Dr.S.Muhunthan, Senior Lecturer, Head, Dept.of.Hindu Civilization, University of Jaffna
ஆய்வுச் சுருக்கம்: இந்தியச் சிந்தனை மரபில் மெய்ஞ்ஞான ஆராய்ச்சிக்கான திறவுகோலாக அமைந்தவை உபநிடதங்களாகும். சடங்கு வழிப்பட்ட வேதகால சமயநிலையின் மடைமாற்றத்திற்கான குறிகாட்டிகளாக உபநிடத உரையாடல்களும், மகா வாக்கியங்களும் திகழ்கின்றன. ஆதிசங்கரர் முதலிய பிற்காலத் தத்துவஞானிகளுக்கான சிந்தனாமூலங்களாகவும், இவை அமைந்தன. நூற்றியெட்டு உபநிடதங்கள் எனப் பொதுவாக அறியப்படினும் அவற்றின் எண்ணிக்கை இதைவிடவும் அதிகம் என்பர்.இவற்றுள் கிரு~;ணயசுர் வேதத்துக்குரிய முக்கிய உபநிடதங்களுள் ஒன்றாகச் சுவேதாசுவர உபநிடதம் திகழ்கிறது. ஏனைய உபநிடதங்களைக் காட்டிலும் மிகத் துலாம்பாரமான முக்கியத்துவம் சுவேதாசுவர உபநிடதத்துக்கு உண்டு. ஏனைய உபநிடதங்கள் பரம்பொருளைச் சுட்டியொரு பெயர் கூறாமல் “பிரம்மம்” என்று குறிப்பிட்டன. ஆனால் சுவேதாஸ்வரமோ பிரம்மத்தை உருத்திர சிவனாகச் சுட்டியது.மேலும் பிரம்மம் பற்றிய இவ்வுபநிடதத்தின் விவரணங்கள் யாவும் சைவசித்தாந்த மெய்யியலின் பதி பற்றிய எண்ணக்கருக்களோடு நெருங்கிய தொடர்புடையனவாய் அடையாளங்காணப்படுகின்றன. பிரம்மத்தின் சர்வவல்லமை,சர்வவியாபகம்,இருவகை நிலைகள் பஞ்சகிருத்தியம் என இக்கருத்தோட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.உயிர் / ஜீவான்மா பற்றிய சிந்தனையிலும் இவ்வுபநிடதம் சைவசித்தாந்த சிந்தனைகள் பலவற்றுடன் ஒத்தநிலையுடையதாக இனங்காணப்பட்டுள்ளது. ஏனைய உபநிடதங்கள் பொதுவில் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற நிலைப்பாட்டைப் பின்பற்றுவனவாகக் காணப்பட சுவேதாஸ்வரமோ இந்நிலைப்பாட்டிற்கு மாறாகச் சைவசித்தாந்தத்தளத்தில் ஜீவான்மா பரமான்மா வேறுபாட்டைத் தெளிவாகச் சாதிக்கிறது.உலக உற்பத்திக் கொள்கை தொடர்பிலும் மாயை பற்றிய விபரிப்பிலும் சுவேதாஸ்வர உபநிடதம் சைவசித்தாந்தக் கருத்தியல்களையே பிரதிபலித்துள்ளது. மாயையாகிய சடப்பொருளில் சூக்குமமாயுள்ள பிரபஞ்சத்தை தூலரூபத்தில் வெளிக்கொணர்வது முதல்வனின் ஆற்றலே (கிரியாசக்தியே) என்ற சித்தாந்த முடிபை இவ்வுபநிடதம் முன்மொழிந்துள்ளது.
PAGES: 10 | VIEWS | DOWNLOADS
Dr.S.Muhunthan, Senior Lecturer, Head, Dept.of.Hindu Civilization, University of Jaffna | சுவேதாஸ்வர உபநிடதத்தில் அடையாளங் காணப்படுகின்ற சைவசித்தாந்தக் கருத்தியல் ஊற்றுக்கள் | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |