ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அத்தாள நல்லூர் கஜேந்திர வரதப்பெருமாள் ஆலயம்

முனைவர் சி.தேவி, உதவிப் பேராசிரியர், தி ஸ்டாண்டர்டுஃபயர் ஒர்க்ஸ், இராசரத்தினம் மகளிர் கல்லூரி சிவகாசி 30 Apr 2021 Read Full PDF

முனைவர் சி.தேவி                                      

உதவிப் பேராசிரியர், தி ஸ்டாண்டர்டுஃபயர் ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி சிவகாசி                                                    

ஆய்வுச்சுருக்கம்

அறுபிரிவுகளை உள்ளடக்கிய வைதீக சமயத்தில் சைவமும் வைணவமும் பேரிடம் பெற்றன.திருமாலின் திருக்கல்யாண குணங்களில் ஆழ்ந்து இன்புறுவோர் ஆழ்வார்கள் எனப்பட்டனர்.வைணவ சமயம் சார்ந்த திருத்தலங்கள்108 திவ்ய தேசங்கள்என்றழைக்கப்படுவதுண்டு. இப்படி பக்தனைக் காக்கப் பெருமாள் நிகழ்த்திய திருவிளையாடல்களில் ஒன்று கருணை மிகு தெய்வம் கஜேந்திர வரதப்பெருமாள். இப்பெயரில் நெல்லை மாவட்டம் அத்தாள நல்லூர் எனும் கிராமத்தில்வீற்றிருக்கும் ஆலயம்அத்தாள நல்லூர் கஜேந்திர வரதப்பெருமாள் ஆலயம்.

திறவுச்சொற்கள்

அறுவகைச்சமயம்திவ்யதேசம்அத்தாளநல்லூர் குலதெய்வவழிபாடு

 

 

                    ஆலயத்தின்  முகப்புத்தோற்றம்

 

              “கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேணடாம்”  என்பர் முன்னோர். ஆன்மீகம் என்பது பண்டைக்காலம் தொட்டு நம் வாழ்வில் இரண்டறக் கலந்த விடயம். “கணாபத்யம், கௌமாரம், சைவம், வைணவம், சாக்தம், சௌரம்” ( இ.ச.இ.வி.ப.15) எனும் அறுபிரிவுகளை உள்ளடக்கிய வைதீக சமயத்தில் சைவமும் வைணவமும் பேரிடம் பெற்றன. இறையடியவர்களின் தன்மை விளக்கமாக இறைவனின் திருவிளையாடல்கள் பல புவியில் நிகழ்ந்துள்ளன. அவ்வாறு இறைவனது அருளிச் செயல்கள்  பல    நிகழ்ந்திருக்கின்றன என்பதற்குச் சான்றாய் பல திருத்தலங்கள் காட்சி தருகின்றன. திருமாலின் திருக்கல்யாண குணங்களில் ஆழ்ந்து இன்புறுவோர் ஆழ்வார்கள் எனப்பட்டனர். இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பதற்கேற்ப அனைத்து குலம் சார்ந்தவர்களும் அரங்கன் மீது அன்பு கொண்டிருந்தனர். என்பதை

இழி குலத்தவர்களேனும் எம்மடியார்களாகில்

தொழுமினீர் கொடுமின் கொள்மின்    ( திருமாலை 42)

என்ற பாசுர அடியின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இறைவன்மீது அன்பு செலுத்துவதோடு இறைப்பணி செய்ய வேண்டும் தொண்டாற்ற வேண்டும் என்பதே இந்த ஜம்புலனகளைப் பெற்றதன் பயன் என்று எண்ணினர் ஆழ்வார்கள் எனும் சிந்தனையினை,

வாழ்த்துக வாய்காண்க கண் கேட்க செவி மகுடம்

 தாழத்து வணங்குமின்காள் தண் மலரால்” ( நான்முகள் திருவந்தாதி .11)

பாசுர அடிகள் திருமங்கையாழ்வார் வழி நின்று விளக்குகின்றது. ஆழ்வார்கள் இறைவனது திருநாமத்தை உச்சாடனம்செய்யும் பாக்கியம் ஒன்றே போதும் வேறெதுவும் வேணடாம் என்ற இறைச்சிந்தனை மேலோங்கிய மனநிலை பெற்றிருந்தார்கள் என்பதற்கு,

நண்ணி நானுண்ண நாடொறு மேத்தும்

நன்மை பேயருள் செய்யெம் பிரானே” ( பெரியாழ்வாா் திருமொழி 5-1 .8)

என்னும் திருமொழி அடிகள் சான்று பகர்கின்றன. இத்தகைய இறைப்பற்று கொண்ட அடியவர்கள் பொருட்டு காட்சி தந்த அல்லது திருவிளையாடல் செய்த தலங்கள் திரு எனும்அடைமொழியோடு கூறப்படுகின்றன .பொதுவாக வைணவ சமயம் சார்ந்த திருத்தலங்கள்108 திவ்ய தேசங்கள்என்றழைக்கப்படுவதுண்டு. இப்படி பக்தனைக் காக்கப் பெருமாள் நிகழ்த்திய திருவிளையாடல்களில் ஒன்று கருணை மிகு தெய்வம் கஜேந்திர வரதப்பெருமாள். இப்பெயரில் நெல்லை மாவட்டம் அத்தாள நல்லூர் எனும் கிராமத்தில் வீற்றிருக்கும் ஆலயம் பற்றிய தகவல்களை ‘வைணவத் திருத்தலங்கள்’ எனும் பொருண்மையின் கீழ் காண்போம்.

கருணை தெய்வம் கஜேந்திர வரதன்

அழகிய வளம் மிக்க நாடு அது. மன்னன்இந்திரஜூம்னன் விஷ்ணு பக்தன். அப்பெருமாளின் பெயரை உச்சரிக்காத நாள்  இஎன்ன நாளோ என எண்ணுபவன். விஷ்ணுவைக் குறித்து தியானத்தில் அமர்ந்து விட்டால், பூவுலகையே மறந்து விடுவான்.. இயற்கை வளம் கொட்டிக்கிடந்ததால் நாடுபோற்றும் நல்ல மன்னனாக வாழ்ந்தான்.

சாபம் ஏன்?

விஷ்ணு பூஜையும், பணிவும் கொண்ட அவ்வரசனுக்கும் சோதனை வந்தது. முனிவர்களை உபசரிக்கும் வழக்கம் கொண்டவன் அம்மன்னன். ஒரு நாள் காலை வழக்கம் போல் விஷ்ணு பூஜையில் அமர்ந்த இந்திரஜும்னன் மெய் மறந்தான். அதனால் அங்கே வந்த துர்வாசர் நெடுநேரம் காக்க வேண்டி வந்தது. இதனால் கோபமடைந்த அவர், இந்திரஜும்னன் மதம்பிடித்த யானையாக பிறக்கக்கடவது எனச்சாபமிட்டார்.

சாபம் தீர வழி

தன் நிலையை விளக்கியமன்னன், இச்சாபத்தில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தாழ்மையுடன் கோரினான். கோபம் தணிந்த முனிவரும், நீ ஆதிமூலமே என்று விஷ்ணுவை அழைக்கும்காலம் வரும் பொழுது, முக்தி அடைவாய் என்று கூறினார். காலம் கடந்தது. மன்னனும் மறு பிறவி எடுத்தான். அவன் யானைக ;கூட்டத்திற்குத் தலைவன் ஆனதால், கஜேந்திரன் என்று அழைக்கப்பட்டான். ஐந்தறிவு கொண்டிருந்தாலும்பூர்வ ஜென்ம வாசனையால், அவன் விஷ்ணுவைத் தொழுவதைத் தொடர்ந்தான்.

முதலையான அசுரன்

இந்த நிலையில், ஒரு குளத்தில் {ஹஹீ என்ற பெயர் கொண்ட அசுரன் வாழ்ந்து வந்தான். குளிப்பதற்காகக் குளத்திற்கு வரும் பக்தர்களைக் காலைப் பிடித்து இழுத்துக் கொண்டு குளத்தின் அடி வரை சென்று விடுவான். ஒரு நாள் அகத்தியமாமுனி அங்கு வந்து ஸ்நானம் செய்தார். மற்றவர்களை வம்பிழுப்பது போல அகத்தியர் காலையும் பிடித்து இழுத்துக் கொண்டு, நீரினடியில் செல்ல முற்பட்டான் அசுரன். கோபம் கொண்ட அகத்தியர் அவனை முதலையாகக் கடவது என சாபமிட்டார்.

சாபம் நீக்க வேண்டுதல்

அரக்கன் ஹீஹீ பதறினான். அகத்தியiர்;ப்  ;பணிந்து சாப விமோசனத்தை வேண்டினான். ,அக்குளத்திலேயே இருந்து விஷ்ணுவைப் பிரார்த்தித்து வருமாறு அறிவுறுத்தினார். அத்தெய்வத்தால் உரிய காலத்தில் சாப விமோசனம் கிடைக்கும் என்றார். அவனும் முதலை உருவெடுத்தான். மகேந்திரன் எனப்பெயர் சூட்டப் பெற்றான். நீருக்குள் சென்று விஷ்ணு தியானத்தில் மூழ்கினான்.

ஆயிரம் இதழ் தாமரை

ஆண்டுகள் பலவாயின. அசுரன் முதலையாகக் குளத்தில் இருந்ததால், ஆடு, மாடு மட்டுமல்ல மனிதர்களும்அக்குளத்தை அணுகவில்லை. அக்குளத்தில் நல்ல வளர்ச்சி அடைந்திருந்த தாமரைக் கொடியில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மொட்டவிழ்ந்தது. விடியலில் ஆதவனின் கிரணங்கள், அதன்மீது பட, மலர் விரிந்து மலர்ந்தது. இதனை அவ்வழியே வந்த கஜேந்திரன் கண்டான்.

தாகம் தீர்ந்தது

குளத்தில் இறங்கி நின்று நிதானித்துத் தன் குடும்பத்தாருடன் நீர் அருந்தினான். அவர்களுடன் உடன் வந்த மான்களும், முயல்களும், அணில்களும் நீர் அருந்தின. அங்கு வந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் தாகம் தீர்ந்தது.

மூர்க்கமான முதலை

நீரில் ஏற்பட்ட சல சலப்பு மகேந்திரனை உசுப்பேற்றியது. அதே நேரம் கஜேந்திரனும் பூக்கொய்ய நீருக்குள் போனான். தும்பிக்கையை நீட்டி பூக் கொய்த அதே கணம், மகேந்திரன் அவன் காலைக் கவ்வியது. கஜேந்திரனுடன் வந்த யானைகள், தம் வலிமை யெல்லாம்திரட்டி கஜேந்திரனை மீட்க முயற்சித்தன. அது பலிக்கவில்லை. பின்னர் அவை ஒவ்வொன்றாக விலகிச் சென்றன. எஞ்சியது – கரை நோக்கி இழுக்கும் கஜேந்திரனும், தண்ணீருக்குள் இழுக்கும் மகேந்திரனும் மட்டுமே. காலங்கள் சென்றன. இந்த இழுபறி ஆயிரம் ஆண்டுகள் நீடித்ததாம். இரண்டும்சக்தியை இழந்து ஓய்ந்தன. இனி தாங்க முடியாது என்ற நிலையில், தூக்கிய தும்பிக்கையில் அந்த அதிசய மலருடன் ஆதிமூலமே என்று பிளிறியது கஜேந்திரன்.

திருமாலை,மாயவனை, ஓங்கி உலகளந்தவனை வழிபடுபவர்கள் இந்த உலகத்தில் மானிடர்களை துன்புறுத்தும் வினைப்பயன்களிலிருந்து மீள்வர். துனபம் தரும் நரகத்தில் சென்று சேர மாட்டார்கள் என்ற நல்நெறியினை அடியவர்களுக்கு போதிக்கும் தன்மையில்,

வினையால் அடாப்படார் வெந்நரகில் சேரார்

தினையேனும் தீக்கதிகட் செல்லார் -நினைதற்

கரியானைச ;சேயானை ஆயிரம்பேர ;செங்கட்

கரி யானைக் கைதொழுதக் கால்  (  முதல் திருவந்தாதி 65)

என்னும் பாசுர அடிகள் அமைந்துள்ளன. இந்தப் பொய்கையார் பாசுரம் உண்மையாகும் வகையில் கஜேந்திரன் ஆதி மூலக்கடவுளை அழைத்துள்ளான்எனலாம்.

பறந்து வந்த பரந்தாமன்

அரைக்கண் மூடி இருந்த, ஆதிமூலமான பாற்கடல் வாசன்கண் விழித்தான். ஆவசரமாக எழுந்தான். கருட வாகனம்ஏறக் கூடநேரமின்றிப்பறந்து வந்தான் கஜேந்திரனைக ;காக்க. எப்போதும்பீதாம்பரத்துடன் காட்சிதரும் எம் பெருமான், அதனை எடுத்துக் கொள்ளக் கூட நினைவின்றி ஒரே சிந்தனை கொண்டு ஓடோடி வந்தான்.

அதி வேகத்திற்குப் பெயர் பெற்றவர்   ;கருடன். பெருமாள் தனியே செல்வதைப் பார்த்து, கருடன் அதி வேகமாகப் பறந்து வந்து, பெருமாளைத் தன்முதுகில் தாங்கிக் கொண்டார். இதனால்நொடிப ;பொழுதில் அவ்விடம்வந்த பெருமாள்சக்கரத்தை ஏவினார். சக்கரம் முதலையின்தலையைச் சீவியது. ஆயிரம் ஆண்டுகளாகக் கட்டுண்டு கிடந்த கஜேந்திரன் விடுபட்டான். பெருமாளுக்கு ஆயிரம் இதழ் தாமரையை அர்ப்பணித்தான். யானையைக் காப்பாற்ற வந்ததால்கஜேந்திர வரதன் என்பது பெருமாள் திருநாமம்ஆனது .முதலையும் சாபம் நீங்கப் பெற்றது.

கஜேந்திர மோட்சம் புராண நிகழ்ச்சியைக் கேட்டாலோ, படித்தாலோ அந்த பக்தனின் இறுதிக் காலத்தில் பகவான் கூடவே இருப்பான் என்பது ஐதீகம். இத்தகைய கஜேந்திர வரதப் பெருமாள் வீற்றிருக்கும்தலம் அத்தாள நல்லூர் பற்றிக் கண்ணுறுவோம்.

தல வரலாறு:        

 

 

கருவறைத்தோற்றம்

மன்னர்கள் காலத்தில் ;ஊர்களும் அவைகளும்பல வகைகளில் பெயரிட்டு அழைக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக,

கிராம அவை அல்லது பிரம்மதேய அவை

தேவதான அவை

ஊர் அவை

நகரவை என்று பாகுபாடுகள்இருந்துள்ளன. அவ்வகையில் இக்கோயில் தேவதானமாகக் கொடுக்கப்பட்ட ஆலயம் என்பது வரலாற்றின் மூலம் புலனாகின்றது.    

1000 ஆண்டுகள்பழமையான கோயில் .  முதலாம்குலோத்துங்கன் (1100யுனு) காலத்தில்வரியில்லா நிலமாக தேவதானமாக கொடுக்கப்பட்ட ஊர் அத்தாள நல்லூர் .முன்னர்யானை காத்த நல்லூர் என்று அழைக்கப்பட்டது.  இக்கோயில்சேரன் மகாதேவி மொய்ம் பூம்பொழில் ஆழ்வார்கோவிலின்கீழ்செயல்பட்டது என்று கல்வெட்டுச் செய்திகள் ஆலயத்தில்உள்ளது. ஜாதவர்மன்ஸ்ரீவல்லப பாண்டியன் ஆட்சிக் காலத்தில் இக்கோவில் புரட்டாதி திரு நாளுக்கு கொடை வழங்கியிருக்கிறான். அந்த இடத்தில்ராணி உகமுலுடு முதையால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாறவர்ம பாண்டியன் ஆட்சியில் சேரன் மகாதேவியின் சட்டமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒவ்வொரு நாளும் 5 புனித பிரசாதங்கள் இறைவனுக்கு வழங்கப்பட்டன. கல்வெட்டுகளில்ஒன்று இந்த நோக்கத்திற்காக கோயிலில் முதலில் வைத்திருந்த நிலத்தை குட்டி சண்டைகள் காரணமாக வீணாததைக் குறிக்கிறது. கடவுளுக்கு பிரசாதம் வழங்குவதற்கும் அந்த பிரசாதத்திலிருந்து கோயிலில் எம் ;பெருமானின்    ஊழியர்களுக்கும் வழிபாட்டாளர்களுக்கும் எம் பெருமானார் அம்மாய் ஒரு ஆச்சு பரிசு வழங்கிய பதிவும் உள்ளது. கோயிலில் இருந்த வைஷ்ணவர்கள் அச்சுவைப் பெற்றுக் கொண்டு நிறுவனங்களை பராமரிக்க ஒப்புக் கொணடனர். ஒரு குறிப்பிட்ட ராமானுஜ ஜீயருக்கு கால் அன்னாய் அச்சுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

புற ஆலயத்தில் இல்லாதவாறு இத்தலத்தில் கஜேந்திர வரதர் தனது கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி மற்றும்பிருகு முனிவர் மார்க்கண்டேய மகரிஷிகளுடன் நின்ற கோலத்தில் இருந்து காட்சி தருகிறார்.

இக் கோயில் மாடக் கோயில்வகையைச் சார்ந்தது.

9 நிலை மாடக்கோயில்

5 நிலை மாடக்கோயில்

3 நிலை மாடக்கோயில்

2 நிலை மாடக்கோயில் என்ற வகைகளில் அத்தாள நல்லூர் கோயில் 2 நிலை மாடக்கோயிலாகும்.

வுpமானம்ஒரே பொருளால் கட்டப்படுவது உத்தமம்

இரண்டு பொருள்களால் (கல் மற்றும் சுதை)கட்டப்படுவது மத்திமம்

மூன்று பொருள்களால் (கல் மற்றும் சுதைமற்றும் ஓடு)கட்டப்படுவது அதிமம்

இக்கோயிலின் விமானம் மத்திமம் வகையைச் சார்ந்தது.

இக்கோவிலின் விமானம் –இத்தர விமானம்

நைவேத்யம் - சுத்தன்னம்

    

கோயில்களில் முதல் பிரகாரம்  ;என்பது கருவறை அர்த்த மண்டபத்தை சுற்றி அமைந்திருக்கும். இரண்டாவது பிரகாரம் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், ஆகியவற்றைச் சுற்றி அமைந்திருக்கும். இந்தப் பிரகாரத்தில் தான் பரிவார தேவதைகளுக்கான ஆலயங்கள் அமைந்திருக்கும். இதனையடுத்து தேவைக்கேற்ப பிரகாரங்களின் எண்ணிக்கை கூடும். இக்கோயில் இரண்டு சுற்றுப் பிரகாரங்களைக் கொண்டு விளங்குகின்றது.

சுற்றுப் பிரகாரத்தில் உள்ள பரிவாரக்காட்சிகள்:

1.    தசாவதாரக் காட்சிகள்

2.   வேணு கோபால்

3.   பரம்பதநாதன்

4.   சக்கரத்தாழ்வார்

5.   ஆஞ்சநேயர்

6.   வடக்குநாச்சியார்

7.    தெற்குநாச்சியார்

8.   நரசிம்மர் –  நரசிம்ம அவதாரத்தின் பொழுது இருந்த 16  துண்களில் ஒன்று இங்குள்ளது .அங்கு பெருமாள் ஸ்தம்ப வடிவிலும் காட்சி தருகிறார். “பேராசை, ஆணவம், அகந்தை கூடாது என்பதை விளக்கவே நரசிம்ம அவதாரம் எடுக்கப்பட்டுள்ளது .இறைவன், அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்தவன் . அவன் அணுவினுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் தூணிலும் துரும்பிலும் உறைந்திருப்பவன் என்னும் ஒப்பற்ற உண்மை நரசிம்ம அவதாரத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது”.

மாரி மலை முழஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும் சீரிய சிங்கம்

அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும்பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமா போலே( ஆண்டாள் .திருப்பாவை.23)

என்று ஆண்டாள் வியந்து போற்றிய நரசிம்மர் உருவ வடிவிலும், ஸ்தம்பமாகவும் காட்சி தருகிறார்.

நந்தவனம்தம்பிக்கு நல்லான் நந்தவனம்

 

 

நந்தவனம்

இந்த நந்தவனம் வீரபாண்டிய தேவ பாண்டியன் காலத்தில் தம்பிக்கு நல்லான்நந்தவனம்என்ற மலர் தோட்டத்திற்கு வரி இல்லாத நிலம் பரிசாக கொடுக்கப்பட்டது. கோயிலின் வடக்கு சுவரில் ஜாதவர்மா பாண்டியாவின் ஆட்சியைக் குறிக்கும் ஒரு கல்வெட்டு உள்ளது. இது தோட்டத்தைப் பராமரிக்க 10 கட்டளைகளுடன் ஒரு பெரிய ,ராணுவத்தோடு பரிசளிக்கப்பட்ட செய்தியைக் ;காட்டுகிறது. தோட்ட நிலங்கள் விற்பனை செய்யப்பட்ட பதிவும் கல்வெட்டில் ;உள்ளது. குலசேகர பாண்டியாவின் ஆட்சியில்ராமானுஜ திருநந்தவனம் என்ற மலர் தோட்டத்தை வளர்ப்பதற்காக  2 தோட்டக்காரர்களுக்கு பிரசாத் பரிசு வழங்கப்பட்டது. அவர்கள் வரியிலிருந்து விலக்கு பெற்றனர். மலர்களை வளர்ப்பது. மாலை கட்டுவது. தோட்டக் காரர்களை பராமரிப்பதற்காக கோயிலால் சில நிலங்கள் பரிசாக கொடுக்கப்பட்டது. ராமானுஜர் மலர் தோட்டத்தின் பொறுப்பான ஆண்களுக்கு உணவளிப்பதற்காக கோயிலில் ஒருகாலம் உணவும் பரிசாகக் கொடுக்கப்பட்டது.

திரு விழாக்கள்

 

 

                  ஆலயத்தில் இடம்பெற்றுள்ள கஜேந்திரமோட்சம் – சுதை வடிவம்

பண்டைத்தமிழர்கள் விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். வாழ்க்கையில் விழாதிருக்கவே திருவிழாக்கள் கொண்டாடப்பட்டன. உழைக்கும் மனதிற்கு மகிழ்வு பெறவும் விழாக்கள் ஒரு காரணியாக இருந்தன எனலாம்.மாதத ;தோறும் ஒரு திருவிழா அரங்கேறியிருந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்தும் விதமாகவே தேரோடும் வீதிகளுக்கான பெயர்கள் அமைந்துள்ளன.

சித்திரை –சித்ரா பௌர்ணமி

வைகாசி – விசாகம்

ஆனி –முப்பழம்

ஆடி –பூரம்,பெருக்கு

ஆவணி –அவிட்டம்

புரட்டாசி –நவராத்திரி

ஐப்பசி – தீபாவளி,சஷ்டி

கார்ததிகை-தீபவிழா

மார்கழி –திருவாதிரை ஆருத்ரா தரிசனம்

தை- தைப்பூசம்

மாசி- மகப்பெருவிழா

பங்குனி- உத்தரம் என்று மாதந்தோறும் திருவிழாக்கள்நிகழ்ந்திருக்கின்றன. மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக திருவிழாக்கள் ஏற்படுத்தப்பட்டன. உறவிறனர்களைக் கண்டு அளவளாவும் தன்மை, விருந்தோம்பல் பண்பு மேலோங்குவதற்கு திருவிழாக்கள் காரணமாகின்றன. இக்கோயிலில்

வைகாசி உத்திராதம்

ஆனி சுவாதி

புரட்டாதி திருவனம்

தைப்புசத் திருவிழா 3 நாட்கள் ஆகிய திருவிழாக்களில்கருட சேவை நடைபெறும்

சித்திரைப்பிறப்பு

வைகுண்ட ஏகாதசி

சந்திரபிரபா ஆகிய திருவிழாக்களில் முத்தங்கி சேவை நடைபெறும்

திருக்கார்த்திகை

மார்கழி 30 நாள் வழிபாடு

தமிழ் மாத சனி மற்றும் புரட்டாசி சனி போன்ற திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறுகின்றன.

சைவவைணவ இணைப்பு:

அத்தாள நல்லூர் ஆலயம்ஆழ்வார்களால்பாடப்பெற்ற தலம். மன்னாகள்காலத்தில் எழும்பிய ஆலயம்எனவே அக்காலகட்டத்தில் இருந்த சமயக் காழ்ப்புணர்ச்சிகள் நீங்கி சமய ஒற்றுமை ஏற்படும் முகமாக, அருகிலுள்ள திருப்புடைமருதூர ;நாறும்பூ நாதன் ஆலயத்திற்கு தைப்பூசத் திருவிழாவின் போது இங்கிருந்து தேர் சென்று வரும் நிகழ்வு இன்றளவும் நடைபெற்று வருகிறது.

பிரார்த்தனை

திருமணத் தடை நீங்க புத்திர பாக்கியம் கிடைக்க

நல்ல இல்வாழ்வு அமைய

கல்வியில் சிறக்க

படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க

குடும்பபிரச்சினை நீங்க

ஐஸ்வர்யம் கிடைக்க

வியாபாரம் சிறக்க

உடற்பிணிகள் நீங்க

நினைத்த செயல்கள்நடக்க வேண்ட நடக்கும்

 

நேர்த்திக்கடன்:

சிலவற்றை மறுக்க முடியாத உண்மை என்று கருதி ஏற்றுக் கொள்வதே நம்பிக்கை என்று வரையறுக்கலாம். ஓன்றை உண்மை என்று நம்புவதில் இருகூறுகள் அடங்கியுள்ளன. அதாவது அறிவுப்பூர்வமான ஒரு கூறும், உணர்ச்சிப்பூர்வமான மற்றொரு கூறும். நம்பிக்கையினுள் அடங்கியுள்ளன. இந்த உணர்ச்சிப்பூர்வமான நம்பிக்கை என்ற பட்டியலில் நேர்த்திக்கடன் அடங்கும்.

நமக்கு பூமியில் உயிர் வாழத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாகவே  காணிக்கை செலுத்தப்படுகிறது. அதோடு மட்டுமல்லாது மக்களின் நன்றியுணர்ச்சியின் வெளிப்பாடகவே நேர்த்திக்கடன்களும்  செலுத்தப்படுகின்றன.

 

 

                 தைப்பூசத்திருவிழா -  கருட வாகன த்தில் பெருமான்

பட்டு வஸ்திரங்கள் சாத்துதல்

விஷேச திருமஞ்சனம் செய்தல் என்ற செயல்களோடு

நரசிம்மருக்கு பூச்சட்டை சாத்துதல் என்பதும் வழக்கிலுள்ளது.

சிறு தெய்வ வழிபாட்டுக் கூறு:

சைவ வைணவத் தெய்வங்களோடு நாட்டார் தெய்வங்கள் இணைக்கப்படும் படி முறையையும் நாம் காண முடியும். ஒரு பெண ;தீப்பாய்ந்து உயிரிழந்து விட அப்பெண்ணை அம்மன் என்று பெயர் கொடுத்து சீதையோடு ஒப்பிடும் தன்மை நிலவியிருந்துள்ளது.காத்தவராயன் என்ற தாழ்த்தப்பட்ட சாதியிணைச் சார்ந்தவர் சிவபெருமானின் சாபத்தால் நிலவுலகிற்கு வந்தவர் என்ற மேனிலையாக்கப் படி முறையும் இன்று நடை பெற்று வருகிறது. அவ்வகையில் இக்கோயிலிலும் ஒரு நிகழ்வு உள்ளது.

ஆகம விதிகளின் படி வழிபாடு நடைபெறும் இக்கோயிலில் சிறுதெய்வ வழிபாட்டுக் கூறுகளும் காணப்படுகின்றன. நரசிம்ம அவதாரத்தில்கம்பத்திலிருந்து வெளிவந்த நரசிம்மருக்கு சந்தனம் பூசி சாந்தி செய்யும்நிகழ்வு சட்டை சாற்றுதல் எனும் பெயரில் நடைபெறுகிறது.

 

 

சட்டைசாற்றுதல் - நரசிம்மம்

இத் தூண் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஊர் அழியும் நிலை வந்து மக்கள் வேண்டுதலுக்கு இணங்கி இறைவன் கரையோரத்தில் எல்லைக ;காவலனாக நின்றார் அதன் பிறகு அதைத் தாண்டி ஒரு போதும் நீர் வந்ததில்லை எனவே அத்தெய்வம் மேல்விலாசமாக நின்றதால் மேலாசம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு குல தெய்வமாக வழிபாடு செய்யும் நிகழ்வும் இன்றை வரை நிகழ்கிறது. கஜேந்திர மோட்சம் வைணவத்தின் சரணாகதித் தத்துவத்திற்கு சான்றாகத் திகழ்கிறது. இறை நம்பிக்கை என்பது நம்மில் பலருக்கு உள்ளார்ந்து ஆன்மாவை ஊடுருவிய விசயம். கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்ற சிந்தனைப்படி ஒரு பிறவியில் இறை பக்தியை கைக் கொண்டவர்கள் அடுத்த பிறவியிலும் ;அதன் பயனாய் முக்தி அடைய முடியும் என்தற்கு கஜேந்திரன் நல்ல உதாரணம் என்பதை

தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்

ஆட்ட புயக்கரத்தான் அஞ்ஞான்றுகுட்டத்துள்

கோள் முதலை துஞ்சக் குறியெறிந்த சக்கரத்தான்

தூன்முதலே நங்கட்குச்சார்வுமுன்றாம திருவந்தாதி 99)

என்ற பேயாழ்வார் பாடல் மூலம் உறுதி செய்யலாம். அவனருளால் அவன் தாள் வணங்கி என்பதற்கேற்ப இறைவன் பக்தர்களுக்கு அருள்மழை பொழிவதன் காரணமாகத்தான் நமக்கு இறைச்சிந்தனை மேலோங்குகிறது என்பதை ஸ்ரீமந்நாராயணீயத்தில் பட்டத்திரியின் திருவாக்கால் அறிய முடிகிறது. இச்சிந்தனையினை இத்தலம் பற்றிக் கேள்வியுறும் செய்திகளும்உறுதி செய்கின்றன.

 

துணை நின்ற நூல்கள்:

1.    முனைவர் அம்பை மணிவண்ணன் -திருக்கோவில் அமைப்பும் திருவுருவ அமைதியும்

2.   தே.லூர்து - நாட்டார் வழக்காற்றியல்சில அடிப்படைகள்

3.   மதுரை மீனாட்சி அமமன் ஆலய  வெளியீடு - இந்து மத இணைப்பு விளக்கம்

4.   ஆ.இராமகிருட்டிணன் - தமிழக வரலாறும் பண்பாடும்

5.   நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம்

6. .       தகவலாளி – இராமன் பட்டர்