ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும்

முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர், வரலாற்றுத் துறை, குந்தவை நாச்சியார் அரசு மகளிர்கலைக் கல்லூரி தஞ்சாவூர். 08 Dec 2020 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம் 

  கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம் இன்று நகராட்சியாக திகழ்கிறது. சிதம்பரம் என்பது ஊரின் பெயர் அல்ல கோயிலின் பெயர். இவ்வூர் பண்டைய காலத் தில் தில்லைவனம், தில்லை என அழைக்கப்பட்டது. தில்லை மரத்தின் தாவரவியல் பெயர் EXCOECA RIA AGAL LOCHA என்பதாகும். இவை MANGROVE வகை தாவரம் என்கி றது தாவரவியல். தில்லை என்பது சதுப்புநிலத்தில் வளரும் ஒருவகை மரத்தின் பெயராகும். இதற்கு அலையத்தி, அம்பலத்தி, அகதி, அகில் என பல்வேறு பெயர்கள் உண்டு. பண்டையகாலத்தில் தில்லை மரங்கள் நிறைந்தகாடாக இப்பகுதி இருந்ததால் தில்லைவனம் என அழைக்கப்பட்டதை சிதம்பரபுராணம் குறிப்பிடுகிறது. முதலாம் இராஜேந்திரசோழனின் காலத்தில் பெரும்பற்றப்புலியூர் என அழைக்கப்பட்ட இவ்வூர், கி.பி.1036 தனியூர் என்ற சிறப்பு அந்தஸ்தையும் பெற்று சுமார் 350 ஆண்டுகாலம் எதேச்சிய அதிகாரத்தோடு விளங்கியது. புகழ்பெற்ற இவ்வூர் மிகப்பெரிய ஏக்கர் ஒன் றின் மீது உருவாக்கப்பட்டதாகும். அதனால்தான் மழைக்காலங்களில் கூட சிதம்பரம் வெள்ளப்பாழ் ஏற்படாமல் பாதுகாப்பாக உள்ளது. எனவே பண்டையகால தமிழர்களின் ஊர் மற்றும் நகர உருவாக்கத்தின் பொழுது அவர்கள் கைக்கொண்ட தொழில்நுட்பங் கள் அளப்பரியதாகும்.

திறவுச்சொற்கள்

எக்கர், தில்லை, தனியூர், சரஸ்வதி பண்டாரம்.

 

முன்னுரை

      இனவரைவியலை தீர்மானிப்பது மானுடம் சார்ந்த நிலவியல் அமைப்பாகும். நில வியல் அமைப்பும் அதன் சூழலும் சாதகமாகும் பட்சத்தில் அங்கே பண்பட்ட நாகரிகம் தோற்றம் பெருமென்பது இனவரைவியலின் முதன்மைக் கோட்பாடாகும். இதை கருத் தில் கொண்ட தமிழ் மன்னர்கள் அரண்மனை வளாகத்தை மையப்படுத்தி தலைநகரை யும், கோயிலை மையப்படுத்தி புதிய ஊர்களை உருவாக்கி அதில் மக்கள் குடியேற் றங்களை ஏற்படுத்தினர். இதுதான் ஊர்மயமாக்களின் முதல் படிநிலையாகும். இதில் கோயில் என்ற கட்டுமானம் அப்பகுதி மக்களின் சமூக ஊடகமாக்கப்பட்டிருந்தது. இக் கருது கோளின்படி உருவாக்கப்பட்ட பல சிறப்பு மிக்க ஊர்களை இன்றும் தமிழகத் தில் காணமுடிகிறது. இக்கட்டுரையானது சிதம்பரம் என்ற ஊர் உருவாக்கத்தின் பொழுது அக்காலத்தில் பின்பற்றப்பட்ட புவிசார் அமைப்பியல் கூறுகளை இலக்கிய, கல்வெட்டுத் தரவுகளின் வாயிலாக விவாதிக்கப்படுவதை கருப்பொருளாகக் கொண் டுள்ளது

ஊர் உருவாக்கத்தில் கடைபிடிக்கப்பட்ட முக்கிய அலகுகள்

  பொதுவாக ஊர் என்பது விளைநிலங்கள் சூழ்ந்த பகுதியாகும். பண்டைய காலத்தில் ஊர் உருவாக்கத்தில் எந்த வகையான கட்டுமான அலகுகள் கையாளப்பட்டன என் பதை முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி.670 – 685)  வெளியிடப் பட்ட கூரம் செப்பேட் டின் வாயிலாக உணரமுடிகிறது.

  • கூள வணிக பெருமக்கள்
  • கருவி தயாரிப்போர்
  • தண்ணீர் பகிர்மான அலகுகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு
  • விவசாய உற்பத்திக்கு ஏற்ற மண்வளம்
  • நிரந்தர நீர் மேலாண்மைத் திட்டம்
  • கட்டுமானத்திற்கு ஏற்ற தரமான மண்
  • சமூகவியல் மையமாக கோயில் மற்றும் மண்டபங்கள்
  • அறச்செயல்களுக்கான நிரந்தர வைப்பாக வழங்கப்பட்ட தானங்கள்

மேற்கண்ட புவிசார் மற்றும் மனிதவளமேம்பாட்டு அலகுகள் அனைத்தும் பல்லவர் காலத்தில் ஊர், நகர உருவாக்கத்தில் பின்பற்றப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலங்களில் உருவாக்கப்படும் புதிய ஊர்களிலும் மேற்கண்ட அலகுகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற தொலைநோக்கின் அடைப்படையிலேயே இந்நுட்பங்கள் செப்பேட்டில் பொறிக் கப்பட்டதாக கருதலாம். இதே புவிசார் அலகுகளை சோழமன்னர்களும் சிதம்பரம்  உருவாகத்தில் பின்பற்றியிருப்பதிலிருந்து அக்கால ஊர் நிர்மானத்தின் பாரம்பரிய உயர்வை அறியமுடிகிறது.  

சிதம்பரம் உருவாக்கம்

   கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம் இன்று நகராட்சியாக திகழ்கிறது. சிதம்பரம் என்பது ஊரின் பெயர் அல்ல. கோயிலின் பெயர். இவ்வூர் பண்டைய காலத் தில் தில்லைவனம், தில்லை என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் ஊரின் பெயர் மறைந்து கோயிலின் பெயரே ஊரின் பெயராகிவிட்டது. முதலாம் இராஜேந்திரசோழ னின் காலத்தில் பெரும்பற்றப்புலியூர் என அழைக்கப்பட்ட இவ்வூர், கி.பி.1036  தனி யூர் என்ற சிறப்பு அந்தஸ்தையும் பெற்று சுமார் 350 ஆண்டுகாலம் எதேச்சிய அதி காரத்தோடு விளங்கியது. சிதம்பரம் பல்லவர் காலம் தொட்டு சோழர், பிற்கால பல் லவர், பாண்டியர், விஜயநகர நாயக்கர் காலம் வரை படிப்படியாக வளர்ச்சியுற்றதா கும்.முதலில் கோயில் உருவாக்கம், அதை சுற்றி நேராக அமைக்கப்பட்ட அகன்ற வீதிகள், கல்விச்சாலை, நூலகம், இலவச பொது மருத்துவமனை, மழைநீர் வடிகால், அழகிய நந்தவனங்கள், மரம்வளர்ப்பு, நகரை சுற்றி குளங்கள் என ஊர் உருவாக்கத் திற்கான அத்தனை புவிசார் மற்றும் மக்கள்நல அலகுகள் மிக கவணமாக பின்பற் றப்பட்டிருந்தன.

தனியூர்  

  சிதம்பரம் பல தனிச்சிறப்புகளை தன்னகத்தே கொண்ட ஊராக இருந்ததால் தனி யூர்களுள் ஒன்றாக விளங்கியிருக்கிறது. சோழர் காலத்தில் பல ஊர்கள் தனியூர்க ளாக இருந்து நிர்வாகப்பொறுப்புகளை தாங்களே நிர்வகித்து வந்துள்ளன. இதே போன்று சிதம்பரமும் சோழர்காலத்தில் தனியூர் என்ற சிறப்பு அந்தஸ்து பெற்றி ருந்ததை கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. பெரும்பற்றப்புலியூர் எந்த ஒரு நாட் டிற்கும் அடங்கப்பெறாத முழுதன்னாட்சி அதிகாரம் பெற்ற ஊராகும். இவ்வூரின் மொத்த நிர்வாகப் பொறுப்பும் ‘’பெரும்பற்றப்புலியூர் மூலப் பருஷையாராகிய அர்ச்ச கர், தேவகன்மிகள், கணக்கர், ஸ்ரீகாரியம் செய்வோர் அடங்கிய மூலப்பருடையார் கள் என்ற தன்னாட்சி அதிகாரம் பெற்ற குழுவிடம் இருந்துள்ளது. இங்கு தன்னாட்சி அதிகாரம் படைத்த சிறப்பு அந்தஸ்து என்ற அலகு இந்த ஊராக்கத்தில் பின்பற்றப் பட்டுள்ளதை உணரமுடிகிறது.

சிதம்பரத்தின் புவிசார் அமைப்பு

  கடந்த 2015 நவம்பர் மாதம் தானே புயலால் கடலூர் மாவட்டம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. சிதம்பரம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிக ளில் வெள்ளநீர் சூழ்ந்தது. அரசின் சார்பாக சேதவிவரங்களை பார்வையிட வந்த முன் னாள் கடலூர் மாவட்ட ஆட்சியர் ககன்தீப்சிங்பேடி வானுர்தியிலிருந்து பார்வையிட் டார். அன்று மாலை செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளும், புறநகர் பகுதியும் வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.ஆனால் நகரின் மையத்தில் அமைந்துள்ள கோயில், மாடவீதிகள், அவற்றை ஒட்டியுள்ள நகர் பகுதி களில் வெள்ளப்பாதிப்பு இல்லை. காரணம், சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் மேடான பகுதியை தேர்வு செய்து கோயிலை மையமாக வைத்து சிதம்பரம் உருவாக்கப் பட்டுள்ளதை தாம் விமானத்திலிருந்து பார்த்து வியந்ததாக  தெரிவித்தார்.

   சிதம்பரம் மிகப்பெரிய எக்கர் ஒன்றின் மீது உருவாக்கப்பட்டுள்ளதாக தொலையு ணர்வு தொழில் நுட்பத்துறை பேராசிரியர் தர்மராஜன் இரமேஷ் அவர்கள் குறிப்பிட் டுள்ளார். அவர் உருவாக்கிய சிதம்பரம் பகுதிக்கான புவியமைப்பு வரை படத்தில் (GEOMORPHOLOGICAL MAP) இவ்வூர் பெரிய மணல் மேட்டின் மீது (மிகப் பெரிய எக் கர்) அமைந்திருப்பதாகச் சுட்டியுள்ளார். தொலையுணர்வு தொழில்நுட்பத்தின் அடிப் படையில் உருவாக்கப்பட்ட இவ்வரை படத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சிதம்பரம் கீழரத வீதியில் உள்ள ராசி திருமண மண்டபத்தில் குடிநீர் தேவைக்காக ஆழ்துளைகிணறு தோண்டப்பட்டது. அப்பொழுது புவியின் மேற்பரப்பிலிருந்து 120 அடி ஆழம் வரை கடற்கரை மணல் அதிக அளவில் வெளிப் பட்டது. 120 அடிக்கு கீழே செல்லச்செல்ல கருப்புநிறகளிமண், கிளிஞ்சல்கள் வெளிப் பட்டன. எனவே சிதம்பரம் மணல்மேட்டில் ஸ்தாபிக்கபட்ட ஊர் என்பதற்கு இதுவே வலுவான சான்றாக இருக்கமுடியும்.

எக்கர் பற்றிய ஆய்வு 

  பலநூறு ஆண்டுகளுக்கு முன் உப்பங்கழியால் சூழப்பட்ட தில்லைமரக் காட்டில் இன்றைய சிதம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் சிதம்பரம் நெய்தல் நிலப்பகுதியாக இருந்துள்ளது. புவியியல் தரவுகளின் படி இப்பகுதியில், பாறைகளால் உருவான குன்றோ, மலையோ இல்லை. கடலோரப் பகுதிகளில் கடற்கரைக்கு இணையாக நீளவாக்கில் மணல்மேடுகள் உருவாகின்றன. இதை புவிசார் ஆய்வாளர் கள் SAND DUNES என்று அழைக்கின்றனர். இம்மணல்மேடுகளை கடலூர் மாவட்டத் தில் தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, குடிகாடு, காரைக்காடு, சங்கொலிக்குப்பம், தியாகவல்லி, தம்பனாம்பேட்டை, திருச்சோபுரம், பெரியக்குப்பம், அன்னப்பன்பேட்டை, ஆண்டிக்குழி, சாமியார்பேட்டை, ஆண்டார்முள்ளிப்பள்ளம்,  பெரியப்பட்டு, சிலம்பிமங் கலம், மணிக்கொல்லை, பரங்கிப்பேட்டை போன்ற ஊர்களில் காணலாம். மணற்குன் றுகளால் மூடப்பட்டுகிடந்த மாமல்லபுரத்து மரபுச்சின்னங்கள் பல பிற்காலத்தில் நடைபெற்ற அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டவைகளேயாகும். சாளுவன்குப்பத்தில் சுனாமிக்குப் பிறகு வெளிக்கொண்டுவரப்பட சங்ககாலத்தை சார்ந்த முருகன் கோயில் மணலால் மூடப்பட்டுக் கிடந்ததுதான். இத்தைகைய மணல்மேடுகளை சங்க இலக்கி யங்கள் ‘’எக்கர்‘’ என்று  சுட்டுகின்றன. எக்கர் என்பது பெரு மணற்பரப்பு, மணல்முகடு, மணற் குன்று என அகராதிகள் கூறுகின்றன. கடற்கரை மட்டுமல்லாது ஆற்றின் கரைகளிலும், படுகையிலும் உருவாகும் மணல்மேட்டையும் எக்கர் என்றே அழைக் கப்படுகிறது. சங்க இலக்கியத்தில் ஐம்பத்து நான்கு பாடல்களில் எக்கர் பற்றிய குறிப் புகள் உள்ளன‘’ எக்கர் இட்ட மணலினும் பலவே‘’ (புறம் – 43.23), ‘’வடு வாழ் எக்கர் மணலினும் பலரே‘’(மலை படு – 556),‘’தூஉ எக்கர்த் துயில் மடிந்து ‘’(ப.பாலை – 117), ‘’படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர் ‘’(அகம்–11.9), ‘’முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்‘’(நற் –15.1)போன்ற பாடல் வரிகளின் மூலம், சங்ககாலத்தில் ஆறுகள் மற்றும் கடற் கரைகளில் இருந்த பெரிய மணல்மேடுகள் பற்றி அறியமுடிகிறது.

    தற்பொழுது சிதம்பரத்தின் மையப்பகுதியான நடராஜர் கோயில் கடல்மட்டத்திலி ருந்து 14 மீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நடராஜர்கோயிலை மையமாக வைத்து நான்கு திசைகளிலும் மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் கடல்மட்ட உயரம் கணக்கி டப்பட்டது. இதில் திருவேட்களம்கோயில் 4 மீ உயரத்திலும், அண்ணாமலைப் பல் கலைக் கழக துணைவேந்தர் மாளிகை அருகே 5 மீ உயரம் பதிவாகியது. மேற்கே சிதம்பரம் நோக்கி வரவர உயரம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. சுமார் 5 கி.மீ கடந்து நடராஜர் கோயிலை அடையும்பொழுது கடல்மட்டத்திலிருந்து 14 மீ உயர்ந்து காணப்படுகிறது. மீண்டும் கோயிலின் மையத்திலிருந்து மேற்கே செல்லும் பொழுது உயரம் படிப்படியாக குறைந்து சுமார் 2.5,3 கி.மீ தூரத்தில் மீண்டும் 4 – 6 மீட்டர் எனும் நிலையை அடைகிறது. வடக்கிருந்து தெற்காக செல்லும் போதும் இதேநிலைதான். இதன் மூலம் சிதம்பரம் மணல்மேட்டின் மீது அமையபெற்றதை உணரமுடிகிறது.

தில்லைவனம் விளக்கம்

  சிதம்பரத்தின் ஆதிப்பெயர் தில்லை, தில்லைவனம் என்பாதாகும். தில்லை என்பது சதுப்புநிலத்தில் வளரும் ஒருவகை மரத்தின் பெயராகும். இதற்கு அலையத்தி, அம் பலத்தி, அகதி, அகில் என பல்வேறு பெயர்கள் உண்டு. பண்டையகாலத்தில் தில்லை மரங்கள் நிறைந்தகாடாக இப்பகுதி இருந்ததால் தில்லைவனம் என அழைக்கப்பட் டதை சிதம்பரபுராணம் குறிப்பிடுகிறது. இம்மரங்கள் சிதம்பரம் கான்சாகிப்வாய்க்கால் பகுதியில் வளர்ந்துள்ளதை இன்றும் காணமுடிகிறது. சிதம்பரத்திற்கு கிழக்கே பிச்சா வரத்தை ஒட்டியுள்ள சதுப்புநிலப்பகுதிகளில் இம்மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள் ளதை இன்றும் காணலாம். தில்லை மரத்தின் தாவரவியல் பெயர் EXCOECA RIA AGAL LOCHA என்பதாகும். இவை MANGROVE வகை தாவரம் என்கிறது தாவரவியல்.

சங்கப் பாடல்களில் தில்லைமரம்

 நெய்தல் நிலத்தில் உப்பங்கழிகளை ஒட்டி தில்லைக்காடுகள் இருந்ததை‘’அருளாயா கலோ கொடிதே இருங்கழிக், குருளை நீர்நாய் கொழுமீன் மாந்தித்’’, ’’தில்லையம் பொதும்பிற் பள்ளி கொள்ளும்’’,(பாடல்–131)என உப்பங்கழி, தில்லை மரங்கள் பற்றி ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது. கலித்தொகை தில்லைக்காடு, உப்பங்கழி பற்றி கூறும் பொழுது, ‘’மாமலர் முண்டகம் தில்லை யோடு ஒருங்கு உடன், கானல் அணிந்த’’, (பாடல் 133.1– 5) இப்பாடல்கள் சுட்டும் கழி, தில்லை மரம் ஆகியவை ஒன்றை யொன்று அடுத்தடுத்திருந்தன என்பதை உணர்த்துகிறது. இதே நிலவியல் அமைப்பு தில்லையிலும் இருந்திருக்க வாய்ப்புள்ளது.

தேவாரத்தில் தில்லைமரம்

தேவாரக் காலத்தில் தில்லையின் புவிசார் அமைப்பை பற்றி திருஞானசம்பந்தரின்  பாடல்...‘’ மையாரொண் கண்ணார் மாட நெடுவீதிக், கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லயுட், பொய்யா மறைபாடல் புரிந்தா உலகேத்தச், செய்யானுறை கோயில் சிற் றம் பலந்தானே’’, (சம்பந்தேவா – 1.80.3). இந்தப் பாடலில் மை தீட்டப்பெற்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள், நீண்ட மாட வீதிகளில் பந்துவீசி விளை யாடும் அழகுடையதும், உப்பங்கழிகள் சூழப்பட்ட தில்லையுள், என்றும் பொய்யாத வேதப்பாடல்களை விரும்பி கேட்கும் சிவந்த திருமேனியையுடைய சிவபிரான் உறை யும் கோயிலே சிற்றம்பலமாகும் என குறிப்பிடுகிறது. சம்பந்தரின் காலமான கி.பி.7 ஆம் நூற்றாண்டில் சிதம்பரம் உப்பங்கழியால் சூழப்பட்டிருந்ததை உணரமுடிகிறது.

ஊராக்கமும் அதன் விரிவாக்கமும்

  வரையறுக்கப்பட்ட சிதம்பரத்தின் ஊராக்கம் என்பது பல்லவர் காலத்தில் தொடங்கப் பட்டதாகும். முதலாம் இராஜராஜசோழன் இவ்வூரை அறிவுசார் மையமாக உயர்த்தி னான். முதலாம் இராஜேந்திரசோழன் கங்கைகொண்டசோழபுரம் என்ற புதிய தலைந கர் உருவாக்கப்படும் வரை ( கி.பி.1014 முதல் கி.பி. 1022) எட்டாண்டு காலம் சிதம்பரத் தில் தங்கியிருந்து புதிய தலைநகர் முற்று பெறும் வரை இராஜ்ஜிய விவகாரங்களை சிதம்பரம் மாளிகையில் இருந்தே கவனித்து வந்தான். இக்காலக் கட்டத்தில் சிதம்ப ரம் சோழப்பேரரசின் தற்காலிக தலைநகராக விளங்கியிருக்க வேண்டும். கி.பி.1118 முதல் கி.பி.1136 வரை சோழப்பேரரசின் மன்னனாக விளங்கியவன் விக்கிரமசோழன். இவனது அரசவையில் முதலமைச்சராகவும், படைத்தளபதியாகவும் இருந்த நரலோ கவீரன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பல திருப்பணிகளை செய்துள்ளான். பழமை வாய்ந்த இவ்வூரின் மக்கள்தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்ட நரலோகவீரன் விரிவாக்க பணிகளை மேற்கொண்டான். குறிப்பாக சிதம்பரம் கோயிலை சுற்றியி ருந்த நான்கு வீதிகளையும் அகலப்படுதினான். சாலைகளில் இரவு நேரங்களில் மக் கள் அச்சமின்றி பயணிப்பதற்காக தெருவிளக்குகளை அமைத்து இரவு பகலாகும் படிச் செய்தான். விக்கிரமசோழன் தமது பெயரில் திருவீதியொன்றை புதியதாக ஏற்படுத்தி யமைப் பற்றி அவனது மெய்கீர்த்தி பெருமையாக குறிப்பிடுகிறது. இவ் வீதியின் அழகைப்பற்றி ஒட்டக்கூத்தர் குலோத்துங்கன் பிள்ளைத் தமிழில் ‘’விக்கிரமசோழன் தெங்குத் திருவீதி‘’ என புகழ்கிறார்.

 

                                                                                                                          

 

  மேலும் நரலோகவீரன் நடராஜர் கோயிலுக்காக சிதம்பரத்தில் ஐம்பதாயிரம் பாக்கு மரங்களை நட்டுவித்தான். கோயிலின் கிழக்கு பகுதியில் இருந்து கடற்கரை வரை நந்தவனங்களை ஏற்படுத்தி தில்லையை பசுமையான ஊராக மாற்றினான். மாசி மகத் தன்று நடராஜர் கடலுக்குச்சென்று புனித நீராடுவதற்காக சிதம்பரத்திலிருந்து கடற் கரைவரை சாலை அமைத்தான். அங்கு வரும் பக்தர்களின் தாகம் தீர்க்க கடற்கரை பகுதியில் மூன்று நன்னீர் குளங்களை வெட்டுவித்தான். மேலும் நடராஜர் கோயிலுக் காக 73 நந்தவனங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்ததாக கல்வெட்டுக்கள் சுட்டுகின்றன. என வேதான் வரலாற்றறிஞர்கள் இவ்வூரை தென்னிந்தியாவின் முதல் பசுமைநகரம் என் கின்றனர். குறிப்பாக ஊர் விரிவாக்கம் மற்றும் கோயில் விரிவாக்கம் அன்றைய மக் கள் தொகைக்கு ஏற்ப விரிவுபடுத்தியவர்கள் சோழமன்னர்களேயாவர்.                                                                                        

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்

   தில்லை நடராஜர் சோழர்களின் குலதெய்வமாகும். எனவேதான் இம்மன்னர்கள் சிதம்பரத்தை சைவ சமையத்தின் முக்கிய ஆன்மிகத் தலமாக மாற்றியிருந்தனர். மழைக் காலங்களில் சிதம்பரத்தின் மேற்குப் பகுதியில் பொழியும் மழையால் இந் நகர் அடிக்கடி வெள்ளத்தால் சூழப்பட்டு மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்ட முதலாம் பராந்தகன் வீரநாராயண ஏரியை வெட்டி மேற்குப்பகு தியில் இருந்து வரும் அதிகப்படியான தண்ணீரை அங்கு சேமிக்கச்செய்தான். இத னால் கோயிலுக்கு மழைக் காலங்களிலும் பக்தர்கள் அச்சமின்றி வந்து செல்ல முடிந்தது. மேலும் ஒரு டி.எம்.சி கொள்ளவு கொண்ட இந்த ஏரியில் ஆண்டு முழு வதும் தண்ணீர் செமிக்கப்பட்டது. இது வேளான் உற்பத்தியின் முக்கிய அலகாக விளங்கியதால் இப்பகுதி உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டியது. சிதம்பரத் தின்  நீர்தேவைக்காக ஊரை சுற்றி ஒன்பது குளங்கள் நிர்மாணிக்கப்பட்டதாக எழுத் தாவணங்கள் குறிப்பிடுகின்றன. இப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்தை காக்கும் முக்கிய அலகாகவும் இக்குளங்கள் திகழ்ந்தன.

  சிதம்பரம் நடராஜர் கோயில் 51 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இக்கோயிலின் உட் பகுதியில் விழும் மழைநீர் முழுவதையும் சேமிக்க வேண்டும் என்ற கருதுகோல் அக் கால கட்டுமானத்தில் கருத்தில் கொள்ளப்பட்டிருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட் டது. கடந்த 2015 ஆம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோயிலின் வடகிழக்கு பகுதியில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் உருவாக்கப்பட்ட திருப்பாற்கடல் என்ற குளம் தமிழ்நாடு அரசால் தூர்வாரப்பட்டது. அப்போது குளத்தின் தெற்கு பகுதியில் ஒரு கால்வாய் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. நான்கு அடி உயரம், இரண்டு அடி அகலம் கொண்ட இக்கால்வாய் முற்றிலும் செங்கற்களால் கட்டப்பட்டு நீள் செவ் வக வடிவ கருங்கல் பலகையால் மூடப்பட்டு இருந்தது. இக்கால்வாய் குளத்தின் மேற்குப்பகுதி வழியாக வடக்கு நோக்கிச்செல்லும் பிரதான கால்வாயோடு இணைக் கப்பட்டிருந்தது. இது முழுவதும் தூய்மைபடுத்தப்பட்டது. அப்பொழுது நடராஜர் கோயி லின் வடக்குப் பகுதியில் உள்ள யானைக்கால் மண்டபத்தின் அருகே தொடங்கப்பட்ட கால்வாய்  சுமார் 2200 மீட்டர் வரை பூமிக்கடியில் வடக்கு நோக்கிச் சென்று திருப் பாற்கடல் மற்றும் தில்லை காளிக் கோயில் முன்பாக உள்ள சிவப்பிரியை குளத் தையும் இணைப்பதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இக்கால்வாய் 65 செ.மீ அகலமும், 77செ.மீ ஆழமும் கொண்டதாகும். இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்கள் 24x15x5 செ.மீ அளவுள்ளவை. இந்த நிலவரை கால்வாய் மூலம் சிதம்பரம் நடராஜர் கோயி லில் விழும் மொத்த மழை நீரையும் சேதாரமின்றி இரண்டு குளங்களிலும் சேமிக்கப் பட்டது. மேலும் கோயில் வளாகத்தில் மழைநீர் தேங்குவது நிரந்தரமாகத் தடுக்கப் பட்டது. இக்கால்வாய் புவி மட்டத்திலிருந்து 30 செ.மீ அளவில் தொடங்கி சிவப்பி ரியை குளத்தை அடையும் பொழுது 200 செ.மீ ஆழத்தில் முடிகிறது. இதனால் மழை நீர் நேராக குளத்தினை அடைவது எளிதாக்கப்பட்டது. இக்கட்டுமான தொழில்நுட்பக் கூறுகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் இதன் காலம் கி.பி.11–12 ஆம் நூற்றாண்டு என குறிப்பிட்டுள்ளனர். மழைநீர் சேமிப்பின் மூலம், நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் சோழகள் காட்டிய அக்கறை அளப்பரியாதாகும்.

சரஸ்வதி பண்டாரம்

  சரஸ்வதி என்பது நூல்களையும், பண்டாரம் என்பது (கரூவூலம்) சேமிகின்ற இடத் தையும் குறிப்பதாகும். சிதம்பரம் நடராஜர்கோயில் வளாகத்தில் மிகப்பெரிய நூலகம் இருந்த செய்தியை கல்வெட்டு சான்றுகள் பகர்கின்றன. கி.பி. 1251, கி.பி.1264 ஆம் ஆண்டுகளை சார்ந்த ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் இரு கல்வெட்டுக்கள் நூலகத் தின் செயல்பாடுகள் குறித்து விவரிக்கின்றன. மேலும் இந்நூலகத்தை நல்ல முறை யில் பராமரிக்க, விரிவுபடுத்தவும் சுந்தரபாண்டியனின் அமைச்சக அதிகாரியான பல்லவதரையன் தானம் வழங்கியதையும் இக்கல்வெட்டுகள் சுட்டுகின்றன. மேலும் இந்நூலகத்தில் வாசிக்கவும், எழுதவும், அவிழ்ந்தவைகளை கட்டி ஒழுங்காக அடுக் கவும், திவ்ய ஆகமம், புராணம், ஜோதிட சாஸ்திரங்கள் படிக்கவும் எழுதவும், விளக் கிச் சொல்வதற்காக இருபது அறிஞர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த சரஸ்வதி பண்டாரத்தில் பணிபுரிந்த இருபது பண்டிதர்களுக்கு ஊதியமாக நெல்லும், பணமும் கிடைக்கத்தக்கவாறு நிலம் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்திலிருந்த நூல் களுள் மிகச்சிறந்த நூல் ‘’சித்தாந்தரத்னாகரம்‘’ என ஆவணங்கள் சுட்டுகின்றன. மூன் றாம் குலோத்துங்கசோழனின் ராஜகுருவான சோமேஸ்வர பண்டிதர் என்ற சுவாமி தேவரால் இந்நூல் எழுதப்பட்டதாகும். இவரே நூலகத்தின் நிர்வாகப் பணிகளை மேற் பார்வை செய்யும் தலைமை நூலகராகவும் இருந்துள்ளார்.

 அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்வியலையும், இறைத்தொண்டையும் கூறும் பெரியபுராணம் என்ற நூலை சேக்கிழார் சிதம்பரத்தில் தங்கி எழுதினார் என்று திரு முறை கண்டபுராணம் கூறுகிறது. அவர் சிதம்பரம் கோயிலைத் தேர்ந்தெடுக்க வேண் டிய காரணம் நாயன்மார்களின் வரலாற்றை எழுதுவதற்கு தேவையான மூலங்களும், சைவ சமயத் தத்துவ நூல்களும் நிறைந்ததொரு நூலகம் தில்லையில் இருந்ததுதான் காரணமாகும். சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கனின் அரசவையில் முதல் மந்திரி யாக பணியாற்றியவர். அப்பரும், சம்பந்தரும், சுந்தரருக்கு ஒரு நூற்றாண்டிற்கு முன் னர் வாழ்ந்தவர்கள். இவர்களது நூல்களெல்லாம் இந்நூலகத்திலிருந்து எடுக்கப்பட்டு வெளியுலகிற்கு அறிமுகமானது என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். மேலும் இந்நூல கம் கி.பி.8 ஆம் நூற்றாண்டு முதல் சிதம்பரத்தில் செயல்பட்டு வந்ததாக ஆய்வாளர் கள் கூறுகின்றனர். ஆனால் கி.பி.10 ஆம் நூற்றாண்டளவில் இந்நூலகம் என்ன கார ணத்தாலோ மூடப்பட்டிருக்கிறது. பிறகு முதலாம் இராஜராஜசோழன் மூடிக்கிடந்த சரஸ்வதி பண்டாரத்தைத் திறந்தான் என்பதை உமாபதி சிவாச்சாரியார் தாம் இயேற் றிய திருமுறைகண்டபுராணத்தில் ‘’பண்டாரம் திறந்து விட்டான் பரிவு கூர்ந்தான்‘’ என பெருமையாக குறிப்பிடுகிறார். முதலாம் இராஜராஜசோழனால் மீண்டும் திறக்கப்பட்ட நூலகத்தை பார்த்து வியந்த சுந்தரபாண்டியன் அதை பாதுகாக்க எண்ணியே 117 3/4 வேலி நிலங்களை தானமாக வழங்கினான். சோழர்க்கும், பாண்டியர்க்கும் அரசியல் பகை இருந்தாலும் அறிவு பெருக்கத்தின் கருவூலமாக விளங்கிய சரஸ்வதி பண்டா ரத்தைக் காப்பதில் இருந்த ஒற்றுமை அளப்பரியதாகும். சோழர்கால ஊர் நிர்மானத் தின் முக்கிய அலகாக இந்த அறிவுச் சுரங்கம் இருந்துள்ளது. மேலும் இவ்வூரில் இயங்கிவந்த கல்வி நிலையத்தில் பணியாற்றிய நான்கு ஆசிரியர்க்கும் நிரந்தர நில தானத்தை சுந்தரபாண்டியன் வழங்கியுள்ளான். இடைக்கால வரலாற்றில் சிதம்பரம் என்ற ஊர் அறிவுவளர்ச்சியின் முக்கியமையமாக திகழ்ந்துள்ளது. இதன் வாயிலாக ஊர் மக்களின் அறிவுவளர்ச்சி என்ற கருத்தும் இங்கு கவணத்தில் கொள்ளப்பட்டிருப் பது போற்றத்தக்க ஒன்றாகும்.     

மருத்துவச்சாலை

  ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் ஏழு மற்றும் பதிமூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட் டில் சிதம்பரத்தில் இருந்த அரசு பொது மருத்துவமனையில் (PRIMARY HEALTH CARE CENTRE) பணியாற்றிய இரண்டு மருத்துவர்களுக்கு நிரந்தர நிலதானம் வழங்கப்பட் டதை சுட்டுகின்றன. இதன் மூலம் நெடுநாட்களாக இவ்வூரில் இயங்கிவந்த அரசு மருத்துவமனைக்கு சுந்தரபாண்டியனும் தானம் வழங்கி சிறப்பு செய்துள்ளான். எனவே ஊர்மயமாக்களில் மக்களின் நலனுக்காக இலவச மருத்துவமனை என்ற அலகு இங்கு சிறப்பிடம் பெறுகிறது.                                                                                                                              

முடிவுரை

  பண்டையகாலத்தில் நீரும், வயலும் சூழ்ந்த இடமே ஊர் உருவாக்கத்தின் முதல் நிலை என நிகண்டுகள் பகர்கின்றன. ஊராக்கத்தில் புவிசார் அமைப்புகளே ஊர்களின் நீடித்த நிலைத்தன்மையை தீர்மானிக்கின்றன. மேலும் காரணிகளாகவும், அப்பகுதி யில் நிகழ்ந்த சமூக மாற்றங்கள், பொருளாதார வளர்ச்சி, அறிவியல் தொழில்நுட்பங் கள், கல்வியியல் மேம்பாடு, தொழில் வளர்ச்சி, மொழியாளுமை, கலை. கட்டடக் கலை போன்றவற்றில் நிகழ்ந்த படிநிலை மாற்றங்கள் போன்றவற்றை தீர்மானிக்கும் காரணிகளில் முதன்மையாக விளங்கியது அப்பகுதியின் நிலவியல் கூறேயாகும். இந் தகருது கோள்தான் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, நாட்டியக்கலை, ஆன் மிகம், மருத்துவம், கல்வி, நூலகம், விவசாய உற்பத்தி, மரம்வளர்ப்பு, மொழி யாளுமை, இலக்கியவளர்ச்சி, திருவிழாகள் என பன்னோக்கு தரத்திற்கு சிதம்பரத்தை உயர்த்தியது. மேலும் ஒரு ஊரின் நீடித்த நிலைத்தன்மையை நிலவியலின் புவிசார் கூறுகளே தீர்மானிகின்றன என்ற அடிப்படைகோட்பாடே சிதம்பரம் இன்று வரை நீடித் திருக்க முதன்மைக் காரணமாகும்.

குறிப்பு நூல்பட்டியல்

  1. தென்னிந்திய கல்வெட்டுக்கள் மடலம்: IV, VII,VIII,XIII.
  2. கடலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி ஒன்று & இரண்டு.
  3. தி.வை. சதசிவபண்டாரத்தார், பிற்கால சோழர் வரலாறு.
  4. தினமணி நாளிதழ் – 21.11.2015.
  5. பல்லவர் செப்பேடுகள் முப்பது, உலக தமிழாராய்ச்சி நிறுவனம்.
  6. சம்பந்தர் அருளிய தேவாரம்.
  7. புறநானூறு , புலியூர்க் கேசிகன்.
  8. மலைபடுகடாம், புலியூர்க் கேசிகன்.
  9. அகநானூறு, புலியூர்க் கேசிகன் .
  10. நற்றிணை, அ.நாராயணசாமி ஐயர்.
  11. பட்டினப்பாலை ஆராய்ச்சி, மறைமலையடிகள்.
  12. பரிபாடல், புலியூர்க் கேசிகன்.
  13. மதுரைக்காஞ்சி, மாணிக்கனார்.
  14. ஐங்குறுநூறு, உ.வே.சாமிநாதர்.
  15. கலித்தொகை, உ.வே.சாமிநாதர்.
  16. A Topographical List of Inscriptions In The TamilNadu And Kerala States vol – II South Arcot District.