ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

எச்சமரபுகளும் பொதுமரபுகளும்

முனைவர்.பெ. விஜயலட்சுமி 16 Oct 2020 Read Full PDF

முனைவர்.பெ. விஜயலட்சுமி 

   கௌரவ விரிவுரையாளர்

       தமிழ்த்துறை          

அரசு கலைக்கல்லூரி                              

          தருமபுரி.               

                                                                                                      

திறவுச்சொற்கள்

      தொல்காப்பியம்,செய்யுளுக்குரிய சொற்கள், பொருள்கோள்கள், தொகைச்சொற்கள் ,அடுக்குச்சொற்கள், எச்சங்கள்

ஆய்வுச் சுருக்கம்:

தொன்மையும் பழமையும் வாய்ந்த தமிழ்மொழி செம்மொழி என்ற தகுதி பெற்றது. பழமையான இலக்கிய இலக்கணங்களைத் தன்னகம் கொண்டது. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் அதன் வளம் குறையாது இருப்பதற்குக் காரணம் அதன் நிலையான இலக்கண மரபுகளாகும். காலம் மற்றும் சமூக மாற்றங்களால் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பினும் அதன் அடிப்படை மரபுகள் மாறாது இருப்பதே அதன் நிலைத்தத் தன்மைக்கு காரணமாக உள்ளன. அதனை உறுதிப்படுத்த பல்வேறு காலங்களில் எழுதப்பட்ட இலக்கண நூல்களை ஒப்பிட்டு ஆய்வு செய்வது அவசியமாகிறது.

முன்னுரை

இலக்கணம் என பொதுவாக கூறினும் இவ்வாய்வில் சொல்லிலக்கண மரபுகள் மட்டும் உட்படுத்தப்பட்டுள்ளது. தொல்காப்பியம் முதல் தமிழ்நூல் வரையிலான பதினோரு இலக்கணநூல்களில் பல்வேறு காலங்களில் பல்வேறு ஆசிரியர்களால் கூறப்பட்ட எச்சமரபு செய்திகளையும் பொதுமரபு செய்திகளையும் ஒப்பீடு செய்யப்பட்டு அவற்றில் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளை விரிவாகவும் தெளிவாகவும் இங்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

இயலமைப்பு

      தொல்;காப்பியம் கிளவியாக்கம் தொடங்கி உரியியல் ஈறாகக் கூறப்பெற்ற இயல்களில் கூறாதுஇ விடுபட்டு எஞ்சியுள்ள சொல்லிலக்கணச் செய்திகளை எச்சவியலில் கூறுகின்றது. நேமிநாதம் எச்சமரபிலும், நன்னூல் இலக்கணவிளக்கம் தொன்னூல்விளக்கம் தமிழ்நூல் போன்ற நூல்கள் பொதுவியலிலும் கூறுகின்றன. இலக்கணக்கொத்தும் முத்துவீரியமும் ஒழிபியலில் கூற, வீரசோழியமும் பிரயோகவிவேகமும் தொகைஇ சமாசப் படலங்களில் கருத்துக்களைக் கூறுகின்றன.

      இவ்வாறு தமிழ் இலக்கணநூல்கள் எச்சவியலிலும் பொதுவியலிலும் கூறப்பெற்றுள்ள செய்திகளான செய்யுளுக்குரிய சொற்கள்இ செய்யுள் விகாரங்கள்இ பொருள்கோள்கள், தொகைச்சொற்கள் போன்றனவற்றை கீழ்கண்டவாறு மிகவிரிவாக காணலாம்.

எச்சவியல் பெயர்காரணம்

      எச்சம் என்பது எஞ்சி நிற்பது, மிச்சம், கால்வழி, தொக்கி நிற்பது போன்ற பல பொருள்களைத் தரும்.1 கிளவியாக்கம் முதலாக உரியியல் இறுதியாகவுள்ள இயல்களுள் உணர்த்தற்கு இடமில்லாமையாற் கூறப்படாது எஞ்சி நின்ற சொல்லிலக்கணம் எல்லாவற்றையும்; தொகுத்துணர்த்துவது இவ்வியலாதலின் எச்சவியல் என்னும் பெயர்த்தாயிற்று என்பர்.2

செய்யுளுக்குரிய சொற்கள்

      தொல்காப்பியம் செய்யுள்ளுக்குரிய சொற்கள்களாகஇ

“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்என்று                  அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே”3

என நான்கு வகைப்படும் என்கிறது. இதில்இ இயற்சொல் என்பது பெயர்இ வினைஇ இடைஇ உரி என்னும் நான்கு வகையாலும் செய்யுளுக்கு உரியதாக வரும். திரிசொல் திசைச்சொல் வடசொல் என்னும் மூன்று சொற்களும் பெயர்ச்சொற்களே அல்லாமல் பிறசொற்களில் வருவதில்லை என்று குறிப்பிடுகின்றது.

      நன்னூல் இயற்சொல் திரிசொல் என்னும் இயல்பினையுடைய பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் என இரண்டாம். இவற்றுடன் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் அடுத்து நான்குமாம்; இவற்றுடன் திசைச் சொல்லும் வடசொல்லும் அணுகாவிடத்து என்கிறது. இலக்கணவிளக்கமும்இ நன்னூல் கூறியதையே பின்பற்றி கூறியுள்ளது. தொன்னூல் விளக்கம் எச்சொல்லும் பெயர்இ வினைஇ இடைஇ உரி என நான்கு இவற்றுடன் பொதுவாக இயற்சொல் திரிசொல் வரும் என்கிறது. முத்துவீரியம்  தொல்காப்பியத்தைப் பின்பற்றியே கூறியுள்ளது.

      சுவாமிநாதம் இயற்சொல் திரிசொல் என்னும் இருவகைச் சொல்லும் இயல்பினால் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லுமாம். இடைச்சொல்லும் உரிச்சொல்லும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றுடன் திசைச்சொல் வடசொல் என்ற இருவகையையும் சேர்த்துக் கொள்ள மொத்தம் பதினாறு வகையான சொல்பாகுபாடு உடைத்து என்று குறிப்பிடுகின்றது.

      மு.வரதராசன் “இயற்சொல் மக்களின் பேச்சு வழக்கிலுள்ள தமிழ்ச்சொற்கள் என்றும்இ திரிசொல் பேச்சுவழக்கிறந்து செய்யுளவில் நின்ற தமிழ்ச்சொற்கள் என்றும்இ வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்தன வடசொல் என்றுமஇ; பிறமொழிச்சொற்கள் எல்லாம் திசைச்சொற்கள் என்றும் வகைப்படுத்தலே ஈண்டு நோக்கமாகும்” 4 என்கிறார்.

இயற்சொல்

      தொல்காப்பியம் இயற்சொல் என்பது செய்யுள் இயற்றுவதற்குரிய நால்வகைச் சொற்களுள் ஐயம் திரிபின்றி இயல்பாகப் பொருள் விளக்கும் சொல் இயற்சொல்லாகும். இவ்இயற்சொல் செந்தமிழ் நிலத்திற்கே அன்றி கொடுந்தமிழ் நிலத்திற்கும் பொதுவாகும் தன்மையால் இயற்சொல் ஆயிற்று என்று குறிப்பிடுகின்றது. நன்னூல்இ இலக்கணவிளக்கம்இ முத்துவீரியம் போன்ற நூல்கள் தொல்காப்பியத்தைப் பின்பற்றியுள்ளன.

தொன்னூல் விளக்கம் சொல்லாலும் பொருளாலும் மயக்கத்தைத் தராது எளிமையாக அச்சொல்லே எவர்க்கும் பொருளை விளக்கி நிற்பது இயற்சொல். பொருள்இ இடம்இ காலம்இ சினைஇ குணம்இ தொழில் என்ற அறுவகை நிலையில் அமையும் இயற்சொற்களையும்இ பெயர்இ வினைஇ இடைஇ உரி என்ற நால்வகை நிலையில் அமையும் இயற்சொற்களையும் கூறுகின்றது. சுவாமிநாதம் இயற்சொல்லைப் பொதுமொழி (ளுவயனெயசன ழச உழஅஅழn டயபெரபந) என்று கூறிஇ அது ஒரு நாட்டு மக்கள் எல்லோரும் அறியக்கூடிய பொதுவான சொற்களைக் கொண்டது என்று கூறுகின்றது.

திரிசொல்

      தொல்காப்பியம் ஒரு பொருள் குறித்து வருகின்ற பல சொல்லும்இ பலபொருள் குறித்து வருகின்ற ஒரு சொல்லுமே திரிசொல் என்றும்இ அவை கற்றவர்களுக்கு மட்டுமே அறியப்படுபவையாக வரும் என்கிறது. நன்னூல் எளிதில் பொருள் அறிய இயலாதது திரிச்சொல் என்று கூறஇ பின்னால் தோன்றிய இலக்கணவிளக்கம்இ தொன்னூல்விளக்கம்இ முத்துவீரியம்இ சுவாமிநாதம்இ போன்ற நூல்களும் ஒரே கருத்தினைக் கூறுகின்றன. திரிசொல் பேச்சு வழக்கிலிருந்து செய்யுளளவில் நின்ற சொற்களாகும். திருப்புகழிலும் குமரகுருபரர் பிரபந்தத்திலும்இ ‘சலாம்’இ‘சபாஷ்’ முதலிய சொற்கள் புகுந்துள்ளன.5

திரிசொல் என்பதற்கு திரிந்தவழக்கு கட்டியவழக்கு என்று இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. உரையாசிரியர்கள் எல்லோரும் முதல் கருத்துக்கே முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ந்துள்ளார்கள். பொதுவாக உரையாசிரியர்கள் திரிச்சொல் என்பது இயற்சொல் திரிந்தது என்றும் கருதி அதன் வேர்ப்பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் திரிசொல்லுக்குத் தனிச் சிறப்பு இல்லாமல் செய்து விட்டார்கள்;.6

திசைச்சொல்

      தொல்காப்பியம் செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தத்தம் குறிப்பினால் வழங்குவது திசைச்சொல் என்கிறது. சேனாவரையர் செந்தமிழ் நிலத்திற்குக் கூறும் எல்லை ‘வையையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்குமாம்’. மயிலைநாதர்இ இளம்பூரணர்இ நச்சினார்க்கினியர் என்போரும் இதே கருத்தினைக் கூறுகின்றனர்.

வடவேங்கடந் தென்குமரி இடைப்பட்ட தமிழகம் தொல்காப்பியனார் காலத்துப் பன்னிரு நிலங்களாகப் பகுக்கப்பட்டிருந்த தென்பது ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்’ என்னும் இச்சூத்திரத் தொடராற் புலனாகிறது.7 செந்தமிழ் நிலத்தைச் சார்ந்த தென்பாண்டிஇ குடம்இ குட்டமஇ; அருவாஇ குடகர்இ கருநாடர் போன்ற பகுதியினர் வழங்கும் சொற்கள் திசைச்சொல்லாகும். தாயைத் தள்ளை என்றால்இ தந்தையை அச்சன் என்றல் போன்றவை.8 திசைச்சொல்லுக்கு திருவாசகத்தில் வரும் அச்சன் (திருவாசகம்இ திருச்சதகம்) அதெங்கு (திருவாசகம்இ அருட்பத்து ஈற்றடி) முதலிய சொற்களை எடுத்துக்காட்டுகளாக உள்ளன.9

      நன்னூல் செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு பகுதியிலும் தமிழகம் நீங்கிய பதினேழு நிலத்தினும் தத்தம் குறிப்பினான் வழங்குவது திசைச்சொல் என்கின்றது. இலக்கணவிளக்கம்இ சுவாமிநாதம் போன்ற நூல்கள் நன்னூல் கூறிய கிளைமொழிச் சொற்களையும்இ பிறமொழிச் சொற்களையும் திசைச் சொற்களாகக் குறிப்பிடுகின்றன. முத்துவீரியம் தொல்காப்பியத்தைத் தழுவியே கூறுயுள்ளது. மறைமலையடிகள் பட்டினப்பாலையில் வழங்கும் ஒரே ஒரு திசைச்சொல் ‘ஞமலி’ என்கிறார். ஞமலியாவது நாய் அது பூழிநாட்டுச் சொல் என்கிறார். அதுவும் உரையாசிரியர்கள் வழியதே ஞாமலி ஞாமலியாய் ஞமலி ஆயது என்கிறார் இரா. இளங்குமரனார்.10 

வடசொல்

      தொல்காப்பியம் வடசொல் தமிழில் வருமாயின்இ வடசொல்லுக்குரிய எழுத்தை நீக்கி தமிழ்மொழிஇ வடமொழி என்னும் இரண்டற்கும் உரிய பொதுவான எழுத்துக்களால் சொற்கள் அமைக்கப்படும். அவ்வாறு திருத்தி அமைக்கப்பட்ட அவ்வடசொல்லும் செய்யுள் செய்வதற்கு உரியதாகும் என்பதனைஇ

            “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ                                                எழுத்தோடு புணர்ந்த சொல்லா கும்மே”11

என்கிறது. அவ்வாறு பொதுவெழுத்தால் அமைந்தனவே அன்றிச் சிறப்பெழுத்தால் அமைந்த வடசொற்கள் ழுமுமையாக வராமல் சிதைந்து வருவதும் உண்டு. அவற்றுள் பொருத்தமுடையவற்றைச் சான்றோர் நீக்காமல் ஏற்றுக்கொள்வர் என்பதனை தொல்காப்பியம் “சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்”12 என்கிறது.

நன்னூல் தமிழுக்கும் ஆரியத்திற்கும் பொதுவான எழுத்தாலும் (தற்சமம்)இ ஆரியத்திற்கே உரிய சிறப்பு எழுத்தாலும் (தற்பவம்)இ இவ்விருவகை எழுத்தினாலும் தமிழொலிக்கு இயைந்தனவாய் வருவன வடசொல் என்கிறது. இலக்கண விளக்கம்இ முத்துவீரியம்இ சுவாமிநாதம் போன்ற நூல்களும் நன்னூலைப் பின்பற்றியே கூறுகின்றன. இலக்கணக்கொத்துஇ

“பொதுவெழுத்தானும் சிறப்பெழுத்தானும்                                 ஈரெழுத்தானும் இலங்கும் தமிழ்மொழி”13

என்று குறிப்பிடுகின்றது. வடசொற்கள் தமிழிலே வழங்குமிடத்துஇ சில சொற்கள் இருமொழிக்கும் பொதுவாகயுள்ள எழுத்துக்களால் இயன்றுவரும். கமலம்இ விமலம் என்பன இவ்வாறு வந்தன. சில சொற்கள் சிதைந்துவரும். ஆணைஇ நட்டம்இ கண்ணன் முதலிய பாக்கச் சிதைவுகளும் உரைகாரர்களால் அமைக்கப்படுகின்றன.14

      இவ்வாறு வடமொழியிலிருந்து தமிழில் தடையின்றிப் பல சொற்கள் புகுந்துள்ளன. இச்சொற்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல வளர்ந்து பெருகிவிட்டது என்றே கொள்ள வேண்டும். சங்ககாலத்தில் நூற்றுக்கு இரண்டு என்னும் அளவில் இருந்த வடசொற்கள் பதினென்கீழ்க்கணக்கிலும்இ சிலப்பதிகாரம் மணிமேகலையிலும் நூற்றுக்கு நான்கு ஐந்தாகப் பெருகியுள்ளன. ஆழ்வார் நாயன்மார் காலத்தில் நூற்றுக்குப் பத்துப் பதினைந்தளவும் மிகுந்தன. பிறகுஇ நெடுங்காலம் அந்நிலையே நீடித்தது. மணிப்பிரவாளம் செல்வாக்குப் பெற்ற காலத்திலேயே வடமொழிக் கலப்பு அளவின்றி பெருகியது.15

செய்யுள் விகாரங்கள்

      தொல்காப்பியம் இயற்சொல்இ திரிசொல்இ திசைச்சொல்இ வடசொல் என்னும் அந்நான்கு சொல்லையும் செய்யுளாகத் தொடுக்குங்கால் மெல்லொற்றை வல்லொற்றாக்க வேண்டுமிடத்து வல்லொற்றாக்கலும்இ வல்லொற்றை மெல்லொற்றாக்க வேண்டமிடத்து மெல்லொற்றாக்கலும்இ குறைவதனை விரிக்கவேண்டுமிடத்து விரித்தலும்இ மிகுவதனைத் தொகுத்த வேண்டமிடத்துத் தொகுத்தலும்இ குற்றெழுத்தை நெட்டெழுத்தாக்க வேண்டமிடத்து நீட்டலும்இ நெட்டெழுத்தைக் குறுக்க வேண்டமிடத்துக் குறுக்கலும் ஆகிய அறுவகை விகாரமும் செய்யுளின்பம் பெறச்செய்யும் என்கிறது.

      நேமிநாதம்இ தொன்னூல்விளக்கம் இவ்விரு நூல்களும் தொல்காப்பியம் கூறிய அறுவகை விகாரங்களோடு குறைத்தல் என்னும் விகாரத்தையும் சேர்த்துப் பொதுவாக கூறுகின்றன. நன்னூல் செய்யுளில் அடி தொடை நோக்கி சொற்களை தேவையான இடங்களில் விகாரப்படுத்தும் போது வலித்தல்இ மெலித்தல்இ நீட்டல்இ குறுக்கல்இ விரித்தல்இ தொகுத்தலஇ; முதற்குறைஇ இடைக்குறைஇ கடைக்குறை என்னும் ஒன்பது வகையாக வரும் என்று  கூறுகின்றது. இலக்கணவிளக்கம் நன்னுலினைத் தழுவியே கூறியுள்ளது.

பொருள்கோள்கள்

      தொல்காப்பியம் பொருள்கோளை ‘மொழிபுணர் இயல்பு’ என்று கூறுவதுடன் அவை நிரல்நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று என நான்கு வகைப்படும் என்கிறது. நன்னூலோ தொல்காப்பியம் கூறிய நிரனிறைஇ அடிமறிஇ மொழிமாற்று என்பனவற்றுடன் யாற்றுநீர்இ விற்பூட்டுஇ தாப்பிசைஇ அளைமறிபாப்புஇ கொண்டுகூட்டு என சேர்த்து எட்டு வகைப் பொருள்கோளை கூறியுள்ளது. இதில்இ தொல்காப்பியம் கூறிய ‘சுண்ணப் பொருள்கோளைக்’ கூறவில்லை.

      நேமிநாதம் நன்னூல் கூறிய எட்டுப் பொருள்கோளில் ஏழு மட்டுமே கூறிஇ “கொண்டு கூட்டுப் பொருள்கோளைக்” கூறாமல்இ தொல்காப்பியம் கூறிய ‘சுண்ணப்பொருள்கோளுடன்’இ ‘அடிமறிமாற்று பொருள்கோளையும்’ சேர்த்து ஒன்பதாக கூறியுள்ளது. யாப்பருங்கலக்காரிகை நேமிநாதம் கூறியது போலவே ஒன்பதாக கூறியிருந்தாலும்இ நேமிநாதம் கூறிய ‘மொழிமாற்றுப் பொருள்கோளுக்கு’ பதிலாக கொண்டுசுட்டுப் பொருள்கோளைச் சேர்த்துக் கூறியுள்ளது.16

      இலக்கணவிளக்கம் தொன்னூல்விளக்கம் நன்னூலைத் தழுவியே எட்டுப் பொருள்கோளைக் கூறியிருக்கின்றது. தொன்னூல் விளக்கமும் நன்னூலைப் பின்பற்றியே பொருள்கோள் எட்டு என்று கூறியிருந்தாலும்இ அவற்றைப் பற்றி அணியிலக்கணத்தில் (நூ.305) முதல் (நூ.313) வரையிலும் கூறஇ முத்துவீரியமும் இதனைத் தழுவியே அணியிலக்கணத்தில்; (நூ.1279) முதல் (நூ.1286) வரையிலும் குறிப்பிட்டுள்ளது.

            வீரசோழியம் பொருள்கோளை பொருளிலக்கணத்தில் கூறுவதோடு மட்டுமல்லாமல் பொருள்கோளை (கோள்) என்றும் பொருணடை (பொருளடைவு) எனும் இரு தலைப்புகளில் மற்றவர்களின்றும் சற்று வேறுபட்டு கூறியிருக்கின்றது. தமிழ்நூலோ

            “அஃது                                                                         ஆற்றின் ஓட்டம் கொண்டுகூட் டிரண்டே”17

என்று கூறிஇ இவ்விரண்டு பொருள்களையும் தனித்தனி நூற்பாவாக (நூ.432)இ (நூ.433) இல் கூறியுள்ளது. தொல்காப்பியம் பொருள்கோளை நான்கு என்று கூறுவதைஇ நன்னூல் இலக்கணவிளக்கம் தொன்னூல்விளக்கம் முத்துவீரியம் போன்ற நூல்கள் எட்டு என்று கூறுகின்றன. நேமிநாதம் யாப்பருங்கலக்காரிகை நம்பியகப்பொருள் போன்ற நூல்கள் ஒன்பது வகையாக கூறியுள்ளன. தமிழ்நூலோ இரண்டு வகையாக கூறுகின்றது. இது காலத்தினால் ஏற்பட்ட மாற்றமாக கருத முடிகிறது.

பிரிக்க முடியாத பெயர்கள்

தொல்காப்பியம் (நூ.410) த ந நு எ – என்பனவற்றை முதலெழுத்தாக உடைய பெயர்கள் உறவினை எடுத்துரைக்கும் உறவுப் பெயர்கள் என்றும்இ அப்பெயர்கள் பகுதிஇ விகுதி எனப் பிரித்துப் பொருள் கொள்வதற்கு உரியவை அல்ல என்கிறது. நன்னூல் பெயரியலில் (நூ.276) (நூ.277) (நூ.278) இல் தொல்காப்பியம் கூறிய செய்திகளைத் தனித் தனியாக கூறியுள்ளது. பின்னால் தோன்றிய இலக்கணவிளக்கம் முத்துமுவீரியம் சுவாமிநாதம் போன்ற நூல்கள் இச்சொற்களைப் பற்றி குறிப்பிடப்படவில்லை.

அடுக்குச் சொற்கள்

      சொற்கள் ஒன்றோடொன்று அடுக்கி வந்தால் அஃது அடுக்கு என்பர். அவ்வடுக்கு ஒரு சொல் அடுக்குஇ அசைநிலை அடுக்கு என இருவகைப்படும். ஒரு சொல் அடுக்கு இசைநிறைஇ அசைநிலைஇ பொருளோடு புணர்தல் என மூவகைப்படும் என்பதனை தொல்காப்பியம்இ

            “இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தல்என்று                                   அவைமூன்று என்ப ஒருசொல் அடுக்கே” 18

என்கிறது. இதில் இசைநிறை செய்யுளின் கண் இசை நிறைப்பதற்காக வரும் போது நான்குமுறை அடுக்கி வரும் என்றும் (நூ.423)இ அசைநிலை இசைநிறைத்தற்கன்றிச் செய்யுட்கண் இன்பம் குறித்தற்காக வரும்போது அதற்கு எல்லைஃவரம்பு கூறப்படவில்லை எனினும்இ இருமுறையே அடுக்கி வரும் என்கிறது.

      தொல்காப்பியம் யாதானும் ஒரு பொருள் குறித்தற்காக அடுக்கி வருவதைப் பொருளொடு புணர்தலின்கண் வந்த அடுக்கு என்கிறது. இது விரைவுஇ துணிவுஇ உடன்பாடுஇ ஒருதொழில் பலகால் நிகழ்தல் ஆகிய பொருள் வேறுபாட்டின் கண் வரும் எனக் குறிப்பிட்டு அதன் அடுக்கினை “விரைசொல் அடுக்கே மூன்று வரம்பு”19 என்று குறிப்பிடுகின்றது. நேமிநாதம் ஒரு சொல் அடுக்கி வருமிடத்து இசைநிறை நான்காகவுமஇ விரைசொல் மூன்றாகவும்இ அசைநிலை இரண்டாகவும் வரும் என வினைமரபில் (நூ.74) கூறுகின்றது.

      நன்னூல் 1. அசைநிலைக்கும் 2. விரைவுஇ சினம்இ மகிழ்ச்சிஇ அச்சமஇ; துன்பம் போன்ற பொருள்நிலைக்கும் 3. இசையை நிறைப்பதற்கும் ஒருசொல் இரண்டுமுறைஇ மூன்றுமுறைஇ நான்குமுறை அடுக்கி வரும் எனப் பொதுப்படக் கூறப்பட்டாலும்இ அசைநிலைக்கு இரண்டு சொற்களும் பொருள்நிலைக்கு இரண்டு மூன்று சொற்களும்இ இசைநிறைக்கு இரண்டு மூன்று நான்கு சொற்களும் மேல் அளவாக அடுக்கி வரும் எனக் கூறப்பெறுகின்றது. ஒரு சொல்லைப் பல முறைச் சொல்லுதல் வலுவாயினும் இன்னின்ன இடங்களில் கூறுதல் வேண்டும் எனக் கூறுதல் வழுவமைதியாகும் என்கிறது.

      இலக்கண விளக்கமும் நன்னூலைப் பின்பற்றியே அடுக்குச் சொற்களுக்கான இலக்கணத்தைக் கூறுகின்றது. முத்துவீரியம் “அசைநிலை யிசைநிறை யடுக்கிரு திறத்தன” 20 என்றும்இ “விரைவு மூன்றிசை நிறைநான் கடுக்கே”21 என்றும்இ ஒரு சொல்லடுக்கினுள் விரைவுப்பொருள்பட அடுக்குவது மூன்று வரம்பை யுடையதுஇ இசைநிறையடுக்கு நான்காகிய வரம்பையுடையது எனக் குறிப்பிடுகின்றது.

தொகைச் சொற்கள்

      தொல்காப்பியம் தொகைநிலைத்தொடர் மொழிக்கென தனியாக இலக்கணம் கூறவில்லை எனினும்இ அதன் வகைகளான வேற்றுமைத்தொகைஇ உவமத்தொகைஇ வினைத்தொகைஇ பண்புத்தொகைஇ உம்மைத்தொகைஇ அன்மொழித்தொகை என ஆறுவகைத்தொகை மொழிகளைக் கூறியுள்ளது.

வீரசோழியம் தொகைநிலைத் தொடர்மொழிகளாக தற்புருட சாமசமும்இ பலசெநற் சமாசமும்இ கன்மதாரய சமாசமும்இ துவிகு சமாசமும்இ துவந்துவ சமாசமும்இ அவ்வியபாவ சமாசமும் என இவ்வாறினையும் (நூ.45) இல் கூறிஇ பிறகு வேற்றுமைஇ உம்மைஇ வினைஇ பண்புஇ உவமைஇ அன்மொழி என்று ஆறும் தொகை எனக் (நூ.50) கூறியுள்ளது.

      நேமிநாதம் தொல்காப்பியத்தை தழுவியே ஆறுவகைத் தொகைநிலைத் தொடர்மொழிகளைப் பற்றி (நூ.85) கூறியுள்ளது. நன்னூல் தொகைநிலைக்கென தனி நூற்பாவாக கூறிஇ இத்தொகை நிலைத்தொடர் மொழிகள் ஆறு வகைப்படும் என்பதனை (நூ.362) இல் தொல்காப்பியத்தை தழுவியே  கூறியுள்ளது. இலக்கணவிளக்கம் நன்னூலைப் போலவே தொகைநிலைத் தொடர்மொழிகளின் இலக்கணத்தை (நூ.334) இல் கூறிஇ அதன் வகைகளை (நூ.335) கூறியுள்ளது.

      பிரயோகவிவேகம் தொகைநிலைக்கும் தொகாநிலைக்கும் (நூ.19)  இலக்கணம் கூறிஇ அதன் வகைகளைப் பற்றி (நூ.20) இல் தற்புருடன் - வேற்றுமைத்தொகை; துவிகு- எண்ணொடு பொருள் புணர்ந்த எண்தொகை; வெகுவிரீகி – அன்மொழித்தொகை; கருமதாரயன் - பண்புத்தொகை; அவ்வியயீபாவம் - முன்னும் பின்னும் மொழி அடுத்து வரும் இடைச்சொல் தொகை; துவந்துவன் - உம்மைத்தொகை என்கிறது.

தொன்னூல் விளக்கம் தொகைநிலைத் தொடர்மொழிக்கான இலக்கணத்தை  தனிநூற்பாவாக (நூ.88) இல் கூறிஇ அதன் வகைகளான வேற்றுமைஇ வினைஇ உவமைஇ பண்புஇ உம்மைஇ அன்மொழி என்னும் ஆறு வகையினைப் பற்றி (நூ.89) இலும்இ மேலும் தொகைநிலை விரித்து சொல்லும்போது ஏழ்வகை நிலையளவும் விரித்து சொல்ல இயலும் என (நூ.90) கூறுகின்றது. இரண்டு முதல் ஏழுவரை உதாரணம் தருகிறது. ‘சொற்பொருள் என்பதில் சொல்லால் அறியப்படுகின்ற பொருள்இ சொல்லினது பொருள்இ சொல்லுக்குப் பொருள்இ சொல்லின்கண் பொருள்இ சொல்லும் பொருளும்இ சொல்லாகிய பொருள்இ சொல்லானது பொருள் என ஏழு பொருள் விரிந்தன.22

இலக்கணக்கொத்து புதிதாக படுதொகை என்பதை சேர்த்து கூறுகின்றது. பின்னால் தோன்றிய சுவாமிநாதமும் இலக்கணக்கொத்தை தழுவியே (நூ.66) கூறஇ முத்துவீரியமோ (நூ.737) தொல்காப்பியத்தை தழுவியே கூறியுள்ளது. தமிழ்நூல்இ

            “தொக்குநிற்பது தொகையெனும் வழக்கினும்                                          தொகுவது தொகையெனக் கொள்ளல் நன்றே”23

என்று கூறிஇ அவை

            “வேற்றுமை உம்மை உவமை பண்பு                                                 வினை அன்மொழியென் றாறே தொகைச்சொல்”24

என்கிறது. தொல்காப்பியம் தொடங்கி தமிழ்நூல் வரையிலும் தொகைச்சொற்கள் ஆறு என்றே அறியப்படுகிறது.

      தமிழ் இலக்கணநூலார் தொகைமொழி எனக் கூறுவதும்இ வடநூலார் சமாசன் எனக் கூறுவதும் ஒத்த நோக்குடையவையாகும். மேலும் இருமொழியிலும் அவற்றின் வகை ஆறு ஆறாகவே அமைந்துள்ளன. எண்ணிக்கை வகையால் ஒன்றுபட்டிருத்தலை நோக்கி சிலர்இ தொகைமொழி இலக்கணத்தையும்இ சமாசன் இலக்கணத்தையும் ஒன்றாகவே கருதி மயங்குவர். இவை சிறுபான்மை ஒற்றுமையும் பெரும்பான்மை வேறுபாடும் உடையவை.25

வேற்றுமைத்தொகை

      தொல்காப்பியம்இ “வேற்றுமைத் தொகையே வேற்றுமை இயல” 26 வேற்றுமைத் தொகை அவ்வேற்றுமை உருபு நின்று தொடர்பொருள் உணர்த்தியது போல உணர்த்தும். தொல்காப்பியம் “வேற்றுமையியல” எனப் பொதுப்படக் கூறியிருப்பினும் “பிறிது பிறிது ஏற்றலும்இ உருபு தொகவருதலும் (தொல்.நூ.588) என்பதால் எழுவாயும் பயனிலையுமாக வருவனவற்றுள் உருபு தொக்கு வரும் தொடர் மொழிவேறுஇ ஒரு நீர்மைத்தாய் இணைந்து வரும் தொகைமொழி வேறு என அறிக. 27

வீரசோழியம் (நூ.46) இல் தற்புருட சமாசத்தை எழுவாயையும் விளியையும் இணைத்து எட்டு வகையாகக் கூறுகின்றது. எழுவாய் வேற்றுமைத் தற்புருடன்; இரண்டாம் வேற்றுமைத் தற்புருடனும்; மூன்றாம் வேற்றுமைத் தற்புருடனும்; நாலாம் வேற்றுமைத் தற்புருடனும்; ஐந்தாம் வேற்றுமைத் தற்புருடனும்; ஆறாம் வேற்றுமைத் தற்புருடனும்; ஏழாம் வேற்றுமைத் தற்புருடனும் நஞ்ஞத் தற்புருடனும் என வகைப்படுத்துகிறது. பிரயோகவிவேகமும் (நூ.21) வடமொழியைத் தழுவியே கூறியுள்ளது. நேமிநாதம் (86) உருபுவிரியின் உருபுத்தொகையாம் என வேற்றுமைத் தொகையை கூற நன்னூலோஇ

“இரண்டு முதலாம் இடைஆறு உருபும்                                         வெளிப்படல் இல்லது வேற்றுமைத் தொகையே” 28

என்று கூறுகின்றது. இலக்கணவிளக்கம் தொல்காப்பியத்தைத் தழுவியும்;இ முத்துவீரியம் நன்னூலைத் தழுவியுமே கூறியுள்ளன. சுவாமிநாதம்இ தமிழ்நூல் வேற்றுமைத் தொகையைப் பற்றி தனி நூற்பாவாக கூறுகின்றன.

உவமத்தொகை

      உவமத்தொகை என்பது ஒரு பொருளை விளக்க வினைஇ பயன்இ மெய்இ உரு என்னும் வகையில் ஒத்ததொரு பொருளை இணைத்துக் கூறும் நிலையில்இ அவ்விரு பொருளும் பிளவுபடாமல் ஒரு சொல் நீர்மையாக நிற்பதாகும். இதன் இலக்கணத்தை தொல்காப்பியம்இ ‘உவமத் தொகையே உவம இயல’ 29 என்று கூறும். அஃதாவது உவமவியலுள் சுட்டிக் கூறா உவமமாயின்இ ‘பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே” 30 என்னும் விதிப்படி வருவது. அவற்றை விளக்குமிடத்து இடையே போலஇ புரையஇ ஒப்பஇ நிகர என்பன முதலாகக் கூறப்பெற்ற உருபுகளும் உவமத் தன்மையும் விரிந்து வரும்.  வீரசோழியம் உவமைத்தொகையைப் பற்றி தனிநூற்பாவாக கூறவில்லை. நேமிநாதம் “உவமை விரியின் உவமத்தொகையாம்”; 31 என்கிறது.

நன்னூல் வினைஇ பயனஇ; மெய்இ உரு என்பவற்றைப் பற்றி வருகின்ற உவம உருபுகள் மறைந்து நிற்கும் தொடர்மொழிகள் உவமைத் தொகை (நூ.366) என்றுமஇ; இதன் உருபுகளாக போலஇ புரையஇ ஒப்பஇ உறழஇ மானஇ கடுப்பஇ இயையஇ ஏய்ப்பஇ நேரஇ நிகரஇ அன்னஇ இன்ன என்பனவும் இவை போன்ற பிறவும் உவம உருபுகளாக வரும் என்கிறது. முத்துவீரியம் நன்னூல் நூற்பாவினையே தழுவி கூறஇ இலக்கணவிளக்கமோ தொல்காப்பியத்தைப் பின்பற்றியே கூறியுள்ளது. சுவாமிநாதம் “உருப்பண்பு ஆதிதொக்கு விரிக்கும்” 32 உருவம்இ பண்பு என்ற இரண்டினுள் மறைந்து உவமத்தொகை வரும் என்கிறது. தமிழ்நூல் இவற்றைப் பற்றி (நூ.121) இல் கூறியுள்ளது.

வினைத்தொகை

      காலம் புலப்படும்படியாக இரு சொற்கள் தொக்கு நிற்பது வினைத்தொகையாகும். காலத்தைக் காட்டும் உறுப்புகள் மறைந்து முக்காலத்திற்கும் பொதுவாய் நிற்பது வினைத்தொகை என்பதனால் தொல்காப்பியம் “வினையின் தொகுதி காலத்து இயலும்” 33 என்று கூறஇ இலக்கணவிளக்கம்  தொல்காப்பியத்தை தழுவியே கூறியுள்ளது.

      நன்னூல் “காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை” 34 என்கிறது. காலத்தைக் காட்டுகின்ற இடைநிலையும் விகுதியும் மறைந்து நிற்க வினைப்பகுதி மட்டும் பெயரைத் தொடர்ந்து வரின் (பெயரெச்சம்) அது வினைத்தொகை ஆகும். இந்நூலினைத் தழுவியே முத்துவீரியமும் குறிப்பிடுகின்றன. நேமிநாதம்இ தொன்னூல் விளக்கம்இ சுவாமிநாதம்இ தமிழ்நூல் போன்ற நூல்களும் வினைத்தொகை மூன்று காலத்தின் கண் நிகழும் என்கிறது.

பண்புத்தொகை

      தொல்காப்பியம் பண்புத்தொகையாவது நிறம்இ வடிவமஇ; அளவுஇ சுவை ஆகிய குணங்களையும் அவற்றைப் போன்ற பிற குணங்களையும் குறித்து வரும் என்கிறது. மேலும் பண்புத்தொகை விரியுங்கால் ஐம்பாலறியும் பண்பு விளங்க விரியும் என்பதனை எழுத்ததிகாரத்தில்இ

            “உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின்                                             ஐம்பா லறியும் பண்புதொகு மொழி” 35

என்பதாகும். பண்புத் தொகையை விரிக்குமிடத்து வரும் ஆகிய என்பது ஆக்க வினைச்சொல்லன்று பண்புத்தொகையை விளக்குதற்கு வரும் ஓர் உருபாகும். நன்னூல் இதனை பண்புருபு என்கிறது. இதனை பின்வரும் நூற்பா உணர்த்துகின்றது.

“பண்பை விளக்கும் மொழித் தொக்கனவும்                                      ஒரு பொருட்கு இரு பெயர் வந்தவும் குணத்தொகை” 36

      வீரசோழியம் (நூ.48) முன்மொழிப் பண்புத்தொகையும்இ இருமொழிப் பண்புத்தொகையும்இ பின்மொழியொப்புத் தொகையும்இ முன்மொழியொப்புத் தொகையும்இ முன்மொழிக் கருத்துத் தொகையுமஇ; முன்மொழித் துணிவுத் தொகையும் எனக் கன்மதாரயம் ஆறாம் என்று கூறஇ பிரயோகவிவேகமும் வடமொழி மரபினைத் தழுவியே (நூ.22) இல் கூறியுள்ளது.

      இலக்கண விளக்கம் (நூ.339) தொன்னூல் விளக்கம் (நூ.89) முத்துவீரியம் (நூ.740) சுவாமிநாதம் (நூ.66) போன்ற நூல்கள் தொல்காப்பியத்தைப் பின்பற்றியே கூறுகின்றன. இலக்கணக்கொத்து (நூ.98) (நூ.99) இல் பண்புத்தொகையைப் பற்றி கூறுகின்றன. தமிழ்நூலோ தன்மையும்இ அளவுமஇ; வண்ணமும்இ வடிவமும் என்றிவை குறிக்கும் விடைகளோடு அவற்றின் பண்புச்சொல் இணைந்தெழுவது பண்புத்தொகையாம் என்கிறது.

உம்மைத்தொகை

      தொல்காப்பியம் (நூ.417) இருபெயர் பலபெயர் அளவுப்பெயர் உயர்திணை இடத்து வரும் எண்ணியற் பெயர் நிறைப்பெயர் அஃறிணையில் வரும் எண்ணின் பெயர் ஆகிய அறுவகைப் பெயர்களையும் பொருந்தி நிலைபெறுவது உம்மைத் தொகை என்று கூறஇ இலக்கணவிளக்கமும் (நூ.340) தொல்காப்பியத்தைத் தழுவியே கூறியுள்ளது. வீரசோழியம் (நூ.49) உம்மைத்தொகையைத் துவந்துவ சமாசம் என்று கூறுவதையே பிரயோகவிவேகம் (நூ.23) கூறியுள்ளது.

      நேமிநாதம் ‘உலைவில் உயர்திணைமேல் உம்மைத்தொகைதான்இ பலர்சொல் நடைத்தாயப் பயிலும் …. (நூ.89) தொகைச்சொல் ஒரு சொல்லாய் நடக்கும் என்றார் ஆயினும்இ உயர்திணையிடத்து வந்த உம்மைத்தொகை வினைப்படுக்குமிடத்துப் பலரைச் சொல்லும் வாசகத்தாற் சொல்லப்படும். முற்றும்மை எச்சப்பொருள் பெற்று நடக்கவும் பெறும். இடைச்சொற்கள் ஈறுதிரிவனவும் உள என்கிறது.37

      நன்னூல் (நூ.368) எண்ணலளவை எடுத்தலளவை முகத்தலளவை நீட்டலளவை எனும் நான்கு வகை அளவைகளால் பொருள்களை அளக்கும் இடத்துத் தொடர்கிற அவ்அளவைப் பெயர்களுள் ‘உம்’ எனும் இடைச்சொல் தொக்கு நிற்பவை உம்மைத்தொகை. இந்நூலினைத் தழுவியே முத்துவீரியமும் (நூ.742) சுவாமிநாதமும் (நூ.66) கூறியுள்ளன. தமிழ்நூல்இ  “உம்மைச் சொல்லடுக் குறலும் மைத்தொகை” 38 சொற்கள் அடுக்கிவர ‘உம்’ என்னும் இடைச்சொல் இயைக்கும் நிலையடைதல் உம்மைத் தொகையாம்.

      மேலும்இ தொல்காப்பியம் உம்மைத் தொகைச்சொல் உயர்திணைக் கண் வரும் பொழுதுஇ அத்தொகைச் சொல் பலர்பாலுக்குரிய ஈற்றைக் கொண்டு பன்மைத் தன்மையை உணர்த்துகிறது. (எ.கா)  கபில பரண நக்கீரர் இச்சொல்லில் அமைந்த கபிலன் பரணன் நக்கீரன் என்னும் பெயர்கள் வேறுபட்ட மூவரின் பெயர்களைக் குறிப்பவனாய் அமைந்துள்ளன. ஆயினும் நக்கீரன் என்னும் பெயரின் ஈற்றில் உள்ள னகர ஒற்று ரகர ஒற்றாகத் திரிந்து பலர்பாலை உணர்த்துகிறது. இந்நூற்பாவினைத் தழுவியே இலக்கணவிளக்கமும்  குறிப்பிட்டுள்ளது.

      நன்னூல்இ முத்துவீரியமும் உயர்திணை ஒருமையில் வருகின்ற உம்மைத் தொகைகள் பலர்பால் விகுதிகளான ‘ரகர’ ஒற்றுப் பெற்றும்இ ‘கள்’ என்னும் ஈறினை கொண்டு முடியும் என்கின்றன. உம்மைத்தொகையை தொல்காப்பியமும் இலக்கணவிளக்கமும் ஆறுநிலைகளில் கூறஇ நன்னூலும் முத்துவீரியமும் போன்ற நூல்கள் நான்கு நிலைகளில் கூறியுள்ளதை அறியமுடிகிறது.

அன்மொழித்தொகை

      தொல்காப்பியம் பண்புத்தொகைஇ உம்மைத்தொகைஇ வேற்றுமைத்தொகை என்ற மூன்று தொகைகளிடத்து அன்மொழித் தொகை பிறக்கும் என்று கூறஇ பின்னால் தோன்றிய நூல்களான நேமிநாதம்இ நன்னூல்இ இலக்கணவிளக்கம்இ முத்துவீரியம்இ சுவாமிநாதம்இ தமிழ்நூல் போன்ற நூல்கள் ஐந்தொகை மொழியின் மேல் அன்மொழித்தொகைத் தோன்றும் என்கின்றன.

      வீரசோழியம் (நூ.47) பிரயோகவிவேகம் (நூ.24) இவ்விரு நூல்களும் அன்மொழித் தொகையை வெகுவிரீஇ சமாசம் எனக் குறிப்பிடப்படுவதுடன்இ அவை இருமொழித்தொகைஇ பன்மொழித்தொகைஇ பின்மொழி எண்ணுத்தொகைஇ இருமொழி எண்ணுத்தொகைஇ முன்மொழித் தொகைஇ விதியாரிலக்கணத் தொகைஇ திகந்தராளத் தொகை என ஏழுவகையாக கூறுகின்றன.

எச்சங்கள்

      பிறசொற்களின் துணையைக் கொண்டு முற்றுப்பெற நிற்கும் குறைந்த வினைச்சொல்லே எச்சம் எனப்படும். தொல்காப்பியம் பிரிநிலை எச்சம்இ வினையெச்சம்இ பெயரெச்சம்இ ஒழியிசை எச்சம்இ எதிர்மறை எச்சம்இ உம்மை எச்சம்இ என எச்சம் என்னும் இவ்ஏழு எச்சங்கள் நீங்கலாக எஞ்சி நிற்கும் எச்சங்கள் மூன்று. அவை சொல்இ குறிப்புஇ இசை என்பனவாம். அவ்வெச்சங்கள் தமக்கு வேறாய் வந்து எஞ்சி நின்று முடிக்கும் சொற்களை உடையன அல்ல என்பதனால் ‘எஞ்சிபொருட் கிளவி இலஎன மொழிப’ 39 என்று கூறிஇ அவற்றுள் குறிப்பால் உணர்த்தும் எச்சங்களான சொல்லெச்சம்இ குறிப்பெச்சம் இசையெச்சம் இம்மூன்றும் ‘தத்தம் குறிப்பின் எச்சம் செப்பும்’ 40 என்பதுடன்இ சொல்லெச்சமானது ஒரு தொடருக்கு முன்னரோ பின்னரோ ஒரு சொல் மட்டும் எஞ்சி நிற்குமே தவிர தொடராய் வருவதில்லை என்பதனை (நூ.441) குறிப்பிட்டுள்ளது.

      நன்னூல் பெயர்இ வினைஇ உம்மைஇ சொல்இ பிரிநிலைஇ எனஇ ஒழியிசைஇ எதிர்மறைஇ இசைஇ குறிப்பு என்னும் பத்தும் தத்தமக்குரிய எச்சச் சொற்களைக் கொண்டு முடியும். இப்பத்துள் பெயரெச்சம் வினையெச்சம் எனவென் எச்சம் என்னும் மூன்றில் மட்டும் எச்சச் சொற்கள் தொடர்களில் வெளிப்பட்டு நிற்கும். பிறவற்றில் எச்சச் சொற்கள் வருவித்து உரைக்கப்படும். இலக்கணவிளக்கம் பத்துவகை எச்சங்களைப் பற்றி தொல்காப்பியம் கூறியதை போலவே (நூ.348) (நூ.349) (நூ.350) (நூ.351) (நூ.352) இல் கூறியுள்ளது. முத்துவீரியம் பத்து வகை எச்சங்களைப் பற்றி (நூ.750) கூறிஇ இப்பத்து எச்சங்களும் ‘தத்தம் எச்சத்தோடு சார்ந்து நின்றியலும்’ 41 என்பதனை அடுத்த நூற்பாவில் கூறியுள்ளது.

      சுவாமிநாதம் குறிப்புஇ இசைஇ சொல் என்ற மூவகைக் குறிப்பெச்சத்தோடு எதிர்மறைஇ பிரிவுஇ ஒழியிசைஇ உம்மைஇ எனஇ என்றஇ எச்சம் பெயர் வினை என்ற ஏழுவகையும் சேர்த்து எச்சங்கள் பத்து ஆகும். இதில் முன்னே கூறப்பட்ட எட்டுவகை எச்சங்களும் பெயரெச்சம் வினையெச்சம் ஆகிய இரண்டும் போலக் குறிப்பு மொழியும் எச்சச் சொற்களை விளக்குவகையாக அமையும். இவற்றைக் குறிப்பு அறியும் அறிவால் அறிந்துகொள்ள வேண்டும் என்கிறது. 42

      தொல்காப்பியம் பத்துவகை எச்சங்களைக் குறிப்பிடுகின்றது எனினும் வினையெஞ்சுகிளவியும் பெயரெஞ்சுகிளவியும் பற்றி (நூ.228) முதல் (நூ.238) வரையிலும் கூறப்;பட்டுள்ளன. அங்கே அவற்றுக்கான சிறப்புத் தன்மையினைக் கூறுவதாகவும் எச்சவியலில் பிற எச்சங்களோடு தொடர்புடைய பொதுத் தன்மையினை விளக்குவதாகவும் கொள்ள முடிகிறது.

புதியன புகுதல்

      தொல்காப்பியம் அவ்வக் காலத்திற்கு ஏற்பச் சொற்கள் புதிதாகத் தோன்றி வழக்கிற்கு வரும். அப்பொருத்தமான சொற்களை தொன்மையற்றதென அவற்றை நீக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை ‘கடிசொல் இல்லைக் காலத்துப் படினே’ 43 என்கிறது.

(எ.கா). “சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே                                                  ஆ ஐ ஓள எனும் மூன்றலங் கடையே” 44

தொல்காப்பியர் காலத்தில் சகரத்தை மொழி முதலாகக் கொண்ட சொற்கள் இல்லை ஆயினும் பின்னர்த் தோன்றிய சம்புஇ சட்டிஇ சண்டைஇ சமர் என்பனவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றைப் போலப் பழங்காலத்தில் வழங்கி இப்போது வழங்காதவற்றை நீக்கி விட வேண்டும். அவை (அழான் புழான); போன்றவையாகும்.

      நன்னூல் முற்காலத்து உள்ள இலக்கணங்களுள் சில பிற்காலத்து ஒழிதலும்இ முற்காலத்து இல்லாதவை சில பிற்காலத்து இலக்கணமாக வருதல் என்னும் இவ்விரண்டும் கால வேற்றுமையால் குற்றமுடையவை அல்ல என்பதனைஇ

“பழையன கழிதலும் புதியன புகுதலும்                                         வழுவல கால வகையி னானே” 45

என்று கூறுகின்றது. இந்நூலிற்குப் பின்னால் தோன்றிய இலக்கணவிளக்கமும்இ

‘பழையன  கடிதலும் புதியன புணர்த்தலும்

வழுவல கால வகையி னானே” 46

என்று குறிப்பிடுகின்றது. சுவாமிநாதம் ‘பழைய கழிதலும் புதிய புணர்பும்’ 47 என்று முற்பகுதியை நன்னூலிருந்தும் பிற்பகுதியை இலக்கணவிளக்கத்திலிருந்தும் தழுவி கூறியுள்ளது.

 

முடிவுரை

      தொல்காப்பியம் பொருள்கோள்கள் நான்கு வகையாகவும்இ நன்னூல் இலக்கணவிளக்கம் சுவாமிநாதம் போன்ற நூல்கள் எட்டுவகையாகவும்இ நேமிநாதம் யாப்பருங்கலக்காரிகை ஒன்பது வகையாகக் கூறுவதையும்இ தமிழ்நூல் இரண்டு வகையாகக் கூறுவதையும் அறியமுடிகிறது.

தமிழ் இலக்கண நூல்கள் தொகைமொழிகள் ஆறு என்பதைப் போலவே வடமொழி இலக்கண நூல்களும் ஆறு என்று கூறியிருந்தாலும்இ தமிழில் உள்ள உவமத்தொகைஇ வினைத்தொகைகள் தனியாக வடமொழியில் இல்லை. இவற்றைக் கர்மதாரய சமாசனில் அடக்கி கூறுவர். இவற்றை வீரசோழியமும் பிரயோகவிவேகமும் பின்பற்றியுள்ளன.

      இவ்வாறு தமிழ்மொழியின் சொல்லிலக்கண மரபு தொன்மையானது இளமையானது என்று பொதுவாக கூறினும்இ காலவெள்ளத்தாலும்இ சாமூக பண்பாடு மாற்றங்களாலும்இ அறிவியல் முன்னேற்றத்தாலும் சிற்சில மாற்றங்களைப் பெற்றுள்ளன என்பதை எச்சமரபுகளும்

பொதுமரபுகளின் மூலமாக அறியமுடிகிறது.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            சான்றெண் விளக்கங்கள்

1.     ச.வே. சுப்பிரமணியன்இ தொல்காப்பியம் (உரைவளக்கோவை)

      எச்சவியல் ப.57     

2.     க. வெள்ளைவாரணார்இ தொல்காப்பியம் நன்னூல் ப.373

3.     கந்தசாமிஇ ஞா.தேவநேயப்பாவாணர்இ தொல்.சொல். சேனா. உரை நூ.397

4.     மு. வரதராசன்இ மொழி வரலாறு ப.113

5.     ஆறு. அழகப்பன் இலக்கணக்கட்டுரைகள் ப.80

6.     செ.வை.சண்முகம் சொல்லிலக்கணக்கோட்பாடு தொகுதி – 1 ப.75

7.     க. வெள்ளைவாரணார்இ தொல்காப்பியம் நன்னூல் ப.378

8.     ச.வே. சுப்பிரமணியன் தொல்காப்பியம் உரைவளக்கோவை எச்சவியல் ப.70

9.     மு.வரதராசன்இ மு.கா.நூ.ப.114

10.    இரா. இளங்குமரனார்இ தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெளிவுரை     ப. 152

11.    கந்தசாமிஇ ஞா.தேவநேயப்பாவாணர்இ மு.கா.நூ. (நூ.401)

12.    மே.கா.நூ. (நூ.402)

13.    தி.வே.கோபாலையர் (ப.ஆ.)இ இலக்கணக்கொத்து (மூலமும் உரையும்) (நூ.88)

14.    ஆ. வேலுப்பிள்ளைஇ தமிழ் வரலாற்றிலக்கணம் ப.27

15.    மு.வரதராசன்இ மு.கா.நூ.ப.114

16.    கா.ர.கோவிந்தராசனார் (ப.ஆ.)இ நேமிநாதம் (நூ.40)இ

      நாட்டார் உரைஇ யாப்பருங்கலக்காரிகை ப.180

17.    த. சரவணத்தமிழன்இ தமிழ்நூல் (நூ.431)                                                                                        

18.    கந்தசாமிஇ ஞா.தேவநேயப்பாவாணர்இ மு.கா.நூ. (நூ.411)

19.    மே.கா.நூ. (நூ.424)

20.    முத்துவீரஉபாத்தியாயர்இ முத்துவீரியம் (நூ.736)

21.    மே.கா.நூ. (நூ.749)

22.    ச.வே.சுப்பிரமணியன் (ப.ஆ.) தொன்னூல்விளக்கம் ப.95

23.    த.சரவணத்தமிழன்இ தமிழ்நூல் (நூ.115)

24.    மே.கா.நூ. (நூ.116)

25.    பாவலரேறு ச. பாலசுந்தரம்இ இருபதாம் நூற்றாண்டிற்கான தமிழிலக்கணம் உரைநடை நூல் சொற்படலம் ப. 310

26.    கந்தசாமிஇ ஞா.தேவநேயப்பாவாணர்இ மு.கா.நூ. (நூ.413)

27.    ச.மெ.மீனாட்சிசுந்தரம்இ மு.கா.நூ. ப.148

28.    கழகப்புலவர் குழு (ப.ஆ.)இ நன்னூல் (நூ.363)

29.    கந்தசாமிஇ ஞா.தேவநேயப்பாவாணர்இ மு.கா.நூ. (நூ.414)

30.    ச.வே. சுப்பிரமணியன் (ப.ஆ.) தொல்.பொருள். (நூ.1228)

31.    கா.ர.கோவிந்தராசனார் (ப.ஆ.)இ நேமிநாதம் (நூ.46)

32.    செ.வை.சண்முகம் (ப.ஆ.) சுவாமிநாதம் (நூ.66)

33.    கந்தசாமிஇ ஞா.தேவநேயப்பாவாணர்இ மு.கா.நூ. (நூ.415)

34.    கழகப்புலவர் குழு (ப.ஆ.)இ நன்னூல் (நூ.364)

35.    ச.வே. சுப்பிரமணியன் (ப.ஆ.) தொல்.எழுத்து. (நூ.482)

36.    கழகப்புலவர் குழு (ப.ஆ.)இ நன்னூல் (நூ.365)

37.    கா.ர.கோவிந்தராசனார் (ப.ஆ.)இ மு.கா.நூ (நூ.158)

38.    த.சரவணத்தமிழன்இ மு.கா.நூ. (நூ.119)

39.    கந்தசாமிஇ ஞா.தேவநேயப்பாவாணர்இ மு.கா.நூ. (நூ.439)

40.    மே.கா.நூ. (நூ.440)

41.    முத்துவீரஉபாத்தியாயர்இ மு.கா.நூ. (நூ.751)

42.    செ.வை.சண்முகம் (ப.ஆ.) மு.கா.நூ. ப.155

43.    கந்தசாமிஇ ஞா.தேவநேயப்பாவாணர்இ மு.கா.நூ. (நூ.452)

44.    ச.வே. சுப்பிரமணியன் (ப.ஆ.) தொல்.எழுத்து. (நூ.62)

45.    கழகப்புலவர் குழு (ப.ஆ.)இ நன்னூல் (நூ.462)

46.    சேயொளி (ப.ஆ.)இ இலக்கணவிளக்கம் (எழுத்து சொல்) (நூ.371)

47.    செ.வை.சண்முகம் (ப.ஆ.) மு.கா.நூ. (நூ.70)

             துணைநூற்பட்டியல்

;கந்தசாமி.,

தேவநேயப்பாவாணர், ஞா.   , (ப.ஆ.)     -     தொல்காப்பியம் சொல்லதிகாரம் (சேனாவரையர் உரை),

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்.

பதிப்பாண்டு - 1923.

 

கழகப் புலவர் குழுவினர்    -     நன்னூல்காண்டிகையுரை,

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்.

பதிப்பாண்டு - 1992.

கோபாலையர். தி.வே.இ  (ப.ஆ.)   -     பிரயோகவிவேகம் (மூலமும் உரையும்)

தஞ்சை சரஸ்வதி மகால்,

தஞ்சாவூர்.

பதிப்பாண்டு - 1973.

 

கோபாலையர். தி.வே.இ

(ப.ஆ.) -     இலக்கணக்கொத்து (மூலமும் உரையும்),

தஞ்சை சரஸ்வதி மகால்,

தஞ்சாவூர்.

பதிப்பாண்டு - 1973.

 

கோவிந்தராசனார்.கா.ர.இ  (ப.ஆ.)  -     வீரசோழியம்  (பெருந்தேவனார் உரை) திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்.

பதிப்பாண்டு - 1970.

 

கோவிந்தராசனார்.கா.ர., (கு.உ)

      -     நேமிநாதம்இ

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்.

பதிப்பாண்டு - 1964.

 

சண்முகம்.செ.வை.,   -     சொல்லிலக்கணக் கோட்பாடுஇ தொல்காப்பியம் (முதல் தொகுதி)இ

அனைத்திந்தியத் தமிழ் மொழியியற் கழகம்இ அண்ணாமலைநகர். 

முதற்பதிப்பு -1984.

 

………………….இ    -     சொல்லிலக்கணக் கோட்பாடுஇ தொல்காப்பியம் (இரண்டாம் தொகுதி)இ

அனைத்திந்தியத் தமிழ் மொழியியற் கழகம்இ அண்ணாமலைநகர்.

முதற்பதிப்பு -1984.

சண்முகம்.செ.வை.,  

(ப.ஆ.)     

      -     சுவாமிநாதமஇ;

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்இ

அண்ணாமலைநகாஇ;

பதிப்பாண்டு - 1975.

சரவணத்தமிழன். த,        -     தமிழ்நூல்இ

தமிழன் பதிப்பகம்இ

இயற்றமிழ் பயிற்றகம்இ

திருவாரூர்.

முதற்பதிப்பு – 2003.

சுப்பிரமணியன்.ச.வே.இ

(ப.ஆ.)      -     தொன்னூல் விளக்கம்இ

உலகத் தமிழ் ஆராய்ச்சிநிறுவனம்.

சென்னை. 

முதற்பதிப்பு – 1978.

சுப்பிரமணியன்.ச.வே.இ     -     இலக்கணத்தொகை   (சொல்)இ

ஜெயகுமாரி ஸ்டோர்ஸ்இ

நாகர்கோவில்இ

பதிப்பாண்டு - 1971.

 

சேயொளி.இ

(ப.ஆ.)      -     இலக்கண விளக்கம்இ எழுத்துஇ சொல்

(மூலமும் உரையும்)இ

கழக வெளியீடுஇ

சென்னை.

பதிப்பாண்டு - 1973.

 

முத்துவீர உபாத்தியாயர்.இ               -     முத்துவீரியம்

சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம்இ

சென்னை.

முதற்பதிப்பு - 1972.

 

வெள்ளைவாரணர்.க.இ

(உ.ஆ.)      -     தொல்காப்பியம்-நன்னூல் சொல்லதிகாரம்இ

தஞ்சைப் பல்கலைக்கழகம்இ

தஞ்சாவூர்.

பதிப்பாண்டு - 2000.

           

 

அழகப்பன்.ஆறு.இ (ப.ஆ.)                    

இலக்கண கருவூலம் (1),

அண்ணாமலைப்பல்கலைக்கழகம்.

முதற்பதிப்பு -1985.

 

………………….இ    -     இலக்கண கருவூலம் (2)

நன்னூல் - சொல்லதிகாரம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

முதற்பதிப்பு -1985.

 

ஆனந்த நடராசன். ஆ.இ          -     இலக்கணச் சிந்தனைகள்இ

அண்ணாமலைப்பல்கலைக்கழகம்.

முதற்பதிப்பு -1979.

 

இளங்குமரன்.இரா.இ       -     இலக்கண வரலாறு   இ

மணிவாசகர் பதிப்பகம்இ   

பாரிமுனைஇ 

சென்னை. 1997.

 

இன்னாசி.சூ         -     சொல்லியல்

தமிழரசன் பதிப்பகம்இ

பாளையங்கோட்டை.

முதற்பதிப்பு - 1974.

 

சுப்பிரமணியன். ச.வே.இ (ப.ஆ.)    -     சங்க இலக்கியம் முழுவதும்இ

மணிவாசகர்   நூலகம்இ

சென்னை.

பதிப்பாண்டு - 2006.

 

………………….இ    -     வீரசோழியம்  ஒரு திறனாய்வு மூலமும் கருத்தும்இ

சென்னை.   

பதிப்பாண்டு - 1977.

 

………………….இ    -     தொல்காப்பியம் (உரைவளக்கோவை) எச்சவியல்இ

மெய்யப்பன் பதிப்பகம்,

சிதம்பரம்.

பதிப்பாண்டு - 2009.

 

………………….இ       தமிழ் இலக்கணநூல்கள்இ

   மூலம் முழுவதும் - குறிப்பு விளக்கங்களுடன்இ

   மெய்யப்பன் பதிப்பகம்இ

   சென்னை.

   முதற்பதிப்பு – 2007.

 

திருஞானசம்பந்தம்.ச.இ

(ப.ஆ.) -     தொல்காப்பியம் சொல்லதிகாரம்இ

(மூலமும் உரையும்),

கதிர் பதிப்பகம்இ

திருவையாறு  .

முதற்பதிப்பு - 2013.

………………….இ    -     நன்னூல் சொல்லதிகாரம்இ

கதிர் பதிப்பகம்இ

திருவையாறு  .

முதற்பதிப்பு - 2009.

பாலசுந்தரம்.ச.இ

(உ.ஆ) -     தொல்காப்பியம் ஆராய்ச்சிக் காண்டிகையுரைஇ

தாமரை வெளியீட்டகம்,

தஞ்சாவூர் - 9.

முதற்பதிப்பு – 1988.

 

பாலசுந்தரம்.ச.இ     -     இருபதாம் நூற்றாண்டிற்கான தமிழக்கணம்

உரைநடைநூல் சொற்படலம்இ

தமிழ்ப் பல்கலைக்கழகம்இ  

தஞ்சாவூர்.

பதிப்பாண்டு - - 2005.

 

மீனாட்சிசுந்தரம். ச.மெ.இ   -     தொல்காப்பிய திறனாய்வுகள்இ

மெய்யப்பன் பதிப்பகமஇ;

சிதம்பரம்.

பதிப்பாண்டு - 2004.

 

வரதராசன்.மு.இ     -     மொழி நூல்இ

பாரி நிலையம்இ

சென்னை.

முதற்பதிப்பு - 1974.

 

………………….இ    -     மொழிவரலாறுஇ

கழக வெளியீடுஇ

சென்னை.

முதற்பதிப்பு - 1975.

 

வேலுப்பிள்ளை.ஆ    -     தமிழ் வரலாற்றிலக்கணம்இ

பாரி நிலையம்இ

சென்னை.

முதற்பதிப்பு – 1966.