை வளர்ச்சிபெற்ற இந்து அறிவியலின் ஒரு முக்கிய கூறாக விளங்குகின்றது. நிறைவான வளர்ச்சி பெறுகின்ற போது அவை சாஸ்திர மரபையும் கலை மரபையும் ஆன்மிகத்தோடு இணைத்து நிற்கும் சாதனமாகவும் விளங்குகின்றது.கோயில் என்னும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் குறிப்பதன்று. அது தேர்வு செய்து வரையறுக்கப்பெற்ற நிலப்பகுதி அதில் கட்டப்பெறும் விமானம் மண்டபங்கள் திருச்சுற்று பரிவாராலயங்கள் மதில்கள் கோபுரங்கள் எனப்பல்வேறு அங்கங்களை உள்ளடக்கியதாகும். அத்தகைய திருக்கோயில்கள் தன்னகத்தே கொண்டுள்ள பிரதான கூறுகளில் கோபுரம்  உயர்ந்த தத்துவமும் உட்பொருளும் அளவுப்பிரமாணங்களும் கொண்டு விளங்குகின்றன. கோபுரங்கள் கட்டடக்கலைத் திறத்தை மட்டும் வெளிக்காட்டுபவையல்ல. அங்கு சிற்பக்கலை செழிக்கின்றன. நாட்டியக்கலை பரிணமிக்கின்றன. இசையும் ஒவியமும் இழையோடுகின்றன. வரலாற்று நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. அத்தகைய சிறப்புடைய கோபுர அமைப்பு விதிமுறைகளை சிவாகமங்களையும் சிற்பசாஸ்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டு எடுத்துக்கூறுவது இவ்வாய்வின் நோக்கமாக அமைகின்றது.
சிவாகமங்கள் கூறுகின்ற நான்கு பிரிவுகளாகிய கர்~ணம் பிரதி~;டை உற்சவம் பிராயச்சித்தம் ஆகியவற்றில் முதலாவதாக இடம்பெறுகின்ற கர்~ணம் என்று சொல்லப்படுகின்ற பிரிவு புதிய கோயில் ஒன்றினை உருவாக்குவதற்கு ஏற்ற வழிமுறைகளை வகுத்துக் கூறுகின்றன. தென்னாட்டிலும்ää இலங்கையிலும் பன்னெடுங்காலமாக நிர்மாணிக்கப்பட்டுவருகின்ற திருக்;கோயில்கள் பெரும்பாலும் இத்தகைய சிவாகம ஒழுங்கு முறைகளைப் பின்பற்றி வந்துள்ளமையை அறியலாம். சிவாகம மரபு ஒன்று நிலவிவருவதற்கு இத்தகைய திருக்கோயிற்கட்;டடக்கலை ஒன்றே சிறந்த சான்றாக அமைகின்றது.
 
திருக்கோயிற் கோபுர அமைப்பு விதிமுறைகள்.

திருக்கோயிற் கோபுர அமைப்பு விதிமுறைகள் பற்றி காமிகாகமம்1 பூர்வகாரணாகமம்2 உத்தரகாரணாகமம்3 சுப்பிரபேதாகமம்4  ரௌரவாகமம்5 எனும் ஆகமங்களும் ஸ்ரீகாசியப சில்பசாஸ்திரம்6  மயமதம்7 எனும் சிற்பசாஸ்திரங்களும் எடுத்தியம்புகின்றன. 
கோபுர அமைப்பு விதிகளை நிலத்தேர்வில் தொடங்கி புனிதப்படுத்துதல்ää பதவிந்யாசம் ஆத்யே~;டகம் கர்பநியாசம் கட்டுமானம் மூர்தே~;டகம் கலசஸதாபனம் என பல்வேறு நிகழ்வுகளுக்கான வரையறைகளை ஆகமங்களும் சிற்பசாஸ்திரங்களும் எடுத்துக்கூறுகின்றன. கோபுரக் கட்டுமானம் என்பது காப்பு அல்லது உறுதித்தன்மை உயரம் அலங்காரம் எனும் மூன்று அடிப்படைக் கூறுகளை மையமாகக் கொண்டது.8  இதில் காப்பு என்பது கோபுரமாகிய கட்டடம் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள்ää கட்டடம் அமைந்துள்ள இடத்தின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அமையும். கோபுரம் கட்டப்பெறும் இடம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதனை ஆகமங்களும் சிற்ப சாஸ்திரங்களும் விபரிக்கின்றன. கோபுர உயரம் என்பது எந்த காரணத்திற்காக ஒரு கோயில் எடுக்கப் பெறுகின்றதோ அதன் அடிப்படையில் அமைவதாகும். மேலும் அக் கட்டடத்தைக் கட்டுவதற்கு யார் மூல காரணமாக விளங்குகிறாரோ அவரது கைவிரல் அங்குலியோ அல்லது மூலமூர்த்தியின் உயரத்தையோ அடிப்படையாகக் கொண்டு மானாங்குலமாகவோ அல்லது மந்திராங்குலமாகவோ வகுத்து அக்கோயிலில் கட்டுமானங்கள் நிர்மாணிக்கப்பெறுவதால் கோபுர உயரமும் அதற்கேற்ப அமையும்9 சோபா என சிற்பநூல்கள் கூறும் மூன்றாவது கூறு கட்டுமான நூல்கள் கூறும் வரையறைகளை மீறாமல் சிற்பி ஒருவனால் தனது படைப்புத் திறமைக்கும் கற்பனைத் திறனுக்கும் ஏற்ப அமைப்பதாகும். பெரும்பாலும்ää சிற்பியின் படைப்பாற்றல் தோரணவேலைப்பாடுகள் சிற்ப அலங்காரங்கள் வாயிலாகவே வெளிப்படும்.

முதலில் திருக்கோயிற் கோபுரங்களை நிர்மாணிப்பதற்குரிய நிலத்தை தேர்ந்தெடுப்பது பற்றியும் நிலத்தினுடைய பாகுபாடு பற்றியும் ஆகமங்களும் சிற்பசாஸ்திரங்களும் கூறுகின்ற கருத்துக்களை நோக்கலாம்.  காமிகாகமம்
“ஒரு குறிப்பிட்ட இடத்தை ஆலய நிர்மானத்திற்கு தேர்ந்தெடுப்பதாக இருந்தால் மங்கலகரமான ஒரு காலநிர்ணயத்தை தெரிந்தெடுக்க வேண்டும்.” 10
அடுத்து நல்ல சகுனம் பார்த்து நற்காரியம் ஆற்ற வேண்டும் எனவும் சிவாகமங்கள் கூறுகின்றன. 
“நல்ல காலத்தைத்தேர்ந்தெடுத்தபின் நன்நிமித்தங்களையும் அறிந்த பின்னரே நற்காரியங்களை செய்ய வேண்டும்.” 11 என காமிகாகமம் கூறுகின்றது. 
சிவாகமம் கூறுகின்ற திருக்கோயில் அமைப்பில் அடுத்து இடம்பெறுவது பூமி பரீi~யாகும். 
பூமியானது அதன் கண்ணுள்ள மரங்களாலும் செடி கொடிகளாலும் அதில் வாசம் செய்யும் மிருகங்கள் பட்சிகளாலும் மண்களின் நிறத்தாலும் வாசனையாலும் உருசிகலாலும் பன்னிரு பேதங்களாக காமிகாகமம் வகுத்துக் கூறுகின்றது.12 
இவற்றுள்ளே சிவாலயம் அமைவதற்கு ஏற்ற மங்கலகரமான இடம் சைவபூமி என்றும் அதே போன்று எல்லா நன்மைகளும் தரக்கூடிய நிலம் ஒன்றினை ஆலயம் அமைப்பதற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கின்ற போது அதற்கு பிரமபூமியென்றும் வழங்கப்படுகின்றது. அக்காலத்தில் மக்கள் ஆலயம் ஒன்றினை சிறப்பாக அமைப்பதற்கு நிலங்கள் எவ்வாறு நுட்பமாக தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கு இத்தகைய விபரம் சான்றாக அமைகின்றது. 
ஒரு நிலம் திருக்கோயில் அமைப்பதற்கு ஏற்றதா என்பதை சீர்தூக்கிப் பார்ப்பதற்கு சில பரீட்சை முறைகள் கைகொள்ளப்படுவதை சிவாகமங்கள் புலப்படுத்துகின்றன. பூமிசருணப் பரீட்சை ஜலபூ~;ப பரீட்சை தானிய பரீட்சை எனும் மூவகைப்பரீட்சைகள் இடம்பெறுகின்றன என்பதனை காமிகாகமம் குறிப்பிடுகின்றது.13 இவ்வாறு பரீட்சித்து வெகு குணங்களோடு கூடினதாகிய பூமியை கிரகித்தபின் பூமிக்குப் பிரவேசிக்கும் காலத்தில் அந்நிலத்தைப் புனிதப்படுத்தவதற்காக பல சமயக்கிரியைகள் நடாத்தப்படுகின்றன. அக்கிரியையினைப் பிரவேசபலியெனக் காமிகாகமம் கூறுகின்றது.14  இவ்வகையில் கட்டடம் கட்டத் தேர்வு செய்யப்பெற்ற ப10மியை ப10பரிக்கிரஹம் செய்வது முதற்பணியாகும். பலியிட்டபின்னர் பூமியைக்கைக்கொள்ள வேண்டுமாதலால் அடுத்ததாக பூபரிக்ரஹக் கிரியை செய்ய வேண்டும் எனக் காமிகாகமம் கூறுகின்றது. 15   மேற்கூறியவாறு பலவழிகளில் பரீட்சித்து நல்ல பூமியைத் தெரிந்தெடுத்த பின் உழுதலை ஆரம்பிக்க வேண்டும் எனக் காமிகாகமம் குறிப்பிடுகின்றது.16 அந்நிலத்தை எருதுகள் ப10ட்டப்பெற்ற கலப்பை கொண்டு உழுது கோமயம் கலந்த விதைகளை அங்கு விதைக்க வேண்டும். ஆந்த விதைகள் முளைத்து நிலம் பசுமையாக இருக்கும்போது அங்கு காளைகளுடனும் கன்றுகளுடனும் கூடிய பசுக்களை வசிக்கும்படி செல்லவேண்டும். பசுக்களினால் சஞ்சரிக்கப்பட்டு அவைகளின் காலடிகள் பட்டதும் அவைகளால் முகர்ந்து பார்க்கப்பட்டதுமான ப10மியானது பரமபவித்திரமாகி ப10ஜிக்கத்தக்கதாகிறது. இவ்வாறு பசுக்களினால் புனிதம் பெற்ற நிலத்தில் புனிதநதிகளின் நீரைத் தெளித்து மேலும் புனிதப்படுத்திய பிறகே கட்டுமானத்திற்குரிய பணிகளைத் தொடங்கவேண்டும் என்று மயமதம் கூறுகிறது.17 அடுத்து நிகழவேண்டியது திக்பரீட்சை அல்லது சங்குஸ்தாபனம் எனச் சிவாகமங்கள் குறிப்பிடுகின்றன. 18 கோபுரவாயில்கள் சரியான திசைகளிலே இருத்தல் வேண்டும். குறிப்பாக கிழக்கு கோபுரம் மிகத்துல்லியமான கீழ்த்திசைக்கோட்டில் அமைதல் வேண்டும். இதற்கென திக்நிர்ணய விதிகளை நூல்கள் மிகச்சிறப்பாக கூறுகின்றன. 
“சூரியகதியின் அடிப்படையில் கிழக்கு மேற்கு ஆகிய திசைகளைக் குறித்தல் வேண்டும். மூலமூர்த்தியின் பார்வையும் கோபுரவாயில்களும் சரியான திசை நோக்கி அமையத் திசைக்காணும் (திக்பரிச்சேதனம்) எனும் முறையை மயமதமும் காசியபமும் எடுத்துக்கூறுகின்றன”.19 
திருக்கோயில் கட்டுவதற்குரிய இடத்தைத்தேர்ந்தெடுத்து திசைகளை அறிந்தபின் அந்த இடத்தில் வசிக்கும் தேவதைகளை திருப்திப்படுத்தும் வகையில் அடுத்து நிகழ்த்தப்படுவது வாஸ்து பூசையாகும். அந்த இடத்திற்கு காவலனாக இருப்பவன் வாஸ்துப்புரு~ன் என்ற காரணத்தினால் அவனுக்கென நிகழ்த்தப்படுகின்ற வழிபாடாக இது அமைகின்றது. வாஸ்து பூசைக்காக அப்புனிதநிலத்தை பாகுபடுத்தல் வேண்டும். அதற்குப் பதவிந்யாசம் என்று காமிகாகமம் கூறுகின்றது.20 பதங்கள் அடிப்படையில் தான் கோபுரம் விமானம்  மண்டபங்கள் பரிவாராலயங்கள் அனைத்தும் வகுக்கப்பெறும். இறுதியாக வாஸ்து சாந்தி செய்யப்படும். மேற்கூறியவற்றை கிரியாபூர்வமாகச் செய்தபின்னரே பதவிந்யாசத்தில் திக்கு அல்லது அதிக்குகளில் உள்ள பதங்களில் மட்டுமே கோபுரங்கள் அமைக்கப்பெறவேண்டும் என சிற்பசாஸ்திரங்கள் இலக்கணம் வகுத்துள்ளன21. 
திருக்கோயில் கட்ட ஆரம்பிக்கும்போது முதல் இடம் பெறும் கிரியை இ~;டக நியாசம் ஆகும்.22 கட்டடம் கட்டுவதற்கு நிலத்தை அகழ்ந்தபின் அகழ்ந்த இடத்தில் நிகழ்த்தப்படுவது கர்ப்பநியாசம் எனும் கிரியை ஆகும்;. 
“கர்ப்பநியாசத்தோடு கூடிய இடம் அனைத்து செல்வங்களையும் கொடுப்பதாகும். கர்ப்பநியாசம் இல்லாத இடம் நாசத்தைக்கொடுப்பதாகும். ஆகையால் புத்திமான் அனைத்து முயற்சியுடன் கர்ப்பநியாசத்தை ஸ்தாபிக்க வேண்டும்".23  

எனக் காமிகாகமம் கூறுகின்றது. பொன் வெள்ளி அல்லது செம்பு ஆகியவற்றில் ஏதாவதொரு உலோகத்தாலோ அல்லது தகுந்த மரத்தாலோ ஒரு பேழை செய்து அதில் வளமுள்ள பொருட்கள் வைத்து பூசித்தபின் நிர்மாணக்கோபுரத்தின் வலதுபுற நிலைக்கால் அமைக்கப்படும் இடத்திற்கு கீழாக கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு ஆகிய நான்கு திசைகளையும் நோக்கும் வண்ணம் வைக்கவேண்டும். அதன் பின்பே கற்களை இணைத்து கட்டுமானம் தொடங்கப்படும். உபபீடம் அதி~;டானம் பித்தி போன்ற அங்கங்களுடன் கோபுரக்கட்டுமானம் நிகழும் போது துவாரவாயிலில் ஸதம்பம் என்னும் நிலைக்கால் வைப்பதற்கு முன் கர்ப்பவிநியாசம் செய்ய வேண்டுவது அவசியமெனக்கூறப்படுகின்றது.24 கர்ப்பநியாசம் நிகழ்ந்தபின் கோபுரத்;தை அமைக்கும் காரியம் தொடங்கும். திருக்கோயிற் கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெறும்போது உரிமையாளரான ஆலயப் பணிகளைச் செய்ய விரும்புகின்ற யஜமானன் ஆலய அமைப்பு விதிகளை நன்கு அறிந்த சிற்பி சிவாச்சாரியார் என்பவர்கள் பிரசன்னமாக இருத்தல் வேண்டும் என காமிகாமம் கூறுகிறது25
 கோபுர இலட்சணம்.
சிவாகமங்கள் கூறும் திருக்கோயில் அமைப்பானது பிராசாதம் எனப்படும் கர்ப்பக்கிருகத்தை மையமாகக் கொண்டது. உயிரினங்களின் தோற்றத்திற்கு எப்படி கர்ப்பம் முக்கியமானதோ அதேபோல தெய்விகம் மிளிர்வதற்கு புனிதமான மையப்பகுதியாகக் கர்ப்பக்கிருகம் கொள்ளப்படுகின்றது. இதனை சுப்பிரபேதாகமம் 


“திருக்கோயில் அமைப்புக்கள் பிராசாதத்தை அடிப்படையாகவும் பிராகாரங்களை விரிவாகவும் மண்டபங்களையும் பரிவாரங்களையும் அங்கங்களாகவும் திட்டமிட்ட மக்கள் குடியிருப்பை சூழந்ததாகவும் கிராமம் போன்ற திட்டமிடப்பட்ட வடிவமாக விளங்கும் அதேவேளை திருக்கோயிலின் விரிவானது பிராசாதம் முதல் கோபுரம் வரையாக விரிவடைந்து அதனையே ஆலயத்தின் எல்லையாகவும் கொண்டு விளங்குகின்றது.” என்கிறது. 26 திருக்கோயிலுக்குரிய பிராகாரங்கள் எவ்விதம் பிராசாதத்தின் மானத்திலிருந்து அகன்று பரந்;;து செல்லுகின்றதோ அதேபோன்றே கோபுரங்களும் பரந்து விரிந்து செல்லுகின்றன. பிராகாரம் எவ்வாறு தமது நிலைகளுக்கு ஏற்ப பெயர் மாற்றம் பெறுகின்றனவோ அவ்வாறே கோபுரங்களும் வௌ;வேறு பெயர்களைப் பெறுகின்றன. இவற்றினை சிவாகமங்களும் சிறபசாஸ்திரங்களும் தமக்கேயுரிய பாணியில் விளக்குவதனைக்காணலாம். துவாரசோபை துவாரசாலை துவாரபிராசாதம் துவாரகர்ம்யம் துவாரகோபுரம் (மகாகோபுரம்) என ஐந்துவகையான கோபுர அமைப்புக்களைத் துவரசோபாதி பஞ்சகம் எனக்குறிப்பிடுகின்றன. 27 
“முதற்திருச்சுற்றின் மதிலில் மூன்று தளங்கள் வரை அமைவது துவாரசோபை என்பதாகும். இரண்டாம் திருச்சுற்று மதிலில் இரண்டு முதல் நான்கு தளங்கள் வரை அமையும் கோபுரம் துவரசாலை என்பதாகும். மூன்றாம் திருச்சுற்று மதிலில் மூன்று முதல் ஐந்து தளங்கள் வரை அமையும் கோபுரம் துவார பிராசாதம் என அழைக்கப்பெறும். நான்காம் திருச்சுற்றில் ஐந்து முதல் ஏழு தளங்கள் வரை விளங்குவது துவாரகர்மியம் என்றும் ஐந்தாம் திருச்சுற்றில் ஐந்து முதல் ஏழுநிலைகளுடன் திகழும் கோபுரம் மகாகோபுரம் என்றும் கூறப்பெற்றுள்ளன”.28 தொடக்ககாலத்தில் ஒரேதிருச்சுற்றில் மதிலோடு கோபுரம் எடுக்கும் மரபு காலப்போக்கில் இரண்டு முதல் ஐந்து திருச்சுற்றுக்கள் எனக்கூடி இறுதியில் ஏழு. எட்டு திருச்சுற்றுக்களுடன் அவற்றின் நான்கு திக்குகளிலும் கோபுரங்கள் கட்டப்பெறுகின்ற ஒரு வளர்ச்சி நிலையை எய்தியது. 
கோபுரத்தின் அங்கங்கள்
உபானம் முதல் ஸ்தூபி வரையிலான நுழைவாயிற் கட்டடமே கோபுரமாகும். அது உபபீடம்ää அதி~;டானம் வேதிகை பித்தி அல்லது கால் பிரஸ்தரம்ää சாலை கூடு கிரீவம் சிகரம் ஸ்தூபி (கலசம்) எனப் பல்வேறு அங்கங்களைக் கொண்டதாகும். ஓவ்வொரு அங்கமும் பல்வேறு உபாங்கங்களைக் கொண்டதாகத் திகழும்.  பதினாறு நிலை வரையிலான கோபுரங்கள் பற்றிக் கட்டடக்கலை நூல்கள் கூறுகின்றன.29  இவற்றின் உச்சியிலே மூன்று ஐந்து ஏழு அல்லது ஒன்பது பதினொன்று ஆக பல எண்ணிக்கை கொண்ட மாடங்கள் காணப்படும். இவற்றின் உச்சியிலே மூன்று ஐந்து ஏழு அல்லது ஒன்பது கலசங்கள் காணப்படும். கோயில்களை நிர்மாணிக்கப் பொருள் செலவிடும் கொடை வள்ளல்களின் சக்திக்கேற்பவும் கோயிற் கருவறையின் பிரமாணத்திற்கேற்பவும் கோபுரத்தின் உயரம் வேறுபடும்.
கோபுர கட்டடப் பொருட்கள்
“பொன்னாலோ வெள்ளியாலோ செப்பாலோ கல்லாலோ அன்றில் பித்தளையாலோ கலவையாலோ அல்லது மரத்தாலோ ஆலயத்தை உரிய லட்சணப்படி செய்க” எனக் காரணாகமம் கூறுகிறது.30 எனினும் கோயிற் கட்டடங்களுக்கு நான்கு பொருட்கள் முக்கியமாக பயன்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவை மரம் சுண்ணாம்பு செங்கல் கல் என்பனவாகும். இவற்றுள் மரத்தால் அமைந்த கோயில்கள் மிகப்புராதனமானவை. கட்டடம் முதலிய ஆக்கவேலைகளை மரத்தைக் கொண்டே அமைத்தனர் என்பது இருக்கு வேதம் தருகின்ற செய்தியாகும்.31 திருக்கோயிற் கட்டடக் கலைமரபில் சமகாலத்தில் திருக்கோயில்கள் கருங்கற்களினாலோ அல்லது செங்கற்களினாலோ அல்லது சீமெந்தினாலோ கட்டப்படுகின்றன. அந்நிலையில் அதி~;டானம் முதல் வியாளவரிவரையாக கருங்கற்களினாலும் ஏனைய பகுதிகள் சீமெந்தினாலும் செங்கற்களைக் கொண்டும் அமைக்கும் மரபு கோபுரக் கலைமரபிற்கும் பின்பற்றுகின்றமை மனம் கொள்ளத்தக்கது.  இதேவேளை கருங்கற்களால் அமையும் கட்டடமரபைத் தவிர ஏனைய பொருட்களைக் கொண்டு அமைக்கும் கோபுரம் முதலானவைகளுக்கு அழகியவர்ணம் தீட்டும் மரபும் காணப்படுகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கருங்கற் கலைமரபில் அமையும் கோயிலை நிகர்த்ததாக மஞ்சம் தேர் என்பன கோபுரத்திற்கும் விமானத்திற்குமான பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கோபுர தத்துவம்.
கோபுரம் என்பது ஒரு வேதிகையிலிருந்து எழுகின்ற தீப்பிழம்பின் உருவமாக கொள்ளப்பட்டது. உபபீடத்திலிருந்து பிரஸ்தரம் வரை உள்ள அங்கங்கள் அனைத்தும் ஹோமகுண்டத்தின் பகுதிகளாகவே கொள்ளப்பெறுகின்றன. மேல் நிலைகளும் சிகரங்களும் தீச்சுவாலையின் வடிவாக கருதப்பெறுகினறது. எரிகின்ற ஒரு தீப்பிழம்பு இரண்டாகப்பிளந்து நடுவே ஒரு வழியை ஏற்படுத்தினால் எவ்வாறு திகழுமோ அதுபோலவே அக்கோபுர வாயில்கள் திகழும். ஒருவர் தீப்பிழம்பாக விளங்கும் கோபுரத்தின் உள்ளே புகுந்து கோயிலுக்குள்செல்லும் போது அவர் உடலை பாவனைத் தீ தீண்டுவதால் தூய்மை பெறுகின்றார். அந்த தூயஉடலோடு இறையை நெருங்கும் போது ஆன்மா இறையின்பத்தை நுகர்கின்றது என்ற தத்துவ அடிப்படையில் தான் சுடர்விட்டு ஒளிரும் வேதிகையின் வடிவாக கோபுரங்கள் திகழ்வதாக கூறப்படுகின்றது. இதனை
“கங்கைவார் சடையார் கபாலீச் சரத் தணைந்து
துங்க நீளசுடர்க் கோபுரந் தொழுது புக்கருளி”32 
எனும் சேக்கிழாரின் பாடல் வழியாக கோபுரம் என்பது ஒளிவிடும் சுடரின் வடிவே என்பதனை அறியலாம்.
இராஐகோபுரத்தின் அமைப்பினை நோக்கும் போது அதில் எத்தனை வகையான சிற்பங்கள் தேவவடிவங்கள் தேவகணங்கள் தெய்வ வடிவங்கள் பட்சி;ஜாதிகள் மிருகஜாதிகள் புராண இதிகாச வரலாறு மானிட வடிவங்கள் மெய்யடியார்கள் மற்றும் ஏனைய வடிவங்கள் என்பன காணப்படுகின்றன. பிரபஞ்ச அமைப்பில் இவையாவுக்கும் இடம்உண்டு என்பது கோட்பாடு. சிற்றுயிர்கள் பேருயிர்கள் விலங்கினம் மக்களினம் தேவர்கூட்டம் ஆகிய எல்லோரும் பிரபஞ்சத்தில் உள்ளார்கள். அண்டத்தில் இன்னது உள்ளது இன்னது இல்லை என்று எவராலும் பாகுபடுத்தமுடியாது எனும் கோட்பாட்டை இவ் இராஜகோபுரம் விளக்குகின்றது. 
இராஜகோபுரத்தின் மேல் நிலை பொதுவாக ஒற்றைப்படை எண்ணில் அமைந்திருக்கும் . மூன்றுää ஐந்து ஏழு ஒன்பது பதினொன்று இவ்வாறு அதில் அமைந்துள்ள் நிலைகள் ஒன்றின் மேல் ஒன்றாக ஒற்றையெண்ணில் பெருகிக்கொண்டே போகும். இதில் மூன்று நிலைகள் ஜாக்கிரத ஸ்வப்பன சுழுத்தி என மூன்று அவத்தைகளைக்குறிக்கும். ஐந்து நிலைகள் ஐம்பொறிகளைக் குறிக்கும். ஏழுநிலைகள் ஐம்பொறிகளோடு மனம் புத்தி என இரண்டும் சேர்ந்து வரும். ஒன்பது நிலைகள் எழுநிலைகளுக்குரிய அம்சங்களுடன் சித்தம் அகங்காரம் எனும் இரண்டும் சேர்ந்து ஒன்பதாகின்றது. இவ்வகையில் பஞ்சேந்திரியங்களைக்கொண்டும் மனம் புத்தி முதலியவைகளைக் கொண்டும் அறிகிறோம். புறஉலகை அறிகிற செயலை அப்படியே நிறுத்திவிட்டு மனதைத் துணையாகக்கொண்டு பரம்பொருளிடத்திற் பயணம் போகவேண்டும் எனும் கோட்பாட்டை இராஜகோபுரவாயிலினுள் பிரவேசம் செய்தல் நமக்கு விளக்கிக்காட்டுகின்றது. கோபுரங்கள் நிலைகள் பல பெற்றிருப்பினும் மக்கள் தரையில் அமைக்கப்படும் வாயில் வழியாகத்தான் கோயிலினுள் செல்ல முடியும். இது மனம் ஒன்றே கடவுள் மீது நாட்டம்கொள்ள பயன்படும் என்பதனை விளக்குகின்றது.
ஆகம பிரமாணத்தின்படி அமைக்கப்பட்ட ஆலயமானது இந்துநாகரிகத்தில் அதிஉன்னத இடத்தினைப்பெறுவதற்கு காரணமாக அமைவது அதனை உயிரோட்டமுள்ள புரு~னாக உவமிக்கப்பட்டுள்ளமையேயாகும். அதாவது ஆலயம் வெறும் கட்டடமாகவன்றி உயிரோட்டமுள்ள புரு~னாகவே கருதப்பட்டது. கர்ப்பக்கிருகத்தில்; பிரதி~;டை செய்யப்படும் மூல மூர்த்தியுடன் ஆலயம் இணைபிரியாத நெருங்கிய தொடர்புடையதாக உடல் - ஆலயம் என்றும் உயிர் - மூலவர் என்னும் பிரிவற்றதன்மை கூறப்பட்டுள்ளது. இத்தத்துவத்தினை திருமூலர் தமது திருமந்திரத்தில் தெளிவாகக்குறிப்பிட்டுள்ளார். 
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தௌ;ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங்  காளாமணி விளக்கே” 33
என்பதினால் அறிந்துகொள்ளமுடிகின்றது. 
மேலும் புரு~னது கிடந்த கோலத்தில் ஆலயத்தின் அங்கங்களை தொடர்புபடுத்துகின்றபோது கோபுரம்-பாதமாகவும் கோபுரஸ்தூபி பாதத்தின் விரல்களாகவும் உவமிக்கப்பட்டுள்ள தத்துவம் ஒப்பு நோக்கத்தக்கதாகும். கோபுரம் என்பது பூதாத்மா என்றும் கூறுவர்.
கிழக்கில் உள்ள கோபுரவாசல் மூலாதாரத்தில் உள்ள பிரமதுவாரத்தையும்  மேலைக் கோபுரவாசல் ஆஞ்ஞையில் உள்ள பிரமரந்திரத்தையும் குறிக்கும்.  மேலைக் கோபுரவாசலைச் சொர்க்க வாசல் என்றும் கூறுவர்.  இதனுடைய தத்துவத்தை திருமூலர்
“மூலத்துவாரத்து மூ@ம் ஒருவனை
மேலைத்துவாரத்து மேலுற நோக்கி முற்
காலுற்றுக் காலனைக் காயந் தங்கி யோகமாய்
ஞாலக் கடவ10ர் நலமாய் இருந்ததே” 34  
என்ற பாசுரத்தால் விளக்கியுள்ளார்.  இவ்வகையில் இந்துசமய தத்துவத்தின் உட்பொருளை கோபுரம் உணர்த்தி நிற்பதனை நோக்க முடிகிறது.
  
நிறைவுரை
திருக்கோயில் மரபில் உயர்ந்த கலைப்படைப்பே கோபுரம் ஆகும். சிவாகமமரபிலும் சிற்பசாஸ்திர மரபிலும் உயர்ந்த நுட்பங்களுடன் இணைந்த விதிமுறைகள் கோபுரங்களை அமைக்கத்தக்க வரையறைகளாகின்றன. சமுதாய நிலையில் உயர்ந்து நிமிர்ந்த தோற்றமுடைய கலைவடிவமாகவும் சமயத்தின் அடையாளமாகவும் தெய்விகநிலையின் காட்சியாகவும் இறைத்தன்மையினடையாளமாகவும் விளங்குவதோடமையாது பாவங்களை நீக்கி புண்ணியங்களை வளர்க்கும் திறனுடையதன்மையதாகவும் விளங்குகின்றன.
திருக்கோயில் அமைப்பில் நிறைவான தன்மையினையுணர்த்தும் அதேவேளை பண்பாட்டின் அடையாளமாகவும் தெய்வீக வியாபகத்தின் சின்னமாகவும் விளங்கி கலையழகின் உயர் பரிணாமமாகக் காட்சிதருகின்றது.
படிநிலை வளர்ச்சி கொண்டு வளரும் ஆலய வளர்ச்சிப்பாதையில் காலத்தின் தேவை கருதியதும் சவால்கள் நிறைந்த சமுதாய மரபிற்குரிய உரைக்கல்லாக சமயத்தின் ஓங்கி உயர்ந்த கலங்கரைவிளக்கமாக கோபுரங்கள் விளங்குகின்றன என்றால் மிகையாகாது.
“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்”


அடிக்குறிப்புகள்.
1.    காமிகாகமம் (ப10ர்வபாகம்) (தேவநாகரலிபி)ää 1975 பதி.செ.சுவாமிநாதசிவாச்சாரியார் (பதி.) தென்னிந்திய அர்ச்சகர் சங்கம் சென்னை. 1.75.
2.    பூர்வகாரணாகமம் (கிரந்தலிபி) 1922ää மயிலை அழகப்பமுதலியார் (பதி.) இரண்டாம் பதிப்புää சிவஞானபோத யந்திரசாலை  சென்னை. 1.8(பிராசாத லக்சணவிதி).
3.    உத்தரகாரணாகமம் (கிரந்தலிபி) 1927 மயிலை அழகப்பமுதலியார் (பதி.) இரண்டாம் பதிப்பு சிவஞானபோத யந்திரசாலை ää சென்னை 11.5.94 (கோபுர பிரதி~;டாவிதி)
4.    ஸ{ப்ரபேதம் (ஆகமம்) (கிரந்தலிபி)ää 1907 பதி.செ.சுவாமிநாதசிவாச்சாரியார் (பதி.) தென்னிந்திய அர்ச்சகர் சங்கம் சென்னை. 1.31.
5.    சுயரசயஎயபயஅயஇ ஏழடஐஇஐஐஇஐஐஐஇ 1961இ 1972இ 1988இ N.சு.டீhயவவ(நுன.)இ ஐளெவவைரவந குசயnஉயசளஇ னுiனெழடழபiஉஇ Pழனெiஉhநசல. ஏழட ஐஐ.42
6.    ஸ்ரீ காசியப்பசாஸ்திரம் (மதல்பாகம்) 1968ää கே.எஸ்.ஸ{ப்ரமண்ய சாஸ்திரிகள் ஸரஸ்வதி மஹால் தஞ்சை. ஐ-45.
7.    மயமுனிவரின் மயமதம் (முதலாம் பாகம்) 1966 கே.எஸ்.ஸ{ப்ரமண்ய சாஸ்திரிகள்ää தமிழ்மொழிபெயர்ப்புடன் பதி.டீ.யு.நாராயணஸ்வாமிஅய்யர் (பதி.) ஸரஸ்வதி மஹால் தஞ்சை. 1 அத்.24.
8.    பாலசுப்ரமணியன்குடவாயில். 2004 கோபுரக்கலை கோயிற்களஞ்சியம் தஞ்சாவ10ர் ப.62.)
9.    (மயமதம் மானோபகரணம் பக்.20-26. 
10.    காமிகாகமம்ää 01 01-11 
11.    காமிகாகமம்ää 1-10
12.    காமிகாகமம்ää 1 11 1-11
13.    காமிகாகமம்ää 1-11 22 23
14.    காமிகாகமம் 01-12 
15.    காமிகாகமம்ää 1-13
16.    காமிகாகமம்ää 1-14 
17.    மயபதம்ää 4 அத். பூபரிகிரஹம் பக்.14-19 
18.    காரணாகமம் 1 03 காமிகாகமம் 1-15 
19.    காசியப சில்பசாஸ்திரம் 1வது படலம்ää திக்பரிச்சேதனம் ப.19ää மயமதம் 6வது அத்தியாயம் திக்நிர்ணயவிதி ப.29 
20.    காமிகாகமம் 1-17
21.    மயமதம் 2வது அத்தியாயம் ப10பரிட்சை பக்.4-13 காசியபசில்ப சாஸ்திரம் முதல்பாகம் பக்.11-19 
22.    காரணாகமம் 1.04 
23.    காமிகாகமம் 1-31.02
24.    மயமதம்ää அத்.9கர்ப்பவிந்யாசம் ப.92 
25.    காமிகாகமம்ää 1-10.2
26.    சுப்பிரபேதாகமம்ää கிரியாபாதம் 31.99
27.    காசியபசில்பசாஸ்திரம் 45வது படலம் 1-2 
28.    காசியபசில்பசாஸ்திரம் 45வது படலம் 1-5
29.    மானசாரம்ää 33வது அத்தியாயம்ää சுலோகம் 93 103
30.    காரணாகமம் 1.70.2 
31.    இருக்குவேதம் ஒ 81.4.
32.    பெ.பு.ää திருஞானசம்பந்தர் புராணம் 1077 
33.    தமிழ் மூவாயிரம் காலோத்தரம் 1823.
34.    தமிழ் மூவாயிரம்ää காமிகம் 345.