ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

உயிரியல் மற்றும் சமூகமொழியியல் பார்வைகளில் பாரதியாரின் தேசீயப் படைப்புகளின் பகுப்பாய்வு [Biolinguistics and Sociolinguistics Approach towards Nationality in Bharathiar Patriotic Poems]

சு.சந்திரசேகரன் சி.சித்ரா 06 Oct 2019 Read Full PDF

சு.சந்திரசேகரன் சி.சித்ரா

முனைவர் பட்ட ஆய்வாளர்பேராசிரியர்

பாரதி மேல் நிலைப் பள்ளி

தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், இந்தியா - 641046

 

ஆய்வுச் சுருக்கம்

உயிரியல், சமூகவியல் மற்றும் மொழியியல் (Bio and Sociolinguistics) பார்வையில் பாரதியாரின் தேசீயம் சார்ந்த படைப்புகள் எல்லாம் ஒரு தனிமனித,தமிழ்த்தேசீய, இந்தியத்தேசீய மற்றும் அனைத்துலக உயிர்த் தேசீயத்துக்கான (Patriotism) கவித்துவப் படைப்புகளாக (Creative Poems) அமைந்துள்ளன. பாரதியார் தமது படைப்புகளில் இயற்கையான ஒரு தேசீயச் சிந்தனையை உளப்பூர்வமாக வடிவமைத்து அதைத் தமிழகம், இந்தியம் உலகம் ஆகிய எல்லைகளைத் தாண்டியும் பொருந்துமாறு தகுந்த காலத்தில் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கியுள்ளார். மொழியியல் பிரதிபலிப்பு (Linguistic Reflection) மற்றும் கணித்துவ மறுசுழற்சி (Computatational Recursion)ஆகியச் செயலாக்க வடிவங்களை(Applied forms) உள்ளடக்கிய, ஒரு பன்முகப் படைப்பினையே கவிதைகளாக வடித்துள்ளார். மானுடம் (Humanity) மற்றுமல்லாது, அனைத்துயிர்கள் சார்ந்த சமத்துவ(Equality) சகோதரத்துவக்(Brotherhood) கருத்துகளை அவர்தம் படைப்புகளின் ஒசையாலும் (Phonetics) எழுத்தாலும் (Syntax) பொருண்மையாலும் (Semantics) சூழலுக்கும் (Socio-Ambience) ஏற்ற இணக்கமுடன் (Copmpliance) அறிவார்ந்த செயலாக்கமாகவே வழங்கியுள்ளார். மொழியிலாளர்களாலும், தேசீயவாதிகளாலும், உயிரியல் வல்லுனர்களாலும் போற்றப்படும் ஒரு குறைந்தபட்ச செயலாக்கமாகவே (Minimalist Program) அவர்தம் கவிதைகள் உள்ளதால், தமிழின் உலக மகாகவியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார். தனிமனிதக் கடமைகள் முதல் தேசீயக் கடமைகளைக் கூறி, இருந்துவரும் சிக்கல்களுக்கும்(Conflicts) குழப்பங்களுக்கும் (Commotions) தீர்வு சொன்ன பாரதியாரின் படைப்புகளை உணர்வாலும் சொல்லாலும் தேசீயப்பார்வை கொண்ட ஒரு குறைந்தபட்ச கவிதையமைப்பாகக் கொள்ளலாம். பாரதியின் படைப்புகளானது, உயிர்-மொழி-சமூகம் (Mind-Word-World) என்ற மூன்று இயல்களின் சங்கமத்தால் வெளிப்பட்ட ஒரு கவிதைப் படைப்பாகக் கருத முடியும். தனிமனித உயிரியல் வரம்புக்குட்டு உள்ளத்தின் உணர்வால் (Internal Feel) வீறிட்ட எழுச்சியால் (Emotions), சாத்தியப்பட்ட மொழியியல் கூறுகளைக் (Linguistic Components) கட்டமைத்து சமூக (Socio) பண்பாடுகளைப் பிறர் அறியச் சொல்லவும், சமூகக் களைகளை(Societial Weeds) நீக்கிக் உயர்கலைகளை மீட்டெடுக்கவும் தம் கவிதையைக் கருவியாகக் (Poetic Tool) கைக்கொண்டார்.

           

தேசீயமும் மனிதமும் (Nationality and Humanity):

தேசீயம் (Nationality) என்பது தனியொரு மனிதனுக்கும் ஒரு தேசத்துக்கும் (Nation) இடைப்பட்ட சட்டவழி உறவாகும் (Legal Relationaships). மனிதனுக்காக தேசீயமும், தேசீயத்துக்காக மனிதமும் இருந்து காக்கவேண்டிய இருவழித் தொடர்பானது (Bidirectional Relations), மரபுப்படியும் மேலும் உலக வழக்குகளின்படியும் பல சிக்கல்களைத் தீர்வு செய்யும்.ஒன்று அல்லது பல தேசத்து மக்கள் ஒன்றுகூடி வாழ்வதே நாடு அல்லது தேசம் என்பதாகும், ஒரு தேசத்தவர், குடிமக்களாகவோ(Citizens) அல்லது குடிகளில்லாதவராகவோ இருக்கலாம். ஆனால் ஒரு நாட்டுக்குடியுரிமை (Citizenship) பெற்றவர் என்பதும் அத்தேசத்தவர் (National) என்பதுவும் வெவ்வேறானவையே. வாக்குரிமையோடு(Voting Right) குடி அடையாளத்தைக் கொண்ட ஒரு தேசத்தின் மக்களாகவோ அல்லது தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் பழங்குடிகளாகவோ (Tribes) அல்லது பிற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து (Repatriate) ஒரு காலகட்டத்தில் குறிப்பிட்ட நாட்டின் குடிகளாக உரிமை பெற்றிருக்கலாம். இந்தச் சமூகக் கண்ணோட்டத்தில் பாரதியார் ஒரு தனிமனிதராகவும், ஆரியக் குலத்தவராகவும், தமிழ்த் தேசத்தவராகவும், பாரத நாட்டினராகவும் பிறந்து வாழ்ந்து ணர்ந்துள்ளார் அனைத்து உலக மாந்தருக்கும் இன்றியமையாதக் கடமைகளையும் செயல்பாடுகளையும் அறிவியல் முறைப்படியான மொழியியல் கூறுகளைத் தன் கவிதைகளில் தொகுத்துள்ளார்.

           

ஆரியத்தில் பிறந்து தமிழ்த்தேசீயம் மொழிந்து இந்தியத் தேசீயத்துக்கு அனைத்துத் தமிழர்களையும் ஒன்றுபடச் செய்ததில் அவர்தம் கவிச் சொல்லாடல்களே (Poetic Discourse)பெரும்பங்கு வகிக்கின்றன. அதோடு நில்லாமல், அண்டத்து வாழ் உயிரினங்களையும் (Creatures in the Universe) இயற்கையையும் (Nature) மேலும் உயிரற்ற பொருட்களைப்( Nonliving things) போற்றும் உயிருணர்வுத் தேசீயமாகப் (Living Nationality) படம் 1இல் காட்டியுள்ளது போல் தன் கவிப்படைப்புகளைத் தந்துள்ளார்.

உயிர்மொழியியல் பார்வையில் பாரதியின் தேசீயம் (Biolinguistics based Bharathiar Nationality) : பாரதியின் படைப்புகளின் ஒலி, தாளம், சொல், பொருள் அனைத்தும், படைப்பாளரின் எண்ண ஓட்டங்களில் ஊறும் உள்ளத்து உணர்ச்சிகளின் ஒரு உயிரியல் வெளிப்பாடே இருப்பதைக் காணமுடியும். மனித மூளையின் அளப்பரிய (Infinite) நுண்செயல்களின் (Micro-activities) ஒட்டுமொத்த (Emerging Quantum Effect) விளைவே எண்ணங்கள் (Thoughts) என இன்றைய உயிரியல் வல்லுனர்கள் ஏற்றுக்கொள்ளும் கருத்தின் அடிப்படையில் அவர்தம் கவிதைகள் குறைந்தபட்ச வெளிப்பாடாக, குறிப்பிட்ட புரிந்துகொள்ள முடியாத (Ambigous) மூளை நெறிகளின்படி வெளிப்படுகின்றன. உள்ளத்தாலும் உணர்வாலும் எழுந்த எண்ணங்கள் உயிரியல் அடிப்படையில் ஒன்றுசேர்ந்து உருப்பெற்று உலகுக்கு உணர்த்த கவிதையாக உரைக்கப்பட்டிருக்கின்றன.

1) நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
2) தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்…………
3) எங்கள் தந்தையர் நாடென்றே பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே……..
4) நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்தலெலா நீ தருவாய் ……………….

மேற்குறிப்பிட்ட பாரதியின் கவிதை வெளிப்பாடுகள் அனைத்தும் மனித மூளையின் உட்பதிந்த நீதிநெறிக் கோட்பாடுகளால் (Moral guidelines) தூண்டப்பட்ட நல்உணர்வுகளால் உந்தப்பட்டு (Induced) தூயஉள்ளத்தின் (Pure Mind)வழியாக உறுதியான எண்ணங்களின் தொகுப்பாக வரும் தனிமனித உணர்வுத் தேசீயமாகவும் மேலும் ஒரு உயிரியல் வெளிப்பாடாகவும் உள்ளன. சமூகமொழியியல் பார்வையில் பாரதியின் தேசீயம் (Sociolinguistics based Bharathgiar Nationality):சமூகமொழியியல் பார்வையில் பாரதியார் தம் படைப்புகளான பாப்பா பாட்டு, ஆத்திச்சூடி, ராதைப்பாட்டு, அக்கினிக்குஞ்சு, மற்றும் மழைப்பாட்டு போன்ற பாடல்களில் இலக்கியப் படைப்புகளோடு நிற்காமல் அந்தச் சூழலின் பாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் பாத்திரங்களுக்கிடையிலான தொடர்பினை உருவாக்கியுள்ளார். அதே நேரத்தில் அனைத்து உயிர்களுக்குமான உயிர்த் தேசீயத்தை வெளிக்கொணர்கிறார்.

           “குழந்தைஅகளுக்காக, கொத்தித் திரியுமிந்தக் கோழி - அதைக்

           கூட்டி விளையாடு பாப்பா ……..

           பாலைப் பொழிந்து தரும் பாப்பா – அந்தப்

           பசு மிகநல்லதடி பாப்பா..”எனக் குழந்தையாய்,

           “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை

           அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்.,

           வெந்து தணிந்தது காடு., தழல் வீரத்திற்

           குஞ்சென்று மூப்பென்று முண்டோ ?

           தத்திரிகட …. தத்திரிகட தித்தோம்…..”என இசையமைப்பாளராய்,

           “ராக ஸமுத்ரஜாம்ருத ராதே,ராதே ;

           ராஞி மண்டலரத்ன ராதே, ராதே”என்றுஆரிய சமசுகிருத விற்பன்னராய்,

           “உடலினை உறுதிசெய், ஊண்மிக விரும்பு, எண்ணுவது யர்வு, ஏறுபோல் நட”

           என இளைஞனாய் மாறியுள்ளார்.

           “எட்டுத்திசைகளும் இடிய, மழை எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா?”

           என அறிவியல் வினா தொடுத்தும்,

           “ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்”…

           என்று சித்தராய்உயிர்த்தேசீயம் பேசுகின்றார்.

தனது படைப்புகளைத் தக்க இராகத்தோடு பாடி, தன் இனத்துக்கும் இரு பாலினத்தவர்க்கும், சமூகத் தொழிலாளிக்கும் ஏற்றச்சொல்லையும் தாளத்தையும் சேர்த்து ஒரு சமூகப் பங்காளியாகவே (Social Sponsor)படைப்புகளை படைத்துப் பாத்திரங்கள் வாயிலாகப்படம் 2 இல் காட்டியுள்ளது போல் கவிதைப்பாடம் நடத்துகின்றார்.

மொழியியல் பார்வையில் தேசீயம் ( Linguistics based Nationality) :மொழியியல் பிரதிபலிப்பு என்னும் படைப்பு ஆற்றலைத் தம் கவிதைகளில் கையாண்டு, சொற்சுவையோடு பொருட்சுவையையும் கூட்டியுள்ளார். மொழியியல் பிரதிபலிப்பு என்னும் கணித்துவ அம்சத்தை அழகாகப் பாடலின் பொருண்மைக்கேற்பக் கட்டமைத்துள்ளார்.

{காரணம் (எது,எப்படி) ,விளைவு( என்ன, எவ்வளவு)} கவி ( முதல், அடுத்த) என்ற பிரதிபலிப்பு நடையைப் பயன்படுத்தித்தன் படைப்பின் சிறப்பைப் படம் 3 இல் காட்டியுள்ள முறைமையால் வெளிப்படுத்துகின்றார்

மொழியியல் அடிப்படையில் கவிதை உருவாக்கத்தில் மிகச்சிறந்த ஒரு அறிவியல் பாரதியார் பார்வையைக் கொண்டிருந்தார். எடுத்துக்காட்டாக,

           தமிழ்நாடு (வேதம்.நிறைந்த) , தமிழ்நாடு(வீரம்.செறிந்த)

           தமிழ்நாடு( புகழ் மண்டிக் கிடக்கும் ;

           

           தமிழ் நாடு(கல்வி.சிறந்த),தமிழ் நாடு(கம்பன்.பிறந்த)தமிழ் நாடு(மணம் .வீசும்);

           

           செந்தமிழ்நாடு எனும் போதினிலே - இன்பத்

           தேன் வந்து பாயுது காதினிலேஎன்னும் பாடலில், பாரதியார்,

           

           காரணம் எது? மற்றும் காரியம் அல்லது விளைவு என்ன? என்ற பாணியில்

           என்னும் போதினிலே ( செந்தமிழ்நாடு ) பாயுது காதினிலே( இன்பத்தேன்)

           

           

என்ற பாணியானது, பாரதியாரின் மொழியியல் உருவாக்கப் பிரதிபலிப்புத் (Creative Reflection) திறனை வெளிப்படுகின்றது.

           

மீள்சுழற்சி அல்லது மறுநிகழ்வு (Recursion) என்னும் படைப்புத்திறனை

உள்ளடக்கிய மொழியியல் பார்வையில் பாரதியாரின் படைப்புகள் மிகத்தெளிகாகப் படைக்கப்பட்டுள்ளன. மொழியியல் சார் படைப்பு நெறிகளை, யாப்பும் அணியும் கலந்து மீண்டும் மீண்டும் ஒரு வெளிப்பாட்டின் மீதே பயன்படுத்தி அடுத்தடுத்த வரிகளைப் புனைந்து தன் நாட்டுப்பற்றுப் பாடல்களைப் படைத்துள்ளார்.

           

            நாடு உயர்நாடுகவிதையிலே உயர்நாடு அமுதாக நிறைந்த கவிதையிலே உயர்நாடு கானத்திலே அமுதாக நிறைந்த கவிதையிலே உயர்நாடு எனவும், நல்ல நாடு பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என்வும், நாடு உயர்நாடுஉணர்வினிலே உயர்நாடு புலவர் உணர்வினிலே உயர்நாடு உண்மையிலே தவறாத புலவர் உணர்வினிலே உயர்நாடு ,

எனவும் மிகத் தெளிவாக எளிய சொல்லில் செறிந்த பொருண்மையில் மீள் அல்லது மறுசுழற்சி யுக்தியைப் (Recursive Technique) பல பாடல்களில் வெளிக்காட்டியுள்ளார்.

           

பாரதியார் பாடல்களின் அறிவார்ந்த குறைந்தபட்ச செயலாக்கப் பார்வை :

உலக மொழியியல் வல்லுனர் நோம் சாம்ஸ்கி (Noam Chomsky) அவர்களுடைய குறைந்த பட்ச செயல்முறையின் அடிச்சுவடாக பாரதியார் தனது அனைத்துப் படைப்புகளிலும் மிகத்தெளிவான நெறிசார்ந்த அணிகளைப் பூட்டி அளவுருக்களாகப் பெற்று தனது அறிவார்ந்த படைப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார். ஒலியாக, எழுத்துச்சொல்லாக ஒருபுறமும், அதன் பொருண்மையாக மறுபுறமும் மனித மூளையானது ஒரு கணித்துவ அமைப்பாகச்(Computing and Cognitive System) செயல்படுகின்றது என அவர்கள் கூறுகின்றார். இம்மொழிக் கணித்துவ அமைப்பானது ஓசை வடிவத்திலும் தருக்க வடிவத்திலும் மனித மூளையின் இடை முகப்புகளின் (Brain Interfaces) வழியாக உட்புகுந்து எண்ண அலைகளைத் தூண்டுகின்றன எனக்கூறும் அதே பாணியில் தான் பாரதியார் நாட்டுப்பற்றுப் பொருண்மையில் தனது கருத்தடக்கத்தைக் கவிதையாகப் படைத்துள்ளார். உயிரிய மொழியியல் நோக்கில் எளிய வழிமுறைகளால் குறைந்தபட்ச படைப்பாற்றல் யுக்தியைக் கையாண்டு நெறிமுறைகளயும், கவித்துவக் கட்டமைப்புக்குள் பூட்டிய பெருமை மகாகவி பாரதியாரின் பெரும்பாலான பாடல்களில் காணமுடிகிறது. மனித மூளையின் உள்ளறுப்புகளின் குறைந்தபட்ச செயலாக்கமாக, எண்ணத்தின் நோக்கங்கொண்டு வினைச்சொற்களால் வினா வாக்கியத்தை உருவாக்கயும் பெயர்ச்சொற்களாலே கவித்துவச் சொல்லாடலை உருவாக்கியும் ஒரு அறிவாரந்த மொழியியல் வல்லுனராகி, உலக மகாகவியாகின்றார்.

           

           நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? . . . . .. . . . . .

           கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ? . . . . . . .

           காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமென்றோ? . . . . . . . .

           

முடிவுரை:

பாரதியார் படைப்புகளை மனிதகுல அகவாழ்வியல், புறவாழ்வியல், நாட்டுப்பற்று, வேதாந்தம், இயற்கை, கதைகள் மற்றும் கற்பனைக் கருத்துக்களோடு பல்வேறு அறிவியல் தத்துவ நோக்கங்களிளும் படைக்கப்பட்டுள்ளன. சமூகவியல், மொழியியல் மற்றும் உயிரியல் பார்வைகளில் பாரதியாரின் நாட்டுப்பற்றுப் பாடல்கள் பகுப்பாய்வு செய்யப்ப்டுள்ளன. தனிமனித தேசீயமாக உயிர், உள்ளம், உணர்ச்சி மூளை ஆகிய உயிர்ப் பொருள்களின் இயக்கத்தால், எழுத்து, சொல் பொருண்மை, சூழல் என்ற மொழியியல் கூறுகளைப் பயன்படுத்தி ஒரு உணர்வுத் தேசீயத்தையையும் உயிர்த் தேசீயத்தையும், புறத்தே பாரதத் தமிழ்த் தேசீய ஒன்றியத்தையும் (United Nationality of Indian Tamil- UNIT) சொல்லியுள்ளார். மேலும் இயற்கை மற்றும் தாவரங்கள் பறவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பிற உயிர்களைப் பேணும் உலகத் தேசீயத்தை (Global Nationality) பெரும்பாலான பாடல்களில் அறிவுறுத்தியுள்ளார்.

           

பார்வைகள்

1. Jan-Wouter Zwart University of Groningen.,”The Minimalist Program”.,Journal Of Linguistics34(01), pp;213-226, February 1988,

2. Graham Kirby, Ron Morrison And David Stemple., “ Linguistic Reflection in Java”., https://arxiv.org/ftp/cs/papers/9810/9810027.pdf

3. https://chomsky.info/20040517/

4. Dr. Lakshmi Aiyar, N., “Indian culture in the Lyrics of Subrahmanya Bharathi The NATIONAL POET OF INDIA”., International Conference on Humanities, Literature and Management (ICHLM'15) Jan. 9-10, 2015 Dubai (UAE).